என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆண்களுக்கான 110மீ தடைதாண்டுதல் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் 13.05 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100மீ தடைதாண்டும் ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவே உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்ட வீரர்கள்

    இதில் ஜமைக்காவின் ஹான்சில் பார்ச்மென்ட் பந்தய தூரத்தை 13.04 வினாடிகளில் கடந்து உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவேவுக்கு அதிர்ச்சி அளித்தார். ஹோலோவே 13.09 வினாடிகளில் கடந்து 2-வது இடமே பிடிக்க முடிந்தது. மற்றொரு ஜமைக்கா வீரரான ரொனால்டு லெவி 13.10 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
    32 தங்கத்துடன் சீனா முதலிடத்திலும், 27 தங்கத்துடன் அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ள நிலையில், ஜப்பான் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 66-வது இடத்தை பிடித்துள்ளது.

    மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றால் இந்தியா 59-வது இடத்திற்கு முன்னேறும். தங்கம் வென்றால் 43-வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

    சீனா 32 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 27 தங்கம், 33 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    போட்டியை நடத்தும் ஜப்பான் 21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
    காலிறுதியில் பெலாரஸ் வீராங்கனை வனேசாவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 3-9 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
    மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் இன்று காலை நடைபெற்றன. ஒரு போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்- சோபியா மேக்டலினா (சுவீடன்) மோதினார்கள்.

    ஆறு நிமிடம் கொண்ட போட்டியில் முதல் மூன்று நிமிடங்களில் சுவீடன் வீராங்கனையை மடக்கி வினேஷ் போகத் 2,2,1 என புள்ளிகள் பெற்று 5-0 என முன்னிலை பெற்றார். 2-வது மூன்று நிமிடங்களில் மேலும் 2 புள்ளிகள் பெற்றார். சுவீடன் வீராங்கனையால் ஒரு புள்ளி மட்டுமே பெற முடிந்தது.

    இதனால் வினேஷ் போகத் 7-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் பெலாரஸ் வீராங்கனை வனேசா கலாட்ஜின்ஸ்கயாவை எதிர்கொண்டார். இதில் வினேஷ் போகத் 3-9 என்ற கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
    வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஜெர்மனியை வீழ்த்தி பதக்கம் வென்றது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில்  வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது.

    ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.


    இந்திய ஹாக்கி அணி

    2-வது கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் அதாவது 17-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என முன்னிலைப் பெற்றது.

    ஜெர்மனி வீரர் ஃபர்க் 25-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் முறையே 27 மற்றும் 29-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர். இதனால் 2-வது கால் பகுதி ஆட்டம் முடிவில் ஸ்கோர் 3-3 என சமநிலை பெற்றது.

    3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 3-வது கால் பகுதி ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே, அதாவது ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ருபீந்தர் பால் சிங் கோல் அடித்தார். அதோடு அல்லாமல் 34-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால் 3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்தியா 5-3 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    4-வது மற்றும் கடைசி கால் பகுதி ஆட்டம் தொடங்கியது. 48-வது நிமிடத்தில் ஜெர்மனியின் வண்ட்பெடர் கோல் அடிக்க இந்தியாவின் ஸ்கோர் 5-4 என ஆனது.

    ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்ய, இந்திய வீரர்கள் தடுப்பதில் ஆர்வம் காட்டினர். 10-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு சூப்பர் வாய்ப்பு கிடைத்தது. கோல் எல்லையில் ஜெர்மனி கோல் கீப்பரை தவிர எதிரணி வீரர்கள் யாரும் இல்லை. ஆனால் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடிக்க தவறினார்.

    7 நிமிடம் இருக்கும்போது ஜெர்மனிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் கோல் அடிக்க  விடாமல் இந்திய வீரர்கள் அருமையாக தடுத்தனர்.

    3-வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையில் இந்திய வீரர்கள் சிறப்பாக தடுத்தனர். கடைசி ஒன்றரை நிமிட ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்திய வீரர்கள் ஜெர்மனியை கோல் அடிக்க விடாமல் சிறப்பாக தடுத்தனர். ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் ஜெர்மனி கோல் அடிக்க முயற்சி செய்தது.

    7 வினாடிகள் இருக்கும்போது ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதையும் இந்திய வீரர்கள் முறியடிக்க 5-4 என இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

    இதன் மூலம் 41 வருடத்திற்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை ருசித்துள்ளது.


