என் மலர்
கிரிக்கெட் (Cricket)

WPL 2026: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. நாட் ஸ்கீவர் பிரண்ட் 70 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக ஆடி 42 பந்தில் 74 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
சினேலி ஹென்றி தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், டெல்லி அணி 19 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
மும்பை அணி சார்பில் அமீலியா கெர், நிகோலா கேரி தலா 3 விக்கெட்டும், நாட் ஸ்கீவர் பிரண்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.






