என் மலர்
கிரிக்கெட் (Cricket)

#T20WorldCup அரையிறுதி: கேட்சை தவறவிட்ட ஹாரி புரூக்.. அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சன்
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார்.
சஞ்சு சாம்சன் 15 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த கேட்சை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






