என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சித்தார்த் மதுரை பாந்தர்ஸ் அணி வீரரை விக்கெட் எடுத்த காட்சி
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சித்தார்த் மதுரை பாந்தர்ஸ் அணி வீரரை விக்கெட் எடுத்த காட்சி

    டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிளில் வென்றதன் மூலம் 4-வது இடத்தில் இருந்து 2 -வது இடத்துக்கு முன்னேறியது.

    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை வீழ்த்தியது.

    முதலில் ஆடிய மதுரை அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் சதுர்வேத் அதிகபட்சமாக 50 பந்தில் 70 ரன் (9 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தார். சித்தார்த் 20 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். சோனு யாதவ் 2 விக்கெட்டும், சந்தீப் வாரியர் , சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 50 பந்தில் 64 ரன் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற 3-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 3 போட்டிளில் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. இதன் மூலம் அந்த அணி 4-வது இடத்தில் இருந்து 2 -வது இடத்துக்கு முன்னேறியது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி , ஒரு தோல்வி,ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. திருச்சி வாரியர்ஸ் 8 புள்ளியுடன் முதல் இடத்திலும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3-வது இடத்திலும் (6 புள்ளி), மதுரை 4-வது இடத்திலும் (5 புள்ளி) உள்ளன.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. கடைசி இடத்தில் இருக்கும் சேலம் அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    Next Story
    ×