என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசுவது ஏமாற்று வேலை- ஆர்.பி.உதயகுமார்
    X

    மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசுவது ஏமாற்று வேலை- ஆர்.பி.உதயகுமார்

    • அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    • கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார்.

    தமிழக சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறி எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், மாநில சுயாட்சி குறித்து தி.மு.க. அரசுக்கு திடீர் ஞானோதயம் வந்துள்ளதால் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.

    கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார்.

    மத்தியில் ஆளும் அரசுடன் கூட்டணியில் இருந்தபோது பேசியிருந்தால் மக்கள் நம்புவார்கள், இதுமுழுவதும் ஏமாற்று வேலை என்றார்.

    Next Story
    ×