என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் மொயின் அலி அதிரடியாக ஆடி 36 ரன்களை எடுத்ததுடன், சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.
    லீட்ஸ்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி லீட்சில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி 39 பந்தில் 59 ரன்கள் எடுத்தார். மொயின் அலி அதிரடியாக ஆடி 16 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.

    அரை சதம் அடித்த ஜோஸ் பட்லர்

    பாகிஸ்தான் சார்பில் மொகமது ஹஸ்னன் 3 விக்கெட்டும், இமாத் வாசிம், ஹரிஸ் ராப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் அதிகபட்சமாக 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஷதாப் கான் 36 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை1-1 என சமன் செய்துள்ளது.

    இங்கிலாந்து சார்பில் சாகிப் மக்மூத்3 விக்கெட்டும், அடில் ரஷீத், மொயின் அலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது மொயின் அலிக்கு வழங்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி 20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    அறிமுக வீரர் இஷான் கிஷன் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார்.
    கொழும்பு:

    இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. 

    அதிகபட்சமாக சமிகா கருணாரத்னே 43 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தார். கேப்டன் சனகா 39 ரன்களும், அசலங்கா 38 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் தீபக் சாகர், யுஸ்வேந்திர சாகல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

    இதையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர் பிருத்வி ஷா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் ஷிகர் தவான்- அறிமுக வீரர் இஷான் கிஷன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

    அரை சதம் அடித்த இஷான் கிஷன்

    குறிப்பாக, இஷான் கிஷன் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இஷான் கிஷன், 33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். அவர் 59 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கேப்டன் தவானும் அரை சதம் கடந்து முன்னேறினார்.

    மணீஷ் பாண்டே 26 ரன்களில் அவுட் ஆனதும், சூரியகுமார் யாதவ், கேப்டன் தவானுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் தவான் 86 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

    இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2வது போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.
    அறிமுகமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார்.
    கொழும்பு:

    இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த 262 ரன்கள் எடுத்தது. 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

    அறிமுக வீரர் இஷான் கிஷன், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இஷான் கிஷன், 33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். இதன்மூலம் அறிமுக போட்டியில் விரைவாக அரை சதம் கடந்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 26 பந்துகளில் அரை சதம் அடித்த குருணால் பாண்டியா முதலிடத்தில் உள்ளார்.

    இன்றைய ஆட்டத்தில் அரை சதம் அடித்ததன்மூலம், அறிமுகமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் இஷான் கிஷன் பெற்றுள்ளார். சர்வதேச டி20 அறிமுக போட்டியின்போது முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஷான் கிஷன் தனது பிறந்தநாளான இன்று கிரிக்கெட்டில் புதிய சாதனைகளை படைத்திருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.
    இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகினர்.
    கொழும்பு:

    இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகினர்.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது.  அதிகபட்சமாக சமிகா கருணாரத்னே 43 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தார். கேப்டன் சனகா 39 ரன்களும், அசலங்கா 38 ரன்களும் எடுத்தனர். 

    விக்கெட் கைப்பற்றியதை கொண்டாடும் இந்திய வீரர்கள்

    இந்தியா தரப்பில் தீபக் சாகர், யுஸ்வேந்திர சாகல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

    இதையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல், ஜிம்னாஸ்டிக் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் குறித்த செய்தியை காணலாம்.
    நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதல் வீர‌ரான இவருக்கு வயது 24. 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 24 தேதி அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் பிறந்தவர். ஜூனியர் பிரிவில் உலக அளவிலான போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் பிரிவில் உலக அரங்கில் 16 வது இடத்தில் உள்ளார். 

    ஷிவ்பால் சிங் - ஈட்டி எறிதல் வீர‌ரான இவருக்கு வயது 26, 1995 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள இவர், ஈட்டி எறிதல் பிரிவில் உலக அரங்கில் 18 வது இடத்தில் உள்ளார். 

