என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இன்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பல்கேரியா வீரரை வென்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டிமித்ரோவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 4ம் சுற்றுக்கு முன்னேறினார்
    • மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், பல்கேரியா நாட்டை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 7-6 ,6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றியபோது, காயம் காரணமாக அவதிப்பட்டார். தொடை தசைநாரில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இவ்வாறு இரண்டு முறை சிகிச்சை பெற்ற நிலையிலும், அடுத்தடுத்த 2 செட்களையும் வசமாக்கி வெற்றி பெற்றுள்ளார் ஜோகோவிச். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது. இவர்கள், ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ்- லூக் சேவில்லே ஜோடியை 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு முன்னேறினர். இதேபோல மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, 7-6 (6), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 5ம் தரநிலை ஜோடியான இவான் டோடிக் மற்றும் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியைத் தோற்கடித்தது.

    ஜூனியர் பிரிவில், இந்தியாவின் இளம் வீரர் மனாஸ் தாம்னே (வயது 15), ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஜாங்கை 6-3, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

    • பிளிஸ் கோவா 6-4, 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார்.
    • இன்னொரு ஆட்டத்தில் டோனா வெகிக் (குரோஷியா) 6-2, 6-2 என்ற கணக்கில் நூரியாவை (ஸ்பெயின்), வீழ்த்தினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), டேனியல் இவான்சை (இங்கிலாந்து) எதிர் கொண்டார்.

    இதில் ரூப்லெவ் 6-4, 6-2, 6-3, என் நேர் செட் கணக்கில் 25-வது வரிசையில் உள்ள இவான்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 30-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ் கோவா (செக்குடியரசு), 3-வது சுற்றில் கிராச் ஹெர்வாவை (ரஷியா), எதிர் கொண்டார். இதில் பிளிஸ் கோவா 6-4, 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார்.

    இன்னொரு ஆட்டத்தில் டோனா வெகிக் (குரோஷியா) 6-2, 6-2 என்ற கணக்கில் நூரியாவை (ஸ்பெயின்), வீழ்த்தினார்.

    • ஆஸ்திரேலிய ஓபனில் அமெரிக்க வீரரிடம் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
    • ஏற்கனவே முன்னணி வீரர்களான நடால் ஸ்வரேவ், கேஸ்பர் ரூட் ஆகியோரும் வெளியேறினர்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய செபாஸ்டியன் கோர்டா 7-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே முன்னணி வீரர்களான ரபேல் நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சானியா மிர்சா அடுத்த மாதத்துடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெறுகிறார்.
    • அவர் விளையாடும் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அன்னா டேனிலினா (கஜகஸ்தான்) ஜோடி, டால்மா கால்பி (ஹங்கேரி)- பெர்னடா பெரா (அமெரிக்கா) இணையுடன் மோதியது.

    இதில் சானியா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    சானியா ஜோடி அடுத்து அன்ஹெலினா கலினினா (உக்ரைன்)- அலிசன் வான் உட்வானிக் (பெல்ஜியம்) இணையை எதிர்த்து விளையாட உள்ளது.

    36 வயதான சானியா மிர்சா அடுத்த மாதத்துடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெறுகிறார். அவர் விளையாடும் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து ஸ்வரேவ், கேஸ்பர் ரூட் தோல்வி அடைந்தார்.
    • ரபேல் நடால் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பை, தரவரிசையில் 2ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர்.

    இந்தப் போட்டியில், அதிரடியாக விளையாடிய ஜென்சன் 6-3, 7-5, 6-7 (4), 6-2 என்ற செட் கணக்கில் கேஸ்பரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி டென்னிஸ் வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் மைக்கேல் மோவுடன் மோதினார். இந்த போட்டியில் மைக்கேல் 6-7, (1-7), 6-4, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வரேவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    ஏற்கனவே ரபேல் நடால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரரிடம் தோல்வியடைந்தார்.
    • ஜோகோவிச், முர்ரே ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் 9 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சு வீரர் என்ஸோ குவாக்காட் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-7 (5-7), 6-2, 6-0 என்ற செட் கணக்கில் என்ஸோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் தனாசி கோகிநாகிசுடன் மோதினார். இதில் முர்ரே முதல் இரு செட்களை இழந்தார். அடுத்து சுதாரித்துக் கொண்ட அவர் கடைசி 3 செட்களை கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இறுதியில் முர்ரே 4-6, 6-7, 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • நம்பர் ஒன் வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-வது சுற்று ஆட்டத்தில் வென்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், இங்கிலாந்தின் எம்மா ராடுகானுவைச் சந்தித்தார். இதில் கோகோ காப் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் கோகோ காப் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். எம்மா ராடுகானு தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் 2ம் சுற்றில் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ஆஸ்திரேலிய வீரர் நிக் கிரியாஸ் காயத்தால் போட்டியில் இருந்து விலகினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனுடம் மோதினார். இதில் 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வென்றார்.

