என் மலர்
டென்னிஸ்
- சான்டியாகோ கான்செலஸ் (மெக்சிகோ)- ரோஜர் வாஸ்செலின் (பிரான்ஸ்) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)- மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 7-6 (7-3), 10-4 என்ற செட் கணக்கில் சான்டியாகோ கான்செலஸ் (மெக்சிகோ)- ரோஜர் வாஸ்செலின் (பிரான்ஸ்) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
அதேபோல், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
- இதில் பெலாரசின் அரினா சபலென்கா வென்று இறுதிக்கு முன்னேறினார்.
ஸ்பெயின்:
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஏற்கனவே பெலாரசின் அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஸ்பெயின்:
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா வீராங்கனை பெட்ரோ மாட்ரிக்குடன் மோதினார்.
இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி, ரோமானிய வீராங்கனை இரினா கமாலியா பிகுவுடன் மோதினார்.
இதில், முதல் செட்டை இழந்த சக்காரி அடுத்த இரு சுற்றுகளை கைப்பற்றி அசத்தினார். இறுதியில், சக்காரி 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
- கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானு. 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான அவர், இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
சமீபத்தில் நடந்த மாட்ரிட் ஓபனில் இருந்து கையில் காயத்துடன் வெளியேறி இருந்தார். காயம் காரணமாக அவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.
என்னை ஆதரித்த என்று ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்.
- ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு முன்னேற்றம்.
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.
அதேபோல் ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு சிட்சிபாஸ் முன்னேறினார்.
- ஏற்கனவே ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
பாரீஸ்:
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஸ்பெயின் வீரர் பெர்னபே ஜபாடாவுடன் மோதினார்.
இதில் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் வென்று சிட்சிபாஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஜான் லெனார்ட் ஸ்டர்ப், அர்ஜென்டினா வீரர் பெடொ காசினுடன் மோதினார். இதில் ஸ்டர்ப் 7-6, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஏற்கனவே ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ரஷிய வீரர் கச்சனோவ் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
- ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரினா சபலென்கா அரை இறுதிக்குள் நுழைந்தார்.
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) சரிவில் இருந்து மீண்டு வந்து 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.
- பார்சிலோனா ஓபனில் இன்று இரவு இறுதிப்போட்டி நடைபெற்றது.
- இதில் சிட்சிபாசை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
பார்சிலோனா:
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை சந்தித்தார்.
இதில் கார்லோஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சிட்சிபாசை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- இரண்டாவது அரையிறுதியில் அல்காரஸ் இங்கிலாந்து வீரரை வென்றார்.
- நாளை இரவு நடக்கும் இறுதிப்போட்டியில் சிட்சிபாசுடன் அல்காரஸ் மோதுகிறார்.
பார்சிலோனா:
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இங்கிலாந்தின் டான் ஈவன்சுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ், சிட்சிபாசை எதிர்கொள்கிறார்.
- முதல் அரையிறுதியில் சிட்சிபாஸ் இத்தாலி வீரரை வென்றார்.
- நாளை இரவு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
பார்சிலோனா:
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை சிட்சிபாஸ் 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை நீண்ட போராட்டத்துக்கு பின் முசெட்டி 7-5 என
கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சிட்சிபாஸ் 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை இரவு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
பார்சிலோனா:
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, மெக்சிகோவின் சாண்டியாகோ - பிரான்சின் வாசலின் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- முதல் காலிறுதியில் சிட்சிபாஸ் ஆஸ்திரேலிய வீரரை வென்றார்.
- நாளை நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி வீரரை எதிர்கொள்கிறார்.
பார்சிலோனா:
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற இருந்த இரண்டாவது காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காயம் காரணமாக விலகியதால், சக நாட்டு வீரர் லாரன்சோ முசெட்டி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதனால் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியை சிட்சிபாஸ் மோதுகிறார்.