    பிரணதி நாயக் - சீருடற்பயிற்சி (ஜிம்னாஸ்டிக்) வீராங்கனையான இவருக்கு வயது 26. மேற்கு வங்க மாநிலம் பிங்காலா மாவட்டத்தில் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெண்கல பதக்கம் வென்றுள்ள இவர், உலக தர வரிசையில், 8வது இடத்தை பிடித்திருக்கிறார். 
    ஜப்பான் சென்றுள்ள தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    டோக்கிய ஒலிம்பிக் போட்டிகள் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 23-ந்தேதி) தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்கள் டோக்கியோவின் ஒலிம்பிக் கிராமம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்காவின் 23 வயதிற்கு உட்பட கால்ந்து அணி ஜப்பான் சென்றடைந்துள்ளது. அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் வீடியோ அனலிஸ்ட் ஸ்டாஃப் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
    டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெரும்பாலான வீரர்கள், ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியதால் சுமித் நகலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
    இந்தியாவைச் சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுப் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றனர். அவர்கள் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு, தற்போது ஜப்பான் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியாவின் இளம் டென்னிஸ் வீரரான சுமித் நகல், தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சுமித் நகல் உலகத் தரவரிசையில் தற்போது 154-வது இடத்தில் உள்ளனார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான காலக்கெடுவின்போது (ஜூன் 14-ந்தேதி) 144-வது தரவரிசையில் இருந்தார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் போடிக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெரும்பாலான முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் சுமித் நகல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    அனைத்து இந்திய டென்னிஸ் அசோசியேசன் சுமித் நகல் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றதை உறுதி செய்துள்ளது. ஆனால், டோக்கியோ செல்வாரா? என்பது குறித்து இன்னும் தெளிவான செய்தி வெளியாகவில்லை.
    உடலுறவு கூடாது, மகிழ்ச்சியை கட்டிப்பிடித்து கொண்டாடக் கூடாது, பதக்கம் வாங்கும்போது முகக்கவசம் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. ஜப்பானிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது.

    இதனால் போட்டிகளுக்கு கொரோனா அச்சுறுத்தல் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உருமாறிய கொரோனா பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியது. வீரியம் மிக்கதாகவும், விரைவாக பரவக் கூடியதாகவும் உள்ளது.

    தற்போது 3-அலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஜப்பானிலும் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. டோக்கியோ நகரில் ஜனவரி மாதத்திற்குப் பிறகு தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது.

    ஒலிம்பிக் போட்டியில் 11,500 வீரர்- வீராங்கனைகள் பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப், அதிகாரிகள் என 79 ஆயிரம் பேர் டோக்கியோவில் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கென ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒலிம்பிக் கிராமத்தில் ஒவ்வொரு நாட்டின் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்க வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள்

    இந்நிலையில் ஒலிம்பிக் கமிட்டி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு எச்சரிக்கை, அபராதம், போட்டியை விட்டு நீக்குதல் என கடுமையான தண்டனை விதிக்கப்படும் என புதிய வழிக்காட்டு நெறிமுறை புத்தகத்தில் தெரிவித்துள்ளது.

    ஒலிம்பிக் வீரர்கள் யாரும் உடலுறவில் ஈடுபடக் கூடாது. சந்தோசத்தை கட்டிப்பிடித்து கொண்டாடக் கூடாது. ஒலிம்பிக் நகரில் உள்ள உணவுக் கூடங்களில் தனித்தனியாகவே சாப்பிட வேண்டும். பதக்கம் வாங்க செல்லும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தினந்தோறும் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    பாலியல் தடையை உடல் அளவிலான தொடர்பை தவிர்த்தல், கட்டிப்பிடித்தல், கைக்குலுக்கல், மற்ற நபர்களுடன் குறிப்பிட்ட இடைவெளியுடன் பேசுதல் என்ற அடிப்படையில் தெரிவித்துள்ளது.

    டைனிங் ஹால்

    1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் போட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான இளம் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் போட்டியில் பாதுகாப்பான உடலுறவை வலியுறுத்தி ஒலிம்பிக் கிராமத்திற்கு ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வழங்கப்பட்டன. டோக்கியோ ஒலிம்பிக்கிலும் 1,60,000 ஆணுறைகள் வழங்கப்பட இருந்தன. அது கொரோனா தொற்றால் கைவிடப்பட்டுள்ளது.

    விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்- வீராங்கனைகள் கட்டாயம் ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும். அதில் இரண்டு ஆப்ஸ்களை (Apps) பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். ஒன்று உடல்நிலையை பரிசோதிக்க... மற்றொன்று அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள.. ஸ்மார்ட்போன் இல்லை என்றால், விமான நிலையத்தில் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம். போன் இல்லாமல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாது.
    இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
    கொழும்பு:

    ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட 2-ம்தர இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது. இதன்படி இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இலங்கை கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார்,  தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

    இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), மினோட் பானுகா, பானுகா ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, அவிஷ்கா பெர்னாண்டோ, பதும் நிசாங்கா, சாமிகா கருணாரத்ன, உதனா, லக்ஷன் சன்டகன், துஷ்மந்தா சமீரா, ஹசரங்கா.

