என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • பகழிக் கூத்தர் என்ற வைணவ பக்தரிடம் அவர் திருவிளையாடலை நடத்தி தனது பக்தர்களில் ஒருவராக மாற்றிய அற்புதம் சிறப்பானது.
    • தமிழ் இலக்கிய வகைகள் தொண்ணூற்று ஆறினுள் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும்.

    திருச்செந்தூர் முருகன் பக்தர்களிடம் விளையாடி அவர்களை தன்வசம் ஆட்படுத்திக் கொள்வதை பல தடவை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதிசங்கரர், அருணகிரிநாதர், பகழிக் கூத்தர் போன்றவர்களை திருச்செந்தூருக்கு வரவழைத்து அற்புதங்கள் பல செய்த வரலாறு திருச்செந்தூர் முருகனுக்கு உண்டு. சில சமயம் நினைத்து பார்க்க முடியாத அற்புதங்களையும் திருச்செந்தூர் முருகன் நிகழ்த்தி காட்டுவது உண்டு.

    பகழிக் கூத்தர் என்ற வைணவ பக்தரிடம் அவர் திருவிளையாடலை நடத்தி தனது பக்தர்களில் ஒருவராக மாற்றிய அற்புதம் சிறப்பானது. பகழிக் கூத்தர் ராமநாதபுரம் மாவட்டம் சதுர் வேதி மங்கலத்தை சேர்ந்தவர். அந்த ஊர் தற்போது சன்னாசி கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

    தீவிர பெருமாள் பக்தரான இவர் இளமையில் கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இலக்கண, இலக்கியங்களை கற்றுத்தேர்ந்த அவர் வேறு எந்த கடவுளையும் வழிபடுவது இல்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்து வந்தார். முருகன் மீது பாடல் பாடுங்கள் என்று பலரும் இவரை வற்புறுத்தியது உண்டு. ஆனால் அவர் முருகப்பெருமானை புகழ்ந்து பாட மறுத்து வந்தார்.

    அவரை தன்வசமாக்க முடிவு செய்த திருச்செந்தூர் முருகன் பகழிக் கூத்தருக்கு வயிற்று வலி வருமாறு செய்தார். இதனால் பகழிக் கூத்தர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். எத்தனையோ மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் திடீரென பகழிக்கூத்தர் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றினார். "அன்பனே... என்னைப் பார். உன் வயிற்று வலி தீரும்" என்று கூறினார்.

    அதோடு முருகப் பெருமான், ஓர் ஏடும், இலை விபூதியும் கொடுத்தார். கண்விழித்துப் பார்த்த பகழிக் கூத்தரின் தலைமாட்டில் ஏடு இருந்தது. அந்த ஏட்டில், செந்திலாண்டவனே எழுதிய ஓர் அழகிய வெண்பாவைக் கண்டார் பகழிக் கூத்தர்.

    அப்பாடலில் பகழிக் கூத்தரைப் புகழ்ந்தும், அவரது பாமாலையைத் தாம் கேட்க விரும்புவதாகவும், காப்பதற்கும், கூற்றுவன் அணுகாமல் தடுப்பதற்கும் தாம் அறிவோம் என்றும் கூறுகிறான் முருகப் பெருமான். அப்பாடல்:

    "பூமாது போற்றும் புகழ்பகழிக் கூத்தாவுன்

    பாமாலை கேட்கயாம் பற்றேமா - ஏமம்

    கொடுக்க வறியேமா கூற்றுவன் வாராமல்

    தடுக்க வறியேமா தாம்"

     

    இப்பாடலைக் கண்ட பகழிக் கூத்தர் திருச்செந்தூர் முருகனின் அழைப்பை ஏற்று, திருச்செந்தூர் வந்தார். கடலில் மூழ்கி எழுந்தார். வயிற்றுவலி நீங்கப் பெற்றார். செந்தில் ஆண்டவன் அடியெடுத்துக் கொடுத்த 'பூமாது' என்ற சொல்லாலே தொடங்கி பாடல்களைப் பாடினார். திருச்செந்தூர் முருகனின் சிறப்புகளை போற்றி அவர் பாடிய பாடல்கள்தான் "திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்' என்று அழைக்கப்படுகிறது. இது 103 பாடல்கள் கொண்டது.

    தமிழ் இலக்கிய வகைகள் தொண்ணூற்று ஆறினுள் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும்.

    பிள்ளைத் தமிழ் நூல் என்பது வழிபடு கடவுளை அல்லது வள்ளல்கள், மன்னர்கள், அருளாளர்களைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்படுவதாகும். குமரகுருபரர் அருளிய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் இரண்டும் பிள்ளைத் தமிழ் நூல்களுள் போற்றத்தகும் சிறப்புடையவை.

    பிள்ளைத் தமிழ் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண் பால் பிள்ளைத் தமிழ் என இருவகையாகும். ஆண் பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்று பத்துப் பருவங்களும், பெண்பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் என்று பத்துப் பருவங்கள் கொண்டதாகும். ஒவ்வொரு பருவத்திலும் பத்துப் பாடல்கள் அமையப் பாடப்பட்டிருக்கும். (பகழிக் கூத்தர் இந்த 'திருச்செந்தூர் முருகன்' பிள்ளைத் தமிழ் நூலில் 'முத்தம்' 'வருகை' அம்புலிப் பருவங்களில் கூடுதலாக ஒரு பாடல் ஆக 11 பாடல்கள் பாடியுள்ளார்)

    1. காப்புப் பருவம்- பாட்டுடைத் தலைவனைக் காத்தருள வேண்டிக் கடவுள் வாழ்த்தாகப்பாடுவது, குழந்தை பிறந்த இரண்டாம் மாதம் இதற்கான காலம்.

    2. செங்கீரைப் பருவம்- 5-ம் மாதம் குழந்தை ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டி இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தவழும் காலம்.

    3. தாலப்பருவம்- 8-வது மாதம். குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் காலம்.

    4. சப்பாணிப் பருவம்- 9-வது மாதக் குழந்தை உட்கார்ந்து கை கொட்டும் காலம்.

    5. முத்தப் பருவம்- 11-ம் மாதம் முத்தம் தரக் கேட்டுக் குழந்தையைப் பெற்றோர் ெகாஞ்சும் காலம்.

    6. வருகைப் பருவம்- ஒரு வயதுக் குழந்தை குறுநடை நடந்து குலாவும் காலம்.

    7. அம்புலிப் பருவம்- ஒன்றரை வயதுக் குழந்தைக்கு நிலவை காட்டி குழந்தையோடு விளையாட வா என்று நிலவை அழைக்கும் காலம்.

    8. சிற்றில் பருவம்- ஐந்தில் இருந்து ஒன்பது வயதுக்கு உள்ளான பருவம். மணல் வீடு கட்டிப் பிள்ளைகள் விளையாடும் காலம்.

    9. சிறுபறைப் பருவம்- ஒன்பது வயதுக் குழந்தை சிறுவறை முழக்கி விளயைாடும் காலம்.

    10. சிறுதேர் உருட்டும் பருவம்- ஒன்பது வயது கடந்த பிள்ளை சிறுதேர் ஒட்டித் தெருவில் விளையாடும் காலம்.

    இந்த 10 பருவத்திலும் திருச்செந்தூர் முருகனை ஒப்பிட்டு, புகழ்ந்து, பக்தர்களை காக்க வருமாறு பகழிக் கூத்தர் பாடி இருக்கிறார். குறிப்பாக அவர் தனது பாடல்களில் அன்றைய காலக் கட்டத்தில் திருச்செந்தூர் எப்படி இருந்தது என்பதை மிக, மிக அழகாக சொல்லியுள்ளார். பெரும்பாலும் திருச்செந்தூர் கடலில் 15-ம் நூற்றாண்டில் சங்குகள் விளைவதை பகழிக் கூத்தர் தனது பாடல்களில் குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த பாடல்கள் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதாக உள்ளது.

    ஒரு பருவ பாடலில், "வான் மழை போல அருள் மழை பொழியும் முருகனே" என்று கூறி உள்ளார். மற்றொரு பாடலில், "அலை வீசும் கரையோரம் வீற்றிருக்கும் வேலவா" என்று பாடியுள்ளார். அது மட்டுமல்ல, "சேவல் கொடி உடைய சேவகனே", "செந்நிற கொண்டை உடைய வெண்ணிற சேவல் கொடி ஏந்தியவனே" என்றெல்லாம் திருச்செந்தூர் முருகனை பகழிக் கூத்தர் புகழ்ந்து பாடியுள்ளார்.

    பக்தர்களைக் கண்டதும் புன்னகைப் பூக்கும் முருகா

    தென்றல் பூ மணம் சுமந்து வந்து வீசும் குன்றுகள் மீது அமர்ந்த முருகனே....

    அசுரர்கள் இறைஞானம் பெற உதவிய முருகனே....

    கடல் அலைகளில் மிதந்து வரும் சங்குகள் சிதறிக் கிடக்கும் செந்தில் மாநகரில் வீற்றிருப்பவனே....

    சூரியன் அஞ்சும் வகையில் பிரகாசமாக ஒளி வீசும் முருகப் பெருமானே....

    நீண்ட பனை மரம் போன்ற துதிக்கை உடைய யானைகள் கொண்ட படையை வைத்திருப்பவனே....

    பெண் அன்னப் பறவைகள் அதிகம் நிறைந்த செந்தில் மாநகரில் அருள் மழை பொழிபவனே...

    வலம்புரி சங்குகள் நிறைந்த திருச்செந்தூர் கடலோரத்தில் ஆட்சி செய்பவனே...

    உப்பங்கழிகளும், அவற்றில் நிறைந்த நண்டுகளும், மீன்களும், தாரா பறவைகளும் கொண்ட செந்தில் மாநகரில் வாழ்பவனே....

    இப்படியெல்லாம் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் நூலில் முருகப் பெருமானை பகழிக் கூத்தர் வர்ணித்துள்ளார். இந்த பாடல்கள் சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பைப் பெற்றன.

    இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பகழிக் கூத்தர் அந்த நூலை பால சுப்பிரமணியனின் திருச்சன்னதியில் வைத்து வணங்கி அரங்கேற்றினார். என்றாலும் பகழிக் கூத்தரின் திறமை மதிக்கப்படவில்லை. அவர் வைணவர் என்று கூறி அவருக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்காமல் புறக்கணித்தனர்.

    அதனால் மனம் உடைந்த பகழிக் கூத்தர் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் பாடல் கள் ஏட்டைக்கடலில் எறிந்து விடாலமா என்னும் அளவிற்குச் சிந்திக்கத் தொடங்கினார். அத்தகைய சிந்த னையோடு ஒருவீட்டுத் திண்ணை யில் படுத்து உறங்கினார்

    பிள்ளைத் தமிழ்பாடுவதற்கு முன்பாக தம்கனவில் தோன்றிய அதே தோற்றத்தோடு தோன்றி முருகன் சில உத்தரவுகளை பிறப்பித்தார். திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஆத்தூர் என்னும் ஊரில் ஓர் ஆலயம் உள்ளது. அதற்கு அடியில் சென்று இரு என்று கூறி மறைந்தார்.

    பகழிக்கூத்தரும் அவ்விடத்தை அடைந்தார். செந்தில் பதியைக் சார்ந்து குலசேகரப்பட்டினம் என்னும் ஊரில் காத்த பெருமாள் மூப்பனார் என்ற பெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருடைய கனவில் முருகன் தோன்றி ஆத்தூரில் பகழிக் கூத்தர் இருக்கும் செய்தியை அறிவித்து அவருடைய பிள்ளைத் தமிழ் நூலை அரங்கேற்றம் செய்யுமாறு கூறிமறைந்தார்.

    செல்வந்தரும் அவ்வாறே பசுழிக்கூத்தரை கண்டார்.உரியநிலையில் செந்தில் பதியில் அதனை அரங்கேற்றம் செய்வித்தார். புலவருக்கு அருட்புலவர் என்னும் பட்டத்தைக் கொடுத்துப் பல வகைகளில் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    அதன் பிறகும் பகழிக் கூத்தருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. சாதாரண புலவர் தானே என்று கோவில் பணியாளர்கள் புறக்க ணித்தனர்.

    பகழிக் கூத்தர் இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் முருகனையே சதா துதித்துக் கொண்டிருந்தார். திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே தங்கி இருந்தார். ஒரு நாள் இரவு பகழிக் கூத்தரின் திறமையையும் சகிப்புத்தன்மையையும் பாராட்டி முருகப்பெருமானே தன் கழுத்தில் இருந்த ரத்தின மாலை பதக்கத்தை அவருக்கு சூட்டிவிட்டார்.

    மறுநாள் காலை நடை திறந்தவர்கள் முருகன் திருமேனியில் இருந்த ரத்தின மாலை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவில் முழுக்க ரத்தின பதக்க மாலை யைத் தேடினார்கள். எங்கும் கிடைக்கவில்லை. அப்போது கோவில் பிரகாரத்தில் இருந்து ஒரு அசரிரீ கேட்டது.

    "நான் எனது அன்பன் பகழிக் கூத்தனுக்கு அளித்தேன்" என்று குரல் ஒலித்தது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த கோவில் பணியாளர்கள் பகழிக் கூத்தர் தங்கி இருந்த இடத்துக்கு ஓடோடிச் சென்றுப் பார்த்தனர்.

    அங்கு பகழிக் கூத்தர் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் கழுத்தில் முருகனின் ரத்தின பதக்க மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

    அதன் பிறகே பகழிக் கூத்தரின் பக்தி மீது எல்லோருக்கும் மரியாதை வந்தது. அவரைப் பல்லக்கில் ஏற்றி திருச்செந்தூர் முழுக்க சுற்றி வந்து சீரும் சிறப்பும் செய்தனர். பகழிக்கூத்தருக்கு முருகன் அருள்புரிந்த இந்த செய்திகள் இலக்கியங்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன.

    சாமானியரின் வாயால் பாடல் பெற விருப்பம் கொண்ட முருகப் பெருமானின் உள்ளம் எத்துணை உயர்வானது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதனால்தான் பகழிக் கூத்தர் எழுதிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழின் 'வருகைப் பருவ'த்தில் இடம் பெற்ற

    "பேரா தரிக்கும் அடியவர்தம்

    பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்

    பேறும் கொடுக்க வரும்பிள்ளைப்

    பெருமான் என்னும் பெருமாளே" என்னும் பாடல் இன்றும் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்போது பாடப்படுகிறது.

    அடுத்த வாரம் இன்னொரு அற்புதம் பார்க்கலாம்.

    • முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்தோம்.
    • நாங்கள் சொன்னதும் மோகன்லால் சார் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தார்.

    துபாயில் திரிஷ்யம் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. நான், மோகன்லால் சார் எல்லோரும் சென்றிருந்தோம்.

    அப்போது துபாயில் வசிக்கும் மோகன்லால் சாரின் நண்பர் ஒருவர் எங்களை சந்திக்க நேரில் வந்தார்.

    அப்போது என் மகளுக்காக நிறைய பொம்மை மற்றும் பரிசு பொருட்களை வாங்கி வந்திருந்தார். அதை பார்த்ததும் 'ஏன், சார் இவ்வளவு பொருட்கள்....? என்று தயங்கினேன்.

    அவர் சொன்னார் 'எங்கள் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டார்கள். எங்களுக்கு பொம்மை, விளையாட்டு பொருட்களெல்லாம் வாங்கி கொடுக்க சின்ன பிள்ளைகள் இல்லை. எங்கள் பேத்தி போல் உங்கள் பிள்ளைக்கு வாங்கினேன். உங்கள் மகளிடம் கொடுங்கள் என்று மிகுந்த அன்பு காட்டினார். எங்கள் எல்லோருக்கும் விருந்தும் கொடுத்தார்.

    அப்போது இன்னொரு விஷயத்தையும் சொன்னார். தான், மோகன்லால் சாரை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த படத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றும் தனது எதிர்பார்ப்பையும் காதில் போட்டார்.

    அதற்கான நாளும் விரைவிலேயே வந்தது. மோகன்லால் சார் ஜோடியாக நான் நடித்த 'முந்திரி வள்ளிக்கல் தளிக்கும் போல்' என்ற படத்தின் கதை தயாரானது. கதையை சொன்னார்கள். கதை எனக்கு பிடித்து இருந்தது.

    தமிழில் 'திராட்சை கொடிகள் துளிர்க்கும் போது' என்பதுதான் இதன் அர்த்தம். உன்னச்சன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லாலும் அவருக்கு ஜோடியாக ஆமி என்ற பாத்திரத்தில் நானும் நடித்தோம். அழுத்தமான கதை. பெற்றோரின் அன்பையும், பாசத்தையும் பார்த்துதான் குழந்தைகள் வளர வேண்டும் என்பதை உணர்த்துவதான கதை. கோழிக்கோடு பகுதியில் படப்பிடிப்பு. அங்கு மோகன்லால் சாரின் நண்பர் வீட்டில்தான் தங்கி இருந்தோம்.

    மோகன்லால் சாருடன் அவருடைய மனைவியும் வந்திருந்தார். படப்பிடிப்பு ஜாலியாக போய்க் கொண்டிருந்தது. அதைவிட ஜாலி என்னவென்றால் மோகன்லால் சார் பிரமாதமாக சமைப்பார். அசைவ உணவில் விதவிதமாக சமைப்பார். ஒவ்வொன்றும் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

    ஷூட்டிங் முடிந்ததும் சமையல் கட்டில் புகுந்து விடுவார். அவருடன் அவரது மனைவி, தயாரிப்பாளரின் மனைவி ஆகியோரும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமைத்து அசத்தினார்கள்.

    ருசியான சாப்பாடு, ஜாலியான ஷூட்டிங். ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருந்தது. அப்போது மோகன்லால் சார் நடித்த ஒரு படமும் திரைக்கு வந்தது.

    முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்தோம். நாங்கள் சொன்னதும் மோகன்லால் சார் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தார்.

    ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து தப்பிக்கும் வகையில் தங்கியிருந்த வீட்டின் அருகில்தான் தியேட்டரும் இருந்தது. அங்கிருந்து தனி வழியாக தியேட்டருக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    நாங்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த யூனிட்டும் அன்று முதல் ஷோவை பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றிருந்தோம். அந்த படமும் சூப்பராக இருந்தது. மோகன்லால் சாருக்கு எல்லோரும் பாராட்டு தெரிவித்தோம். கேரளத்தில் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி என்று நான் பார்த்த படமும் அதுதான்.

    இந்த படத்தை தொடர்ந்து திரிஷ்யம்-2. அதுவும் மலையாளத்திலும், தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது. இரண்டு மொழிகளிலும் நான்தான் கதாநாயகி. இரு மொழிகளிலும் திரிஷ்யம்-1ஐ போலவே திரிஷ்யம்-2வும் வெற்றிப் படமாக அமைந்தது.

    திருமணத்துக்கு பிறகும் பிசி நடிகையாகவே வலம் வந்தேன். அடுத்து என்ன என்கிறீர்களா? தவறாமல் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்...

    (தொடரும்)

    • கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என நாம் வகுத்துக்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் நிதி ஆதாரம் அவசியம் தேவைப்படும்.
    • நாம் சம்பாதிக்கும் பணம் எப்போதும் நிலையாக நம்மிடம் மட்டுமே தங்கிவிடப் போவதுமில்லை.

    வாழ்வில் தேடிப் பெற வேண்டியது நிதியா? நிம்மதியா? என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாகக் காத்திருக்கும் வாசகர்களே வணக்கம்!

