என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற விரும்புகிறார் நெய்மர்
    X

    ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற விரும்புகிறார் நெய்மர்

    ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற நெய்மர் விரும்புகிறார். இதனால்தான் பார்சிலோனாவில் இருந்து பி.எஸ்.ஜி.க்கு அவர் மாறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பிரேசில் கால்பந்து அணியின் தலைசிறந்த வீரரான நெய்மர் (ஜூனியர்) திகழ்ந்து வருகிறார். இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களான மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து பேசப்படுகிறார்.

    ஆரம்ப கட்டத்தில் பிரேசில் நாட்டின் கிளப்பில் இருந்து புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்கு மாறினார். மெஸ்சியுடன் இணைந்து பார்சிலோனாவின் நம்பிக்கை வீரரானார். இவரை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் பார்சிலோனா இவருடனான ஒப்பந்தத்தை 2020-க்கு மேலும் நீட்டித்தது.

    இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாற விரும்பினார். பார்சிலோனா எவ்வளவோ முயற்சி செய்தும் நெய்மரை வெளியேறுவததை தடுக்க முடியவில்லை. இறுதியில் 200 மில்லியன் பவுண்டுக்கு வரலாற்று டிரான்ஸ்பராக பி.எஸ்.ஜி.க்கு மாறினார். நெய்மரின் வளர்ச்சிக்கு அவரது அப்பா உறுதுணையாக இருந்து வருகிறார். இந்த மாற்றத்திற்கு அவர்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.



    நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடன் தனது கால்பந்து வாழ்க்கையை முடிக்க விரும்பவில்லை. ரியல் மாட்ரிட்டின் ரசிகர்கள் மற்றும் அதன்சிறப்பு அவரை பார்சிலோனாவில் இருந்து வெளியேற்ற காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. பார்சிலோனாவில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு நேரடியாக டிரான்ஸ்பர் ஆவது எளிதான காரியம் அல்ல. அது பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். இதனால்தான் பி.எஸ்.ஜி.க்கு மாறியுள்ளார் எனவும் கருதப்படுகிறது.

    ஏற்கனவே நெய்மரின் தந்தை ரியல் மாட்ரிட் அணி தலைவருடன் போனில் பேசியதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×