என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்- முதலமைச்சர் பெருமிதம்
    X

    குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்- முதலமைச்சர் பெருமிதம்

    • சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன.
    • தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நாளை தொடங்குகின்றனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் காலை உணவு திட்டம் குறித்து பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர், "முதல் மணி அடிப்பதற்கு முன்பு லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உணவளிக்கும் பெண்களைப் பற்றியும், தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை இயக்கும் சமையலறைகளுக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்களைப் பற்றியும் செய்தி நிறுவனம் தொடர்ந்த வீடியோவை பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும்," காலை உணவு திட்டம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன.

    தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நாளை தொடங்குகின்றனர்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×