என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
- மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
- மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 சேர்களும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலிக்கிறது.
Live Updates
- 21 Aug 2025 5:25 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "எல்லோரும் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போறதுக்கு முயற்சி பண்ணுவாங்க.. நாங்க ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம்தான் கட்சியே ஆரம்பிச்சிருக்கோம்" என்று தெரிவித்தார்
- 21 Aug 2025 5:24 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "2026ல் ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே... ஒன்னு TVK... இன்னொன்று DMK..." என்று தெரிவித்தார்
- 21 Aug 2025 5:23 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "நான் ஒன்றும் மார்க்கெட் போனபிறகு ரிட்டையர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை" என்று தெரிவித்தார்.
- 21 Aug 2025 5:22 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவார்கள்" என்று பாஜகவை விமர்சித்து பேசினார்..
- 21 Aug 2025 5:12 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜக நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக" என்று தெரிவித்தார்.
- 21 Aug 2025 5:11 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "1967 இல் 1977 இல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் அதிகார மாற்றம் ஏற்பட்டது. அதே போல 2026 இல் வரலாறு திரும்ப போகிறது என்பதற்கு தான் இந்த மாநாடு" என்று தெரிவித்தார்.
- 21 Aug 2025 5:11 PM IST
மதுரை மாநாட்டில் பேசிய விஜய், " மதுரைக்கு வந்தவுடன் என் மனதில் எம்.ஜி.ஆர். தான் ஓடிக்கொண்டிருந்தார். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரை போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் பழக எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் மதுரை மண்ணை சேர்ந்தவர் தானே என்று தெரிவித்தார்.







