என் மலர்
செய்திகள்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருப்பது விவசாயிகளுக்கு கவலை அளிக்கிறது- பிஆர் பாண்டியன்
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு கவலை அளிக்கிறது என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். #PRPandian
நெல்லை:
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய பிரசார பயணம் நேற்று மதுரை அருகே உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கியது.
இதில் தலைவர் பி.ஆர்.பாண்டியன், பொதுச் செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ஸ்ரீதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பிரசார பயணம் இன்று நெல்லை வந்தது. இதற்கு நெல்லை பகுதி விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் 46 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசார பயணம் நடத்தி வருகிறோம். மத்தியில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க. அரசு விவசாயிகளை புறக்கணித்து விட்டது. மேலும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
முல்லை பெரியார் அணை பிரச்சனை, காவிரி பிரச்சனை, கஜா புயல் நிவாரணம் உள்ளிட்டவைகளில் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. இதை தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. பாராளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளது. இப்போது விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இது இந்திய அளவிலேயே ஒரு கோடி பேருக்குதான் கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு கவலை அளிக்கிறது.
இப்போது நாங்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். வருகிற 8-ந்தேதி தஞ்சாவூரில் நடைபெறும் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் எங்கள் நிலையை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பிரசார பயணம் குமரி மாவட்டத்திற்கு சென்றது. #PRPandian

Next Story