TN Assembly Election | 90 நிமிடங்கள் சந்திப்பு- ராமதாஸ், சசிகலா பேசியது என்ன?

கட்சி கொடியை அறிவித்துள்ள சசிகலா இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை.இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
TN Assembly Election | 90 நிமிடங்கள் சந்திப்பு- ராமதாஸ், சசிகலா பேசியது என்ன?
Published on

திண்டிவனம்:

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாசின் வீட்டிற்கு சசிகலா நேற்று இரவு 8.30 மணிக்கு திடீரென காரில் வந்தார். அங்கு டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் பேசினார். சுமார் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய சசிகலா, பின்னர் மீண்டும் காரில் ஏறி சென்றார்.

ஏற்கனவே கட்சி கொடியை அறிவித்துள்ள சசிகலா இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. மேலும் சசிகலாவும், டாக்டர் ராமதாசும் இன்னும் இதுவரை கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால் டாக்டர் ராமதாசோ, இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

இத்தகைய சூழலில் டாக்டர் ராமதாசை சசிகலா 90 நிமிடங்கள் சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரின் சந்திப்பு குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com