search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரியாரை பற்றி தவறாக பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம்: அன்புமணி ராமதாஸ்
    X

    பெரியாரை பற்றி தவறாக பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம்: அன்புமணி ராமதாஸ்

    • தந்தை பெரியார் இல்லை என்றால், தமிழகத்தில சமூகநீதி கிடையாது.
    • தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ, அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசும்போது, கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன் இருந்து அகற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி வரும்போது, முதல் நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்றார். பின்னர், மதுரையில் பேசும்போதும் சிலை விவகாரத்தை கையில் எடுத்தார்.

    தொடர்ந்து பெரியார் குறித்த கருத்தை முன்வைக்கும் அண்ணாமலைக்கு அதிமுக, திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பா.ம.க. கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    தந்தை பெரியாரின் மண் இது. இந்த மண்ணில் இவ்வாறு பேசுவது தவறு. தந்தை பெரியால் இல்லை என்றால், தமிழகத்தில சமூகநீதி கிடையாது. தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ, அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது. ஏனென்றால், எங்கள் கட்சியின் முன்னோடிகள்.

    எங்கள் கட்சியில் மூன்று பேரை முன்னோடியாக வைத்துள்ளோம். அவர்கள் அண்ணா, அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் ஆவார்கள். மூன்று பேரை பற்றி யாராவது தவறாக பேசினால், நாங்களும் அமைதியாக இருக்கமாட்டோம்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    Next Story
    ×