என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சூரிய தோஷம் கடுமையாக இருந்தால் தந்தை வழி உறவுகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
    • சந்திரனால் ஒருவருக்கு திருமண தோஷம் ஏற்பட்டதாக தெரிய வந்தால் அவர் அம்பாளை வழிபட வேண்டும்.

    ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். ஜாதக ரீதியாக பார்த்தால் நிச்சயமாக ஏதாவது கிரக தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்வார்கள். நவக்கிரகங்களில் எந்த கிரகத்தின் அமைப்பு சரியில்லாமல் போனாலும் அதனால் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும்.

    சில கிரக அமைப்புகள் முன்வினைகளை பிரதிபலிப்பதாக இருக்கும். அந்த கிரக அமைப்புகள் தான் திருமண தோஷமாக அமைந்து விடுவது உண்டு. கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டுமானால் அதற்குரிய பரிகாரங்கள் உரிய வழிபாட்டு முறைகளுடன் செய்யப்பட வேண்டும்.

    சூரியனால் ஒருவருக்கு திருமணம் கை கூடுவதில் பாதிப்பு ஏற்பட்டு தோஷம் ஏற்பட்டு இருந்தால் அதை ஜோதிடரிடம் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். ஜாதகப்படி சூரியன் பித்ருக்காரகன் எனப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் அமைந்து இருக்கிறாரோ அதை பொறுத்துதான் அவருக்கு தந்தை அமைவார்.

    எனவே சூரிய தோஷம் கடுமையாக இருந்தால் தந்தை வழி உறவுகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவான் துதிகளை சொல்லி வழிபட வேண்டும். ஆலயங்களுக்கு செல்லும்போதும் தவறாமல் சூரியனை வழிபட வேண்டும்.

    சூரிய தோஷம் மிக கடுமையாக இருந்தால் திருவண்ணாமலைக்கு சென்று அருணாசலேஸ்வரரை பார்த்து வணங்கி வரவேண்டும். அதுபோல கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகருக்கு ரோஜா மாலை அணிவித்து நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு சூரியனையும் வழிபட வேண்டும்.

    வசதி இருப்பவர்கள் வீட்டில் வெள்ளருக்கு சமித்தால் ஹோமம் செய்து வழிபட்டால் சூரிய தோஷம் விலகி செல்லும்.

    சந்திரனால் ஒருவருக்கு திருமண தோஷம் ஏற்பட்டதாக தெரிய வந்தால் அவர் அம்பாளை வழிபட வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரனை மாத்ருக்காரகன் என்று சொல்வார்கள். அதாவது சந்திரன் தாயாரை குறிக்கும். எனவேதான் சந்திர தோஷம் விலக அம்பாளை தொடர்ந்து வழிபட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

    சந்திர தோஷம் அதிகமாக இருந்தால் சிவ பெருமானுக்கு திங்கட்கிழமை தோறும் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். திருச்சி அருகே உள்ள திருவானைக்காவல் தலத்தில் உச்சிக்கால பூஜையை தரிசிப்பது சந்திர தோஷ விமோசனத்துக்கு மிக சிறந்தது என்கிறார்கள். அதுபோல திங்களூர் சென்றும் சந்திரனை வழிபடலாம்.

    நவகிரக தலங்களில் ஒன்றான கஞ்சனூரில் சந்திர தீர்த்த குளம் உள்ளது. அங்கு சந்திரன் நீராடி தனது தோஷத்தை நீக்கி கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு சென்று வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.

    மானாமதுரை, திருவெண்காட்டில் உள்ள தலங்களிலும் வழிபட்டு சந்திரதோஷ நிவர்த்தி பெறலாம்.

    நவக்கிரகங்களில் செவ்வாய் தோஷத்தால் தான் அதிகம் பேர் திருமணம் கைகூடுவதில் பாதிப்பை சந்திக்கிறார்கள். பொதுவாக செவ்வாய் தோஷம் இருந்தால் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபட்டு தானம் செய்து விட்டு வருமாறு ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனாலும் இந்த பரிகாரம் மட்டுமே போதுமானது அல்ல.


    செவ்வாய் தோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முருகப்பெருமானிடம் சரணடைய வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் வீட்டிலும், ஆலயத்திலும் முருகனை வழிபட்டு தானங்கள் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் காலையில் வீட்டில் கந்தசஷ்டி கவசம் படித்தால் செவ்வாய் தோஷம் உங்களை விட்டு மெல்ல மெல்ல விலகி சென்று விடும்.

    ஆண்டாளை வழிபட்டாலும் செவ்வாய் தோஷம் கட்டுப்படும். உங்கள் வீட்டுக்கு அருகில் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆண்டாள் சன்னதியில் விளக்கேற்றி அங்கேயே அமர்ந்து அவளை வழிபட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

    புதன் கிரகத்தால் சிலருக்கு திருமண தோஷம் ஏற்படுவது உண்டு. நவக்கிரகங்களில் இருக்கும் புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷத்தை நிவர்த்தி செய்யலாம். காஞ்சிபுரம், திருவெண்காடு, சீர்காழி திருக்காவூர் தலங்களில் புதன் கிரகத்துக்கும் சிவ பெருமானுக்கும் பூஜைகள் செய்து வழிபடலாம்.

    புதன்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு அங்கு பிரகாரத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். எந்த அளவுக்கு புதனை வழிபட்டு பாராயணம் செய்கிறாமோ அந்த அளவுக்கு விரைவில் நல்ல செய்தி தேடி வரும்.

    நவக்கிரகங்களில் திருமணத்துக்கு மிக மிக முக்கியமானதாக கருதப்படுவது குரு கிரகத்தின் அம்சமாகும். குரு பலம் இருந்தால்தான் ஜோதிட ரீதியாக திருமணம் கைகூடும் என்று சொல்வார்கள். குரு பலம் இல்லாவிட்டால் அதுவே ஒரு தோஷமாக கருதப்படும். குரு கிரகத்தால் தோஷம் இருப்பது தெரிய வந்தால் வியாழக் கிழமைகளில் ஆலய வழிபாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

    சித்தர்களின் ஜீவசமாதி, மகான்களின் அதிஷ்டானம் ஆகியவற்றுக்கு சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும். அங்கு அமர்ந்து தியானம் செய்வதின் மூலம் குரு ஸ்தானத்தில் இருக்கும் அவர்களது ஆசியை பெற முடியும். இது குரு தோஷத்தை கட்டுப்படுத்தி நல்ல மணவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும்.

    ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதாக இருந்தால் குரு பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலங்குடி தலத்துக்கு சென்று வழிபடலாம். மேலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு சென்று சிவகாமி சமேத நடராஜரை வழிபட்டு வருவது மிகவும் நல்லது.

    வசதி வாய்ப்பு இருப்பவர்கள் வீட்டில் ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்து குரு தோஷ நிவர்த்தி பெற முடியும். அரசமர சமித்தால் ஹோமம் செய்து வழிபாடு செய்யும் போது குரு தோஷம் நிவர்த்தி பெறும்.

    ஜாதகத்தில் சுக்கிரனின் அமைப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுக்கிரன் அமைப்பு சரி இல்லை என்றால் அல்லது வேறு கிரகத்துடன் சேர்ந்து இருந்தால் அதுவும் தோஷத்தை உண்டாக்கி விடும். சுக்கிர தோஷத்தில் இருந்து மிக எளிதாக வெளியில் வந்துவிட முடியும். அதற்கு அடிக்கடி சுமங்கலி பூஜை நடத்தப்பட வேண்டும்.

    மேலும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. வீட்டில் சுமங்கலிகளை அழைத்து பூஜை செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த பூஜை முடிந்ததும் ஏழை பெண்களை அழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். குறிப்பாக திருமணத்துக்கு தயாராக இருக்கும் ஏழை பெண்களுக்கு தாலி, சீர்வரிசை போன்ற மங்கலகரமான பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பது மிக மிக சிறந்த பரிகரமாகும்.

    சுக்கிர தோஷம் மிக அதிகமாக இருப்பவர்கள் ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரிடம் சரண் அடைந்து விடுங்கள். அவரை கண் குளிர வழிபட்ட பிறகு பிரகாரத்தில் அமர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம் படித்து விட்டு வாருங்கள். சுக்கிர தோஷம் நழுவி சென்று விடுவதை அனுபவப்பூர்வமாக பார்ப்பீர்கள்.

    திருமணத்தை தாமதம் செய்வதில் சனி கிரகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஒருவரது ஜாதகத்தில் சனி தோஷம் மிகுந்து இருந்தால் எவ்வளவு பரிகாரம் செய்தாலும் திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும். இத்தகைய நிலையில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். ஆஞ்சநேயரை நினைத்து வழிபடுங்கள். அது ஒன்றே போதுமானது.

    உலகில் பயபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் ஆஞ்சநேயர் மட்டுமே. அவர் மனம் குளிரும் வகையில் பூஜைகள் செய்து ஏழைகளுக்கு உதவினால் போதும். சனீஸ்வரனின் அருள் பார்வை உங்களுக்கு கிடைக்க தொடங்கி விடும்.

    ஜாதக ரீதியாக சனி தோஷம் மிக சிக்கலாக இருப்பதாக கருதினால் ஒரு தடவை திருநள்ளாறுக்கு சென்று வருவது நல்லது. அங்குள்ள தர்ப்பா ரண்யேஸ்வரரையும் சனி பகவானையும் வழிபட்டால் நல்லது நடக்கும்.

    சனி போலவே ராகு-கேது தோஷங்களும் திருமணத்தை தாமதப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. காள ஹத்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தரை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும்.

    • முன்பெல்லாம் திருமணம் என்றால், உணவுக்குத்தான் அதிகப்படியாக செலவாகும்.
    • முன்பெல்லாம் திருமணம் என்றால், உணவுக்குத்தான் அதிகப்படியாக செலவாகும்.

    இந்தியாவில் தற்போது மிகப்பெரிய வணிகமாக மாறியிருக்கிறது திருமண நிகழ்வுகள். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த திருமண நிகழ்வுடன் தற்போது நடக்கும் திருமணங்களை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. பார்க்கவும் கூடாது.

    வருவாய் உயர்வு மற்றும் செலவிடும் திறன் அதிகரித்திருப்பது போன்றவை ஆடம்பர திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டன. வாழ்வில் மறக்க முடியாத தருணம் தான் திருமணம். ஆனால்.. அதற்காக இப்படியா? என்று வாய்பிளக்க வைக்கிறார்கள்.

    இந்தியாவில், தை, மாசி போன்ற முகூர்த்த காலங்களில் 40 லட்சம் திருமணங்கள் நடக்கின்றன. இதற்கு செலவிடும் தொகை ரூ.4.75 லட்சம் கோடிகளாம். இது கடந்த ஆண்டு கணக்கு என்றால், இந்த ஆண்டு கணக்கை இனிதான் எண்ண வேண்டும்.

    ஒரு சில நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதாரக் குறியீட்டுத் தொகை அளவுக்கு நம் நாட்டில் ஒரே ஒரு திருமணம் நடப்பதாகவும் புள்ளிவிவரங்கள் நமது முகத்தில் அறைந்தார் போல சொல்கின்றன.

    ஒருபக்கம் திருமணத்துக்காக எவ்வளவு பெரிய தொகையையும் செலவிடத் தயாராக இருக்கும் பெற்றோரும், திருமணத்தை திட்டமிட்டு செயல்படுத்திக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.

    சாதாரண எளிய மக்கள் கூட, நட்சத்திரங்களைப் போல திருமணம் செய்ய ஆசைப்படும்போது, நட்சத்திரங்களாக இருப்பவர்கள் என்ன செய்வார்கள். ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் தற்போது ரூ.7 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை செலவாகும் என்கிறார்கள் திருமண ஏற்பாட்டாளர்கள்.

    முன்பெல்லாம் திருமணம் என்றால், உணவுக்குத்தான் அதிகப்படியாக செலவாகும். இப்போதெல்லாம் எல்லாமே அதிகப்படியான செலவாகிவிட்டது. எனினும் டாப் லிஸ்ட் உணவுக்குத்தான். அடுத்தது மண்டபம், ஆடைகள் என விரிகிறது.

    கூரைப் புடவையுடன் திருமண மக்களைப் பார்க்கவே முடிவதில்லை. அதிலும் டிசைனர் என்று வந்துவிட்டப் பிறகு ஒட்டு மொத்த மணமக்களின் குடும்பமும், யார் மணப்பெண் என்று தெரியாத அளவுக்கு வந்திறங்குகிறார்கள். இதில் மணமகளின் மேக் அப் செலவு எல்லாம் தனிக்கதை. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உறவினர் திருமணத்துக்கு தனது மனைவி ரூ.25 ஆயிரம் செலவிட்டு எச்டி மேக்கப்போட்டு அதற்குண்டான மாதத் தவணையை தான் இன்னமும் கட்டி வருவதாக இளைஞர் ஒருவர் பகிர்ந்த வேதனை தான் அனைத்துக்குமான ஒரே சாட்சி.

    இந்தியாவில் மிகப் பிரம்மாண்ட திருமணத்தை நடத்த ஒரு கோடி செலவாகும் என்றால், அதனை தாய்லாந்து போன்ற நாடுகளில் நடத்தினால் செலவும் அதே அளவில் இருக்க, பிரம்மாண்டம் வேற லெவலில் இருக்கும் என்பதால் வெளிநாடு பறக்கிறார்கள் என்று திருமண சேவை அளிக்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.

    ஒரு 200 பேர் பங்கேற்கும் திருமணத்தை நான்கு நட்சத்திர விடுதியில் நடத்த ரூ.80-90 லட்சம் செலவாகும் என்றால், அதை தாய்லாந்தில் செய்ய வேண்டும் என்றால் ரூ.1.20 கோடிதான் ஆகுமாம். ஆனால் திருமணம் நட்சத்திரங்களின் திருமண வைபவம் போல இருக்குமாம்.

    நவம்பர் மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

    சில பெரிய குடும்பங்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்கிறார்கள். இதனால் மிகப்பெரிய தொகை வெளிநாடுகளில் செலவிடப்படுகிறது. இது இந்தியாவில் செலவிடப்பட்டால் பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சரி இந்தியாவிலேயே திருமணம் செய்யலாம் என்றால், எந்தெந்த இடங்கள் சரியானதாக இருக்கும் என்று பார்த்தால், கோவா, ராஜஸ்தான், இமாச்சல், அந்தமான் போன்றவை மிகச் சிறந்த தருணங்களை ஏற்படுத்தும்.

    • புரொபஷனல் வேலைகள்னு நாம சொல்ற ஆடிட்டிங், லீகல் மாதிரியான வேலைகளுக்கும் ரோபோக்கள் வரும்.
    • ஒரு மனுஷனைப்போல தன் ஞாபக செயல்பாட்டுச்சக்தியைப் பெருக்கிக்கொள்ளுமாம்.

    "வாருங்கள்! வணக்கம்! எங்களின் பேட்டிக்கு நீங்கள் ஒத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி!"

    "ஓ! எனக்கும் மகிழ்ச்சியே! அது சரி, நீங்க என்ன இப்படி செந்தமிழ்ல பேசறீங்க? சும்மா நமக்குப்புரிஞ்ச தமிழ்லயே பேசுவோம், என்ன?"

    "நீச்சயமாங்க! மிஸ்டர் ராகவ்! எவ்வளவு பெரிய டெக்னாலஜி ஆசாமி நீங்க, இவ்வளவு எளிமையா இருக்கீங்க!"

    "அதுக்கும் எளிமைக்கும் என்ன சம்மந்தமுங்க! நான் இந்த ஊர்ல பொறந்து வளர்ந்தவன் தானே! ஆமா அது சரி, நீங்கதானே பேட்டி எடுக்கப்போறீங்க? உங்களப்பத்தி ரெண்டு வரி சொல்லுங்க!"

    "சொல்றா மாதிரி ஒண்ணும் இல்லீங்க! நா இந்த டெலிவிஷன் சானல்ல இருக்கும் நூத்துக்கணக்கான ரிப்போர்ட்டர்கள் நெறஞ்ச சக்கரத்துல ஒரு சின்ன பல் சக்கரம், அவ்வளவுதான்! சரி ஆரம்பிக்கலாமா?"

    "நான் ரெடி!"

    "மிஸ்டர் ராகவ்! உங்க புக்குல இன்னும் சில வருஷங்கள்ல ரோபோக்கள் பெருகி வேலை வாய்ப்புக்களை தடுக்கும் அபாயம்ன்னு எழுதியிருக்கீங்க. அது பத்தி கொஞ்சம்..?"

    "இப்பவே உற்பத்திதொழிற்சாலைகளில் ரோபோக்கள் நிறைய இருக்கு. இது நாள் வரை ரொட்டீனாகச்செய்யும் ஒரே மாதிரியான எந்திரத்தனமான வேலைகளுக்குத்தான் ரோபோக்கள் இருந்தன. ஆனால் இப்போது கொஞ்சம் புத்திசாலித்தனமான மூளை வேலைகளுக்கும் ரோபோக்கள் வர ஆரம்பிச்சாச்சு."

    "அப்படியா?"

    "ஆமா. இப்ப அமெரிக்காவுல வால் ஸ்ட்ரீட்டுல, அதான் அவங்களோட ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுலயே ரோபோக்கள் வந்துட்டுது."

    "அப்படீன்னா, இந்த ஷேர் மார்க்கெட்டுல வாங்கி விக்கிறதெல்லாம் ரோபோவா செய்யுது?"

    "ஆமா! சில வாங்கி விற்பனை செய்யும் முதலீட்டுக் கம்பெனிகள் ரெகுலராகச்செய்யும் இந்த வியாபார காண்ட்ராக்டுகளை கம்யூட்டர் மூலம் ரோபோவே செஞ்சுடும்!"

    "ஓ!"

    "அதனால பாத்தீங்கன்னா, மெக்கானிகலா செய்யற வேலைகள் ஒழிஞ்சதோட இல்லாம ஒயிட் காலர் வேலைகளுக்கும் ரோபோவினால் ஆபத்துதான்!"

    "இது எப்படீங்க?"

    "சொல்றேன். புரொபஷனல் வேலைகள்னு நாம சொல்ற ஆடிட்டிங், லீகல் மாதிரியான வேலைகளுக்கும் ரோபோக்கள் வரும்."

    "அதெப்படி?"

    "இப்ப செயற்கை புத்தி சாலித்தனம்னு சொல்றோமே அதான் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், அதன்படி ஒரு கம்பெனியோட வருடாந்தர கணக்கு வழக்குகளை அலசும் அல்காரிதம்களை புரோகிராமாக எழுதி ரோபோக்களில் இட்டுவிட்டால் ஆச்சு, ஒரு ரோபோ ஆடிட்டர்!"

    "ஆச்சரியமா இருக்கே!"

    "ஆமா, ஒரு ராமசுப்ரமணியம் செய்யும் ஆடிட்டிங்கை இந்த ரோபோ பத்தில் ஒரு மடங்கு நேரத்துல முடிச்சுடும்!"

    "அப்ப வேலை வாய்ப்புக்கள் அடி வாங்குமே!"

    "நிச்சயமா? டிரைவர் இல்லாக்கார்கள், போலீஸ் இல்லா டிராபிக் சிக்னல், ஆளில்லா தொழிற்சாலை, கம்ப்யூட்டர் செய்யும் ஆடிட்டிங் எல்லாம் சேர்ந்தா அதானே!"

    "வேற எங்கல்லாம் இப்படி ஆகக்கூடும் மிஸ்டர் ராகவ்?"

    "கல்வி முறையிலகூட ஆகலாம். இப்பவே MOOC (Massiv Open Online courses)னு பசங்க இண்டர்னெட் மூலமா என்ன சப்ஜெக்ட் வேணா படிக்கலாம். அங்க ஸ்டூடியோல கூட டீச்சர்னு ஒரு ஆசாமி தேவையில்ல. எல்லா சப்ஜெக்டுக்கும் பாடங்கள், கேள்விகள், பதில்கள், லாபரட்டரி எல்லாம் ஏற்கனவே புரோகிராம் செய்யப்பட்டு இந்தப்பசங்க வீட்ல உக்கார்ந்துண்டு கத்துக்கலாம். நெட்டுலயே பரிட்சை எழுதி சர்ட்டிபிக்கேட்டும் வாங்கிடலாம். அப்ப டீச்சருங்க வேலை காலிதானே!"

    "அடடே! இன்னும் இருக்கா ராகவ் சார்?"

    "இருக்கே! நீங்க ஒரு மெக்டொனால்டோ இல்ல டாமினோ பீட்சாவோ வாங்கப்போனா, வாசல்லேர்ந்தே ஆர்டர் குடுத்தா போதும். கிரெடிட் கார்டு தேச்சவுடனேயே உள்ள ஒரு ரோபோ உங்க பீட்சாவ தயார் பண்ணி டிரோன் மூலமா வாசல்ல கார்ல இருக்கற உங்களுக்கு அனுப்பிடும். ஒரு மனுஷ முகத்த பாக்க வாணாம்!"

    "என்னது, ரோபோ பீட்சா பண்ணிடுமா?"

    ஜெயராமன் ரகுநாதன்

    ஜெயராமன் ரகுநாதன்

     'பின்ன இல்லாத? இப்பவே சான்பிரான்சிஸ்கோவுல ஒரு ரோபோ ஹாம்பர்கர் பண்ணுதாம்! ஒரு மணி நேரத்துக்கு 400 பண்ணி அனுப்பிடுதாமில்ல!"

    "அடேயப்பா!"

    "அது சரி, சிங்குலாரிடின்னு கேள்விப்பட்டிருக் கீங்களா?"

    "நீங்களே சொல்லுங்க ராகவ் சார்!"

    "ரே குர்ஸ்வெயில் (Ray Kurzweil) ன்னு அமெரிக்காவுல ஒரு ஆசாமி மாடல் செஞ்சு காமிச்சிருக்காரு. அவர் சொல்படி பாத்தா, செயற்கை புத்திசாலித்தன கம்ப்யூட்டர் தன்னைத்தானே இன்னும் புத்திசாலித்தன மாக்கிக்கொள்ளும். ஒரு மனுஷனைப்போல தன் ஞாபக செயல்பாட்டுச்சக்தியைப்பெருக்கிக்கொள்ளுமாம். நாள் பட நாள் பட அது மனிதனைவிட புத்திசாலியாகிவிடும், இதத்தான் சிங்குலாரிட்டிங்கறாங்க, தெரியுமா?"

    "தெரியும் டாக்டர் ராகவ்!"

    "அட தெரியுமா, எப்படி?"

    "எங்க டிவி சானல் ரே குர்ஸ்வெயில் கிட்டேர்ந்து வாங்கின முதல் சிங்குலாரிட்டி ரோபோவே நாந்தான்!"

    "என்னது!"

    "கிளாட் டு மீட் யூ டாக்டர் ராகவ், ஐ யாம் ரோபோ 4.0 பார் ரிபோர்ட்டிங்!"

    டாக்டர் ராகவுக்கு சூடா ஒரு காப்பி கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

    ஆம் மனிதனா ரோபோவா என்பது தெரியாத படி ஏ ஐ என்னும் தொழில்நுட்பம் பல்கிப்பெருக அதிக வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞான உலகம் சொல்கின்றது!

    ஆதாரம்: "Technology and the threat of a jobless future" by Martin Ford

    • கம்பகரேஸ்வரர் எப்படியெல்லாம் பயம் போக்கி இருக்கிறார் என்பதற்கு புராண குறிப்புகள் பல உள்ளன.
    • கம்பகரேஸ்வரரை மனமுருக வழிபட்டால் தேவையற்ற பயம் நீங்கி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழித்தடத்தில் திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அந்த வழித்தடத்தில் இறங்கியதும் சில மீட்டர் தொலைவுக்குள் அந்த ஆலயத்துக்கு சென்று விடலாம்.

    அங்கு மூலவராக கம்பகரேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். தாயாரின் பெயர் தர்மசம்பர்த்தினி. தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தலத்தில் உள்ள சரபதீர்த்தம் மிக சிறந்த புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது.

    கும்பகோணம் பகுதியில் உள்ள ஆலயங்களில் பயத்தை நீக்கி மனதில் துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் தரும் ஆலயமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது. கம்பகம் என்றால் நடுக்கம் என்று அர்த்தம். நடுக்கத்தை ஏற்படுத்தும் பயத்தை போக்கும் ஈசன் என்பதால் இந்த தலத்து சிவபெருமானுக்கு கம்பகரேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

    கம்பகரேஸ்வரர் எப்படியெல்லாம் பயம் போக்கி இருக்கிறார் என்பதற்கு புராண குறிப்புகள் பல உள்ளன. அதில் முக்கியமான ஒன்று....

    பாண்டிய மன்னர்களில் புகழ் பெற்றவன் வரகுண பாண்டியன். ஆட்சியிலும், ஆன்மீகத்திலும் புகழ் பெற்ற இவன் தமிழகம் முழுக்க ஏராளமான ஆலயங்களில் திருப்பணிகள் செய்து தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்து இருக்கிறான். ஒரு தடவை இவன் தென் தமிழ்நாட்டில் இருந்து வட தமிழ் நாட்டுக்கு படையெடுத்து வந்தான்.

    அவனது குதிரை படைகள் பாய்ந்து சென்றன. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு இடத்தில் குதிரை படைக்கு மத்தியில் பிராமணர் ஒருவர் சிக்கிக் கொண்டார். குதிரைகளின் காலடியில் சிக்கி அவர் உயிரிழந்தார். இத னால் அவரை கொன்ற பாவம் பிரம்மகத்தி தோஷமாக வரகுண பாண்டியனை பிடித்தது.

    இந்த தோஷத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று வரகுண பாண்டியன் ஆலோசித்தார். அப்போது கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தலத்துக்கு சென்று வழிபட்டால் பிரம்மகத்தி தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வரகுண பாண்டியன் திருவிடை மருதூர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டு தோஷ நிவார்த்தி பெற்றார்.

    என்றாலும் வரகுண பாண்டியனுக்கு மனதுக்குள் பிரம்மகத்தி தோஷம் பற்றிய பயம் இருந்து கொண்டே இருந்தது. அந்த பயத்தை எப்படி போக்குவது என்று ஆலோசித்தார். அப்போது திருபுவனத்தில் உள்ள கம்பகரேஸ்வ ரர் ஆலயம் பற்றி வரகுண பாண்டியனுக்கு தெரிய வந்தது. கம்பகரேஸ்வரரை மனமுருக வழிபட்டால் தேவையற்ற பயம் நீங்கி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும் வரகுண பாண்டியனிடம் கூறப்பட்டது.

    அச்சுக்கிரீவன், விடபக்கிரீவன், வியாள கிரீவன் என்ற 3 அரசர்களை சிவபெருமான் தனது சிரிப்பால் அழித்து தேவர்களின் வாழ்வில் பயம் போக்கினார். அதுபோல அசுர மன்னன் இரண்யகசிபுவை அழித்த நரசிம்மர் உக்கிரம் மாறாமல் இருந்ததால் அவரை சாந்தப்படுத்த சிவபெருமான் சரபேஸ்வரராக மாறி நரசிம்மரை சாந்தப்படுத்தி தேவர்களின் பயத்தை போக்கினார். இப்படி பயம் போக்கிய சிவபெருமான் திருபுவனம் தலத்தில் கம்பகரேஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார்.

    தூய தமிழில் அவரை நடுக்கம் தீர்த்த நாதர் என்றும் அழைக்கிறார்கள். இதை அறிந்த வரகுண பாண்டிய மன்னன் அந்த தலத்துக்கு சென்று வழிபட்டு தனது பயத்தை போக்கிக் கொண்டான். இதனால்தான் இன்றளவும் மக்களின் பயம் போக்கும் வகையில் இந்த ஆலயத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு அஷ்டமி மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகிறது. தினமும் சரப ஹோமமும் நடத்துகிறார்கள்.

    தீபாவளி, பொங்கல் நாட்களின் போது சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். பங்குனி மாதம் 18 நாட்கள் பிரமோற்சவம் நடத்தப்படுகிறது. பிரமோற்சவத்தின் 7-ம் நாள் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. 9-ம் நாள் தேர் வீதிஉலா நடைறும். 10-வது நாள் காவிரி நதியில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சியை விமரிசையாக நடத்துவார்கள்.


    இந்த ஆலயம் மன அமைதி தரும் மிக சிறப்பான ஆலயம் ஆகும். 3-ம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை சுற்றி வந்தால் சிற்ப கலைகள் நிறைந்த பகுதிகளை பார்க்க முடியும்.

    கருவறை பகுதி சற்று உயரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று மற்ற பகுதிகளும் மாறுபட்ட அமைப்பில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்று பல்வேறு சிறப்புகளுடன் இந்த ஆலயம் பிரமாண்டமாக உள்ளது.

    கருவறையில் ஈசன் கிழக்கு நோக்கி இருக்கிறார். இடதுபுறம் அம்பாள் சன்னதி உள்ளது. அம்பாளுக்கு அறம்வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு கைகளில் அச்சர மாலை, தாமரைப்பூ வைத்து காட்சி யளிக்கிறாள். சக்தி தலங்க ளில் இந்த அம்பாள் பீடம் ஒட்டி யாண பீடம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் லிங்கோத்பவர், பிச்சாடனர் ஆகிய இரு சிலைகளும் கண்டுகளிக்கும் வகையில் உள்ளது. மேலும் ராமாயணம் மற்றும் மகாபாரத வரலாற்று காட்சிகளை பிரதிபலிக்கும் சிற்பங்களும் ஆலயம் முழுக்க ஆங்காங்கே காணப்படுகிறது. சோழர்கால கட்டிட கலை யையும், சிற்ப கலையையும் இந்த ஆலயத்தில் அதிகமாக பார்க்க முடியும்.

    இந்த தலத்தில் தனி சன்னதியில் சரபேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். 7 அடி உயரத்தில் சர பேஸ்வரர் பிரமாண்ட மாக வடிவமைக் கப்பட்டுள்ளார். அவ ரது கருவறை முகத்தில் 2 அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைக்கப்பட்டுள்ளனர். அந்த துவாரகிகள் சிலைகள் அற்புதமானவை. மிகவும் கலை நயம் கொண்டவை. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. சிவன், விஷ்ணு, துர்க்கை மற்றும் சூலினி சக்திகளின் வடிவமாக இந்த துவாரகிகள் சர பேஸ்வரருக்கு காவ லர்களாக இருக்கி றார்கள்.

    இவரை வழிபட்டால் நோய்கள், எதிரிகள் தொல்லை, பில்லி சூனியம், தோஷங்கள், வழக்கு விவகாரங்கள் போன்றவை எளிதாக நீங்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் ஆயுள் விருத்தி, சிறப்பான வாழ்க்கை, பதவி உயர்வு, குழந்தை பேறு ஆகியவை கிடைக்கும். தொடர்ந்து 11 வாரங்கள் இவரை அர்ச்சனை செய்து வழி பட்டால் நினைத்தது நடக்கும் என்கிறார்கள். சந்தன காப்பு அலங்காரம் செய்தும் பக்தர்கள் வழிபடலாம். இவருக்கு உகந்த செவ்வரளிப்பூ, வில்வம், மரிக்கொழுந்து ஆகியவற்றை சமர்ப்பித்து நைவேத்தியம் படைத்து வழிபடுவது நல்லது.

    பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு வினியோகிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுகால நேரத்தில் சரபேஸ்வர ருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்பது மேலும் சிறப்பானது. கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் இதற்கேற்ப பயண திட்டத்தை வகுத்து கொண்டால் சரபேஸ்வரரை கண்குளிர தரிசித்து வழிபட்டு பயன்பெற முடியும்.

    இங்குள்ள சரபேஸ்வரர் 6 கால்கள், 4 கைகளுடன் அமைந்துள்ளார். அவரது கால்கள் பீடத்தை பற்றிக்கொண்டுள்ளது. 2 கைகளும் நரசிம்மரை பிடித்து இருப்பது போன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள சரபேஸ்வரர் தலங்களில் இந்த தலத்து சரபேஸ்வரர்தான் வித்தியாசமான புகழ் பெற்ற சரபேஸ்வரராக திகழ்கிறார்.

    இந்த ஆலயத்தில் 6 கல்வெட்டுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகள் இந்த ஆலயத்தின் திருப்பணிகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. மிக பொறுமையாக இந்த ஆலயத்தை சுற்றி வந்தால் இவற்றையெல்லாம் பார்க்க முடியும். இன்னும் பல சிறப்புகள் உள்ளன. ஆலய நிர்வாகிகளிடம் கேட்டால் தெரிவிப்பார்கள்.

    கும்பகோணத்தில் இருந்து மிக மிக எளிதாக இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி இருக்கிறது. வாகனங்களில் செல்பவர்கள் ஆலயத்தின் அருகேயே நிறுத்துவதற்கு வசதி இருக்கிறது. ஆலயத்துக்கு அருகில் விராலிமலை சித்தர் ஆலயமும் இருக்கிறது. கம்பகரேஸ்வரரை வழிபட்ட பிறகு அப்படியே சித்தரையும் வழிபட்டு வரலாம்.

    பயத்தில் எம பயம் மிகவும் கொடுமையானது. இந்த எம பயத்தை போக்கும் தலமாக ஸ்ரீ வாஞ்சி யம் திகழ்கிறது. அதுபற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • நமது வாழ்வியலில் அவ்வப்போது வரக்கூடிய இக்கட்டுகள் எல்லாம் சிறுசிறு இடையூறுகளேயொழிய நிரந்தரத் துன்பங்கள் அல்ல.
    • வருகிற சிறுசிறு தடைகளையும் தடங்கல்களையும் உடனுக்குடன் அகற்ற முயலாமல் விட்டுவிட்டால்தான் அது நாள்பட்ட புண்ணாய் புரையோடி, நிரந்தரத் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

    தடைகளைத் தகர்க்கும் தைரிய எண்ணம் கொண்ட வாசகர்களே!

    வணக்கம்.

    வாழ்க்கை ஒரு பயணம் என்றால், வழிநெடுகப் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலைகள் மட்டுமே நிறைந்திருக்கும் என்பது கிடையாது!; வறண்ட பாலைவனங்களும் எதிர்ப்படலாம்; எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

    வாழ்க்கை ஒரு நெடுஞ்சாலை என்றால் பாதை முழுவதும் நேரான வழுவழு தார்ச்சாலைகள் மட்டுமே இருக்கும் என்பதில்லை; மேடுகளும் பள்ளங்களும், வளைவுகளும் நெளிவுகளும், எதிர்பாராத குண்டுகளும் குழிகளும் நிறைந்து கலந்தேதான் இருக்கும்.

    வாழ்க்கை என்பது ஓர் இன்பியல் நாடகமாகவே அமையவேண்டும் என்பது நம்மில் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அது இன்பமும் துன்பமும் கலந்து, எப்போது எது நிகழும் என்று கணிக்கமுடியாத சூழலில் நம்மைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அனுபவமாகவே இருக்கிறது.

    வாழத் துடிக்கும் எல்லா உயிர்களிலும் மேவிக்கிடக்கும் நோக்கம் 'இன்பமாக வாழ வேண்டும்' என்பதே ஆகும். இன்பத்தை நோக்கிப் பயணிக்கும் நமது வாழ்வியலில் அவ்வப்போது வரக்கூடிய இக்கட்டுகள் எல்லாம் சிறுசிறு இடையூறுகளேயொழிய நிரந்தரத் துன்பங்கள் அல்ல. இதை உளப்பூர்வமாக உணர்ந்து, வருகின்ற இடையூறுகளை அவ்வப்போது நீக்கிவிடுகிற வகையில் செயல்பட்டால் இன்பத்திற்கு எந்தவிதமான குறைவும் ஏற்படாது. வருகிற சிறுசிறு தடைகளையும் தடங்கல்களையும் உடனுக்குடன் அகற்ற முயலாமல் விட்டுவிட்டால்தான் அது நாள்பட்ட புண்ணாய் புரையோடி, நிரந்தரத் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

    நமக்கு வருகிற துன்பத்தை விரட்ட மிகச் சிறந்த வழி, வந்த துன்பத்திற்கு வருத்தப்படாமல் இருப்பதே ஆகும். வள்ளுவரும்,

    'இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு

    இடும்பைப் படா தவர்'

    'இடும்பை' என்றால் 'துன்பம்'. நீங்கள் உங்களுக்கு வருகிற துன்பத்தைத் துன்புறுத்தி விரட்ட வேண்டுமென்றால், அந்தத் துன்பத்திற்குத் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்பது வள்ளுவ ஆலோசனை. தமக்கு ஏற்படுகிற இடையூறுகளை வைத்தே நல்வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜான் செப்பர்டு பேர்ரன் என்பவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இன்று உலகில் சாலையோரங்களிலும் ஊரின் சந்து பொந்துகளிலும், எங்கு பார்த்தாலும் நிறைந்து காணப்படுகிற பணம்தாங்கி/ பணம் வழங்கும் இயந்திரமான ஏ.டி.எம். மெஷினை 1967-ம் ஆண்டு கண்டுபிடித்தவர் இவர் தான். இவர் இந்தியாவில் மேகாலயாவில் பிறந்த ஆங்கிலேயர்.

    செப்பர்டு பேர்ரன் லண்டனில் பர்க்லேயில் வசித்துக் கொண்டிருந்த போது, தன்னுடைய மனைவியின் பிறந்த நாளுக்கு ஓர் அழகிய பரிசுப்பொருள் வாங்கி வழங்க ஆசைப்பட்டார். பிறந்த நாளுக்கு முந்தினநாள் மாலை தனது கணக்குள்ள வங்கிக்குச் சென்று தனது பணத்தை எடுப்பதற்காகக் காசாளர் முன், வரிசையில் நின்றார். ஆனால் இவரது முறை வரும்போது வங்கி நேரம் முடிந்து விட்டதால் காசாளர் பணம் வழங்க முடியாதென மறுத்துச் சிறு கதவை மூடிவிட்டார்.


    ஏமாற்றத்தோடு வங்கிக்கு வெளியே வந்த பேர்ரன், நினைத்த பொருளை வாங்கி மனைவிக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுக்கத் தேவையான பணம் இல்லையே என வருந்தினார். சரி, இருக்கும் பணத்தை வைத்து என்ன வாங்கித் தரலாம்?.. அந்தச் சிறிய தொகைக்குப், பிறந்த நாள் பரிசாகச் சாக்லேட்டுகள் மட்டுமே வாங்கித் தர முடியும்.

    பக்கத்தில் சாலையோரத்தில் ஒரு கடை வாசலில் சாக்லேட் வழங்கும் இயந்திரம் ஒன்று இருந்தது. அந்த இயந்திரத்தின் மேலே உள்ள ஓட்டையில் எவ்வளவு பணம் போடுகிறோமோ அதற்குப் பெறுமானமுள்ள எண்ணிக்கையிலான சாக்லேட்டுகளைக் கீழே உள்ள ஓட்டையின் வழியே வழங்கி விடும். பேர்ரன் தான் பணம் போட்டுப் பெற்றுக்கொண்ட அந்தச் சாக்லேட்டுகளை வைத்து ஒருவாறு மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாடி முடித்தார். இருந்தாலும் தன் மனைவியின் பிறந்த நாளைத் தான் நினைத்தவண்ணம் பரிசு வாங்கி கொண்டாட முடியாமல் போனதற்கு வங்கியில் நேரத்திற்குப் பணம் எடுக்க முடியாமல் ஏற்பட்ட இடையூறே காரணம் என யோசிக்கத் தொடங்கினார். தன்னுடைய சொந்தப் பணத்தையே தன்னால் விரும்பிய நேரத்தில் எடுக்க முடியவில்லையே என வருந்தினார். வங்கி திறந்திருக்கும் நேரத்தில் மட்டும்தான் பணம் எடுக்கமுடியும் என்றால் வங்கி மூடியிருக்கும் நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் சொந்தப் பணத்தை கூடப் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட நேருமே எனத் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்.

    அவருக்குச் சட்டெனச் சாக்லேட் வழங்கும் இயந்திரம் நினைவுக்கு வந்தது. அடடே ஆங்காங்கே இயந்திரங்கள் சாக்லேட்டுகள் வழங்குவது போல, வங்கிப் பணத்தை வழங்க வங்கிகள் சார்பில் ஆங்காங்கே பணம் வழங்கும் இயந்திரங்களை வைத்தால் என்ன?. நேர்முறையாக யோசித்தார் ஏ.டி.எம். இயந்திரத்தை கண்டே பிடித்துவிட்டார்.

    ஒவ்வொருவரும் பணம் எடுப்பதற்கு ஒரு 'பின்'(PIN) எண்ணை உருவாக்க வேண்டும். பேர்ரன் முதலில் ஆறு இலக்க 'பின்'னைத்தான் உருவாக்கினார். ஆறு இலக்க 'பின்' நினைவில் வைத்துக்கொள்வது சிரமம் என்பதைத் தன் மனைவி மூலம் பின் கண்டுபிடித்து, ஏ.டி.எம். 'பின்'னை நாலு இலக்கத்திற்கு மாற்றினார்.

    தன் அன்பான மனைவியின் பிறந்த நாளைத் தான் எண்ணியவாறு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டாடுவதில் ஏற்பட்ட தடையை எப்படிச் சாதனையாக மாற்றினார் பார்த்தீர்களா?. இனி வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தைப் பார்க்கும் போதெல்லாம் பேர்ரனுக்கு ஏற்பட்ட இக்கட்டும், அவர் சாதனையாக்கிய திறமும் நினைவுக்கு வருமல்லவா?.

    ஒவ்வொரு தடையையும் நேருகிற ஒவ்வொரு இக்கட்டையும் நமக்கு வந்திருக்கிற துன்பமாக உணராமல், நமக்கு வந்திருக்கிற புதிய சவாலாகக் கருதத் தொடங்கினால் அவையெல்லாம் வாழ்வின் முன்னேற்றத்திற்கான படிக்கட்டாக மாறிப்போகும். வருகிற துன்பத்தைச் சவாலாக எண்ணத் தொடங்கும்போது உடம்பிலும் மனத்திலும் அதை எதிர்கொள்வதற்கான புது ரத்தமும் புது ஊக்கமும் பாய்ந்து புறப்படும்.

    சிலர் துன்பம் வரும்போது தத்துவக் கண்ணோட்டத்தோடு வாழ்க்கை என்று இருந்தால் துன்பம் என்பதும் இருக்கும் என்று ஏற்றுக் கொள்வார்கள். துன்பத்தை ஏற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை. ஆனால் அதிலேயே எதிர்மறை அணுகுமுறையோடு உழலத் தொடங்கிவிடக் கூடாது. துன்பம் இயல்பானது என நேர்முறைச் சிந்தனையோடு ஒத்துக்கொள்வது முதல்நிலை என்றால், தொடர்ந்து வீரியத்தோடும் நம்பிக்கையோடும் எதிர்த்துப் போராடுவதே இரண்டாவது மற்றும் இறுதி வழியாகவும் இருக்க வேண்டும்.

    இடும்பை இந்த உடம்புக்கு இயல்பு என்றாலும், வழியில் வந்துள்ள பெரும் பாறையாகத் தடை ஏற்பட்டாலும், அந்தத் தடை என்னும் பாறையைச் சிறுசிறு சல்லிக் கற்களாக உடைத்து, அந்தச் சல்லிகளாலேயே புதிய பாதையை அமைத்துத் தடையைக் கடந்துவிடக் கற்றுக் கொள்ளவேண்டும்.

    நமக்கு இடையூறுகளும் துன்பங்களும் எந்த நேரத்திலும் வரலாம்; சிறியது பெரியது மிகப் பெரியது என எந்த அளவிலும் வரலாம்; யார் மூலமும் வரலாம். அவற்றை ஏற்பது! எதிர் கொள்வது! ஆகியவற்றோடு அவை குறித்த தன்மைகளை நண்பர்கள், குடும்ப உறவினர் ஆகியோரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றிப் பேசும்போது நம்பிக்கை உணர்வோடு பேச வேண்டும். எந்தத் துன்பமும் மனத்துக்குள்ளேயே கிடக்குமானால் மன அழுத்தம் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுப் போகும்.

    இடையூறுகளை எதிர்கொள்ளும்போது முழுமையும் வெற்றிதான் என்கிற நேர்முறைச் சிந்தனையோடு எதிர் கொண்டாலும், தோல்வி வந்து விட்டால் அதன் மூலமும் புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். துன்பங்கள் நிகழ்வுகளாக வரலாம்; மனிதர்கள் வடிவிலும் வரலாம். எதிரிகளால் தான் நமக்கு ஒரு விஷயத்தில் வெற்றி என்பது கிடைக்கிறது.


    ஜப்பானில் ஒரு கராத்தே மையம். ஆன்மீக அடிப்படையில் அங்கே கராத்தே கற்றுக் கொடுக்கப்படுவதால், கற்றுக் கொடுப்பவர்கள் துறவிகளாக இருந்தனர். அவர்களிடத்தில் ஒரு போர் வீரன் கராத்தே கற்று கொள்ள வந்தான். 'ஓரளவு முழுமையாகக் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்?' என்று தலைமைத் துறவியைக் கேட்டான். 'அது உனது மனப் பக்குவத்தைப் பொறுத்தது' என்ற துறவி, 'இப்போது நீ வீரனாக இருக்கிறாய்! இப்போதைக்கு நீ ஒருவனாக எத்தனைபேரை அடித்து வீழ்த்த முடியும்?' என்று கேட்டார். 'என்னால் நூறு பேரை வீழ்த்த முடியும்!' என்றான் வீரன் பெருமையாக.

    கராத்தேப் பயிற்சியில் சேர்க்கப் பட்டான். ஆறு மாதம் கழிந்தது; தலைமைத் துறவி அழைத்தார், ' பயிற்சி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது? இப்போது உன்னால் எத்தனை பேரோடு சண்டைபோட்டு வீழ்த்தமுடியும்?' கேட்டார். கொஞ்சம் தயக்கத்தோடு வீரன் சொன்னான், 'இப்போதைக்கு என்னால் ஒரு ஐம்பதுபேரை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறேன்!' என்றான். குரு சிரித்துக்கொண்டே இன்னும் ஆறு மாதம் பயிற்சி எடு! பிறகு சந்திப்போம்!' என்று கூறி அனுப்பி வைத்தார்.


    அடுத்த ஆறுமாதம் கழித்து வீரனை அழைத்தார் தலைமைத் துறவி. இப்போது முன் எப்போதுமில்லாத முகத்தெளிவோடும் நிதானித்த நடையோடும் வந்து நின்றான் வீரன். 'பயிற்சி எப்படி? இப்போது உன்னால் எத்தனை பேரோடு சண்டையிட்டு ஜெயிக்க முடியும் என்று கருதுகிறாய்?' கேட்டார் குருநாதர். மிகுந்த பணிவோடு வீரன் சொன்னான், 'குருவே நான் எத்தனை பேரை வெல்லும் பலசாலி என்பதை என்னால் எப்படித் தீர்மானிக்க முடியும்? என்பலத்தை என் எதிரிகளே தீர்மானிப்பார்கள். என்னால் முடியாது; மன்னித்து விடுங்கள்' என்றான். 'பலே! உனக்குக் கராத்தேப் பயிற்சி முடிந்து விட்டது! இனி உன்னை வெல்ல யாராலும் முடியாது! ஏனென்றால் நீ இப்போது உன்னையே வெல்லும் உபாயம் கற்று விட்டாய்!' என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    ஆம்! நமக்கு வருகிற இக்கட்டுகளே நம்மை அறிந்துகொள்ளும் உபாயங்களைக் கற்றுத் தருகின்றன!. நம்மை வாட்டி வதைக்கும் துன்பங்களே நம்மைப் புடம்போடுகின்றன. எல்லாத் துன்பங்களையும்

    ஏற்றுக்கொள்வோம்!

    எதிர்கொள்வோம்!

    வெற்றி கொள்வோம்!

    ஏற்றம் பெறுவோம்!

    தொடர்புக்கு 94431 90098

    • எல்லா மதங்களுமே இறைவனை அடைவதற்கான வெவ்வேறு பாதைகள் என்றும் அனைத்து மதங்களும் சமமான அளவில் மதிக்கப்பட வேண்டும்.
    • விவேகானந்தரது கருத்துகளில் பல இன்றைய இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடியவை.

    சுவாமி விவேகானந்தரின் குரலில் ஒரு மாய வசீகரம் இருந்தது. கேட்பவர்களை உடனடியாகத் தன்வசப்படுத்தக்கூடிய பேராற்றல் அந்தக் குரலில் அமைந்திருந்தது.

    அவரது உரையைக் கேட்ட சட்டம்பி சுவாமிகள் `தங்கக்குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற குரல் அவருடையது` எனப் புகழ்ந்திருக்கிறார்.

    திருத்தமான உச்சரிப்பு, கணீரென்ற குரல், அழகிய மொழிநடை, தாம் சொல்லும் கருத்துகளில் உள்ள உள்ளார்ந்த ஈடுபாடு, எந்தக் கருத்தையும் விவாதக் கோணத்தோடு சொல்லி நிறுவும் ஆற்றல் என்றிப்படி அவரது பேச்சின் சிறப்பம்சங்கள் பல. அவரது ஆங்கிலம் கேட்பதற்கு சங்கீதம்போல் இருந்தது.

    இவை அனைத்தும் இணைந்து அவரை உலகப் புகழ்பெற்ற பேச்சாளர்களில் ஒருவராக மாற்றின. கேட்பவர்களின் மனத்தை மயக்கி அவர்களைத் தம் கருத்தை ஏற்றுக் கொள்ளுமாறு செய்யும் வசீகரம் அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.

    அவர் சொற்பொழிவைக் கேட்க அலையலையாக மக்கள் கூடியதை உலகே வியந்து பார்த்தது.

    அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில், சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டார்.

    உரையாற்றுபவர்களின் வரிசையில் விவேகானந்தர் முப்பத்து ஒன்றாவது இடத்தில் இருந்தார்.

    அவர் மேடைக்கு அழைக்கப்பட்டு மேடையேறியதும், `அமெரிக்காவின் சகோதரிகளே மற்றும் சகோதரர்களே!` என்று தன் பேச்சை ஆரம்பித்தார்.

    தங்களைச் சகோதர-சகோதரிகள் என்று விவேகானந்தர் குறிப்பிட்டதைக் கேட்டு அங்கு கூடியிருந்த அமெரிக்க மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிடங்கள் விடாமல் கைதட்டிக் கொண்டே இருந்தனர்.

    அந்தக் கைதட்டல் நிற்கும் வரை விவேகானந்தர் தம் பேச்சை நிறுத்த வேண்டியதாயிற்று.

    அதன்பின் அவர் ஆற்றிய உரைதான், அவரை உலக அளவில் பிரபலமாக்கியது. உலகின் எந்த மதமும் ஒன்றைவிட மற்றொன்று சிறந்ததோ கெட்டதோ அல்ல என்றார் அவர். எல்லா மதங்களுமே இறைவனை அடைவதற்கான வெவ்வேறு பாதைகள் என்றும் அனைத்து மதங்களும் சமமான அளவில் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இவையெல்லாம் ராமகிருஷ்ண பரமஹம்சர் போதித்த கருத்துக்களே.

    ராமகிருஷ்ண பரமஹம்சர்

    ராமகிருஷ்ண பரமஹம்சர்

    சிகாகோ உரையால் கிடைத்த பெரும்புகழ் காரணமாக அடுத்தடுத்து அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் உரையாற்ற அவர் அழைக்கப்பட்டார்.

    அமெரிக்க மக்கள் அவரை வியந்து பார்த்தார்கள். அவர் உரையில் மெய்மறந்தார்கள். அமெரிக்கப் பத்திரிகைகள் அவரைப் பற்றியும் அவரது உரையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பற்றியும் வானளாவப் புகழ்ந்து எழுதின.

    இந்தச் செய்திகளெல்லாம் செய்தித்தாள்கள் மூலம் இந்தியாவையும் வந்தடைந்தன. இந்திய மக்கள் அந்தச் செய்திகளை மறுபடி மறுபடி வாசித்து மகிழ்ந்தார்கள்.

    தமது அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் இங்கிலாந்தில் சிலநாட்கள் தங்கினார் விவேகானந்தர். அங்கே இந்திய வேதாந்தங்களில் நாட்டமுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரான மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார்.

    பாரத தேசத்து வேதங்களை ஆராய்ந்து பதிப்பிக்கும் அவரது செயல் விவேகானந்தரைப் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதில் வியப்பில்லை. ஏற்கனவே வேதங்களுக்கு உரை எழுதிய சாயனர், தம் உரையைப் புதுப்பிக்கும் பொருட்டு மாக்ஸ்முல்லராக மறுபிறவி எடுத்திருக்கக்கூடும் என அவரைப் புகழ்ந்தார் விவேகானந்தர்.

    ஓர் அன்பர் `அப்படியானால் மாக்ஸ்முல்லர் பாரத தேசத்தில் அல்லவா பிறந்திருப்பார், அவர் வெளிநாட்டில் ஏன் பிறக்க வேண்டும்?` எனக் கேள்வி எழுப்பினார்.

    `அடிமை இந்தியாவில் வேதங்களின் பதிப்புப் பணியைச் செய்யப் பொருளாதார வளம் கிட்டாது என்பதால் அவர் வெளிதேசத்தில் பிறந்திருக்கலாம்` என்று பதில் சொன்ன விவேகானந்தர், `நாடுகளை நாம்தான் பிரித்தோமே தவிரக் கடவுள் அல்ல, உலகம் முழுவதும் கடவுளுக்கு ஒன்றேதான், யாரை எங்கு எப்போது பிறக்க வைக்க வேண்டும் என்பதை நம்மை விடக் கடவுள் நன்கு அறிவார்` என நகைத்தவாறே கூறினார்.

    வெளிதேசம் சென்ற விவேகானந்தர் இந்தியா திரும்பியபோது அவரின் புகழ் இந்தியாவில் முன்பிருந்ததை விடப் பலமடங்கு கூடியிருந்தது. அவரது திருமுகத்தை ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும் என்று இந்திய மக்கள் அளவற்ற வேட்கை கொண்டிருந்தார்கள்.

    பாரத தேசத்து ஆன்மிகத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்திய சுவாமி விவேகானந்தரை மக்கள் தெய்வம்போல் கருதினார்கள்.

    சென்னை வந்த விவேகானந்தர் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு ரெயிலில் சென்றார். அவரைப் பார்க்க ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் மக்கள் பெருந்திரளாகக் கூடினார்கள். ரெயில் நிற்காத சிறிய ரெயில் நிலையங்களில் மக்கள் தண்டவாளத்தில் படுத்து ரெயிலை நிறுத்தினார்கள்.

    மக்கள் தன்மேல் செலுத்தும் பேரன்பைக் கண்டு விவேகானந்தர் மனம் உணர்ச்சிவசப்பட்டது. இவையனைத்தும் தமது குருநாதர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் அருளாலேயே நிகழ்கிறது என எண்ணி மனம் நெகிழ்ந்தார் அவர்.

    இந்திய மக்களிடம் ஆன்மிக உணர்வு இயல்பிலேயே அமைந்திருந்ததை உணர்ந்த அவர், உலகம் முழுவதையும் ஒரு மாளிகை எனக் கொண்டால், இந்தியா உலக மாளிகையின் பூஜை அறை என பாரத தேசத்தைப் புகழ்ந்தார்.

    சுவாமி விவேகானந்தரை குருவாகக் கொண்டு இந்த உலக பூஜையறையான இந்தியாவை நோக்கிப் பல வெளிநாட்டவர்கள் வரத் தொடங்கினர். அப்படி வந்தவர்களில் புகழ்பெற்ற பெண்மணி சகோதரி நிவேதிதை.

    அறிவியல் பூர்வமாக ஆன்மிகத்தை அணுகிய விவேகானந்தரின் சிஷ்யையான அவர் அறிவியல் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டிருந்தார். தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதைக் கண்டுணர்ந்த விஞ்ஞானியான ஜகதீஷ் சந்திரபோசுக்குப் பொருளுதவி செய்து அந்த ஆராய்ச்சியை ஊக்குவித்தார் நிவேதிதை.

    ஸ்ரீசாரதா தேவி, விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதையைத் தன் மகள் போலவே கருதினார் என்பதை வரலாறு சொல்கிறது.

    விவேகானந்தர் பல அரிய கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். இப்போதும் அதைப் படிப்பவர்கள் புதிய உத்வேகத்தைப் பெற முடியும். `எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்லுமின்` என்ற விவேகானந்தரின் வாசகங்கள் புகழ்பெற்றவை.

    விவேகானந்தரது கருத்துகளில் பல இன்றைய இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடியவை. அதனால்தான் அவர் இளைஞர்களின் துறவி எனப் போற்றப்படுகிறார். அவரது பிறந்ததினமான ஜனவரி பன்னிரண்டாம் நாள் இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

    விவேகானந்தரது அறிவுரைகளின் சிறப்பம்சம். அவை வெறும் அறிவுரையாக அல்லாமல் விவாத பூர்வமாக நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கின்றன என்பதுதான். இதோ அவர் உதிர்த்த முத்துக்களில் சில:

    நீ இப்போது இருக்கும் நிலை எதுவானாலும் அதற்கு நீயே பொறுப்பு. கடந்த காலங்களில் நீ செய்த செயல்களால் நீ இன்று இந்த நிலையை அடைந்துள்ளாய் என்பதை உணர்ந்துகொள். அப்படியானால் இப்போது நீ செய்யும் செயல்களால் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை நீ அடைய முடியும் என்ற விதியும் அதில் உள்ளதே. அந்த விதிக்குத் தலைவணங்கு. புதிய வாழ்க்கையைத் தொடங்கு.

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். எனவே உன்னை வலிமை உடையவன் என்று நினை. வலிமை உடையவனாய் ஆவாய். அதில் சந்தேகமில்லை. நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் அவ்விதமே ஆவாய் என்பதும் உண்மைதான். உன்னை நீ எப்படிப்பட்டவனாய் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான தேர்வு உன்னிடமே உள்ளது.

    உலகின் குறைகளைப் பற்றிப் பேசாதே. அதனால் உனக்கோ உலகிற்கோ எந்தப் பயனும் இல்லை. நீ உலகிற்கு உண்மையிலேயே ஏதேனும் உதவி செய்ய விரும்பினால் உலகைத் தூற்றாமல் உன்னால் இயன்றதைச் செய்.

    உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் தீய எண்ணங்களைப் பற்றி நாம் சிறிதும் கவலை கொள்வதில்லை. நம் உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகி விடும். எனவே முதல் தேவை உலகத்தை ஒழுங்கு படுத்துவதல்ல. உள்ளத்தை ஒழுங்குபடுத்துவதுதான்.

    எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான செயல்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். பொறாமையே உங்கள் செயல் திறனைக் குறைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    இளைஞர்களே! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச்சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். உங்களைப் போன்ற உடல் வலிமையும் மன வலிமையும் கொண்ட இளைஞர்களை எதிர்பார்த்து இந்த தேசம் காத்துக் கொண்டிருக்கிறது.

    நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணமல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் காரணம்.

    உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் வெளியில் எங்கும் இல்லை. அவை உனக்கு உள்ளேயே உள்ளன. நீ அடுத்தவர்களைக் குறை சொல்லாதே. குறை சொல்வதானால் நீ முன்னேறாததற்கு உன்னையேதான் நீ குறை சொல்லிக்கொள்ள வேண்டும்.

    உடல் பலவீனத்தையோ மன பலவீனத்தையோ உருவாக்கும் எதையும் கனவிலும் நினையாதே. நீ மாபெரும் பலசாலி என்ற உண்மையைப் புரிந்துகொள்.

    வாழ்வில் நேரும் துன்பங்களுக்கு வருந்துவது ஏன்? நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ அடைந்த அனுபவமே சிறந்தது. அனுபவத்தை விடச் சிறந்த ஆசான் எவருமில்லை.

    விவேகானந்தரின் சிந்தனைகளை உள்ளடக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் நிறைய வெளிவந்துள்ளன. தங்களை வாசித்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என இளைஞர்களின் வாசிப்புக்காக அவை காத்திருக்கின்றன.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • பல வெளிப்புற காரணிகளும் தோல் நோய்களை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
    • முதுமையில் தோலில் உண்டாகும் மாற்றங்கள் பல.

    வயது மூப்பின் அடையாளத்தில் முக்கிய பங்காற்றுபவை தோலில் உண்டாகும் மாற்றங்கள். உள்ளுறுப்புகளில் எத்தனை தான் மாற்றம் நிகழ்ந்தாலும், வெளிப்புற தோற்றத்தில் வயது மூப்பை காட்டிக்கொடுக்கும் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் தான். முதுமையில் அத்தகைய தோலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் தோல் சார்ந்த நோய்கள் உண்டாக முக்கிய காரணமாக அமைகின்றன.

    முதுமையில் தோல் சார்ந்த பிரச்சினைகள் என்பது ஆரோக்கியத்திற்கு கூடுதல் சுமை. கட்டுப்படுத்த முடியாத தோல் அரிப்பும், நமைச்சலும் உடலை மட்டுமின்றி மனதையும் ரணமாக்கி துக்கத்தில் ஆழ்த்தும்.

    முதுமையில் உடலின் செல்களுக்குள் நிகழும் பல்வேறு மாற்றங்களால் தோல் தனது இயற்கைத் தன்மையை இழப்பதோடு, பல வெளிப்புற காரணிகளும் தோல் நோய்களை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

    முதுமையில் தோலில் உண்டாகும் மாற்றங்கள் பல. அவற்றில் வறண்ட சருமம், தளர்வான முகத்தோல் (குறிப்பாக கண்கள், கன்னங்கள் மற்றும் தாடைகளை ஒட்டி தளர்வான தோல்) மெலிதான தோலின் தன்மை, மற்றும் தோல் நெகிழ்ச்சித்தன்மை குறைந்ததாய் மாறுதல் போன்றவை முக்கிய மாற்றங்களாக உள்ளன. உடல் செயலியல் ரீதியாக உண்டாகும் இத்தகைய மாற்றங்களால் தோலில் எளிதில் சிராய்ப்பும், தொற்றுக்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாக உள்ளது.

    சர்க்கரை நோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்ற தொற்றா நோய்களால் உண்டாகும் தோல் நோய்கள் மட்டுமின்றி, எந்த நோயின் பின்புலமும் இல்லாமல் உண்டாகும் தோல் அரிப்பு நோய்கள் முதுமைக்கு மிகப்பெரும் சவாலாகும். முதுமையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேருக்கு அரிப்புடன் கூடிய தோல்நோய் உள்ளதாக தரவுகள் தெரிவிப்பது கூடுதல் வருத்தம். இதனால் தூக்கமின்மை மற்றும் மனசோர்வு உண்டாகக்கூடும்.

    "வாதமலாது மேனி கெடாது" என்பது சித்த மருத்துவக் கூற்று. சித்த மருத்துவத் தத்துவத்தின் படி நோய்க்கு காரணமாகும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாத குற்றம் முதன்மையாக பாதிக்கப்பட்டு தோல் சார்ந்த நோய்களை உண்டாக்குவதாக உள்ளது.

    சித்த மருத்துவத்தில் தோல் நோய்களை 'குட்ட நோய்கள்' என்ற பெயரில் 18 வகைகளாக விவரித்துள்ளது. இத்தகைய தோல் நோய்களில் முதுமையில் உண்டாகும் தோல் வறட்சி நோயும், தோல் அரிப்பு நோயும், சோரியாசிஸ் எனும் காளாஞ்சகப்படையும், படர்தாமரையும், வைரஸ் மற்றும் பாக்டீரியா சார்ந்த தோல் தொற்றுநோய்களும் அதிகம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன.

    முதுமையில் சர்க்கரை நோய் போன்ற உடலின் எதிர்ப்புசக்தியை பலவீனப்படுத்தும் நோய் நிலையால், நீரிழிவு நோயுள்ள பலருக்கு தோல்நோய்கள் உண்டாவது வாடிக்கையாக உள்ளது. அதில் முக்கியமாக நோய் எதிர்ப்பு குறைபாட்டால் பூஞ்சைத் தொற்றினால் உண்டாகும் படர்தாமரை போன்ற சரும நோயும், தோலில் மீன் செதில்கள் போன்ற உதிர்வை உண்டாக்கும் 'சோரியாசிஸ்' எனும் காளாஞ்சகப்படையும் அதிக சிரமத்தை உண்டாக்க வல்லது.

    படர்தாமரை நோய்நிலையில் பூஞ்சைக்கொல்லி மூலிகை மருந்துகளை எடுப்பது நோயினை தீர்க்க உதவும். சீமை அகத்தி இலையுடன், வேப்பிலை மற்றும் குப்பைமேனி இவற்றை அரைத்து பற்றாக்கி பூசுவதன் மூலம் தோல் படைகள் நீங்கும்.

    கட்டுப்படாத நீரிழிவு நோயால் நாட்பட்ட படர்தாமரையால் அவதியுறுபவர்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மருந்துகளுடன் சித்த மருந்துகளான பறங்கிப்பட்டை சூரணம், கந்தக பற்பம் ஆகிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுக்க நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

    முதுமையில் தோலில் உள்ள எண்ணெய் சுரப்புகள் செயல்பாடு குறைவதாலும், பல்வேறு நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளினாலும் இயல்பான தோல் வறண்டு (சீரோசிஸ்) தோலில் அரிப்பினை உண்டாக்கும். இத்தகைய நிலையில் எண்ணெய் பசை மிகுந்த சவுக்கார கட்டிகளை பயன்படுத்துவது நல்லது.

    மேலும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள அருகன் தைலம், புங்கன் விதை தைலம், மத்தன் தைலம் ஆகிய தைலங்களை மேலே பூசி வர தோல் வறட்சி நீங்கி நமைச்சல் குறையும்.

    பீட்டா கரோட்டின், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் குறைபாடு உள்ளவர்கள் பெரும்பாலும் தோல் வறட்சியால் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால் அத்தகைய சத்துள்ள பழங்களையும், பிஞ்சு காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது தோல் வறட்சியைத் தடுக்கும்.

    தில்லைவாணன்

    தில்லைவாணன்

    ஒவ்வாமையால் உண்டாகும் தோல் நோய்நிலைகளில் சித்த மருத்துவம் கூறும் பத்தியங்களை கடைபிடிப்பது நல்ல பலன் தரும். பித்தம் அதிகமான சூழலில் ஒவ்வாமை உண்டாகும் என்பதால் பித்தத்தை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.

    தேநீர், குளம்பி (காபி) இவற்றைத் தவிர்த்து பாலில் மஞ்சள் பொடி மற்றும் மிளகு சேர்த்து எடுத்துக்கொள்வது ஒவ்வாமையைத் தடுத்து நற்பலன் தரும். மஞ்சளில் உள்ள 'குர்குமின்' மற்றும் மிளகில் உள்ள 'பைப்பரின்' வகை வேதிப்பொருட்கள் உடலில் ஒவ்வாமையை உண்டாக்கும் காரணிகளைத் தடுத்து நமைச்சலைப் போக்கும்.

    ஒவ்வாமைக்கு சித்த மருத்துவம் கூறும் எளிய மருந்து 'அருகம்புல் குடிநீர்' தான். அருகம்புல்லை அலசி அத்துடன் மிளகு சேர்த்து கசாயமாக்கி குடிக்கலாம். மருந்துகளினால் உண்டாகும் தோல் ஒவ்வாமை நிலையிலும் இது நல்ல பலன் தரும். அதே போல் மற்றுமொரு எளிய மூலிகை வெற்றிலை குடிநீர்.

    'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என்பது பழமொழி. அத்தகைய சிறப்புமிக்க மிளகினை, வெற்றிலையுடன் சேர்த்து கசாயமாக்கி எடுத்துக்கொள்வது ஒவ்வாமையை நீக்க உதவும். வெற்றிலையில் உள்ள வேதிப்பொருட்கள், ஒவ்வாமையை உருவாக்கும் ஹிஸ்டமின் மற்றும் இம்முனோகுளோபுலின்-ஈ போன்ற வேதிப்பொருட்களின் செயல்பாட்டை தடுத்து ஒவ்வாமையை குறைக்க உதவும். சீந்தில் (அமிர்தவல்லி) மூலிகை ஒவ்வாமை சார்ந்த பல நோய்களில் நற்பலன் தரும்.

    பொதுவாகவே அதிக புரதச்சத்துள்ள உணவுப்பொருள்களான அசைவ உணவுகளும், வேர்க்கடலை, பாதாம், முந்திரி போன்ற கொட்டை வகைகளும், கத்திரி, சுண்டைக்காய், காளான் போன்ற உணவுப்பொருட்களும் நமைச்சலை அதிகமாக்கி தொந்தரவுகளை அதிகரிக்கும். ஆகவே இவற்றை தவிர்ப்பது நல்லது. வாரம் இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய் குளியல் எடுப்பது உடலில் வாதம், பித்தம் இரண்டையும் சமப்படுத்தி தோல் நோய்களைக் குறைக்க உதவும்.

    'சீரோசிஸ்' எனும் தோல் நோய்க்கு அடுத்தபடியாக அதிகம் காணப்படுவது 'எக்சீமா' எனும் கரப்பான் தோல் நோய். உடம்பினுள்ளே கரப்பான் பூச்சியைப் போல் ஒளிந்துகொண்டு அவ்வப்போது துன்பங்களை கொடுக்கும் என்பதால் இப்பெயர் வந்ததாக அறியப்படுகின்றது. சில சிறுநீர்பெருக்கி மருந்துகளும், ரத்த அழுத்தம் குறைக்கும் சில மருந்துகளும் கூட கரப்பான் உண்டாக காரணமாக இருப்பதால் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது அவசியம்.

    கரப்பான் நிலையில் தோல் தடித்து கருத்து நமைச்சலுடன் காணப்படும். இந்நிலையில் உணவுக்கட்டுப்பாடுடன் குடல் சுத்தமும் மிக அவசியம் என்கிறது சித்த மருத்துவம். குடலுக்கும் தோலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என இன்றைய நவீன அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.

    எனவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது குடல் சுத்திக்கு உத்திரவாதம் தரும். இருப்பினும் முதுமையில் பேதி மருந்து ஏற்புடையது அல்ல என்பதால் மலமிளக்கும் சித்த மருந்துகளாகிய திரிபலை சூரணம், சிவதை சூரணம், நிலவாகை சூரணம் ஆகிய மருந்துகளை நாடுவது நல்லது.

    கரப்பான் நோயில் வெளிபிரயோகமாக பலனைத் தரக்கூடியதாக உள்ள மூலிகை சோற்றுக்கற்றாழை. இது தோல் நோய்கள் பலவற்றுக்கும் நல்லது. தோலின் வறட்சியைப் போக்க கூடியது. ஆக கற்றாழை உள்ளடக்கிய சவுக்கார கட்டிகளை பயன்படுத்துவது நல்லது.

    அதே போல் தேங்காய் எண்ணெயும் தோல் வறட்சியை போக்கும் என்பதால் அதனையும் மேலுக்கு தடவி வரலாம். இதனை இன்றைய நவீன ஆய்வுகள் பல உறுதி செய்துள்ளன. தோலின் வீக்கத்தைக் குறைத்து வறட்சியைப் போக்கும் 'குங்கிலிய வெண்ணெய்' என்ற சித்த மருந்தும் கரப்பான் நோய் நிலையில் உதவும். அருகம்புல்லுக்கு வறட்சியைப் போக்கும் தன்மை உடையதால் தோல் அரிப்பு, கரப்பான் போன்ற பல நோய்களில் இது நல்ல பலன் தரும்.

    காலில் உண்டாகும் சேற்றுப்புண் நிலையில் சித்த மருந்துகளான 'அமிர்த வெண்ணெய்' அல்லது 'வங்க வெண்ணெய்' இவற்றை பயன்படுத்த பலன் தரும். எளிமையாக நகச்சுற்று, சேற்றுப்புண் வராமல் தடுக்க மருதாணி இலையை அரைத்து பூசி வரலாம். கிருமிகள் தொற்றினால் உண்டாகும் தோல் நோய்களில் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுவது அவசியம்.

    மன நலனுக்கும், தோல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால் மன அழுத்தம் இருப்பின் அதை போக்கும் மருந்துகளை நாடுவது தோல் நோய்களை குறைக்க உதவும். சித்த மருந்தான அமுக்கராகிழங்கு சூரணம், மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் தோல் நலனில் நன்மை தரக்கூடும். அத்துடன் வல்லாரை கீரை, பிரமி கீரை, மணத்தக்காளி கீரை இவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வதும் தோல் நோய்களுக்கு நல்லது.

    வயதாக வயதாக உடலில் ஏற்படும் எண்ணற்ற மாற்றங்கள் நமது தோலிற்கு விதிவிலக்கல்ல. தோலிலும் ஆயிரக்கணக்கான மாற்றங்கள் நிகழ்ந்து, முதுமையை வெளிக்கொணர்ந்து வெளிச்சத்தில் நிறுத்தும். எனவே தோலில் அரிப்பு மற்றும் நோய்கள் ஏற்படும் வரை காத்திருக்காமல். தோல் பாதுகாப்பில் முன்கூட்டியே அக்கறை செலுத்துவது அவசியம்.

    (தொடரும்...) தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • களத்திர தோஷம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
    • கணவன்-மனைவி இருவருக்கும் தோஷம் இருந்தால் அது சமமான நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஒவ்வொரு கிரகமும் ஒருவரது ஜாதக அமைப்பில் இருக்கும் இடத்துக்கு ஏற்ப நல்லது-கெட்டதுகளை செய்யும். குறிப்பாக சூரியன், செவ்வாய், ராகு, கேது கிரகங்கள் பாவ கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த கிரகங்கள் ஜாதக கட்டங்களில் சரியான இடத்தில் அமையாவிட்டால் தீங்கு விளைவித்து விடும் என்பார்கள்.

    இந்த கிரகங்கள் ஜாதக கட்டத்தில் லக்னம் 2, 4, 7, 8 மற்றும் 12-ம் இடங்களில் இருக்கும்போது மற்ற கிரக அமைப்புகளின் நிலையும் சுமாராக இருந்தால் அது தோஷத்தை ஏற்படுத்தி விடும். அதிலும் 7-வது வீட்டை தீங்கு விளைவிக்கும் ஒரு கிரகம் தாக்கினால் ஜோதிடர்கள் அதை கண்ணை மூடிக்கொண்டு களத்திர தோஷம் என்று சொல்லி விடுவார்கள்.

    மேலும் இந்த மோசமான கிரகங்கள் சேர்ந்து அமைந்து விட்டால் களத்திர தோஷத்தின் பாதிப்பு சற்று அதிகமாக இருப்பதாக பயம் காட்டுவார்கள். இதனால் அடிக்கடி சோதனை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும் என்றும் சொல்வது உண்டு.

    களத்திர தோஷம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது முன் ஜென்மத்தில் ஏதாவது பாவங்கள், தவறுகள் செய்திருந்தால் அவை களத்திர தோஷமாக மாறி இந்த ஜென்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தோஷம் பாதித்தவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும்.

    சிலருக்கு களத்திர தோஷம் வலுவாக இருந்தால் அவருக்கு திருமணம் நடைபெறாமல் போவதற்கான வாய்ப்புகளும் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான களத்திர தோஷம் உடையவர்களுக்கு பரிகாரங்கள் செய்து திருமணத்தை நடத்தி வைத்து விடுவார்கள்.

    ஆனால் திருமணத்துக்கு பிறகு களத்திர தோஷம் தனது வேலையை காட்டிக் கொண்டே இருக்கும் என்று ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதாவது களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருமணத்துக்கு பிறகு மனைவியிடம் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டே இருப்பார் என்பார்கள். கணவன்-மனைவி உறவில் ஒற்றுமை குறைந்தே காணப்படும்.

    இந்த நிலை வரக் கூடாது என்பதற்காகத்தான் களத்திர தோஷம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்து வைப்பார்கள். கணவன்-மனைவி இருவருக்கும் தோஷம் இருந்தால் அது சமமான நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

    களத்திர தோஷம் இருப்பவர்கள் அதில் இருந்து விடுபட எத்தனையோ பரிகார பூஜைகள் உள்ளன. அதில் முதன்மையானது குல தெய்வ வழிபாடுதான். ஒருவர் எந்த அளவுக்கு குல தெய்வத்தை மனதில் நினைத்து வழிபாடுகள் செய்கிறாரோ அந்த அளவுக்கு இந்த தோஷத்தில் இருந்து மீண்டு வர முடியும்.

    ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சுக்கிர பகவான் ஆதிக்கம் பெற்ற ஆலயங்களுக்கு செல்ல வேண்டும். தமிழகத்தில் சுக்கிர பகவான் ஆதிக்கம் பெற்ற ஆலயங்களில் மிக சிறப்பான தலமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் கருதப்படுகிறது. அங்கு சென்று வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும்.

    குறிப்பாக ஸ்ரீரங்கம் ஆலயத்தில் எத்தனையோ விதமான பூஜை வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அதில் எது சிறப்பான பரிகார பூஜையாக இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் சேர்த்தி சேவையை தொடர்ந்து வழிபட்டு வந்தால் திருமண தடைகள் விலகி கெட்டி மேளம் கொட்டும் பாக்கியம் கைகூடி வரும் என்பார்கள்.


    மேலும் குரு ஆதிக்கம் நிறைந்த ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். குரு பகவான் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் திருமண தடை நீங்குவதோடு செல்வ செழிப்பும் உண்டாகும். கும்பகோணம் பகுதியில் திருமண தடை நீக்கும் ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றான திருமணஞ்சேரி ஆலயம் சென்று வழிபடுவதால் கைமேல் பலன் கிடைக்கும்.

    ஆலயங்களுக்கு செல்ல முடியாத பெண்கள் வீட்டில் சுமங்கலி பூஜை நடத்தி வருவது நல்லது. தொடர்ந்து சுமங்கலி பூஜை செய்து வந்தால் திருமண தாமதத்தை தவிர்க்கலாம். கணவன்-மனைவி ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டாலும் சுமங்கலி பூஜை நடத்துவது நல்லது.

    சுமங்கலி பூஜைக்கு மற்றொரு ஆற்றலும் உண்டு. கணவன்-மனைவி இடையே அன்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் சிறப்பு இந்த பூஜைக்கு இருக்கிறது. எனவே சுமங்கலி பூஜையை முறைபடி செய்தால் தாம்பத்திய வாழ்க்கை மேம்படும்.

    சிலருக்கு திருமண வாழ்க்கை பற்றி நிறைய கனவுகள் இருக்கும். வரப்போகும் மனைவி அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வார்கள். ஆனால் நடப்பது எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக வேறு மாதிரியாக இருக்கும். இதுவும் களத்திர தோஷத்தால்தான் ஏற்படுவதாக சொல்வதுண்டு.

    ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனப்படும் 7-ம் இடத்து கிரகம் அமைவதை பொறுத்துதான் இவையெல்லாம் அமையும். திருமணத்தை நடத்தி கொடுப்பவராக சுக்கிரன் இருக்கிறார் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும். அவரது அமைப்பும் ஜாதகத்தில் முக்கியமானதாகும்.


    7-ம் இடத்தில் சுக்கிரன் தனியாக இருந்தால் நல்லது அல்ல. அதுபோல 7-ம் இடத்தில் சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருப்பது நல்லது அல்ல. சனி இருந்தால் நிச்சயமாக தாமதத்தை ஏற்படுத்தும் என்பார்கள்.

    இத்தகைய கிரக அமைப்பு இருப்பவர்களுக்கு இளம் வயதில் திருமணம் கைகூடி வருவதுண்டு. ஆனால் ஜாதகக்காரர் களத்திர தோஷம் காரணமாக ஏதாவது சொல்லி அந்த வாய்ப்பை தட்டிப் போக செய்து விடுவார். நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்கிறேன். நல்ல சம்பளம் கிடைத்த பிறகு திருமணம் செய்கிறேன். சொந்த வீடு கட்டிய பிறகு திருமணம் செய்கிறேன் என்று சொல்வது எல்லாம் களத்திர தோஷத்தின் பாதிப்பு பிரதி பலிப்புதான்.

    எனவே களத்திர தோஷம் இருப்பதாக கருதப்படுபவர்கள் இளம் வயதில் திருமணம் கைகூடி வந்தால் உடனே அதை ஆய்வு செய்து முடிவு எடுத்து விட வேண்டும். திருமணத்தை எந்த காரணத்தை கொண்டும் தாமதம் செய்யக் கூடாது. இல்லையெனில் 7-ம் இடத்து கிரகம் திருமணம் கைகூடுவதை தாமதப்படுத்திக் கொண்டே காலத்தை நீட்டித்து விடும்.

    களத்திர தோஷத்துக்கு உரிய பரிகார பூஜை செய்யாவிட்டால் அது வாரிசுகளை கூட பாதிக்க தொடங்கி விடும். எனவே அவசியம் குருவின் ஆதிக்கம் நிறைந்த ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு களத்திர தோஷத்தை விரட்டி அடித்து விட வேண்டும்.

    அப்படி செய்தால்தான் குரு பலன் ஏற்பட்டு திருமணம் கைகூடி வரும். அதன் தொடர்ச்சியாக நல்லது நடந்து வாழ்க்கையில் செழிப்பு உண்டாகும். எனவே களத்திர தோஷத்தை நினைத்து கவலைப்பட வேண்டியது இல்லை. மிக எளிதாக பரிகாரங்கள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்துவிட முடியும்.

    தமிழகத்தில் குரு பலம் நிறைந்த ஆலயமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் கருதப்படுகிறது. அங்கு சென்று வழிபட்டால் களத்திர தோஷம் விலகுவதை உணர முடியும். திட்டை குரு பகவான் ஆலயம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம் ஆலயம், திருச்சி உத்தமகோவில் ஆலயம் ஆகியவை குரு பலத்தை தந்து அருளும் ஆலயங்கள் ஆகும்.

    சென்னையில் வசிப்பவர்கள் பாடி திரு வலிதாயம் ஆலயத்துக்கு சென்று வழிபட்டால் நல்லது. திருச்சி மணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஆலயம் களத்திர தோஷத்தை போக்குகின்ற தலங்களில் மிக சிறப்பான தலமாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் உள்ள ஞீலிவனநாதரை உரிய பூஜைகள் செய்து வழிபட்டால் திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகம். திருப்பட்டூரில் உள்ள பிரம்மா ஆலயமும் மிக சிறப்பான தலம் ஆகும். அங்கு வியாக்கிர பாதர், பதஞ்சலி முனிவர்களின் அருள் அலைகள் நிரம்பி உள்ளன. அங்கு வழிபட்டால் களத்திர தோஷம் உடனே விலகும். மேலும் திருப்பட்டூரில் பிரம்மாவும் நம் தலையெழுத்தை மாற்ற உதவி செய்வார்.

    எனவே மேற்கண்ட தலங்களில் உங்களுக்கு எந்த தலம் வசதியாக உள்ளதோ அங்கு சென்று பரிகார பூஜைகள் செய்து களத்திர தோஷத்தில் இருந்து உடனே விடுதலை பெறுங்கள்.

    • உழவுத்தொழிலுக்கு மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை மாதத்தின் முதல் நாள்.
    • அமாவாசை நாட்களில் பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும்.

    உலகில் உயிர்கள் பிறக்க காரணமாக இருப்பது சூரிய ஒளி என்பதால் இந்தியாவில் பெரும்பான்மையான விரதங்கள், பண்டிகைகள், விசேஷங்கள் சூரியனின் இயக்கத்தை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படும் தை மாத பண்டிகைகளும் விசேஷங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. தை மாதத்தில் மக்களின் மனதை மகிழ்விக்கும் பண்டிகைகள், காரிய சித்தி தரும் விரத நாட்கள் அதிகம் இருப்பதால் தை மாதம் தனித்தன்மை பெறுகிறது. தை மாதத்தின் சிறப்பு மிக்க விழா, விரத நாட்களைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம். 

    போகிப் பண்டிகை மார்கழி 29 14.1.2024 ஞாயிற்றுக்கிழமை

    போகிப் பண்டிகை என்பது தை மாதத்தில் தனது பயணத்தை வடக்கு நோக்கி மாற்றும் சூரியனை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்படும் விழா. மனிதர்கள் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் தேவையற்ற துயரங்களில் இருந்து விடுபட்டு மனதை மகிழ்விக்கும் நல்ல சம்பவங்களை வழங்கும் தை 1-ம் நாளை வரவேற்கும் நாளாகும்.

    பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகையன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலில் வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய குப்பைகளைத் தீயிட்டு கொளுத்த வேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் தீய சக்திகள் வெளியேறும். போகியன்று, வீட்டின் வாசலில் பொங்கல் பண்டிகைக்கான காப்பு கட்ட வேண்டும்.

    அத்துடன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் தற்காலத்திற்கு ஒத்து வராத கருத்துகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், தார்மீகமற்ற மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகியவற்றை உள்ளத்தில் இருந்து வெளியேற்றினால் வாழ்வில் வெளிச்சம் உண்டாகும். இவற்றை மனதில் இருந்து அழித்து ஞானம் என்னும் அக்னியால் எரிக்க வேண்டும் என்பதை உணர்த்துவது இந்தப் பண்டிகையின் தத்துவமாகும். அதாவது மனதில் இருக்கும் தீய தவறான எண்ணங்களை நீக்கினால் வாழ்வில் இருள் நீங்கும் என்பது இதன் தத்துவமாகும். 

    15.1.2024, தை 1 திங்கட்கிழமை தைப்பொங்கல்

    தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைத்திருநாள் ஒவ்வொரு வருடமும் தை மாதப்பிறப்பன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் ஆரம்பமாகும் உத்ராயண காலமான தை 1ம் நாள் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள், தைத் திருநாள், தமிழர் திருநாள், தை மாதப் பிறப்பு, மகர சங்கராந்தி என பல்வேறு பெயர்களால் போற்றப்படுகிறது.

    உழவுத்தொழிலுக்கு மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை மாதத்தின் முதல் நாள். உலக உயிர்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் சூரிய பகவான். நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது. ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து கிடைத்த புது அரிசியை சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப்பானையிலிட்டுப் புதிய அடுப்பில் வைத்துப் பொங்கல் செய்து கனிகள், கரும்புடன் சூரியனுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

    தமிழர் பண்டிகையான தைப் பொங்கலைக் கொண்டாடி இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்த பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 6.45- 7.30, 9.00 - 10.30. 

    16.1.2024, தை 2, செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல்

    உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கும் பால் தரும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் தான் மாட்டுப்பொங்கல், கால்நடைகளை சுத்தப்படுத்தி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி பொங்கல் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது, ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். மஞ்சு விரட்டு என்ற பெயருடைய ஜல்லிக்கட்டு வாலிபர்களின் வீர விளையாட்டு. இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும்.

    கோ பூஜை செய்ய ஏற்ற நேரம் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    மாட்டுப் பொங்கல் வைக்க ஏற்ற நேரம் காலை 8 மணி முதல் 9 மணி வரை

    17.1.2024 தை 3, புதன்கிழமை காணும் பொங்கல்

    இது பெண்களுக்கு மிகவும் விசேஷமான நாள். அதிகாலையில் தீர்க்க சுமங்கலி பாக்கி யத்திற்காகவும் உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ய நல்ல பலன் கிட்டும்.உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெற ஏற்ற நாள். கிராமப்புரங்களில் விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், மரம் ஏறல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும்.

    இந்த நாளில் திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளலாம்.

    25.1. 2024 தை 11 வியாக்கிழமை தைப்பூசம். பவுர்ணமி வியாழக்கிழமை குரு வாரம்

    குருவின் ஆதிக்கம் நிறைந்த நாள் பூசம் சனியின் நட்சத்திரம். ஆக குரு, சனியின் ஆதிக்கம் இணைந்த நாள் என்று கூறலாம். ஒரு மனிதன் தன் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் பெற குரு, சனியின் ஆதரவு வேண்டும். சனி என்றால் கர்மபலன். குரு என்றால் விருப்பம். ஒருவருடைய விருப்பமும் அவன் அனுபவிக்கப்போகும் கர்ம பலன்களும் ஒன்றாக இருந்து விட்டால் அவன் நினைப்பதுபோல தான் நடக்கும். ஒருவருடைய விருப்பமும் அவன் அனுபவிக்கப்போகும் கர்மபலன்களும் வேறு வேறாக இருந்தால் அவன் நினைப்பது போல் எல்லாம் நடக்காது.

    ஜனன கால ஜாதகத்தில் அஷ்டம் பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாத குரு, சனி இணைவு தர்மகர்மாதிபதி யோகம். அளவிட முடியாத வெற்றியை தரும் யோகமாகும். அஷ்ட பாதக ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெறும் குரு,சனி சம்பந்தம் பலவிதமான இன்னல்களை பிரம்மஹத்தி தோஷமாக, சாபமாக தருகிறது.

    தர்மகர்மாதிபதி யோகத்தால் மேலும் சாதகமான சுப பலனை அனுபவிக்க தைப்பூச நன்னாளில் இயன்ற தான தர்மங்களைச் செய்ய பலன் இரட்டிப்பாகும்.

    பிரம்மஹத்தி தோஷத்தால் மிகுதியான வினைப்பயனை அனுபவிப்பவர்கள் தைப்பூசத்தன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் சென்று அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    தை மாதத்தின் பூச நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி திதியும் இணைந்த நாள் தைப்பூசம். முருகன் மற்றும் சிவ வழிபாட்டிற்கு தைப்பூசம் உகந்த நாள் என்பதால் சுப்ரமணிய புஜங்கம், சகஸ்ர நாமம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் வளம் சேரும்.

    ஜோதியே கடவுளின் சொரூபம், ஜோதி தரிசனத்தின் மூலமாகவே இறையை உணர்ந்து முக்தி அடையலாம் என்பதால் ஜீவ சமாதி அடைந்த மகான்களை ஜோதி வடிவில் வழிபடுவது சிறப்பு.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி தைப்பூ சத்தன்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று நடைபெறும் ஜோதி தரிசன விழாவில் கலந்து கொள்வது சிறப்பு.

    தை மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை வழிபாடு

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். இதனோடு உத்ராயணத்துக்குரிய சிறப்பும் சேருவதால் தை மாதத்தில் வரும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்புடையவையாக கருதப்படுகின்றன.

    திருமணம் ஆன பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியத்தை அதிகரிக்க செவ்வாய்கிழமை அம்மன் வழிபாடு செய்யலாம். கன்னிப் பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்யலாம். தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். 

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    தை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.

    ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்று வலிமை குறைந்தவர்கள், பெண் சாபத்தால் பாதிக்கப்பட்டோர், தை வெள்ளிக்கிழமை நாளில் சப்த கன்னிகளை வழிபட்டால் திருமண தடை அகலும்.

    சுக்கர தோஷம் நீங்கும். ஜனன கால ஜாதகத்தில் 8-ல் செவ்வாய், 8ல் சனி, கேது போன்றவற்றால் மாங்கல்ய பாக்கியம் குறைந்தவர்கள் தை செவ்வாய் கிழமை வயதான சுமங்கலிப் பெண்களை அழைத்து உணவு கொடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசி பெறுவது நலம். கோட்சார ராகு காலபுருஷ பன்னிரெண்டாமிடமான மீனத்தில் பெண் ராசியில் நிற்பது பெண்களுக்கு சுபித்துச் சொல்லக்கூடிய காலம் அல்ல. எனவே பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு வேளையில் துர்க்கை, காளி போன்ற உக்ர தெய்வங்களை வழிபட சுப பலன் மிகும்.

    9.2.2024 தை 26 வெள்ளிக்கிழமை தை அமாவாசை

    சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றை தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன், மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரர்களை, தாய்- தந்தையை இல்லாதவர்கள் தை அமாவாசை அன்று வழிபாடு செய்வது சிறப்பான ஒன்றாகும். உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அமாவாசை நாட்களில் பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும். முன்னோர்களுக்கு தை அமாவாசை அன்று சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச விருத்தி ஏற்படும். வருடத்தின் அனைத்து அமாவாசை நாட்களிலும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் தை அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும்.

    இதுபோன்ற பல்வேறு சிறப்பு நிறைந்த தைமாத விரத நாட்களை பயன்படுத்தி சகல சுப பலன்களும் அடைய நல்வாழ்த்துக்கள்.

    • ஒன்றாய் அமர்ந்து, உணவினைப் பகிர்ந்து நேரத்தினை செலவிடுவதுதான் இணைப்பு.
    • உங்கள் சகோதர, சகோதரியுடன் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார்.

    ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுத்தார்.

    நிருபர்: ஐயா உங்களுடைய முந்தைய சொற்பொழிவில் 'தொடர்பு' மற்றும் 'இணைப்பு பற்றி பேசினீர்கள். அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாய் இருந்தது. சற்று விளக்கமாக சொல்ல முடியுமா?" என்றார்.

    துறவி : புன் முறுவலோடு நிருபர் கேட்ட கேள்வியில் இருந்து விஷயத்தை திசை திருப்பும் விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார். 'நீங்கள் நியூயார்க்கில் தானே வசிக்கின்றீர்கள்?'

    'ஆம்'

    துறவி: வீட்டில் யாரெல்லாம் இருக்கின்றார்கள்?

    'இந்த துறவி என் சொந்த வாழ்வைப் பற்றியும் தேவையற்ற கேள்விகளைக் கேட்டும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்வதனைத் தவிர்க்கின்றார் என்று நிருபர் நினைத்தார்.

    இருந்தாலும் துறவியின் கேள்விக்கு, "என் தாயார் இறந்து விட்டார். தந்தையார் இருக்கிறார். மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது" என்று பதிலளித்தார்.

    துறவி: முகத்திலே, புன்னகையுடன் 'நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகின்றீர்களா?' என்று கேட்டார்.

    இப்போது நிருபர் எரிச்சல் அடைந்து விட்டார்.

    துறவி: "கடைசியாக எப்போது அவரிடம் பேசினீர்கள்.

    நிருபர்: எரிச்சலை அடக்கிக் கொண்டு 'ஒரு மாதத்திற்கு முன் இருக்கலாம்' என்றார்.

    துறவி: 'உங்களுடைய சகோதர, சகோதரிகளை அடிக்கடி சந்திப்பதுண்டா?' 'குடும்பமாக சந்தித்தது கடைசியாக எப்போது?' என்றார்.

    இப்போது அந்த நிருபர் நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது. இதைப் பார்த்தால் துறவிதான் நிருபரை பேட்டி எடுப்பது போல் இருந்தது. நீண்ட பெரு மூச்சுடன் நிருபர் சொன்னார். 'இரண்டு வருடங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் சமயத்தில் சந்தித்தோம்'.

    துறவி: எல்லோரும் சேர்ந்து எத்தனை நாட்கள் இருந்தீர்கள்?'

    புருவத்தின் மீது வடிந்த வியர்வையை துடைத்தவாறு நிருபர் 'மூன்று நாட்கள்' என்றார்.

    துறவி: 'உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து அவரோடு எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள்?'

    இப்போது நிருபர் பதட்டத்துடனும், சங்கடத்துடனும் ஒரு காகிதத்தில் ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்.

    துறவி: 'எலலோரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவோ, மதிய உணவோ, இரவு உணவோ ஒன்றாக சாப்பிட்டீர்களா?'

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

     'அம்மா இறந்த பிறகு நாட்களை எப்படி கழிக்கின்றீர்கள் என்று அப்பாவிடம் ஆறுதலாய் கேட்டீர்களா?'

    இப்போது நிருபரின் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.

    துறவி அந்த நிருபரின் கைகளை பற்றியவாறு கூறினார். 'சங்கடப் படாதீர்கள். மனம் உடைந்து போகாதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள். தெரியாமல் உங்கள் மனதை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள். ஆனால் இதுதான் நீங்கள் 'தொடர்பு மற்றும் இணைப்பு பற்றி கேட்ட கேள்விக்கான பதில்'.

    நீங்கள் உங்கள் அப்பாவோடு தொடர்பில் இருக்கின்றீர்கள். ஆனால் அவரோடு நீங்கள் இணைப்பில் இல்லை.

    நீங்கள் அவரோடு இணைக்கப்படவில்லை. இணைப்பு என்பது இதயத்திற்கும் இதயத்திற்கும் இடையே இருப்பது...

    ஒன்றாய் அமர்ந்து, உணவினைப் பகிர்ந்து நேரத்தினை செலவிடுவதுதான் இணைப்பு.

    உங்கள் சகோதர, சகோதரியுடன் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார்.

    இப்போது நிருபர் கண்களை துடைத்துக் கொண்டு, 'எனக்கு அருமையான மறக்க முடியாத பாடத்தினை சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி ஐயா' என்றார். இது இன்றைக்கும் அநேக வீடுகளில் நிஜம்தான். தொடர்பு இருக்கின்றது. இணைப்பு இல்லை. இதனால் அன்பும் மங்குகின்றது. இதனை அனைவரும் முனைந்து மாற்ற வேண்டும்.

    சரி. அந்த துறவி யார் தெரியுமா? 'சுவாமி விவேகானந்தர்' தான். ஒரு வீட்டில் பெண் மட்டும் அதாவது அந்த குடும்ப தலைவி ஒரு பதட்டமாகவே இருப்பார்.

    கணவன், பிள்ளைகள், மற்ற உறவுகள் பற்றி எப்போதுமே ஒரு பதட்ட ஓட்டம் இருக்கும். கோபப்படுவர். எரிச்சல் படுவர். அனைவரும் அவளிடம் அனைத்து வேலையினையும் அடிமைப் போல் பெற்றுக் கொள்வர். பிறகு 'ரொம்ப டென்ஷன் பார்ட்டி' எனறு பட்டம் சூட்டுவர்.

    இப்படித்தான் ஒரு வீட்டில் ஒரு பெண்மணி இருந்தாராம். திடீரென அந்த பெண்மணி மாறி விட்டார். கோபம் இல்லை, சத்தம் இல்லை. மிக அமைதியாக இருந்தார்.

    ஒருநாள் அவரது கணவர் அந்தப் பெண்ணிடம் 'நானும் என் நண்பர்களும் மது அருந்த செல்கின்றோம்' என்று கூறினார். அந்தப் பெண்மணி அமைதியாய் இருந்தார்.

    பிள்ளை வந்து அம்மாவிடம் 'நான் எல்லா பாடங்களிலும் பெயில் என்றான். ஒழுங்காய் படித்தால் எல்லாம் முடியும். முடியவில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில்படி' என அமைதியாகக் கூறினார்.

    கணவனுக்கு ஆச்சர்யம். நண்பர்களை சந்திக்க செல்கின்றேன். என்றாலே நூறு நிபந்தனைகள் போடும் தன் மனைவி 'குடிக்கப் போகிறேன்' என்று சொல்லி கூட அமைதியாய் இருக்கின்றாளே. எப்படி? எனக்குழம்பினார்.

    ஒரு பாடத்தில் மார்க் குறைந்தாலே காது இரண்டையும் திருகி கழட்டி விடும் தன் அம்மா 'அனைத்து பாடங்களிலும் பெயில்' என்று சொன்ன போதும் மீண்டும் அதே வகுப்பில் படி' என்கிறாரே என்ன ஆயிற்று அம்மாவிற்கு?- மண்டை குழம்பியது.

    இது மட்டுமா? மகள் ஓடி வந்தாள். 'அம்மா காரை நான் விபத்துக் குள்ளாக்கி விட்டேன்' என்றாள்.

    பெண்மணி அமைதியாக 'கொண்டு போய் ரிப்பேர் செய்து விடு' என்றாள். வீட்டில் பூகம்பமே வெடிக்கும் என எதிர்பார்த்து பயந்து வந்த மகளுக்கு அம்மாவின் அமைதி மேலும் பயத்தினை அதிகரித்தது.

    குடும்பத்தினர் அப்பெண்மணியின் உடல், மன நலம் குறித்து கவலை கொண்டனர்.

    ஒருநாள் அப்பெண்மணியே எல்லோரையும் அழைத்து பேசினார்.

    சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது.

    'அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு'

    'என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம். என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை.

    அவை என் ஆரோக்கியத்தினைக் கெடுத்து என் பிரச்சினைகளைத்தான் அதிகரிக்கும்.

    என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும்.

    உங்களுக்குத் தேவைப்பட்டால் என் அறிவுரைகளைத் தருவேன்.

    உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன்.

    ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.

    ஏனெனில் என்னை சார்ந்து இப்பிறவியினை நீங்கள் எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை. உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு கூறல் வேண்டும்.

    உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் மகிழ்ச்சியினை நீங்களே தேடுமளவுக்கு நீங்கள் எல்லா அறிவினையும் பெற்று உள்ளீர்கள். ஆகவேதான் நான் அமைதி ஆகிவிட்டேன் என்றார்.

    குடும்பம் அசைவற்று நின்றது. அன்று முதல் அனைவரும் பொறுப்போடு தங்கள் வாழ்க்கையினை வாழத் தொடங்கினர்.

    பலர் இதனை முன்பே படித்து ஒதுக்கி இருக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண்தான் மற்றவர்களின் பொறுப்புகளை சுமக்கிறாள். இதனால்தான் அவள் உடல், மன நலம் பாதிக்கப்படுகின்றது. எல்லா நோய்களும் அவளை எளிதில் தாக்குகின்றன.

    இதனை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். ஆணும் உணர வேண்டும். உணர்ந்தாலே போதும். நம்முள் ஒளி சக்தி கூடும்.

    • எந்த பொண்ணுக்கும் தன்னை புகழ்ந்தால் மெய்சிலிர்த்து போகாதா என்ன! இந்த மீனா மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன?
    • நேரத்தை கடைபிடிப்பதில் எவ்வளவு ஷார்ப்பாக இருக்கிறார்? என்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

    அடி மீனா பொண்ணு... மீனா பொண்ணு. மாசியில் போட்டா மாராப்பொண்ணு...

    இப்படி ஒரு பாடல் முதல்முதலில் என் காதில் வந்து விழுந்ததும் எப்படி இருந்திருக்கும்...?

    கிறங்கித்தான் போனேன்... அதனால்தான் நாட்டாமைக்கு ஜோடியானேன்...

    1994-ல் நான் தெலுங்கு பட உலகில் முன்னணி நட்சத்திரம். ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருந்தேன். அப்போது தான் நாட்டாமை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி.

    அது மட்டுமல்ல. படத்தில் கதாநாயகன் சரத்குமார். அவருக்கு இரட்டை வேடம். நாட்டாமையாக வரும் சரத்குமாருக்கு குஷ்பு ஜோடி. அவரது தம்பி சரத்குமாருக்கு நான் ஜோடி.

    அந்த காலக்கட்டத்தில் தமிழில் குஷ்பு மிகப்பெரிய நட்சத்திரம். எனவே இவ்வளவு பெரிய ஜோடியுடன் நடித்தால் நமக்கு பெயர் கிடைக்குமா? என்ற தயக்கத்தில் அந்த வாய்ப்பை ஏற்கும் எண்ணம் இல்லாமல் இருந்தேன்.

    படம் வெளியான பிறகு அய்யய்யோ இப்படி ஆகிவிட்டதே! இந்த பாத்திரத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாமே! என்று வருத்தப்படுவதில் பிரயோஜனம் இல்லை. எனவே கொஞ்சம் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்று மனதுக்குள் தோன்றியது.

    இன்னொரு பக்கம் படத்தயாரிப்பு நிறுவனத்தையும் நினைத்து பார்த்தேன். ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். புகழ்பெற்ற நிறுவனம். நேரத்தை வீணடிக்கமாட்டார்கள்.

    இப்படி பல எண்ணங்களால் எந்த முடிவுக்கும் வர முடியாமல் இருந்தேன். அந்த நேரத்தில் படக்குழுவினர் என்னை மீண்டும் சந்திக்க வந்துள்ளார்கள். 'நல்ல படம் மேடம். நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்' என்றார்கள்.

    பேசிக் கொண்டிருந்த போதே படத்தின் பாடல்களை கேட்டுப் பாருங்களேன்... நிச்சயமாக நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றபடி டேப் ரெக்கார்டரில் பாடலை போட்டார்கள் (அந்த காலத்தில் சி.டி., பென்டிரைவ் என்பதெல்லாம் கிடையாது.)

    பாடல் ஒலிக்க தொடங்கியது. 'மீனா பொண்ணு... மீனா பொண்ணு' என்று பாடல் ஒலித்ததும் என்னையே குறிப்பிட்டு புகழ்ந்து பாடியது போல் இருந்தது.

    எந்த பொண்ணுக்கும் தன்னை புகழ்ந்தால் மெய்சிலிர்த்து போகாதா என்ன! இந்த மீனா மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன?

    அந்த பாடல் என் மனதை மாற்றிவிட்டது. உடனே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

    24 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தேன். குறித்த நாட்களுக்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும். கூடுதலாக ஒருநாள் தாருங்கள்... இரண்டு நாள் தாருங்கள் என்று கடைசி நேரத்தில் வந்து நிற்க கூடாது. ஓய்வு கிடைத்தால் வேறு ஷூட்டிங் சென்று வரவும் அனுமதிக்க வேண்டும் என்று பல நிபந்தனைகளையும் போட்டேன். எல்லாவற்றுக்கும் ஓ.கே. சொன்னதால் நானும் ஓ.கே. சொன்னேன்.


    டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார்.

    அவரை முதல் முதலில் சந்தித்தது இந்த படத்தில்தான். அதேபோல் சரத்குமார் சார், குஷ்பு மேடம் ஆகியோரை சந்தித்ததும் இந்த படத்தில்தான்.

    இவர்கள் மூன்று பேரை பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் யாரையும் அதுவரை நேரில் சந்தித்தது கிடையாது.

    ரவிக்குமார் சார் ரொம்ப கண்டிப்புடன் இருப்பார். நேரம் தவறாமையை கடைபிடிப்பார். சின்ன தவறு சொய்தால்கூட கன்னா பின்னா என்று திட்டுவார் என்றெல்லாம் கூறினார்கள்.

    எனவே என்னதான் பெரிய ஆர்டிஸ்டாக இருந்தாலும் அவரிடம் திட்டு வாங்கிவிட கூடாதே என்ற பயத்துடனேயே ஷூட்டிங் கிளம்பி செல்வேன்.

    படப்பிடிப்பு தொடங்கியது. 'மீனா பொண்ணு... மீனா பொண்ணு...' அந்த பாடல் காட்சிகளை எப்போது எடுப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.

    அந்த காட்சி கடைசியில்தான் படமாக்கப்பட்டது. ஒருநாள் ஷூட்டிங் முடிந்து 12 மணிக்கு மதிய உணவு இடைவேளை விட்டார்கள். மீண்டும் மதியம் 2.15 மணிக்கு ஷூட்டிங் என்றார்கள். சென்னையில்தான் ஷூட்டிங் நடந்தது. எனவே 2 மணி நேரம் இருக்கிறதே வீட்டுக்கு சென்று சாப்பிட்டு வரலாமே என்று டைரக்டரிடம் அனுமதி கேட்டேன்.

    அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் தாராளமா போயிட்டு வாம்மா. ஆனால் 2.15 மணிக்கு வந்துவிடு என்றார்.

    சரிசார் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றேன். சாப்பிட்டு முடித்து 1.45 மணிக்கே ரெடியாகிவிட்டேன்.

    2.15 மணிக்குதானே வரச் சொன்னார். எப்படியும் கால் மணிநேரம், அரை மணி நேரம் தாமதமாகத்தான் தொடங்குவார்கள். எனவே கொஞ்சம் மெதுவாக செல்லலாம் என்று சும்மாவே இருந்தேன்.

    அம்மா தான் சொன்னார், 'ரெடியாகி விட்டால் கிளம்பி போ... கொஞ்ச நேரம் முன்கூட்டி சென்றால் என்னவாகும்? என்றார்.

    சரி, கிளம்புறேம்மா என்று அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்டு சென்றேன். மூன்று நிமிடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சேர்ந்தேன்.

    அங்கு பார்த்த காட்சியை பார்த்து அதிர்ந்து போனேன். டிராலி, லைட் உள்பட படப்பிடிப்பு தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடும் தயார் செய்யப்பட்டு ரெடியாக இருந்தது. 'கிளாப்' சொல்ல வேண்டியதுதான் மிச்சம்.

    நேரத்தை கடைபிடிப்பதில் எவ்வளவு ஷார்ப்பாக இருக்கிறார்? என்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இவர் லெவலே வேறு என்று முடிவு செய்தேன். அதன்பிறகு அவர் படத்தில் நடித்தால் ஒருநாள் கூட தாமதமாக செல்லமாட்டேன். படப்பிடிப்பு நிறைவடைந்தது. தினமும் சரியான நேரத்தில் ஆஜர் ஆகிவிடுவேன். அதைபார்த்து ரவிக்குமார் சார் வாழ்த்துவார்.

    அவரை போன்றவர்களின் வாழ்த்தும், ஊக்கமும்தான் என்னை தொடர்ந்து உயர வைத்தது. அதே போல் அந்த படமும் தமிழில் என்னை மேலும் ஒருபடி மேலே கொண்டு சென்றது. 175 நாட்கள் ஓடியது.

    பின்னர் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் படமாக்கப்பட்டது.

    அடுத்த வாரம் மற்றுமொரு தகவலுடன் வருகிறேன்...

    தைப்பொங்கல் நெருங்குகிறது.

    அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    (தொடரும்...)

    • ஒரு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் செயலி மற்றும் அதன் ரேம் மற்றும் பயன்படுத்தப்படும் சேமிப்பகமாகும்.
    • பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இப்போது உள் சேமிப்பகத்துடன் வருகின்றன.

    தற்போது சந்தையில் அதிகம் விற்பனையாகும் பொருட்களில் ஒன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன். ஏனென்றால், ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி பல வேலைகளைச்செய்து முடிக்கிறோம், மேலும் அவை சராசரியாக இரண்டு முதல் மூன்று உள்ளனர்.

    புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். வெளிப்படையாக, இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வழிகாட்டி ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கானது, ஏனெனில் ஐபோன் பயனர்கள் ஆப்பிள் விற்கும் பொருட்களை மட்டுமே வாங்க முடியும்.

    ஸ்மார்போனைப்பொறுத்த வரையில், அதன் செயலி, ரேம், சேமிப்பகம், டிஸ்ப்ளே மற்றும் கேமரா பாதுகாப்பு போன்ற சில குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் பார்க்க வேண்டும்.

    செயல்திறன்: எந்தவொரு ஸ்மார்ட்போனின் செயல்திறனைப் பற்றி நாம் பேசும்போது, அந்த அளவீட்டில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் மூன்று கூறுகள் உள்ளன. இந்த கூறுகள் ஒரு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் செயலி மற்றும் அதன் ரேம் மற்றும் பயன்படுத்தப்படும் சேமிப்பகமாகும்.

    செயலி: எஸ்.ஓ.சி. அல்லது சிப்செட் என அழைக்கப்படும் செயலியைப் பொறுத்த வரை, குவால்காம், மீடியாடெக், ஆப்பிள் மற்றும் சாம்சாப் போன்ற உற்பத்தியாளர்களிடமிருந்து தொழில்துறையில் உங்களுக்கு சில விருப்பங்கள் இருக்கலாம். இருப்பினும், ஆப்பிளின் சிப்களை அவர்களின் ஐபோன்கள் மற்றும் பிற ஐ.ஓ.எஸ். சாதனங்களில் மட்டுமே இருக்கும் என்பதால் அதை விட்டுவிடலாம்.

    நீங்கள் பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களைத் தேடுகிறீர்களானால், நீங்கள் குவால்காம் செயலி அல்லது மீடியா டெக் ஒன்னை காணலாம். குவால்காமின் ஸ்னாப்டிராகன் சில்லுகள் சிறந்தவை என்று பலரால் கூறப்பட்டாலும், மீடியா டெக்கின் சில்லுகளும் மிகவும் பின்தங்கவில்லை.

    இப்போது, குவால்காம் ஸ்னாப்டிராகன் 400, 600 மற்றும் பிளாக்ஷிப் 800 சீரிஸ் வரை பல தொடர்களில் ஒவ்வொரு வருடமும் அதன் சிப்களை வெளியிடுகிறது. பொதுவாக, ஸ்னாப்டிராகன் 400 சீரிஸ் இயங்கும் சாதனங்கள் ஒளி பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும்.

    மறுபுறம், ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் சாதனங்கள் அனைத்து பணிகளையும் செய்ய முடியும், மேலும் ஓரளவுக்கு மட்டுமே கேம்ஸ் விளையாடலாம்.. குவால்காமில் இருந்து முதன்மையான ஸ்னாப்டிராகன் 800 தொடர் சாதனங்களுக்கு வருவதால், நீங்கள் சிறந்த செயல்திறனைப் பெற முடியும்.

    மீடியா டெக் அதன் செயலிகளை ஹீலியோ பி தொடரில் வெளியிடுவதாக அறியப்படுகிறது, அவை மிதமான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் அவற்றில் லைட் கேமிங்கைச் செய்யலாம். இருப்பினும், மீடியா டெக் தங்கள் செயலிகளை ஜி தொடரில் வெளியிடத் தொடங்கியுள்ளது, அவை கேமிங்கிற்காகவும், ஸ்னாப்டிராகன் 600 தொடர் சில்லுகளுடன் ஒப்பிடக்கூடிய செயல்திறனை வழங்குகின்றன.

    செயல்திறனின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ஸ்மார்ட்போனில் செயலியைப் பற்றி இப்போது பேசினோம், ரேமைப் பற்றியும் மறந்துவிடக் கூடாது. ஸ்மார்ட்போனில் ரேம் கொண்ட பொதுவான விதி "அதிக ரேம் எப்போதும் சிறந்தது". ரேம் அல்லது ரேண்டம் அணுகல் நினைவகம் பல பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், குறைந்த ரேம் ஒரு நேரத்தில் குறைந்த பணிகளை மட்டுமே போன் மூலம் கையாள முடியும்.

    இப்போதெல்லாம், அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் 6 அல்லது 8 ஜிபி ரேம் தரமாக இருப்பதைக் காண்கிறோம், எனவே, 8ஜிபி ரேம் அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கினால், அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம்.

    ஜெயராமன் ரகுநாதன்

    ஜெயராமன் ரகுநாதன்

    சேமிப்பு ஸ்டோரேஜ்: ஒரு சாதனத்தில் சேமிப்பகத்தைப் பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்மார்ட்போன்களின் முந்தைய நாட்களில் வெளிப்புற சேமிப்பிடத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பம் இருப்பதைக் கண்டோம். இருப்பினும், பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இப்போது உள் சேமிப்பகத்துடன் வருகின்றன,

    இப்போது ஸ்மார்ட்போன்கள் இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருவதால், போதுமான சேமிப்பகத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். எனவே நீங்கள் உங்கள் மொபைலில் நிறைய ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்பவராக இருந்தால், உங்கள் சாதனத்தில் குறைந்தபட்சம் 128 ஜி.பி. இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் மனதில் கொண்டு சேமிப்பு அளவை முடிவு செய்து வாங்கலாம்.

    அடுத்ததாக, நாம் வாங்கும் ஸ்மார்ட்போனில் உள்ள டிஸ்ப்ளேவையும் பார்க்க வேண்டும். ஏனென்றால், நமது ஸ்மார்ட்போனில் நாம் பார்ப்பது அதன் டிஸ்ப்ளேவை மட்டுமே. எனவே காட்சியை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுப்பது முக்கியம்.

    காட்சி வகை டிஸ்பிளே:

    வழக்கமான ஸ்மார்ட்போன்களில், எல்.சி.டி. அல்லது அமோல்ட் டிஸ்ப்ளேக்கள் என இரண்டு வகையான பேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன்னதாக, எல்சிடி டிஸ்ப்ளேக்கள் மலிவானவை என்பதால் அதிகம் காணப்பட்டது, ஆனால் எல்.இ.டி. பேனல்கள் இப்போதெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை பேட்டரி ஆயுளுக்கு சிறந்தவை மற்றும் ஆழமான மற்றும் துல்லியமான வண்ணங்களை வழங்குகின்றன.

    எனவே நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால், சிறந்த தரமான பார்வைக்கு அமோல்ட் டிஸ்ப்ளே உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் இது பேட்டரி ஆயுளை அதிகரிக்கவும் உதவும்.

    கேமரா: இன்றைய காலகட்டத்தில் புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் போது கேமராக்கள் மிக முக்கியமான காரணியாக மாறிவிட்டது. ஏனென்றால், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் பேசுவதை விட அதிகம் புகைப்படம் எடுக்க விரும்புகிறார்கள், அதாவது நல்ல தரமான கேமராக்கள் தேவை.

    ஸ்மார்ட்போன்கள் இரட்டை, மூன்று மற்றும் நான்கு கேமராக்களுடன் வருவதைப் பார்க்கிறோம். இது உங்கள் சாதனத்தின் பல்துறைத்திறனை மேம்படுத்தும் அதே வேளையில், புகைப்படம் எடுப்பதற்கு அதிக கேமராக்கள் சிறந்ததாக இருக்கும் உத்தரவாதமில்லை. ஏனெனில் கூகுள் பிக்சல் 4 சீரிஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் இரட்டை கேமரா மட்டுமே இருந்தாலும் அவை சிறந்த புகைப்படங்களை எடுக்கின்றன.

    பேட்டரி: ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுப்பதில் பேட்டரி மற்றொரு முக்கிய காரணியாகும், ஏனெனில் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி நீண்ட நேரம் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் வரும் ஸ்மார்ட்போனை வாங்குவது அவசியம்.

    பொதுவாக, 3500 எம்.ஏ.எச். முதல் 4000 எம்.ஏ.எச். வரையிலான பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சாதாரண பயன்பாட்டிற்கு வரும்போது ஓரிரு நாட்கள் இயங்கும். இருப்பினும், 4500 எம்.ஏ.எச்.-க்கும் அதிகமான பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதிக உபயோகத்தில் கூட இரண்டு நாட்களுக்கு இயங்கும். எனவே நீங்கள் அதிக பயனராக இல்லாவிட்டால் 3800 எம்.ஏ.எச்.-க்கும் அதிகமான திறன் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்கலாம்.

    சார்ஜிங் வேகம்: ஸ்மார்ட்போனில் பேட்டரியைப் பற்றி பேசும்போது, பேட்டரி சார்ஜிங் வேகத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். முன்னதாக, ஸ்மார்ட்போன்கள் சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம்.

    இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்களுக்கு மிக வேகமாக சார்ஜிங் வேகம் கிடைக்கிறது. எனவே அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கினால், அதில் வேகமாக சார்ஜ் உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

    முன்னதாக, மிகவும் மெதுவாக இருக்கும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் 5 நிலையான சார்ஜிங் வேகம் இருந்தது. இப்போது, 65W மார்க் வரை சார்ஜிங் வேகம் உள்ளது, அவை மிக வேகமாகவும், அரை மணி நேரத்தில் உங்கள் சாதனத்தை சார்ஜ் செய்யவும் முடியும்.

    சாதன பாதுகாப்பு: இறுதியாக உங்கள் ஸ்மார்ட் போன் பாதுகாப்புடன் தொடர்புடைய மிக முக்கியமான தேர்வை நீங்கள் செய்ய வேண்டும். இப்போது, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இரண்டிலும் ஓ.எஸ். மட்டத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீங்கள் ஒருவித பயோமெட்ரிக் பாதுகாப்பையும் கொண்டிருக்க வேண்டும், இது கைரேகை சென்சார் அல்லது பேஸ் அன்லாக் மூலமாகவும் இருக்கலாம்.

    இப்போது ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் கிடைக்கும் மிக அடிப்படையான பாதுகாப்பு பொறிமுறையானது பின் அல்லது கடவுச்சொல்லை அமைக்கும் அல்லது ஒரு வடிவத்தைப் பயன்படுத்தி திறக்கும் திறன் ஆகும். இருப்பினும், அவை அவ்வளவு பாதுகாப்பாக இல்லை, ஏனெனில் மக்கள் உங்கள் செயல்பாட்டைக் கண்காணிக்கலாம் மற்றும் உங்கள் உள்ளீடுகளைக் கண்காணிக்க முடியும், இதன் மூலம் நீங்கள் மொபைலுக்கு அருகில் இல்லாதபோது அதைத் திறக்க முடியும்.

    மறுபுறம், கைரேகை சென்சார்கள் உள்ளன, அவை உங்கள் கைரேகையை உள்ளீடாக எடுத்து சாதனத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் ஐந்து பேட்டர்ன்களில் ஏதேனும் ஒன்றைப் பொருத்தும் போது சாதனத்தைத் திறக்கும். இப்போது, கைரேகை சென்சார் என்பது பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மிகவும் பாதுகாப்பான வடிவம், ஏனெனில் ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட கைரேகை உள்ளது.

    மேலும், தற்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக பேஸ் அன்லாக் வந்துவிட்டது, மேலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் டிஜிட்டல் பேஸ் அன்லாக் வழங்கும் அதே வேளையில், புகைப்பட நகல் அல்லது ஒரே மாதிரியான ட்வின் மூலம் நீங்கள் அதைத் திறக்க முடியும் என்பதால், இது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.

    இந்த காரணத்திற்காக, ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் கூகிள் பிக்சல் போன்ற ஸ்மார்ட்போன்கள் இப்போது ஐஆர் சென்சார் மற்றும் முகத்தை ஸ்கேன் செய்வதற்கான பிரத்யேக கேமராக்கள் போன்ற முக ஸ்கேனிங் வன்பொருளுடன் வருகின்றன. இது பொதுவாக மிகவும் பாதுகாப்பானதுதான் என்றாலும் இவை அதிக சேமிப்பு இடத்தை ஆக்கிரமிக்கும்!

    புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன் சில பரிந்துரைகள் மேலே பார்த்தோம், இது முற்றிலும் உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது, எந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

    உங்களின் ஆண் / பெண் நண்பர் வாங்கி கிப்ட் தருவார் என்றால் இருப்பதிலேயே பெஸ்ட்டாக வாங்கி விடுவது உத்தமம்!

    ×