    வாழ்க்கையில் நிதியோடு இருப்பது என்பது, காசு, பணம், நில, புலன், நகை, வீடு, வாகனம் எனச் சகல நிலைகளிலும் வசதியோடு இருப்பது என்று பொருள். இன்னும் கூடுதலாகச் சொல்லப்போனால், சேர்த்து வைத்த சொத்துப் பத்துக்களோடு நிம்மதியாகவும் அமைதியாகவும் சுகமாகவும் வாழ்வதும் ஆகும். நிம்மதியாக இருப்பது என்பது எந்தவிதமான ஆசைத் தேவைகளோ, பரபரப்புத் துன்பங்களோ, பொருள் பணம் குறித்த பேராசைகளோ இல்லாமல் நிம்மதியாக இருப்பது ஆகும். இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால், எந்த விதமான மருந்து மாத்திரை, உடல் பிரயத்தனமும் இன்றி, எந்த இடத்தில் படுத்தாலும் எந்த நேரத்தில் படுத்தாலும், படுத்த அடுத்த வினாடியே ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றுவிடுவது; கனவுகளற்று உறங்குவது; விழித்து எழுந்தவுடன் எந்தவிதமான பரபரப்புமின்றி அன்றாடக் கடமைகளில் முழு விருப்பத்தோடு ஈடுபடத் தொடங்குவதுமாகும்.

    நம்முடைய வாழ்வியல் முயற்சிகள் எல்லாமும், எந்த விதமான சிக்கலும் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகவும் சுகமாகவும் வாழ்க்கை அமைவதை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. காசில்லாமல் நமக்கு நிலைத்த நிம்மதி வாய்ப்பதில்லை என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிம்மதியை நோக்கிச் செல்கிறார்களோ இல்லையோ, அதைக் கொண்டு வருவதற்கு உதவுவதாகக் கருதப்படக்கூடிய நிதியைத் தேடி நிம்மதியை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு செல்வந்தர் இருந்தார்; பெரும் பணக்காரர்; தங்கள் குடும்பத்தில், தான் மட்டும் வசதியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தால் போதாது; எல்லோரும் சொல்வது போல, அடுத்த ஒரு தலைமுறைக்காக மட்டுமல்லாது அடுத்து வரப்போகிற ஏழு தலைமுறையும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று அயராது பாடுபட்டார். விழித்திருக்கிற நேரமெல்லாம் நிதியை ஈட்டுகின்ற நேரமென்கிற அளவுக்கு அவரது உழைப்பின் கால அட்டவணை நீட்சி பெற்றிருந்தது. மாளிகை போன்ற வீடு. வங்கிகள் தோன்றாத காலம்; அதனால் தன்னிடமிருந்த காசு, பணம், நகை எல்லாவற்றையும் வீட்டின் அறைகளில் பத்திரமாகப் போட்டுப் பூட்டிவைக்கத் தொடங்கினர். அன்றாடம் வணிகம் முடித்து இரவு வீடு திரும்பியதும், அன்று கிடைத்த நிதி வருமானத்தையும் சேர்த்து, எவ்வளவு சொத்துக் கையிருப்புச் சேர்ந்துள்ளது என்பதையும் கணக்குப் பார்த்து, ஒரு தனிப் பேரேட்டில் குறித்துவைக்கவும் செய்வார்.

    அன்றொரு நாள் நண்பகல் உணவு உண்பதற்காக தன் வீட்டிற்கு வந்தார் செல்வந்தர். வருகின்ற வழியெங்கும் பசிகுறித்த சிந்தனை இல்லை; 'இதுவரை நாம் சேர்த்து வைத்திருக்கிற சொத்துக்களைக் கணக்குப் போட்டுப் பார்த்தால், ஆறு தலைமுறைக்குத் தாங்கும்; ஆறு தலைமுறை மக்கள் எல்லோரும் எந்தவிதமான உடல் உழைப்புமின்றி உட்கார்ந்த இடத்தில் இருந்தே வசதியாக வாழவும், சாப்பிடவும் தேவையான நிதி ஆதாரங்களைச் சேர்த்து விட்டோம்; இனி ஏழாவது தலைமுறைக்கு வேண்டிய நிதியை எப்படிச் சம்பாதிப்பது?' என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டில் வரவேற்ற மனைவி, 'என்ன சிந்தனை பலமாக இருக்கிறது?' என்று கேட்டுவிட்டு," சரி, இந்தாருங்கள்; இந்தக் கேரியரில், ஒருநபருக்குத் தேவையான சாப்பாடு, சாம்பார், கறிகாய்கள் அனைத்தும் உள்ளன; நம் வீட்டிற்கு எதிர்த்தாற்போல உள்ள ஆசிரமத்திற்குப் புதிதாக ஒரு சாமியார் வந்திருக்கிறார்; நண்பகல் உணவாக இதை அவருக்குக் கொடுத்துவிட்டு வாருங்கள்' என்று கொடுத்தார்.

    புண்ணிய காரியம்தானே! என்று யோசித்துக் கொண்டே எதிரே உள்ள மடத்திற்குச் சென்று, துறவியைப் பார்த்துக் கேரியரைத் தந்தார் செல்வந்தர். துறவி, "என்ன இது?" கேட்டார். "சுவாமி! உங்களுக்கான இன்றைய மதியச் சாப்பாடு!" என்று பணிவாகச் சொன்னார் செல்வந்தர். "ஏற்கனவே இப்போதுதானே சாப்பிட்டு முடித்தேன். எனவே இப்போதைக்கு இந்த உணவு எனக்குத் தேவைப்படாதே!" தீர்க்கமாகச் சொன்னார் செல்வந்தர். " அப்படியானால், கேரியர் இங்கேயே இருக்கட்டும், உணவை இரவு சாப்பிடுவதற்காக வைத்துக் கொள்ளலாம்; கெட்டுப் போகாது" என்றார். முகம் நிறைந்த ஆச்சரியத்தோடு துறவி செல்வந்தரைப் பார்த்துக் கேட்டார், "இரவு உணவா? இரவு வருவதற்கு இன்னும் ஆறேழு மணிநேரம் இருக்கிறதே! அப்போது எனக்குத் தேவைப்படப் போகிற இரவு உணவிற்காக நான் ஏன் இப்போதிருந்தே கவலைப்பட வேண்டும்?: எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன. இந்தக் கேரியர் உணவை இப்போது எடுத்துச் செல்லுங்கள்!; இரவு வரும்போது அப்போதைக்கு யோசித்துக் கொள்வோம்!."

    துறவியின் உறுதியான வாசகங்களைக் கேட்ட செல்வந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது;' அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழியில்லை என்றாலும், அந்த உணவைப்பற்றி நான் ஏன் இப்போதே யோசிக்க வேண்டும்? என்று நிம்மதியாக இருக்கிற அந்தத் துறவி எங்கே?. ஆறு தலைமுறைக்குச் சொத்துச் சேர்த்து வைத்திருந்தாலும் அது போதாது என்று ஏழாவது தலமுறைக்கும் நிதி தேடி நிம்மதியைத் தொலைத்துக் கொண்டிருக்கிற நாம் எங்கே?. இனிமேலாவது எஞ்சியிருக்கிற வாழ்க்கையை நிம்மதியாக வாழப் பழகுவோம் என்று கேரியர் உணவுடன் வீட்டுக்குத் திரும்பினார் செல்வந்தர்; மனைவியிடம் நடந்ததைக் கூறி, இனிமேல் வாழ்க்கையில் நிதியைத் தேடுவதைக் குறைத்து நிம்மதியாக வாழ்வது எப்படி என்று திட்டமிடத் தொடங்கினார். நிம்மதிதான் வாழ்க்கையின் ஒட்டுமொத்த இலக்காக இருந்தாலும் அதனை அடைவதற்கான வழிமுறைகளையும் வாய்ப்புகளையும் நிதியைக் கொண்டுதானே உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது?!. உலகை அருள்மயமாகவும் அன்பு மயமாகவும் ஆக்கிவிட்டால் மனிதர்களின் ஒவ்வொரு மனமும் நிம்மதிமயமாக ஆகிவிடுமல்லவா? என்று சிலர் கேட்கலாம். இந்த வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஓர் அருமையான திருக்குறளை முன்மொழியவும் செய்கிறார் திருவள்ளுவர்

    "அருளென்னும் அன்பின் குழவி பொருளென்னும்

    செவிலியால் உண்டு"

    அன்பு வழியாக அருள் என்னும் பக்திப்பயிரைச் செழிக்கச் செய்து, ஆன்மீகத்தை வளர்ப்பதற்குக்கூடப், பொருள் என்னும் செல்வத் தாயின் அரவணைப்பும் பாதுகாப்பும் தேவைப்படுவதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். மேலும் " செய்க பொருளை!" என்று, எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளிலும் பணத்தை விளைவிக்க வேண்டும் என்று உறுதிபட ஊக்கமும் படுத்துகிறார்.

    நிதி நியாயமான வழிகளில் ஈட்டப்படுமேயானால், அதனைக்கொண்டு நமக்குத் தேவைப்படும் நிம்மதி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அடிக்கடி நலமின்றிப்போகும் உடலைத் தொய்வின்றி நலமாக்கிக் கொள்ளவும் நிதியாதாரம் முக்கியம்; நமக்கு வேண்டிய நியாயமான வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக்கொள்வதற்கும் அடிப்படையில் பணம் தேவை; உண்டு மகிழ, கண்டு மகிழ, களித்து மகிழ, ஏன் நிம்மதியாக உறங்கி மகிழ்வதற்கும்கூட பணத்தின் ஆதார உறுதி அவசியம் தேவை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என நாம் வகுத்துக்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் நிதி ஆதாரம் அவசியம் தேவைப்படும், நம்முடைய இலக்குகளை எந்தவிதமான தடையுமின்றி எட்டிப் பிடிப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது. திட்டமிட அறிவும், செயல்படுத்த உடல் உழைப்பும் இருந்தாலும், முதலீடு செய்வதற்கு நிச்சயம் பணம் அவசியம். எனவே நிதிதேடுவதும் இன்றியமையாக் குறிக்கோள்களில் ஒன்றுதான். பணம் தேடுவதும் சேர்த்துவைப்பதும், நமக்கும் நம் வருங்கால சந்ததிக்கும் ஒரு நிலைத்த பாதுகாப்பு உணர்வை நல்குகிறது.

