என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    TN Voters | தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்!
    X

    TN Voters | தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்!

    • தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடி
    • முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 12.51 லட்சம்

    தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 10ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் 17-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அதன்படி வரும் ஏப்ரல் 23ம் தேதி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    வியாழன் தேர்தல்! திங்கள் ரிசல்ட்!

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு முடிந்து 10 நாட்கள் கழித்து மே 4-ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

    வேட்புமனு விவரம் :

    மனு தாக்கல் தொடக்கம்

    மார்ச் 30

    மனு தாக்கல் முடிவு

    ஏப்ரல் 06

    வேட்புமனு பரிசீலனை

    ஏப்ரல் 07

    வேட்புமனு திரும்பபெற

    ஏப்ரல் 09

    ஆண்களை விட பெண்களே அதிகம்!

    தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.

    மொத்த வாக்காளர்கள்

    5.67 கோடி

    முதல் முறை வாக்காளர்கள்

    12.51 லட்சம்

    85 வயதுக்கு மேற்பட்டவர்கள்

    4 லட்சம்

    பெண் வாக்காளர்கள்

    2.90 கோடி

    ஆண் வாக்காளர்கள்

    2.77 கோடி

    மூன்றாம் பாலினத்தவர்கள்

    7,617

    தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள்!

    தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில், நகர்ப்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×