என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: செங்கோட்டையன் கூறியது இதுதான்
- அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
- கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டது உள்ளிட்ட காரணத்துக்காக நீக்கப்பட்டார்.
கோவை:
அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பும் வைத்துக்கொண்டது உள்ளிட்ட காரணங்களால் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அறிக்கை மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கோள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறுகையில், என்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து நாளை விரிவாக விளக்கம் அளிக்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Next Story