    உலகில் இன்பத்தின் உச்ச நுட்பத்தை விளக்கிக் காட்ட நினைத்த திருவள்ளுவர், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும், வீட்டில் வாழ வேண்டும்! அதுவும் சொந்த வீட்டில் வாழ வேண்டும்! அப்படிச் சொந்த வீட்டில் வாழ்ந்தாலும், யாருடைய தயவுமின்றிச் சொந்தச் சம்பாத்தியத்தில் சோறாக்கிச் சாப்பிட வேண்டும் என்கிறார். " தம் இல் இருந்து தமது பாத்து உண்டற்றால்" என்பது வள்ளுவநெறி.

    சொந்தமாகக் கட்டியவீடு, சொந்த சம்பாத்தியத்தில் உணவு ஆகிய இரண்டு முக்கியமான இன்ப மகிழ்ச்சி நிம்மதிகளையும் அடைவதற்கு அவசியம் தேவைப்படுவது நிதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?. நிதியைக் கொண்டு இல்லத்தைக் கட்டிவிடலாம்; ஆனால் அந்த நிதியினால் மட்டுமே நிம்மதியான உறக்கத்தையும் தரமான வாழ்க்கையையும் வாங்கி விட முடியுமா?. நிதி கொண்டு ஆரோக்கியமான வசதியான உணவுப் பொருள்களை வாங்கிச் சுவையாகச் சமைத்தும் விடலாம்; ஆனால் பசித்த நேரத்தில் சரியாக ஒருவாய் உணவை உண்டு நிம்மதியாகத் திருப்தி அடைய முடியுமா?.

     

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    பணத்தை ஈட்டுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன; நாம் சம்பாதிக்கும் பணம் எப்போதும் நிலையாக நம்மிடம் மட்டுமே தங்கிவிடப் போவதுமில்லை; சில நிமிடங்களோ அல்லது சில வருடங்களோ நம்மிடம் தங்கியிருந்துவிட்டுப் பிறகு சென்றுவிடும் குணம் உடையது செல்வம். அது நம்மோடு தங்கியிருக்கும் காலங்களில் நமக்கு நன்மையும் நிகழலாம்; தீமையும் விளையலாம்; செல்வத்தை நாம் எவ்வாறு கையாளுகிறோம்; நிர்வகிக்கிறோம் என்பதைப் பொறுத்தே பலாபலன்கள் விளைகின்றன. ஆக, நிச்சயமாக நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு துளிச் செல்வமும் நம்மை விட்டுப் பிரிந்து செல்லவே போகின்றன. போகின்ற செல்வம், பிரிவதற்குள் சில நன்மைகளைச் செய்துவிட்டுச் செல்ல வேண்டுமென்றால் நாம் சம்பாதிக்கும் வழிமுறை நேர்மை நெறியினதாக இருக்க வேண்டும்.

    அடுத்தவர்களை அழவைத்து, அவர்களின் வாயிலும் வயிற்றிலும் அடித்து நாம் செல்வம் சம்பாதித்தால், அந்தச் செல்வம் நம்மையும் அதே மாதிரி அழுது புலம்ப வைத்துவிட்டு, நம்மைவிட்டுப் பிரிந்து போய் விடும். "அழக் கொண்ட எல்லாம் அழப் போம்!" என்பது வள்ளுவ வாக்கு. பணம் ஈட்டுவது சிறுகச் சிறுக எறும்பு சேமிப்பதுபோல தாமத கதியில் இருந்தாலும், அது நியாய வழிப்பட்டதாக இருக்கும் பட்சத்தில், நீண்டகாலம் நம்மோடு இருந்து, நமக்கும் நம்மைச் சார்ந்திருக்கும் மற்றவருக்கும் நிலைத்த பலன்களைத் தந்து விட்டே செல்லும்.

    நிம்மதி என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் நிதியை மட்டுமே சார்ந்திருப்பதில்லை என்றாலும், நிலைத்த நீடித்த நிம்மதியான வாழ்க்கைக்கு நியாய வழியில் ஈட்டிய நிதியும் ஒத்தாசையாக இருக்க வாய்ப்புண்டு. எவ்வளவு சொத்துகளுக்கு நாம் அதிபதி? என்பதைவிட எத்தனை சொந்தங்களுக்கு நாம் அதிபதி ! என்பதில் நிம்மதி கூடு கட்டி வாழ்கிறது; பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுபற்றிய ஆசையோ தேடலோ இல்லாமல் வாழக் கற்றுக்கொண்டால், நிம்மதியும் நாம் தேடிப்போகாமல், நம் உடனேயே அமைதியுடன் குடியிருக்கும்.

    தொடர்புக்கு - 94431 90098

    • ஜென்ம லக்னத்தில் சனி இருப்பவர்கள் பிறரின் உதவியை எதிர்பார்க்க கூடாது.
    • முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படுத்தினால் விதிப் பயன் நீங்கும்.

    சனி பகவான் என்ற பெயரை கேட்டாலே தொட்டிலில் தூங்கும் குழந்தை முதல் வாழ்நாளை எண்ணும் முதியவர் வரை பயம் தான். இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி 29.3.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சனி பகவான் ஒருவரின் சுய ஜாதகத்தில் எப்படி பலன் தருவார் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் சனி பகவான் தான் நின்ற பாவகத்தின் மூலம் பூர்வ புண்ணிய பலப்படி சுப,அசுப பலன்கள் நடத்தி ஜாதகருக்கு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைப்பார். சனி பகவான் எளிமைக்கும் அடக்கத்திற்கும் அதிபதி. சுய ஜாதகத்தில் சனி பகவான் நின்ற காரக பாவக பலன்களை அதீத எதிர்பார்ப்பு இன்றி நன்றியுணர்வுடன் அமைதியாகவும், எளிமையாகவும், பயன்படுத்தினால் அந்த பாவகத்தால் நற்பலன்களை அனுபவிக்க செய்வார்.

    சனி நின்ற பாவக பலனை ஆர்பாட்டத்துடன் பயன்படுத்தி பெருமை பாராட்டி அதன் மூலம் அடுத்தவரின் பொறாமையையும், ஏக்கத்தையும் தூண்டினால் அந்த பாவக பலனை பறித்து வினையை மிகுதிப்படுத்துவார். அதாவது ஒரு ஜாதகத்தில் சனி நின்ற பாவக பலனை (உயிர், பொருள்) எளிமையாகவும், ரகசியமாகவும், அமைதியாகவும், நன்றியுடனும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எந்த அளவிற்கு அமைதியாக பயன்படுத்துகிறாரோ அந்த அளவிற்கு நன்மை தருவார், துன்பமற்ற வாழ்வு தருவார்.

    வாழ்நாள் முழுவதும் நல்ல பலனை அனுபவிக்க முடியும். ஒருவர் வாழ்வதற்கும் வீழ்வதற்கும் சனி பகவானே காரணம். இதை நாம் அனுபவத்தில் உணர்ந்தும் இருப்போம். பரம்பரை பணக்காரர்கள் பலர் எளிமையான ஆடை மற்றும் உத்திராட்சம் அணிந்து சிவ பக்தியுடன் தான தர்மம் செய்து நன்றியுணர்வுடன் வாழ்க்கையை அனுபவிப்பதை பார்த்து இருக்கிறோம். அதே சமயத்தில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான புதிய பணக்காரர்கள் பலர் ஆடம்பரமான, பகட்டான உடை உடுத்தி லவுகீகத்தில் உள்ள அனைத்து தவறான செயலுக்கும் அடிமையாகி குறுகிய காலத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போவதையும் பார்த்து இருக்கிறோம்.

    இந்த கட்டுரையில் சுய ஜாதகத்தில் சனி நின்ற பாவக பலனை, எவ்வாறு எளிமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறலாம் என்று காணலாம். கீழே கூறப்பட்ட அனைத்து பலன்களும் லக்னத்தின் அடிப்படையில் பலன் தரும்.

    லக்னத்தில் சனி

    ஜென்ம லக்னத்தில் சனி இருப்பவர்கள் பிறரின் உதவியை எதிர்பார்க்க கூடாது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தனக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி பிறரின் மனதை நோகடிக்க கூடாது. தான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை அகற்ற வேண்டும். அழகு, ஆடம்பரத்தை விரும்பக் கூடாது.

    ஆணவம், பகட்டு இல்லாமல் எளிமையாக வாழ்ந்தால் சமூதாயத்தில் உயர்ந்த பதவி, பட்டங்களும் பதக்கங்களும் பாராட்டும் கிடைக்கச் செய்வார். உற்றார் உறவினர்களின் உறவு வாழ்நாள் முழுவதும் தித்திக்கும்.

    இரண்டில் சனி

    நீதி, நியாயம் பற்றிய சிந்தனை இல்லாமல் தகாத வார்த்தைகள் பேசி குடும்ப உறுப்பினர்கள் மனதை நோகடிக்க கூடாது. பொய்களை உண்மை போல் பேசக்கூடாது.

    தேவையில்லாமல் சத்தியம் செய்யக் கூடாது. தனது பொருளாதாரத்தை அடுத்தவர் கண்டு ஏங்கும் அளவிற்கு ஆடம்பரமாக நடந்து வினைப் பதிவை மிகுதியாக்ககூடாது. குடும்ப உறுப்பினர்களிடம் பொய் பேசாமல் அன்பான வார்த்தைகளை பேசி தான தர்மத்தில் ஈடுபட குடும்ப வாழ்க்கை ருசிக்கும்.

