என் மலர்
செய்திகள்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுசீலா.
சொத்து தகராறில் கழுத்தை நெரித்து தாயை கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை
சொத்து தகராறில் கழுத்தை நெரித்து தாயை கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு நாதகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 58). இவரது மகள் சுசீலா (40), மகன் குழந்தை வேலு (37).
கண்ணம்மாள் தனது மகன் குழந்தைவேலுவுக்கு 1 ஏக்கர் விவசாய நிலத்தை எழுதி வைத்தார். இந்த நிலையில் திருப்பூரில் உள்ள சில இடங்களை தனக்கு எழுதி தருமாறு கண்ணம்மாளிடம் மகள் சுசீலா கேட்டார்.
இதற்கு கண்ணம்மாள் மறுத்ததால் அவர்களுக்குள் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 29-8-2016 அன்று கண்ணம்மாள் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு சுசீலா வந்தார். தனக்கு திருப்பூரில் உள்ள இடங்களை எழுதி தருமாறு மீண்டும் கேட்டார். இதனால் கண்ணம்மாளுக்கும், சுசீலாவுக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது.
கண்ணம்மாளின் கழுத்தில் கிடந்த நகையை சுசீலா பறித்தார். இதையடுத்து சுசீலாவை கண்ணம்மாள் கீழே தள்ளிவிட்டார். இதில் சுசீலா ஆத்திரம் அடைந்தார்.
கண்ணம்மாளை எட்டி உதைத்தார். பின்னர் துணியை எடுத்து கண்ணம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஈரோடு தாலுகா போலீசார் சுசீலாவை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு கூறினார். தாயை கொன்ற மகளுக்கு 3 பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கினார்.
அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த வழக்கில் 3 மாதம் சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
நகை பறித்த வழக்கில் 10 வருடம் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.

Next Story