என் மலர்

    செய்திகள்

    மெரினா கடற்கரையில் விபசார அழகி கொலையில் ஆட்டோ டிரைவர்-நண்பர் கைது
    X

    மெரினா கடற்கரையில் விபசார அழகி கொலையில் ஆட்டோ டிரைவர்-நண்பர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை மெரினா கடற்கரை நீச்சல் குளத்தில் விபசார அழக கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    சென்னை மெரினா கடற்கரை நீச்சல் குளத்தின் பின்புறம் உள்ள மணலில் கடந்த 4-ந்தேதி நிர்வாண நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டு இருந்தது.

    அண்ணாசதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்டவர் மதுரையை சேர்ந்த விபசார அழகி கலைச்செல்வி (வயது 40) என்பது தெரிந்தது.

    மதுரையில் இருந்து சென்னைக்கு அடிக்கடி வரும் அவர் மெரினா கடற்கரையில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் கலைச்செல்வியை கொலை செய்தது திருவல்லிக்கேணி தோட்டம் குப்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம்குமார், அவரது நண்பரான பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கலைச்செல்வியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத் தில் கூறியிருப்பதாவது:-

    மதுரையை சேர்ந்த கலைச்செல்வி அடிக்கடி மெரினா கடற்கரைக்கு வந்து விபசாரத்தில் ஈடுபடுவார். அவர் சென்னை வரும்போது எங்களை அழைப்பார்.

    அப்போது கலைச்செல்வியுடன் வரும் வேறு ஒரு பெண்ணுடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவளுடன் நெருங்கி பழகியபோது மதுரையில் இருந்து வரும் கலைச்செல்வியால் தனது விபசார தொழில் பாதிக்கப்படுவதாக அவள் கூறினாள். இதனால் நாங்கள் கலைச்செல்வியுடனான தொடர்பை துண்டித்தோம்.

    கடந்த சனிக்கிழமை இரவு மெரினா கடற்கரைக்கு வந்த கலைச்செல்வி எங்களை அழைத்தார். நாங்கள் அனைவரும் நீச்சல்குளம் அருகே கடற்கரையில் அமர்ந்து மது அருந்தினோம். பின்னர் உல்லாசமாக இருந்தோம்.

    அப்போது தன்னுடன் உள்ள தொடர்பை துண்டிப்பது ஏன் என்பது பற்றி கலைச்செல்வி எங்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் பீர்பாட்டிலால் கலைச்செல்வியின் தலையில் அடித்தோம். அவரது வாயிலும், மூக்கிலும் மணலை அள்ளி வீசினோம். இதில் அவர் இறந்து போனார்.

    உடலை கொண்டு சென்றால் மாட்டிக் கொள்வோம் என்பதால் அதே இடத்தில் சிறிது குழிதோண்டி உடலை புதைத்தோம். பதட்டத்தில் அதிக ஆழத்தில் உடலை புதைக்காததால் மறுநாள் காலை வெளியில் தெரிந்து விட்டது.

    கலைச்செல்வியின் செல்போனிற்கு அடிக்கடி பேசியதை வைத்து போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×