என் மலர்

  செய்திகள்

  கனமழை எதிரொலி: மாணவர்களை ஒரு மணிநேரத்திற்கு முன்பே வீட்டுக்கு அனுப்ப உத்தரவு
  X

  கனமழை எதிரொலி: மாணவர்களை ஒரு மணிநேரத்திற்கு முன்பே வீட்டுக்கு அனுப்ப உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கனமழை காரணமாக மாணவர்களை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிகளுக்கு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்
  சென்னை:

  தமிழகத்தில் இன்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் காலை முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.

  போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் மேலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மழை அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் மாணவர்களை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
  Next Story
  ×