    மூன்றில் சனி

    மூன்றாம் இடத்தில் சனி இருப்பவர்கள் இளைய சகோதரத்தின் மந்த தன்மையை, இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது. தனது இளைய சகோதர, சகோதரிகளுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்ய வேண்டும். தனது வீரதீரச் செயல்களையும் தனது சுய முயற்சியால் அடைந்த வெற்றியையும் எளிமையாக, அமைதியாக பயன்படுத்தினால் தொடர் வெற்றியால் உயர்வு உண்டு.

    நான்கில் சனி

    பொதுவாக நான்கில் சனி இருப்பவர்களுக்கு வீடு, பூமி சொத்து போன்றவற்றில் பற்று அதிகம் இருக்கும். தனது தாயை வசப்படுத்தி குடும்ப சொத்தை தான் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்க கூடாது. உடன் பிறந்தவர்களுடன் சொத்தை பாரபட்சமின்றி பிரித்து பயன்படுத்த வேண்டும். தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். தனது வீடு வாகனம், நிலம், தோப்பு மற்றும் சொத்து சுகங்களை ரகசியமாக தன் மீது பத்திர பதிவு செய்யக் கூடாது.

    தனது சொத்துக்களை மனைவி அல்லது குழந்தைகளின் மேல் பதிவு செய்ய வேண்டும். பழைய வீடு, வாகனத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும். புதிய சொத்து சுகத்தால் பயனற்ற நிலை உண்டாகும். செய்ய வேண்டிய கடமைகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆத்மார்த்தமாக செய்பவர்களுக்கு நான்காம் இட சனியால் ஏற்படும் கர்ம வினை குறைந்து சுப பலன் கிட்டும். கறவை நின்ற கால்நடைகளை விற்கக் கூடாது. தேவைக்கு நண்பர்களை பயன்படுத்தி காரியம் முடிந்தவுடன் கழட்டி விடக்கூடாது.

    ஐ.ஆனந்தி

     ஐந்தில் சனி

    லக்னத்திற்கு ஐந்தில் சனி இருப்பவர்கள் பூர்வீக சொத்தை தன் மீது பத்திரப் பதிவு செய்யக்கூடாது. உடன் பிறந்தவர்களுக்கு அல்லது குல தெய்வ கோயிலுக்கு தானமாக கொடுப்பது நல்லது. தானம் தர விருப்பம் இல்லாதவர்கள் தனது பிள்ளைகள் அல்லது பேரக் குழந்தைகள் மீது மாற்றம் செய்து பயன்படுத்தினால் சிறப்பான பலன் கிடைக்கும். அதே போல் பிள்ளைகள் மீதும் கவுரவப் பதவிகள் மீதும் பற்றைக் குறைக்க வேண்டும். பூர்வீகத்தில் வசிக்காமல் வெளியூர், வெளிநாட்டில் வசித்தால் வாழ்க்கை வளமாகும். தனது குழந்தைகளை ரசிக்க கூடாது அல்லது பிள்ளைகளின் மீது அளவு கடந்த அன்பு வைக்கக் கூடாது.

    ஆறில் சனி

    லக்னத்திற்கு ஆறில் சனி இருப்பவர்களுக்கு பரம்பரை வியாதிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை குறையும். வாயுத்தொல்லை, வாதம், எலும்பு நரம்பு சம்பந்தமான தீராத, தீர்க்க முடியாத நோய், பெயர் தெரியாத இனம் புரியாத நோய், முன்னோர்களின் பரம்பரை நோய் போன்ற மன உளைச்சல் இருக்கும்.

    இவர்களுக்கு தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும். வறுமை கடனால் கவலை வழக்கு, சிக்கல். சண்டை, சச்சரவு எதிரி தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இவர்களை நம்பிக்கையான வேலையாட்களே ஏமாற்றுவார்கள். தாய்மாமாவால், உத்தியோகத்தால் மதிப்பு மரியாதை குறையும்.

    ஏழில் சனி

    லக்னத்திற்கு ஏழில் சனி இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணை மேல் அதீத எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஆணாக இருந்தால் தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என நூறு மணல் கயிறு கண்டிஷன் போடுவார். பெண்ணாக இருந்தால் வரப் போகும் வாழ்க்கைத் துணைக்கு இன்டர்வியூ வைப்பார். வாழ்நாளில் பாதியை கடந்த பிறகு விதி மேல் பழி போட்டு கிடைத்த வாழ்க்கையை மனக்குறையுடன் வாழ்வார்கள் அல்லது தனது குலத்திற்கு விரோதமான திருமண வாழ்க்கையை ஏற்படுத்தி கர்ம வினையை அனுபவிப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள், கூட்டுத் தொழிலால் பிரச்சனை இருக்கும். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி கிடைத்த மண வாழ்க்கையை பெற்றோர்களின் நல்லாசியுடன் நடத்தும் போது நன்மைகள் நடக்கும்.

    எட்டில் சனி

    லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் இருப்பவர்களுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுள். வறட்டு கவுரவம் மற்றும் பிடிவாதத்தால் உறவினர்களிடம் இருந்து விலகி இருப்பார்கள். சொந்தங்களின் ஆதரவு இருக்காது. தீய பழக்க வழக்கத்தால். வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொள்ள வேண்டிய நோய் அல்லது எளிதில் குணமாகாத நோய் இருக்கும். கர்ம வினையின் தாக்க நோய் மிகுதியாக இருக்கும். முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படுத்தினால் விதிப் பயன் நீங்கும்.

    ஒன்பதில் சனி

    லக்னத்திற்கு ஒன்பதில் சனி பகவான் இருப்பவர்கள் நிறைந்த கல்வி சமுதாய ஒழுக்கம், நிர்வாகத்திறன் பிறரை அனுசரித்து செல்லுதல் போன்ற உயர்ந்த பண்புகள் நிறைந்து இருந்தாலும்.

    பொன் பொருளை பிறருக்கு கொடுத்து வாழ்க்கையை இழந்து கர்மவினையை அனுபவிப்பாகள். இல்லற துறவி. ஆசை, பாசம் போன்ற உணர்வு குறைவால் இனத்தாரை வெறுத்து ஒதுக்கி கர்ம வினையை அதிகரிப்பார்கள்.

    பத்தில் சனி

    லக்னத்திற்கு பத்தில் சனி இருப்பவர்கள் முன்னோர்களின் பரம்பரை தொழில் ஆர்வம் மிகுந்தவர்கள். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் நல்லாசி உண்டு. கடின உழைப்பு, சிக்கன் நடவடிக்கை , தவறாத நீதிநெறி, தன்மானம் காத்தல் போன்ற நற்குணங்களால் தன் வாரிசுகளுக்கு புண்ணிய பலன்களை மிகுதிப்படுத்துவார்கள்.

    பதினொன்றில் சனி

    அரச பதவி, அரச வெகுமதி, வீடு வாகன யோகம், குலத்தொழில், உயர்ந்த அந்தஸ்து, தீர்க்க ஆயுள், சலிக்காத உழைப்பு, தைரியம் போன்றவற்றால் முழுமையான நன்மைகள் நீடிக்கும். மூத்த சகோதரம், பங்காளிகள் பூர்வீக சொத்து பிரச்சனையால் சர்ச்சைகள் உண்டு. முறையான சொத்துப் பங்கீடு மூத்த சகோதரத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதன் நிம்மதியை அதிகரிக்க முடியும்.

    பன்னிரெண்டில் சனி

    பன்னிரெண்டில் சனி இருப்பவர்கள் குறைந்த செயல்திறன், தயக்கம், சோம்பல், தன்னம்பிக்கை குறைவு, மறதி, பணப்பற்றாக்குறை போன்றவற்றால் அதிக நட்டங்களையும், இழப்புகளையும் சந்திப்பார்கள். சிறைதண்டனை அல்லது வெளிநாட்டு வாழ்க்கையால் குடும்ப உறவு பிரிந்து வாழ்வார்கள்.

    முகம் தெரியாத மூன்றாம் நபர்கள். முன்பின் அறியாதவர்கள். அண்டை வீட்டுக்காரர்கள் என ஏதாவது ரூபத்தில் மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரமாகும்.

    பரிகாரம்

    பொதுவாக சனி நின்ற பாவகத்தின் மூலம் கர்ம வினையே மிகுதியாக இருக்கும். மிகுதியான கர்ம வினை தாக்கத்தை குறைக்க ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரவும் உணவில் நல்லெண்ணைய் அதிகம் சேர்க்க வேண்டும்.

    சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

    கறுப்பு உளுந்து தானம் தர வேண்டும்.

    செல்: 98652 20406

    • தெற்கு கோவாவில் உள்ள இந்தக் கடற்கரையில் நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளோர் செல்லலாம்.
    • வட கோவில் உள்ள இந்த பீச் பார்டிகளுக்குப் புகழ் பெற்றது.

    கோடையின் உக்கிரம் தாங்க முடியாத நிலையில் சற்று உடலும் மனமும் ஓய்வெடுக்க உல்லாசச் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அவசியமே!

    கடற்கரையும் இருக்க வேண்டும்; நீர் வீழ்ச்சியும் வேண்டும்; பல சரித்திரப் பிரசித்தி பெற்ற கோட்டைகளையும் பார்க்க வேண்டும், தவறாமல் சுவாமி தரிசனமும் செய்ய வேண்டும் – ஒரு இடம் சொல்லுங்கள் என்றால் நம் கண் முன் பளிச்சென்று தோன்றுவது கோவா தான்!

    துடிப்பும் உல்லாசமும் உள்ள கேளிக்கை நகரம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கோவா ஒரு சொர்க்கம் தான்!

    இந்தியாவின் மேற்குப் பக்க கடற்கரையாக அரபிக் கடலோரம் அமைந்துள்ளது கோவா.