    அயர்லாந்தில் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்சர்கள் விளாசி பேட்ஸ்மேன் சாதனைப் படைத்துள்ளார்.
    வடக்கு அயர்லாந்து கிளப் அணிகளுக்கு இடையில் எல்.வி.எஸ். டி20 தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் கிரேகாக்- பாலிமேனா அணிகள் மோதின. கிரேகாக் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கிரேகாக் முதலில் பேட்டிங் செய்து 40 ஓவர் போட்டியில் 147 ரன்கள் அடித்தது.

    பின்னர் பாலிமேனா அணி சேஸிங் செய்தது. கிரேகாக் அணியின் துல்லியமான பந்து வீச்சால் பாலிமேனா அணியால் 39 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களே அடிக்க முடிந்தது.

    இதனால் கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பாலிமேனா அணியின் கேப்டன் எதிர்கொண்டார். கடைசி ஓவரில் 35 ரன்கள் அடிப்பது கடினம். அதனால் சாம்பியன் கோப்பை நமக்குதான் என கிரேகாக் அணியின் வீரர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்து இருந்தனர்.

    ஆனால் பாலிமேனா கேப்டன் ஜான் கிளாஸ் கடைசி ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெறவைத்தார்.

    கடைசி ஓவரில் 36 ரன்கள் விளாசி 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல், ஜான் கிளாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். அத்துடன் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.
    டிஎன்பிஎல் போட்டியின் 5-வது சீசன் நாளைய தொடங்க உள்ள நிலையில் முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் ( டி.என்.பி.எல்.) 20 ஓவர் போட்டி 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறை (2017, 2019 ) டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றி உள்ளது. டூட்டி பேட்ரியாட்ஸ் (2016 ), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

    5-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (19-ந் தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 15 ந் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    அனைத்து ஆட்டங்களும் (மொத்தம் 32) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக ஒரே இடத்தில் போட்டி நடத்தப்படுகிறது. மற்ற நகரங்களில் போட்டி நடைபெறவில்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டி நடைபெறுகிறது.

    டி.என்.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீசெம் மதுரை பாந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “ பிளே ஆப் “ சுற்றுக்கு முன்னேறும்.

    ஆகஸ்ட் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைகிறது. 10 -ந் தேதி “பிளேஆப்” சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது. ஆகஸ்ட் 15 ந் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.

    நாளைய தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. எந்த அணி வெற்றியுடன் கணக்கை தொடங்க போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது வீரர்களுக்கு சவாலானதாகவே இருக்கும். ஏற்கனவே வென்ற அணி டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றுமா? புதிய அணி பட்டம் பெறுமா ? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைப் பெறும் ஆர்வத்தில் உள்ளது. மதுரை பாந்தர்ஸ் 2-வது தடவையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    தொடர்ச்சியாக 2 முறை இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்த திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட மற்ற அணிகள் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற காத்திருக்கின்றன.

    நாளைய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட ஸ்டார் நெட் வொர்க் சேனல்களில் டி.என்.பி.எல். போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    7 தினங்களில் மட்டும் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். மற்ற தினங்களில் ஒரே ஒரு போட்டி நடக்கிறது. 2 போட்டி நடைபெறும் நாளில் முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். ஒரே ஒரு போட்டி நடைபெறும் நாட்களில் ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். 

    ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதையடுத்து அந்த நபர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
    டோக்கியோ: 

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்னும் 5 நாட்களில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் அடங்கிய அணி ஜப்பானை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். கொரோனாவினால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவலை வெளியிட்டு இருக்கும் போட்டி அமைப்பு குழுவினர் அவர் யார்? என்பது குறித்து எந்தவித விவரத்தையும் வெளியிடவில்லை. 

    ஒலிம்பிக் வீரர்கள் தங்கிய ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா, போட்டி அமைப்பு குழுவினர் ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தில் தங்கியவருக்கு கொரோனா பாதிப்பு என்று செய்திகள் வெளியான நிலையில் முதல்முறையாக ஒட்டு மொத்த வீரர்களும் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலேயே கொரோனா தொற்று ஊடுருவி இருப்பது பரபரப்பையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    ×