search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க. மகளிர் அணி தலைவி கணவர் கொலையில் வாலிபர் கைது: சொத்து பிரச்சினையில் கொன்றதாக வாக்குமூலம்
    X

    பா.ஜ.க. மகளிர் அணி தலைவி கணவர் கொலையில் வாலிபர் கைது: சொத்து பிரச்சினையில் கொன்றதாக வாக்குமூலம்

    • டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வேலு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • தப்பி ஓடிய ராஜேசை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை ராஜாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி கவுண்டர் (வயது 80). இவருக்கு வேலு (56) சாமிக்கண்ணு( 52) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் வேலு மணப்பாறை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். ரங்கசாமி கவுண்டரின் மகன்களுக்கு இடையே சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று சாமிக்கண்ணு மகன் ராஜேஷ்(25) ராஜாளிப்பட்டி யில் உள்ள தனது பெரியப்பா வேலுவின் வீட்டிற்கு சென்றார். அங்கு சொத்து பிரச்சினை தொடர்பாக அவர் வேலுவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலுவை சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த தாத்தா ரங்கசாமி கவுண்டருக்கும் கத்திகுத்து விழுந்தது. பின்னர் ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் உறவினர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வேலு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    கொலை செய்யப்பட்ட வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி தலைவியாக உள்ளார். ரங்கசாமி கவுண்டருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், துணை போலீஸ் காயத்ரி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தப்பி ஓடிய ராஜேசை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை)காலை 8 மணி அளவில் ராஜாளி பட்டி காட்டுப் பகுதியில் அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைதான ராஜேஷ் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது;-

    எனது தாத்தாவுக்கு கவரப்பட்டியில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதனை கடந்த 6 மாதத்திற்கு முன்பு எங்களுக்கு தெரியாமல் தாத்தா பெரியம்மா (வேலுவின் மனைவி) திருப்பதி பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.

    இது தொடர்பாக கேட்க சென்றபோது பெரியப்பா என்னை மதிக்காமல் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன். தடுக்க வந்த தாத்தாவையும் குத்தி விட்டு தப்பி சென்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொடர்ந்து ராஜேசிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கைதான சதீஷ்குமார் அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    Next Story
    ×