    மகாராஷ்டிர மாநிலம் வடக்கிலும், கர்நாடக மாநிலம் தெற்கிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கிழக்கிலும் அரபிக் கடல் மேற்கிலும் அமைந்திருக்க இந்தியாவின் 25வது மாநிலமாகத் திகழும் கோவாவிற்கு பஸ், ரயில், விமானம் மூலமாக எளிதில் பயணப்பட்டு அடையலாம்.

    கோவாவின் தலை நகர் பஞ்சிம். இது பெங்களூரிலிருந்து 592 கிலோ மீட்டரிலும் மும்பையிலிருந்து 593 கிலோ மீட்டரிலும் அமைந்துள்ளது.

    கோவா இரு பகுதிகளாக வட பகுதி என்றும் தென் பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களை அவரவர் பட்ஜெட்டையும், விடுமுறை நாட்களையும் பொறுத்துத் திட்டமிட்டுப் பார்க்கலாம்.

    முக்கியமான சில இடங்களை இங்கு பார்ப்போம்.

    இங்குள்ள சுற்றுலா பயணிகள் முக்கியமாக வருவது இங்குள்ள பல கடற்கரைகளுக்காகத் தான்! சுமார் 77 மைல் நீளமுள்ள கடற்கரைப் பகுதி இங்கு உள்ளது.

    சுமார் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட அளவில் பயணிகள் இங்கு வருகின்றனர். இவற்றில் அயல்நாட்டிலிருந்து வருபவர்கள் சுமார் ஐந்து லட்சம் பேர்கள்.

     

    கோல்வா பீச்: தெற்கு கோவாவில் உள்ள இந்தக் கடற்கரையில் நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளோர் செல்லலாம். ஜெட் ஸ்கீயிங், ஸ்பீட் போட்டிங் உள்ளிட்ட அனைத்தும் இங்கு மிகவும் பிரபலம். கூட்டமோ கூட்டம் என்று ஜே ஜே என்று இருக்கும் இந்த பீச் மனதிற்கு இதத்தைத் தரும் இடமாகும். வெண்மணல் கடற்கரையுடன் தென்னந்தோப்புகளும் உள்ள இது சால்செட் என்ற ஊரில் உள்ளது. இங்கு தேனிலவு கொண்டாட வருபவர்கள் அதிகம்.

    பலோலம் பீச்: தெற்கு கோவாவில் உள்ள இந்த பிறை வடிவிலான பீச் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இடம். இயற்கை எழிலை அமைதியாக ரசிக்கலாம்.

    மோர்ஜிம் பீச்: இது வட கோவாவில் அமைந்துள்ளது. இங்கு ரஷிய பயணிகள் அதிகம் வருகின்றனர். ஆகவே இது குட்டி ரஷியா என அழைக்கப்படுகிறது. இது ஆலிவ் ரிட்லி என்ற ஆமைகள் வாழும் இடமும் ஆகும்.

    பாகா பீச்: வட கோவாவில் உள்ள இந்த பீச்சிலும் நீர் விளையாட்டுகள் உள்ளன.

    பஞ்சிம் பேருந்து நிலையத்திலிருந்து இது 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதைத் தொடர்ந்து உள்ள கடற்கரைகள் கண்டோலிம் மற்றும் கலங்குட் கடற்கரைகள்! கலங்குட்

    கண்டோலிம் பீச்: கடற்கரையில் படுத்துக் கொண்டு ஓய்வெடுக்க வசதியாக இங்கு படுக்கைகள் உள்ளன. கட்டணம் செலுத்தி இவற்றைப் பயன்படுத்தலாம். வாடகைக்குக் கிடைக்கும் இரு சக்கர வாகனங்களைஎ எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடற்கரையாகச் செல்லலாம்.

    அயல்நாட்டினர் அதிகமாக வரும் கடற்கரை இது.

    அஞ்சுனா பீச்: வட கோவில் உள்ள இந்த பீச் பார்டிகளுக்குப் புகழ் பெற்றது. இங்கு ஏராளமான கடைகளும் உணவகங்களும் உள்ளன. விதவிதமான பொருள்களை வாங்குவதற்கான ஷாப்பிங் இடம் இது தான்.

    அகுவாடா கோட்டையும் கடற்கரையும்: போர்த்துகீசியரால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை இது. இங்குள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து கடற்கரையைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.

    மோலெம் தேசியப் பூங்கா: இது ஒரு வனவிலங்கு சரணாலயம். வனப்பகுதியில் உள்ள விலங்குகளைப் பார்க்க சஃபாரியில் செல்லலாம்.

     

    தூத்சாகர் நீர்வீழ்ச்சி: கோவா செல்பவர்கள் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் இது. தூத் சாகர் என்றால் பால் கடல் என்று பொருள். மண்டோவி ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 1017 அடி உயரம் கொண்டது. பகவான் மகாவீர் சரணாலயம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மொல்லம் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது இது. நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.

    காவேலம் ஶ்ரீ சாந்த துர்க்கா கோவில்: வட கோவாவில் போண்டா நகருக்கு அருகில் காவேலம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோவில் பழமையான புராண வரலாறைக் கொண்டது. சிவனுக்கு விஷ்ணுவுக்கும் ஒரு காலத்தில் நடந்த போரில் துர்க்கா தேவி இருவரையும் ஒவ்வொரு கரத்தில் பிடித்து சமாதானத்தை ஏற்படுத்தினார் என்கிறது ஐதீக வரலாறு. இங்குள்ள பிரமிடு வடிவிலான முகப்பு மண்டபமும் சபா மண்டபமும் அழகிய வடிவமைப்புக் கொண்டவை. ஏராளமான பக்தர்கள் கூடும் இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.

    சப்போரா கோட்டை மற்றும் கடற்கரை: வட கோவாவில் பர்தேசு பகுதியில் உள்ள சப்போரா கோட்டை சப்போரா நதியருகில் உயர்ந்து அமைந்துள்ள கோட்டையாகும். நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்தக் கோட்டையை அக்பர் தனது தளமாக ஆக்கிக் கொண்டு போர்த்துக்கீசியரை எதிர்த்தார். எல்லாத் திசைகளையும் பார்க்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது இது. கோட்டைக்கு அருகில் உள்ளது சப்போரா கடற்கரை.

    ச.நாகராஜன்

     

    அர்வேலம் குகைகள்: இந்தக் குகைகளில் பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது தங்கி இருந்ததால் இந்தக் குகைகள் பாண்டவர் குகைகள் என அழைக்கப்படுகின்றன. சின்குவேரிம் கடற்கரைக்கு அருகில் உள்ளது இது.

    தேவாலயங்கள்: கோவாவில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. பாம் ஜீசஸ் பசிலிக்கா எனப்படும் குழந்தை ஏசு பசிலிக்கா கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமாகும். உலகப் பாரம்பரியங்களுள் ஒன்றாகப் புகழ் பெற்றுள்ள இதில் தான் புனிதர் பிரான்ஸிஸ் சேவியரின் உடல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு வழிபாட்டிற்காக வைக்கப்படுகிறது.

    கோவாவிற்குச் செல்ல விரும்பும் பயணிகள் தங்கள் திட்டத்தை முதலில் வகுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளா அல்லது இரு நாட்களா அல்லது பல நாட்கள் தங்கப் போகிறோமா என்று தீர்மானித்து விட்டால் பத்து இடங்களைப் பார்ப்பது முதல் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களைப் பார்க்கலாம்!

    கோவா இனிப்பான பால்கோவா தான்!

    • உங்களுக்கு இப்படி எதிர் காலத்தில் நடக்கும் என்று விதிக்கப்பட்டது நடக்கவில்லை.
    • விதியை வெல்வது என்பது இதுதான்.

    முந்தைய பிறவியில் செய்த மோசமான கர்மாவின் காரணமாக இந்தப் பிறவியில் கஷ்டங்கள் பலவற்றை அனுபவித்து வருவதாக வைத்துக் கொள்வோம். அந்த கஷ்டங்களில் இருந்து விடுபட மார்க்கம் ஏதாவது உண்டா?

    அல்லது அந்த கஷ்டங்களை எல்லாம் அப்படியே அனுபவித்து தான் ஆக வேண்டுமா?

    ஓர் உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக் கொள்வோம்.

    உங்களுக்கு வயது 22 ஆகிறது. நல்லவிதமான படிப்புகள் படித்திருந்தும், சரியான வேலை கிடைக்கவில்லை. போதிய வருவாய் இல்லாமல் கடும்பாடு படுகிறீர்கள்.

    ஒரு ஜோதிடரை அணுகி உங்கள் ஜாதகத்தைக் கொடுத்து ஆலோசனை கேட்கிறீர்கள். அவரும் உங்களது ஜாதகத்தை ஆய்வு செய்து உங்கள் கடந்தகால நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரிலிருந்து பார்த்தது போல் மிகச் சரியாகக் கூறுகிறார். நீங்கள் இப்போது கஷ்டஜீவனம் நடத்துவதையும் ஜாதகத்தின் மூலம் உறுதி செய்கிறார்.

    இந்த 22 வருடங்களும் நீங்கள் எப்படி இருந்துள்ளீர்கள் என்பதை, உங்கள் பிராரப்தகர்மாவை அடிப்படையாகக்கொண்ட ஜாதகத்தை மட்டுமே பார்த்து அப்படியே கூறிவிட்டார்.

    அந்த அடிப்படையில், இனிமேல் உங்கள் வாழ்க்கையில் என்ன நிகழும் என்பதையும் கூறுகிறார்.

    "உங்களுடைய 27-வது வயதில் நீங்கள் மிகப்பெரிய அதிகாரியாக பொறுப்பு ஏற்பீர்கள். சொந்தமான கார், பங்களா என, பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதி ஆவீர்கள்" என்று கூறுகிறார்.

    அப்படி நடந்து விடக்கூடாது என்று நீங்கள் பிரார்த்தனை ஏதாவது செய்வீர்களா? - பரிகார பூஜைகள் எதையாவது செய்வீர்களா?

    நடக்கப்போகும் இவை எல்லாம் சற்று முன்கூட்டியே வந்து சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நீங்கள்

    விரும்புவீர்கள்.

    உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த 27-வது வயதும் வந்துவிடுகிறது. ஆனால் ஜாதகத்தில் கூறியபடி - உங்கள் பிராரப்த கர்மாவின்படி உங்களுக்கு வரவேண்டிய பதவியோ, வசதியோ அமைவதாக இல்லை.

    வயது 27 ஐயும் தாண்டி, 30 ஐயும் கடந்து விட்டது.

    ஸ்ரீ பகவத்

     

    ஆனால் உங்களுக்கு இப்படி எதிர் காலத்தில் நடக்கும் என்று விதிக்கப்பட்டது நடக்கவில்லை.

    உங்களுக்கு நடக்கவேண்டிய நல்லவைகளை எல்லாம், ஏதோ ஒரு சக்தி நடக்கவிடாமல் தடை செய்துள்ளது. உங்களுடைய விருப்பத்தையும் மீறி இத்தகைய தடைகளை ஏற்படுத்தி வரும் அந்த சக்தி எது?

    இன்றைய வாழ்வில் நாம் ஏதாவது பாவ கரமான மோசமான செயல்களை நாமாகவே செய்திடுவோமானால் அது என்ன ஆகும்?

    அதனால் பாவகரமான புதிய ஆகாமிய கர்மா ஒன்று உதயமாகி விடும்.

    அந்தப் புதிய ஆகாமிய கர்மாவே,

    பழைய கர்மாவின்படி - விதிப்படி நமக்கு வரவேண்டிய நன்மைகளையெல்லாம் தடை செய்துவிடுகின்றது.

    விதியை வெல்வது என்பது இதுதான்.

    நாம் இப்போது செய்து வந்த அடாத செயல்களின் காரணமாக, விதிப்படி நமக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகளையெல்லாம் நடக்க விடாமல் வென்று விட்டோம்!

    நாம் இப்போது செய்து வந்த தர்ம விரோதமான செயல்களின் விளைவாக, நமக்கு வரவேண்டிய நன்மைகளெல்லாம் எப்படி பாதிக்கப்பட்டனவோ,

    அது போல் நாம் இப்போது செய்திடும் நன்மையான செயல்கள் யாவும், நமக்காக விதிக்கப்பட்ட மோசமான கர்மாக்களையும் தடை செய்துவிடும்.

    இதனால்தான் கிராமிய பழமொழியாக, "கர்மத்தால் வந்தது, தர்மத்தால் தொலையும்" என்று கூறியுள்ளனர்.

    தர்மம் என்பது தானம் செய்வதைக் குறிக்கவில்லை. தர்மம் என்பது அறநெறிப்படி வாழ்ந்திடுவது ஆகும்.

    தர்ம நியாயங்களோடு நாம் வாழ்ந்திடுவோமேயானால், கர்மாவைப் பற்றி நாம் கவலை கொள்ளவே தேவை இல்லை.

    பிராரப்த கர்மாவின் சக்தி வெறும் 40 சதவீதம் மட்டுமே. ஆனால் இப்போது நமது கைகளில் இருக்கும் ஆகாமிய கர்மாவின் சக்தி 60% ஆகும். 40 சதவீதம் என்பது எப்போதும் 60 சதவீதத்துக்குக் கட்டுப்பட்டதே ஆகும்.

    அறநெறிகளை பின்பற்றி நாம் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமேயானால், நாம் நமது மோசமான ஊழ்வினைகள் அனைத்தையும் மாற்றியமைத்து நல்வாழ்வு வாழ்ந்திட முடியும்.

    இறைவழிபாடு எந்த அளவுக்கு உதவி செய்யும்?

    நண்பர்கள் இருவர் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்கள் வறுமை நீங்க ஒரு காட்டுக் கோவிலில் அமர்ந்து இறைவனை நோக்கி தவம் செய்தார்கள்.

    இறைவனும் அவர்களுடைய தவத்தினால் மகிழ்வடைந்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று வரங்களைக் கொடுத்தார்.

    அந்த வரத்தின்படி அவர்கள் எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மூன்றே மூன்று முறை மட்டும் தான். இரவு படுக்கும் போது ஏதாவது ஒரு வரத்தை மட்டும் கேட்டு பிரார்த்தனை செய்து விட்டு படுத்துவிட வேண்டும்.

    மறுநாள் காலை தூங்கி எழுவதற்குள் அந்தப் பிரார்த்தனை நிறைவேற்றிக் கொடுக்கப்படும்.

    வரம் கொடுத்த இறைவன் அந்த வரத்தோடு சேர்த்து ஒரேயொரு கொக்கியை மட்டும் போட்டுவிட்டார்.

    "நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும். நீங்கள் கேட்டது உங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்கு மட்டும் இரண்டு மடங்காகக் கிடைக்கும்." - இதுதான் அந்த நிபந்தனை.

    நண்பர்கள் இருவரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்களுக்குக் கிடைத்த வரத்தினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர்கள் மனநிறைவோடு வீட்டுக்குத் திரும்பினார்கள்.

    அவர்கள் இருவருமே குடிசை வீடுகளில் தான் வசித்து வந்தார்கள்.

    முதலாவது நண்பன் அன்றைய தினம் படுக்கப் போகும்போது, தனக்கு ஓர் அழகிய பங்களா வேண்டும் என்று கேட்டு பிரார்த்தனை செய்தான். மறுநாள் காலையில் அவன் தூக்கத்தில் இருந்து விழித்தபோது மிகவும் ஆச்சரியப் பட்டுவிட்டான். அவனுடைய குடிசை வீடு அழகானதொரு மாளிகையாக உருவெடுத்திருந்தது.

    மகிழ்ச்சியில் அவனுக்கு தலை கால் புரியவில்லை. இப்படியும் இறைவன் கருணை செய்வாரா என்று கூறி ஆனந்தக் கூத்தாடினான்.

    அவன் தன்னுடைய வீட்டுக்கு வெளியே வந்து பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்ததுதான் தாமதம், அவனுடைய மகிழ்ச்சியெல்லாம் அப்படியே வடிந்து போய்விட்டது.

    குடிசையாக இருந்த பக்கத்து வீட்டுக்காரனுடைய வீடோ, இவனுடைய மாளிகையை விட இரண்டு மடங்கு பெரிய மாளிகையாக மாறிவிட்டது.

    இறைவனும் அவ்வாறு தான் வரத்தைக் கொடுத்திருந்தார் . வரத்தின் மூலம் இவனுக்கு என்ன கிடைக்குமோ அதுவே பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு மடங்காகக் கிடைத்துவிடும்.

    வரத்தை வாங்கும் போது இது ஒன்றும் பிரச்சனையாகத் தெரியவில்லை.

    போதாக்குறைக்கு பக்கத்து வீட்டுக்காரன் வேறு தனக்குக் கிடைத்த இந்த பரிசளிப்புக்காக இறைவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறிக் கொண்டிருந்தான்.

    இந்த முதலாவது நண்பனின் மனதில் கோபம் பொங்கி எழுந்தது.

    "வரம் பெற்றது நான். ஆனால் பலனை அனுபவிப்பது பக்கத்து வீட்டுக்காரனா?"

    என்று தனக்குள் பொறுமினான்.

    ஆனால் 'என்ன செய்வது, வரமே அப்படிப் பட்டதாயிற்றே' என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டான்.

    குடிசை வீடு மாளிகையாகிவிட்டது. இனி அடுத்தது என்ன?

    இரண்டாம் நாள் படுக்கச் செல்வதற்கு முன்பு விலை உயர்ந்த கார் ஒன்று தனக்கு வேண்டும் எனக் கேட்டு பிரார்த்தனை செய்தான். அது போல் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அவனுடைய வீட்டு போர்டிகோவில் புத்தம் புதிய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

    இவன் மகிழ்ச்சி அடைவதை விட, பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்திடுவதிலேயே குறியாக இருந்தான்.

    இவன் கணித்த படியே இவனுடைய கார்களைப் போல் இரண்டு கார்கள் பக்கத்து வீட்டில் நின்றுகொண்டிருந்தன.

    இவனது பிரார்த்தனையின் படி இவனுக்கு ஒரேயொரு கார். ஆனால் பிரார்த்தனை எதுவும் பண்ணாத பக்கத்து வீட்டுக் காரனுக்கு இரண்டு கார்கள்.

    அந்த பக்கத்து வீட்டுக்காரன் இன்றும் இறைவனுடைய கருணையைப் புகழ்ந்து ஆடிப்பாடினான்.

    இவனுக்குப் பொறுக்க முடியவில்லை.

    'கஷ்டப்பட்டு தவம் செய்தது நான். ஆனால் பலனை அனுபவிப்பது மட்டும் பக்கத்து வீட்டுக் காரன். இப்படி ஒரு கொடுமையான வரத்தைக் கொடுத்து விட்டாரே இறைவன் . தவம் செய்த என்னை இப்படி நிம்மதி இல்லாமல் தவிக்க வைத்து விட்டாரே. என்ன செய்வது? இதனையும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்' என்று நிம்மதி இல்லாமல் தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்தான்.

    இரண்டு வரங்கள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு வரம் மட்டுமே மீதமாக உள்ளது.

    மூன்றாம் நாள் படுக்கப் போகும் முன் இந்த வரத்தைக் கேட்டு பிரார்த்தனை செய்ய உட்கார்ந்தான்.

    என்ன கேட்டு பிரார்த்தனை செய்வது என்பதே குழப்பமாக இருந்தது. எதைக் கேட்டாலும் பக்கத்து வீட்டுக் காரன் போட்டிக்கு வந்து இரண்டாக தட்டிச் சென்றுவிடுகிறான்.

    இப்படி அவன் வரத்தைக் கேட்டு பிரார்த்தனை செய்ய முடியாமல் தடுமாறினான்.