    சுவீடன் வீராங்கனையை 7-1 என எளிதாக வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
    மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் இன்று காலை நடைபெற்றன. ஒரு போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்- சோபியா மேக்டலினா (சுவீடன்) மோதினார்கள்.

    ஆறு நிமிடம் கொண்ட போட்டியில் முதல் மூன்று நிமிடங்களில் சுவீடன் வீராங்கனையை மடக்கி வினேஷ் போகத் 2,2,1 என புள்ளிகள் பெற்று 5-0 என முன்னிலை பெற்றார். 2-வது மூன்று நிமிடங்களில் மேலும் 2 புள்ளிகள் பெற்றார். சுவீடன் வீராங்கனையால் ஒரு புள்ளி மட்டுமே பெற முடிந்தது.

    இதனால் வினேஷ் போகத் 7-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெறும் காலிறுதியில் பெலாரஸ் வீராங்கனை கலாட்ஜின்ஸ்கயாவை எதிர்கொள்கிறார்.
    இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் கடைசி வரை சிறப்பான போராடி, கடைசி நிமிடத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு ஏமாற்றம் அடைந்தார்.
    மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் ‘ரெபிசாஜ்’ வாய்ப்பில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் ரஷியாவின் வளரியா கோப்லோவா எதிர்கொண்டார்.

    இதில் வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெறலாம் என்பதால் இரு வீராங்கனைகளும் வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடினார்கள்.

    இருவரும் பிடிகொடுக்காமல் விளையாடினார்கள். முதல் மூன்று நிமிடத்தில் டெக்னிக்கல் முறையில் ரஷிய வீராங்கனை ஒரு புள்ளி பெற்றார்.

    அடுத்த மூன்று நிமிடங்களிலும் சிறப்பான வகையில் மல்லுக்கட்டினர். இந்த முறை டெக்னிக்கல் முறையில் இந்திய வீராங்கனை ஒரு புள்ளி பெற்றார். இதனால் 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது.

    கடைசி ஒரு நிமிடத்தில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் ரஷிய வீராங்கனையிடம் மாட்டிக்கொண்டார்.  இதனால் 2, 2 என இரண்டு முறை ரஷிய வீராங்கனை புள்ளிகள் பெற்றார். ஆகவே, அன்ஷு மாலிக் 1-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
    என்னிடம் இருந்த வாளை நான் முதல்-அமைச்சருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்தியாவில் இருந்து சென்று ஒலிம்பிக் போட்டியில் முதலாவதாக பயன்படுத்திய வாள் என்பதால் அதை அவருக்கு பரிசாக அளித்தேன்.
    சென்னை:

    ஒலிம்பிக் போட்டியில் வாள் சண்டையில் பங்கேற்ற வீராங்கனை பவானி தேவி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் அங்கு நிருபர்களுக்கு பவானி தேவி அளித்த பேட்டி வருமாறு:-

    டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நான் முதல் முறையாக பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளேன். வந்ததும் தன்னை வந்து சந்திப்பதற்கான அனுமதியை முதல்-அமைச்சர் வழங்கியிருந்தார். அவர் எனது விளையாட்டையும் பார்த்திருக்கிறார்.

    நான் நன்றாக விளையாடியதாக என்னை பாராட்டினார். போட்டிக்கு போவதற்கு முன்பும் விளையாட்டு வீரர்களிடம் 2 முறை கலந்துரையாடினார். எங்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி தேவையான உதவிகளைச் செய்வதாகவும் நம்பிக்கை அளித்தார்.

    இது எனக்கு முதல் ஒலிம்பிக் போட்டி மட்டுமல்ல, வாள் வீச்சில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தற்போதுதான் இந்தியா சென்றிருக்கிறது. எனவே இது இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், எனக்கும் பெருமை சேர்க்கும் போட்டியாக இருந்தது. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

    இதற்கு எனது குடும்பத்தினர் நல்ல ஆதரவு அளித்திருந்தனர். எனக்காக எனது தாயார் மிகுந்த கஷ்டப்பட்டார். அதையும் முதல்-அமைச்சர் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.

    என்னிடம் இருந்த வாளை நான் முதல்-அமைச்சருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்தியாவில் இருந்து சென்று ஒலிம்பிக் போட்டியில் முதலாவதாக பயன்படுத்திய வாள் என்பதால் அதை அவருக்கு பரிசாக அளித்தேன்.

    அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் விளையாட வேண்டும். அதற்கு இந்த வாள் தேவைப்படும் என்று கூறி அதை எனக்கே திருப்பி பரிசாக வழங்கிவிட்டார். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட அரசு உதவிகளைச் செய்யும் என்று கூறி நம்பிக்கை அளித்தார்.

