search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கமலுக்கு தொகுதி கொடுப்பது பற்றி தி.மு.க. எங்களிடம் எதுவும் சொல்லவில்லை- காங்கிரஸ் கை விரிப்பு
    X

    கமலுக்கு தொகுதி கொடுப்பது பற்றி தி.மு.க. எங்களிடம் எதுவும் சொல்லவில்லை- காங்கிரஸ் "கை" விரிப்பு

    • ‘டார்ச் லைட்’ ஒளி வீசுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
    • காங்கிரஸ் 10 தொகுதிகளை கேட்கும் நிலையில், தி.மு.க.வோ 6 தொகுதிகளை மட்டுமே தருவதாக கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிப்பதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி கொடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியிலேயே கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறும்போது, அதுபோன்று எந்தவிதமான ஒப்பந்தங்க ளும் போடப்பட வில்லை என்றும் இதுபற்றி கமல்ஹாசனும் எங்களுடன் எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் தி.மு.க. தரப்பிலும் கமல்ஹாசன் கூட்டணியில் இருப்பதை யாரும் உறுதி செய்யாமலேயே உள்ளனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்த தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு, தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் இடம் பெறுவது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார். வெளிநாட்டு பயணம் முடிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பியதும் கமல்ஹாசன் சந்தித்து பேச இருப்பதாக வும் தகவல்கள் வெளியா னது.

    ஆனால் அது தொடர்பான எந்த சந்திப்புகளும் நடைபெறவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க.வி னர், கமல்ஹாசன், ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குதான் ஆதரவு தெரி வித்து பிரசாரம் செய்தார். அவர்களோடுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடன் எதுவும் பேசவில்லை என்றும் கூறியுள்ள னர்.

    இதனால் கமல்ஹாச னுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி கொடுப்பது தி.மு.க.வா? காங்கிரசா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

    கமல்ஹாசனை பொறுத்தவரையில் காங்கிரஸ் டெல்லி மேலிட தலைவர்கள் மற்றும் ராகுல்காந்தியுடன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகிறார்.

    இதனால் அவர் காங்கிரசோடு பேசி எளிதாக தனக்கு தேவையான தொகுதிகளை கேட்டுப் பெற்றுக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே எத்தனை இடங்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

    காங்கிரஸ் 10 தொகுதிகளை கேட்கும் நிலையில், தி.மு.க.வோ 6 தொகுதிகளை மட்டுமே தருவதாக கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி குறைவான தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் அதில் ஒரு தொகுதியை கமல்ஹாசனுக்கு எப்படி ஒதுக்க முடியும் என்று கூறியே காங்கிரஸ் கட்சி 'கை' விரித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கிடையே கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறி வருகிறார்கள். இதனால் பாராளுமன்ற தேர்தலில் 'டார்ச் லைட்' ஒளி வீசுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல் மற்றும் இழுபறியால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×