என் மலர்
விளையாட்டு
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக விஜய் சங்கர் 41 ரன்கள் அடித்தார். அபிஷேக் 25 ரன்களும், லோகேஷ் ராஜ் 15 ரன்களும், கணேஷ் மூர்த்தி 10 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ், ஹரிஷ், கேப்டன் பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதயடுத்து 121 ரன்கள் என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. துவக்க வீரர் சூர்யபிரகாஷ் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் கேப்டன் பாபா அபராஜித், பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர்.
அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக் புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபக் புனியா, சான் மரினோவைச் சேர்ந்த நசீம் அமீனுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 2-4 என்ற புள்ளிக் கணக்கில் தீபக் புனியா தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.
முன்னதாக நடைபெற்ற ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர்.
அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக்புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று விளையாட உள்ளார். அதேசமயம், 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ரவிக்குமார் தாஹியா.
2019ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெண்கலம் வென்றார். அதன்பின்னர் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு அவர் செல்போன் மூலம் வீரர்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மோடி, ஆக்கி வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை வீழ்த்தியது.
முதலில் ஆடிய மதுரை அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் சதுர்வேத் அதிகபட்சமாக 50 பந்தில் 70 ரன் (9 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தார். சித்தார்த் 20 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். சோனு யாதவ் 2 விக்கெட்டும், சந்தீப் வாரியர் , சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 50 பந்தில் 64 ரன் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற 3-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 3 போட்டிளில் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. இதன் மூலம் அந்த அணி 4-வது இடத்தில் இருந்து 2 -வது இடத்துக்கு முன்னேறியது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி , ஒரு தோல்வி,ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. திருச்சி வாரியர்ஸ் 8 புள்ளியுடன் முதல் இடத்திலும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3-வது இடத்திலும் (6 புள்ளி), மதுரை 4-வது இடத்திலும் (5 புள்ளி) உள்ளன.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
நெல்லை அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. கடைசி இடத்தில் இருக்கும் சேலம் அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
ஒலிம்பிக் ஆக்கியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று இந்திய ஆக்கி அணி புதிய வரலாறு படைத்தது. வெண்கல வென்ற இந்திய ஆக்கி அணியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கேப்டன் மன்பிரீத்சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங், ஹர்திக்சிங், ஷம்ஷெர்சிங், தில்பிரீத்சிங், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங் ஆகிய 8 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
நாட்டிங்காம்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 65.4 ஓவர்களில் 183 ரன்னில் சுருண்டது. கேப்டன் ஜோ ரூட் அதிக பட்சமாக 64 ரன்னும், பேர் ஸ்டோவ் 29 ரன்னும் எடுத்தனர்.
பும்ரா 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் தலா 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
நேற்றைய போட்டி குறித்து இந்திய வேகப்பந்து வீரர் ஷர்துல் தாகூர் கூறியதாவது:-
ஜோரூட் விக்கெட்டை கைப்பற்றியது முக்கியமானது. இதேபோல் பேர்ஸ்டோவும் நல்ல நிலையில் ஆடி வந்தார். அவர் சிறந்த நிலைக்கு சென்று விட்டால் அவுட் செய்வது கடினம். இதனால் அவரது விக்கெட்டும் முக்கியமானதாகும்.
ஆடுகளத்தை பார்த்தால் 4 வேகப்பந்து வீரர்கள் தேவைப்படமாட்டார்கள் என்று நினைத்தோம். இங்குள்ள தட்ப வெப்ப நிலைக்கு டியூக் பந்துகளை வீசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த டெஸ்ட் போட்டி எங்களுக்கு தொடர்ந்து சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது. இதேபோல இந்திய மகளிர் ஆக்கி அணியும் வெண்கலப்பதக்கம் பெற்று சாதிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஆக்கி அணி லீக் ஆட்டங்களில் தான் மோதிய முதல் 3 போட்டியில் தோல்வியை தழுவியது. நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கிலும், ஜெர்மனியிடம் 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்திடம் 1-4 என்ற கணக்கிலும் தோற்றது.
பின்னர் இந்திய மகளிர் ஆக்கி அணி சிறப்பாக ஆடி அயர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும், தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கிலும் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
ஆனால் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது.
3-வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை நாளை (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.
இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் ஆக்கி அணி வெண்கல பதக்கம் பெற்று புதிய வரலாற்றை நிகழ்த்துமா என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.






