என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் காலிறுதியில் குரோசிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் குரோசிய வீராங்கனையான டோனா வெகிக், நியூசிலாந்து வீராங்கனை லுலு சுன்னுடன் மோதினார்.

    இதில் வெகிக் முதல் செட்டை 5-7 என இழந்தார். இதையடுத்து சுதாரித்த அவர் 6-4, 6-1 என கைப்பற்றினார். இதையடுத்து, வெகிக் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • ஜெர்மனியின் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்கின் ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-4, 7-6 (7-4), 6-4, 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    • இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார்.
    • வரும் 10-ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2-வது செட்டில் ரைபகினா 3-0 என முன்னிலையில் இருந்த போது அன்னா கலின்ஸ்காயா காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

    இதன் காரணமாக கஜகஸ்தானின் எலினா ரைபகினா காலிறுதிக்கு முன்னேறினார். வரும் 10-ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.

    • அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டவரான எம்மா நவரோவை எதிர்கொண்டார்.
    • எம்மா நவரோ காலிறுதியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை எதிர்கொள்ள உள்ளார்.

    லண்டன்:

    'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டவரான எம்மா நவரோவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கோகோ காப் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 4-6, 3-6 என்ற புள்ளிக்கணக்கில் எம்மா நவரோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற எம்மா நவரோ காலிறுதியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை எதிர்கொள்ள உள்ளார்.


    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    முதல் இரு செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய ஹம்பர்ட் 3வது செட்டை கைப்பற்றினார். 4வது செட்டை அல்காரஸ் வென்றார்.

    இறுதியில் அல்காரஸ் 6-3, 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

    இதில் பவுலினி முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். இதையடுத்து சுதாரித்த மேடிசன் கீஸ் 7-6 (8-6) என போராடி கைப்பற்றினார்.

    3வது செட்டில் இருவரும் 5-5 என்ற புள்ளிக் கணக்கில் இருக்கும்போது மேடிசன் கீஸ் விலகினார். இதனால் பவுலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், காலிறுதிக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 1-6, 2-6 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் யூலியா புடின்ட்சேவா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, பிரான்ஸ் வீரர் குயிண்டென் ஹேல்ஸ் உடன் மோதினார். இதில் 1-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்றார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வரேவ் 6-4, 6-4, 7-6 (17-15) என்ற செட் கணக்கில் நூரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கண்டு களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது சச்சின் எழுந்து நின்று கையசைத்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடைபெற்று வரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் கேமரூன் நூரி ஆகியோர் விளையாடினர்.

    இந்தப் போட்டியை நேரில் காண இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சென்றார். அப்போது அவரை டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது எழுந்து நின்று கை அசைத்தார். அவருடன் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரும் இந்தப் போட்டியை கண்டுகளித்தனர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், பிரிட்டிஷ் வீராங்கனை சோனா கர்தால் உடன் மோதினார்.

    இதில் கோகோ காப் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்டியூக்கை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அல்காரஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், செர்பியா வீரர் மியோமிர் உடன் மோதினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபேவை எதிர்கொண்டார். முதல் மற்றும் 3வது செட்டை தியாபே கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய அல்காரஸ் 2,4 மற்றும் 5வது செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில் அல்காரஸ் 5-7, 6-2, 4-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×