    உலகின் 4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் ரிங்கி ஹிஜிகதாவை (ஆஸ்திரேலியா) வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    • 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவதற்கான முயற்சியில் இருந்த நடால், அடுத்த செட்டையும் தவற விட்டார்.
    • போட்டியில் இருந்து நடால் வெளியேறிய நிலையில் அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான கனவு தகர்ந்து போனது.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ந்தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்த போட்டியின் தொடக்க ஆட்டம் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. ஆட்டத்தின்போது, நடப்பு சாம்பியனான ரபேல் நடால், தனது விருப்பத்திற்குரிய பேட் காணாமல் போய் விட்டது என்றும் பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்று விட்டான் எனவும் புகாராக கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.

    எனினும், வேறொரு பேட்டை பயன்படுத்தி நடால் விளையாடினார். இந்த போட்டியில், ஜாக் டிரேபருக்கு எதிராக கடுமையாக போராடி 7-5, 2-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மூன்றரை மணிநேரம் நீடித்த இந்த போட்டியில் பெற்ற வெற்றியானது, நடப்பு ஆண்டில் நடாலுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும். இதனை தொடர்ந்து, இன்று நடந்த 2-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டு என்பவருக்கு எதிராக விளையாடினார்.

    ஆனால், தொடக்கத்தில் இருந்தே போட்டியின் தாக்கம் மெக்கன்சியின் பக்கம் இருந்தது. தரவரிசையில் 63-வது இடத்தில் உள்ள மெக்கன்சி அதிரடியாக சர்வீஸ் செய்து முதல் செட்டை எளிதில் கைப்பற்றினார்.

    23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவதற்கான முயற்சியில் இருந்த நடால், அடுத்த செட்டையும் தவற விட்டார். இதனால், அடுத்தடுத்த செட்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.

    ஆனால், அதற்கு இடம் தராமல் மெக்கன்சி அதிரடி விளையாட்டை வெளிப்படுத்தினார். இதனால், 3-வது செட்டையும் தனவசப்படுத்தினார். 2 மணிநேரம் மற்றும் 32 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 4-6, 4-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தி அமெரிக்க வீரர் மெக்கன்சி வெற்றி பெற்றார்.

    போட்டியின்போது, நடாலுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டார். இதனால், அவரால் சரியான முறையில் ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது. போட்டியில் இருந்து நடால் வெளியேறிய நிலையில், அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான கனவு தகர்ந்து போனது.

    • 2-ம் நிலை வீராங்கனை துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியர் தமரா ஜிடான்செக்கை வென்றார்.
    • மழையால் நேற்று நிறைய ஆட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), தரவரிசையில் 88-வது இடம் வகிக்கும் தமரா ஜிடான்செக்கை (சுலோவேனியா) சந்தித்தார். இதில் ஜாபியர் 7-6 (10-8), 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    ஒலிம்பிக் சாம்பியன் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் 6-1, 6-2 என்ற நேர் செட்டில் விக்டோரியா தோமோவா (பல்கேரியா) வென்றார்.

    இதேபோல் எஸ்தோனியாவைச் சேர்ந்த கோன்டாவெய்ட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மழையால் நேற்று நிறைய ஆட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.

    • செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்பெலசை எளிதில் வென்றார்.
    • இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பெரெட்னியை வீழ்த்தினார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான 111-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்பெலசுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-0 என எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்னியுடன் மோதினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆண்டி முர்ரே 6-3, 6-3, 4-6, 6-7 , 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ×