search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    மழையால் ஆட்டம் பாதிப்பு - 2ம் நாள் முடிவில் இந்தியா 125/4

    இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே ரன் அவுட் ஆனார்.
    நாட்டிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

    ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தனர். 37 ஓவர்களை சந்தித்த இந்த ஜோடி அருமையான அடித்தளம் அமைத்து கொடுத்தது. சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்து ராபின்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    இதனையடுத்து புஜாரா களமிறங்கினார். எப்படியும் தனது தடுப்பாட்டத்தை ஆடுவார் என அனைவரும் நம்பிக்கையில் இருந்தனர்.  ராபின்சன் ஓவரில் அவருக்கு எல்பிடபிள்யுவுக்கு அம்பயர் அவுட் கொடுத்தார். உடனே புஜாரா ரிவ்யூ கேட்க மூன்றாம் நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார். 

    அடுத்த சிறிது நேரத்தில் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை புஜாரா இழந்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்து வந்த நிலையில் மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கே.எல்.ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார்.

    அடுத்து இந்திய அணியின் துணை கேப்டன் களமிறங்கினார். அவர் முதல் ரன் எடுக்கும் போதே ரன் அவுட்டில் இருந்து தப்பி 4 ரன்கள் எடுத்தார். 5 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் கடைசியில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

    ராபின்சன் ஓவரில் கே.எல்.ராகுல் தடுத்து ஆடி ரன் எடுக்க முயற்சித்து வேண்டாம் என்று கூறினார். அதற்குள் எதிர் முனையில் இருந்த ரஹானே பாதி வரை வந்து திரும்பிய நிலையில் பேர்ஸ்டோவ் சிறப்பாக பீல்டிங் செய்து அவரை ரன் அவுட் செய்தார்.

    இந்திய அணி ஒரு கட்டத்தில் 96 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது 125 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கே.எல்.ராகுலுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அவரது பாணியில் அடித்து ஆட ஆரம்பித்தார். சிறப்பாக ஆடி வந்த ராகுல், ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் ஆக இருந்தார். ஆனால் கேட்ச்சை சிப்லி தவற விட்டதால் ராகுல் தப்பித்தார்.

    தொடர்ந்து ஆடிய நிலையில் மேகமூட்டம் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

    மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

    கே.எல்.ராகுல் 57 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    Next Story
    ×