என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராமதாஸ் Vs அன்புமணி விவகாரம் - என்னவென்று சொல்வது என தெரியவில்லை? : ஜி.கே.மணி
    X

    ராமதாஸ் Vs அன்புமணி விவகாரம் - என்னவென்று சொல்வது என தெரியவில்லை? : ஜி.கே.மணி

    • எந்த கேள்விக்கும் தற்போது பதில் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறேன்.
    • பழைய நிலைக்கு கட்சி வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

    தைலாபுரம்:

    பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு அக்கட்சியில் கவுரவத் தலைவராக உள்ள ஜி.கே. மணிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே அன்புமணி மீது ராமதாஸ் நேற்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை தொடர்ந்து அன்புமணி பா.ம.க.வில் உள்ள பல அணி நிர்வாகிகளை இன்று முதல் 3 நாட்களுக்கு சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பானது சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது.

    ஆலோசனையில் பங்கேற்குமாறு நிர்வாகிகளுக்கு நேற்று அன்புமணி அழைப்பு விடுத்த நிலையில், பா.ம.க. நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆலோசனையில் பங்கேற்க திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தைலாபுரம் தோட்டம் நிர்வாகிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இந்த நிலையில், நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசுவதற்காக ஜி.கே.மணி தைலாபுரம் தோட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    கேள்வி கேட்பவர்களிடம் என்னவென்று சொல்வது என தெரியவில்லை. நெருக்கடியான சூழலில் மன உளைச்சலில் இருக்கிறோம். மனவேதனை படுகிறோம்.

    எந்த கேள்விக்கும் தற்போது பதில் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறேன். பா.ம.க.வில் ஒரு நெருக்கடியான சூழல் உள்ளது. பழைய நிலைக்கு கட்சி வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

    பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி தேர்தலை சந்திக்கும் நேரத்தில் வலிமையாக இருக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×