என் மலர்
செய்திகள்

ஹான்சில் பார்ச்மென்ட்
ஆண்கள் 110மீ தடைதாண்டுதல் ஓட்டம்: உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த ஜமைக்கா வீரர்
ஆண்களுக்கான 110மீ தடைதாண்டுதல் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் 13.05 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100மீ தடைதாண்டும் ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவே உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஜமைக்காவின் ஹான்சில் பார்ச்மென்ட் பந்தய தூரத்தை 13.04 வினாடிகளில் கடந்து உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவேவுக்கு அதிர்ச்சி அளித்தார். ஹோலோவே 13.09 வினாடிகளில் கடந்து 2-வது இடமே பிடிக்க முடிந்தது. மற்றொரு ஜமைக்கா வீரரான ரொனால்டு லெவி 13.10 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
Next Story






