என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

கிங் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானது - RCB அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
- அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பமான கம்பேக் கொடுக்கும்
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்ற பெங்களூரு அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள். இந்த கனவை பல ஆண்டுகளாக சுமந்து வந்து கிங் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானது. அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பமான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Next Story






