என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: ஜெய்ஸ்வால் அதிரடி சதம்- அரியானாவை வீழ்த்தியது மும்பை
- டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த அரியானா 20 ஓவரில் 234 ரன்கள் குவித்தது.
புனே:
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று புனேயில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, அரியானாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த அரியானா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித்குமார் 89 ரன்னும், நிஷாந்த் சிந்து 63 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 235 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி 17.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் 50 பந்தில் ஒரு சிக்சர், 16 பவுண்டரி உள்பட 101 ரன்னும், சர்ப்ராஸ் கான் 64 ரன்னும் குவித்தனர்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரு அணி விரட்டிப் பிடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
மும்பை அணி தான் ஆடிய இரு போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு வெற்றி பெற்றுள்ளது.