    நான் தற்போது மின்சாரத்துறையில் பணியாற்றுகிறேன். அதுபற்றி முதல்-அமைச்சர் விசாரித்தார். நான் இந்த அளவுக்கு முன்னேறி வருவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அளித்த ஊக்கம் முக்கிய காரணமாக இருந்தது.

    கடந்த 5 ஆண்டுகளாக அதில் இருந்து வரும் உதவி நிதி எனக்கு உதவிகரமாக இருந்தது. அதனால் வெளிநாட்டுக்கு சென்று பயிற்சிபெற முடிந்தது. இன்னும் பல விருதுகளை தமிழகத்துக்கு சேர்ப்பேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் எனக்கு உதவிகளைச் செய்திருந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தொடக்க பேட்ஸ்மேன் கவுசிக் காந்தி 50 பந்தில் 64 ரன்கள் அடிக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மதுரை அணியை 5 விக்கெட் வீழ்த்தியாசத்தில் வீழ்த்தியது.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரவீன் தான் சந்தித்த 2 பந்தை பவுண்டரிக்கும் 3-வது பந்தை சிக்சருக்கும் பறக்க விட்டார. ஆனால்,  அடுத்த பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய தொடங்கியது. 85 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

    இதனையடுத்து மதுரை அணியின் கேப்டன் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். கடைசி வரை போராடிய அவர் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களம் இறங்கியது. கவுசிக் காந்தி, ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெகதீசன் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சீனிவாஸ் 2 ரன்னிலும், சசிதேவ் 18 ரன்னிலும், சாய் கிஷோர் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஆனால் கேப்டன் கவுசிக் காந்தி அபாரமாக விளையாடி 50 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கவுசிக் காந்தி ஆட்டமிழக்கும்போது, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 17.3 ஓவரில் 115 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 விக்கெட் வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சித்தார்த் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் 7 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
    பந்து வீச்சை பொருத்தவரை பும்ரா 4 விக்கெட்டுகளையும் சமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
    நாட்டிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை)  தொடங்கியது.

    இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி, தனது துல்லியமான பந்து வீச்சால் இங்கிலந்து அணியை நிலைகுலையவைத்தது. பும்ரா, சமி ஆகியோர் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை சீரான இடைவெளியில் வெளியேற்றினர். 

    65.4-ஓவர்கள் தாக்குப் பிடித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 64 ரன்கள் அடித்தார். பந்து வீச்சை பொருத்தவரை பும்ரா 4 விக்கெட்டுகளையும் சமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    பின்னர் முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்றது.
    டாக்கா:

    ஆஸ்திரேலியா வங்காளதேசம் அணிக்களுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 45 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் அணி தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணி 18.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்றது. 

    5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிக்களுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி 6-ம் தேதி நடக்கிறது.

    மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் மணிமாறன் சித்தார்த் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    சென்னை:

    டிஎன்பில் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    அதன்படி, மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரவீன் தான் சந்தித்த 2பந்தை பவுண்டரிக்கும் 3-வது பந்தை சிக்சருக்கும் பறக்க விட்ட அவர் அடுத்த பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய தொடங்கியது. 85 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

    இதனையடுத்து மதுரை அணியின் கேப்டன் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். கடைசி வரை போராடிய அவர் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. 

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டாஸ் வென்ற மதுரை பேட்டிங்கை தேர்வு செய்தது.

    மதுரை அணி 2 வெற்றி 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் இருக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி , ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. 

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்:-

    1. கவுசிக் காந்தி 2. ஜெகதீசன் 3. சோனு யாதவ் 4. சதீஷ் 5. சசிதேவ் 6. ஹரிஸ் குமார் 7. ஸ்ரீனிவாஸ் 8. மணிமாறன் 9. சாய் கிஷோர் 10. சந்தீப் வாரியர் 11. அலெக்ஸாண்டர்

    மதுரை பாந்தர்ஸ் அணி வீரர்கள்:-

    1.அருண் கார்த்திக் 2. பிரவீன் குமார் 3. அனிருத் 4. சதுர்வேத் 5. ஜெகதீசன் கவுசிக் 6. சுகேந்திரன் 7. ஸ்ரீனிவாஸ் 8. சிலம்பரசன் 9. கவுதம் 10. கிரண் ஆகாஷ் 11. ராக்கி
    ×