என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுக கூட்டணிக்கு பாமக கட்டாயம் வரும்: நிர்வாகிகள் மத்தியில் இ.பி.எஸ். உறுதிப்பட தெரிவித்ததாக தகவல்..!
    X

    அதிமுக கூட்டணிக்கு பாமக கட்டாயம் வரும்: நிர்வாகிகள் மத்தியில் இ.பி.எஸ். உறுதிப்பட தெரிவித்ததாக தகவல்..!

    • ராமதாஸ்- அன்புமணி இடையிலான சண்டை விரைவில் தீர்ந்து விடும்.
    • நம்முடைய கூட்டணிக்குதான் வருகிறார்கள் என இ.பி.எஸ். உறுதிப்பட கூறியதாக தகவல்.

    அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேலும் வேகப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கூட்டணி பற்றி பேசும்போது, அதிமுக கூட்டணி பாமக கட்டாயம் வரும் என உறுதிப்பட தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாமக-வில் டாக்டர் ராமதாஸ்-க்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல் அவர்களுடைய குடும்ப சண்டை. அந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வந்துவிடும். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நம்முடைய கூட்டணிக்குதான் வருகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அதிமுக கூட்டணியை மேலும் வலுவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் சிறிய கட்சிகள் இருந்தால், அவற்றை அதிமுக-வுடன் கொண்டு வந்து இணைக்கும் பணிகளை பாருங்கள் எனவும் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×