search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய வசதி அறிமுகம்: தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களை வீடியோவில் பார்க்கும் புதிய தொழில்நுட்பம்
    X

    புதிய வசதி அறிமுகம்: தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களை வீடியோவில் பார்க்கும் புதிய தொழில்நுட்பம்

    • மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும்பங்கு வகிக்கிறது,

    இந்த திட்டங்களை மக்கள் அறிந்துக் கொண்டு பயன்பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.

    இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் கியூ.ஆர்.கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். 'ஆகு மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம்' மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.

    இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை அதில் காணலாம்.

    நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதலமைச்சரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    Next Story
    ×