என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    பாடப்புத்தகங்களில் குறைகளை கண்டறிய சிறப்புக்குழு- டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    அரசு பாடப்புத்தகங்களில் உள்ள குறைகளை கண்டறிய சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பிளஸ்-2 ஆங்கில பாடபுத்தகத்தில் 142-ம் பக்கத்தில் மொழிகள் பற்றிய ஒரு பாடப்பிரிவு இடம்பெற்று இருந்தது. அதில், தமிழ் கி.மு.300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், அதைவிட சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டுகள் தொன்மையானது என்றும் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

    இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழ் மொழியின் தொன்மை குறித்த தவறான தகவலைப் போல பாடப்புத்தகங்களில் இருக்கும் குறைகளைக் கண்டறிந்து உடனடியாக சரி செய்ய தமிழக அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும்

    மாணவர்களுக்குப் பிழையான பாடங்கள் கற்பிக்கப்படுவதை தடுக்க சிறப்பு ஆய்வுக்குழுவினை அமைக்க வேண்டும். மேலும் அக்குழுவினர் தமிழ்நாடு அரசு தயாரித்திருக்கின்ற பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்து குறைகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×