என் மலர்
செய்திகள்

ரியான் குரோசர்
ஆண்களுக்கான குண்டு எறிதல்: ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க வீரர்
23.30 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து அமெரிக்க வீரர் ரியான் தங்கப்பதக்கமும், 22.65 மீட்டர் தூரத்திற்கு எறிந்து மற்றொரு அமெரிக்க வீரர் வெள்ளி பதக்கமும் வென்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று வீரர்கள், நியூசிலாந்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட 12 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீரர்களும் தலா ஆறு முறை குண்டு எறிதல் வேண்டும். ஆறு வாய்ப்புகளில் எந்த வாய்ப்பில் வெகுதூரத்திற்கு குண்டு எறிந்தார்களோ, அது அவருடைய செயல்பாடாக எடுத்துக் கொள்ளப்படும்.
அமெரிக்க வீரர் ரியான் குரோசர் 6-வது வாய்ப்பில் 23.30 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் ஒலிம்பிக் சாதனையை பதிவு செய்தார்.
மற்றொரு அமெரிக்க வீரர் ஜோ கோவாக்ஸ் 22.65 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். நியூசிலாந்து வீரர் தாமஸ் வால்ஷ் 22.47 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
Next Story






