என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாசுடன் பேசியது குறித்து வெளியில் சொல்ல முடியாது- ஜி.கே.மணி
- அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்தார் ராமதாஸ்.
- பாமக நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பேரியக்கத்தை தொடங்கிய நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுகொள்கிறேன்.
தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்துவரும் அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்று நேற்று அவர் அறிவித்தார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் நீக்கியது தொடர்பாக தலைவர் ராமதாசை சந்தித்து சமாதானம் செய்வதற்காக தைலாபுரத்திற்கு ஜி.கே.மணி சென்றார்.
பாமக நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி கூறுகையில், "ராமதாசுடன் என்ன பேசினேன் என்பது குறித்து வெளியில் சொல்ல முடியாது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்.
நான் சொன்ன அனைத்தையும் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்" என்றார்.






