என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் மோடி எதிர்ப்பில் அமைச்சர்கள் பின் வாங்கக் கூடாது
    X

    பிரதமர் மோடி எதிர்ப்பில் அமைச்சர்கள் பின் வாங்கக் கூடாது

    • பொதுக் கூட்டங்கள் பற்றிய ரகசிய அறிக்கையையும் முதலமைச்சரிடம் வழங்கி இருக்கிறார்கள்.
    • இந்தியாவில் நிச்சயம் மாற்றம் வரும்.

    சென்னை:

    தி.மு.க. சார்பில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசார பொதுக் கூட்டங்கள் கடந்த வாரம் நடத்தப்பட்டது.

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டங்கள் அனைத்தும் வெற்றியடைந்துள்ளன.

    அனைத்து தொகுதிகளிலும் ஒரே மாதிரி மேடை அமைத்து நடத்தப்பட்ட இந்த கூட்டங்கள் வெற்றிகரமாக நடந்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை பாராட்டியிருக்கிறார்.


    அதே நேரம் பொதுக் கூட்டங்கள் பற்றிய ரகசிய அறிக்கையையும் முதலமைச்சரிடம் வழங்கி இருக்கிறார்கள். அதில் பல அமைச்சர்கள் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசவில்லை. ஒரு விதமான எச்சரிக்கை உணர்வுடனேயே பேசியதை பார்க்க முடிந்தது என்று குறிப்பிட்டு இருந்தனர். மேலும் மோடி மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியவர்கள் யார் யார்? மிதமாக பேசியவர்கள் யார் யார்? என்ற பட்டியலையும் தயாரித்து கொடுத்துள்ளனர்.

    அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின் அவர்களது உரைகளையும் போட்டு பார்த்துள்ளார். மோடி மீதான தாக்குதலில் தயக்கம் காட்டிய அமைச்சர்களை தனித்தனியே அழைத்து உங்களுக்கு என்ன பயம்? இந்தியா கூட்டணி எல்லா மாநிலங்களிலும் வெல்வதற்கு தான் முயற்சி எடுத்து வருகிறேன். இந்தியாவில் நிச்சயம் மாற்றம் வரும். மோடி எதிர்ப்பே நமக்கு ஆதரவை அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறி இருக்கிறார்.

    Next Story
    ×