தமிழ்நாடு செய்திகள்

TN Assembly Election| கட்சி பெயரை இன்று அறிவிக்கிறார் சசிகலா

Published On 2026-03-13 08:50 IST   |   Update On 2026-03-13 08:50:00 IST
  • ராமதாசை சசிகலா 90 நிமிடங்கள் சந்தித்து பேசியது குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.
  • ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்த சசிகலா கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகவே காணப்படுகிறது. திமுக, அதிமுக கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சமீபத்தில் கட்சியை தொடங்கிய சசிகலா பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே கட்சி கொடியை அறிவித்துள்ள சசிகலா இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. மேலும் சசிகலாவும், டாக்டர் ராமதாசும் இதுவரை கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால் டாக்டர் ராமதாசோ, இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழலில் டாக்டர் ராமதாசை சசிகலா 90 நிமிடங்கள் சந்தித்து பேசியது குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தனது கட்சியின் பெயரை இன்று அறிவிக்கிறார் சசிகலா. ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்த சசிகலா கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் கட்சியின் பெயரை இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கிறார். 

Tags:    

Similar News