என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் நிகழ்ச்சியில் மாணவிகளின் துப்பட்டா அகற்றம்- அண்ணாமலை கண்டனம்
    X

    முதலமைச்சர் நிகழ்ச்சியில் மாணவிகளின் துப்பட்டா அகற்றம்- அண்ணாமலை கண்டனம்

    • சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை அகற்றிய சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், "கருப்பு சால்வை" அணிந்த மாணவிகள் மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன் அவற்றை கழற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.

    திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.

    இது எவ்வகை எதேச்சதிகாரம் ?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×