    கடைசியில் எப்படியோ சுதாரித்துக் கொண்டு, அந்தக் கடைசி வரத்தையும் கேட்டு பிரார்த்தனை செய்தான்.

    அவ்வளவு கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்த அந்தக் கடைசி வரம் என்ன?

    "இறைவா! எனக்குக் கொடுத்த மூன்றாவது வரத்தின் படி என்னுடைய இரண்டு கண்களில் ஒரு கண் மட்டும் குருடாகவேண்டும்!"

    - இப்படி பிரார்த்தனை செய்தான்.

    மறுநாள் காலை இவன் தூங்கி எழுந்த நிலையில் இவனுடைய ஒரு கண் பார்க்கும் சக்தியை இழந்து குருடாகி விட்டது.

    கண் குருடானதில் இவனுக்கு எந்தவொரு வருத்தமுமே ஏற்படவில்லை.

    இவனுடைய கவனமெல்லாம் பக்கத்து வீட்டை நோக்கியே இருந்தது.

    அந்நிலையில், "என்னுடைய இரண்டு கண்களும் தெரியவில்லையே!" என்று சொல்லி பக்கத்து வீட்டுக் காரன் கதறிக் கூச்சலிட்டான்.

    அவனுடைய கூச்சல் இவனுடைய காதில் அமிர்தமாகவே பாய்ந்தது. பக்கத்து வீட்டுக் காரனுடைய பரிதவிப்பைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினான். பக்கத்து வீட்டுக் காரர்களோடு இப்படிதான் ஒருவர் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமா?

    எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை பக்கத்து வீட்டுக் காரனுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்று எண்ணுவது தான் சரியான அணுகுமுறையா?

    அதனையும் பார்ப்போம்.

    தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532

    • வியர்க்க விறுவிறுக்க அலைந்து திரிகிற நேரத்தில் உடலின் வெப்பத்தைச் சட்டென்று தணிக்கவல்லது மோர்.
    • நீராகாரத்தில் உள்ளதைப் போன்று மோரிலும் நுண்ணுயிரிகள் உண்டு.

    "காரென்று பேர் படைத்தாய்

    ககனத்து உறுமும் போது

    நீரென்று பேர் படைத்தாய்

    கொடுந்தரையில் வந்ததற் பின்

    வார் ஒன்று மென் முலையார்

    ஆய்ச்சியர்கை வந்தற்பின்

    மோர் என்று பெயர் படைத்தாய்"

    என்று புகழ்பெற்ற காளமேகப் புலவரின் பாடலொன்று உண்டு.

    ஒரு குவளை நீர் முப்பெயரும் பெற்று விட்டதாக புலவர் நகைச்சுவையாகப் பாடலில் வெளிப்படுத்துகிறார். உச்சி வெயிலில் நடந்து செல்லும் அய்யன் காளமேகருக்கு தொண்டை வறண்டு தாகம் எடுக்கிறது. சோர்வு ஏற்படுகிறது. தாகத்தையும் சோர்வையும் ஒருசேர நீக்கவல்ல மோர் அருந்தினால் நன்று எனத் தோன்றுகிறது. ஆயர்குலப் பெண்மணி தெருவில் விற்றுச் செல்லும் மோரினை வாங்கிப் பருக, அது வெறும் நீராக இருக்கிறது. (அந்தக் காலத்திலேயே கலப்படம்) மோரைக் குடித்தவர் புலவர். மோரினை விற்றவளும் இளம்பெண். எனவே கடிந்துகொள்ள மனமில்லை புலவருக்கு. ஆனாலும் அப்படியே கடந்து செல்லவும் மனமின்றி, நீரே நீ வானத்தில் இருந்தால் உன் பெயர் மேகம், மழையாகி கொடுந்தரைக்கு வந்த பிறகு நீரென்று பெயர் பெற்றாய். இளம் பெண்ணின் கையில் உள்ள நீரே நீ மோர் என்ற பெயரைப் பெற்றாய்" என்று நயம்படப் பாடிச் செல்கிறார்.

    அது நீர் மோராகவே இருந்தாலும் தாகத்தைத் தணிக்கத்தான் செய்யும். தயிரைக் கடைந்து வெண்ணை எடுத்த பின் நீர் சேர்க்காத மோர், மிக இதமாக வயிற்றுக்கு உணவாகவே நிறையும் ஆற்றலைக் கொண்டது.

     

    தயிராக இருந்தால் அப்படியே சாப்பிட முடியாது, கூடாது. ஏனென்றால் அதில் புளிப்புத் தன்மையும் வெண்ணையுடன் கூடிய எண்ணைத் தன்மையும் மிகுந்திருக்கும். புளிப்புடன் கூடிய வெண்ணை செரிக்கக் கடினமானது. மட்டுமல்ல நேரெதிரான விளைவையும் கூடக் கொடுக்கும். அதனால் தான் சோற்றுடன் சேர்ந்து பிசைந்து ஊறுகாய், கெட்டிக் குழம்பு போன்றவற்றை இணைத்தே உண்கிறோம். ஆனால் அது கடினமான உணவு என்பதில் இன்னொரு கருத்து இல்லை.

    வெயில் உரத்து அடிக்கும் மயக்க நேரத்தில் கடினமான உணவை உண்டால் சோர்வு இன்னும் அதிகரிக்கவே செய்யும். நாங்கள் படிக்கிற காலத்தில் பின் இருக்கை (பேக் பெஞ்ச்) மாணவர்கள் ஓரிருவரின் தலைகள் ஓணான் போல ஆட, மென் குறட்டையுடன் தூங்கிச் சரிவார்கள். வாத்தியார் பிரம்பால் சுரீரென்று ஒருகார அடி கொடுத்து மேசை மீது நிற்க வைப்பார். "எறுமைத் தயிரைக் குடிச்சா இப்பிடித் தூங்க வேண்டியதுதான்" என்றபடி கையில் எடுத்த பிரம்புடனே லாத்துவார். மேசையில் வைக்கமாட்டார்.

    அந்தக் காலத்தில் கிட்டத்தட்ட வீட்டு வீட்டுக்கு பசுமாடு எறுமை மாடு என பால்கறவை மாடுகள் இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் பால், தயிர் மோருக்குப் பஞ்சம் இருக்காது.

    இன்று எல்லா நகரமயப் பெருக்கத்தால் கறவை மாடுகள் பண்ணை உற்பத்திக் களங்கள் ஆகி விட்டன. பக்கெட் பக்கெட்டாக பாலும், தயிரும் நிறைந்திருந்த காலம் போய் இன்று பாக்கெட், பாக்கெட்டாக உருமாற்றம் பெற்று விட்டன. ஆனால் மோர் மட்டும் அரிதானவொன்றாகி விட்டது. குடங்குடமாகக் குடிக்கத் தகுந்த மோரினை யோகர்ட், யாகுல்ட் என்ற பெயரில் சின்னக் குப்பிகளில் அடைத்து விற்கிறார்கள்.

    பாலையும் தயிரையும் கெடாத வகையில் ப்ராசஸ் செய்யலாம். ஆனால் மோரினை அப்படி ப்ராசஸ் செய்து விற்பதற்கு விலை வைக்க முடியாது. சந்தைப்படுத்தி லாபம் ஈட்ட முடியாது.

    ஆனால் பால்பொருட்களான பால், தயிர், மோர், நெய், வெண்ணை இன்று புதிதாக வணிக கவனத்தைப் பெற்றிருக்கும் பாலாடைக் கட்டி (சீஸ்) பன்னீர் போன்ற அனைத்திலும் சிறந்தது மோரே ஆகும். விலை மலிவாக இருப்பதாலும், வெண்ணை எடுக்கப்பட்டதாலும் அதன் மருத்துவப் பண்பினை நாம் உணராமல் இருக்கிறோம்.

    வியர்க்க விறுவிறுக்க அலைந்து திரிகிற நேரத்தில் உடலின் வெப்பத்தைச் சட்டென்று தணிக்கவல்லது மோர்.

    மேலே சொன்னது போல தயிரின் நீர்த்த வடிவம் தான் மோர் என்றாலும், தயிரான புளிப்புத் தன்மை உடையது. குடலில் உணவு தேக்கமுற்று குடலும், வயிறும் கெட்டு வாயில் நாக்கில் புண் உடையோர் பரவலாகி விட்டனர். இந்த அசிடிட்டி பிரச்சினைக்கு கை கண்ட எளிய மருந்து மோர் ஆகும்.

    நோயுற்று செரிமானப் பிரச்சினை உடையவர்களுக்கும், வயிற்று உப்புசம், கெட்ட வாயுப் பிரச்சினை உடையவர்களுக்கும் மிக விரைவான தீர்வைத் தரக்கூடியதாகும் மோர். புளித்த தயிரின் நீர்த்த வடிவம் தான் என்றாலும் மோரானது காரப் பண்பை அடைந்து விடுகிறது. புளிப்பை உடைத்தால் அதன் அசிடிட்டிப் பண்பு, குணம் அனைத்தும் மாறி எதிரான பண்பாக ஆகி விடுகிறது. அதனால் தான் சொல்கிறோம், அசிடிட்டி, குடல் புண், வாய்ப்புண் (இரைப்பையின் வெளி உறுப்பு தான் வாய்) இரைப்பையில் புண் ஏற்பட்ட பின்னரே வாய்ப் புண்ணுக்குப் பொருத்தமானது மோர் என்று.

    கடந்த கட்டுரையில் பார்த்தது போல நீராகாரத்தில் உள்ளதைப் போன்று மோரிலும் நுண்ணுயிரிகள் உண்டு. எனவே கெட்ட வாயுக்களை நீக்கும் பண்பு மோருக்கு உண்டு.

    நெஞ்செரிச்சல், ஏப்பம் வராமல் திணறுதல், மூச்சு முட்டுதல், வயிற்றுக்கும், தொண்டைக்கும் இடையில் ரன்வேயில் விமானம் ஓடுவது போல கர்முர் சத்தம் ஆகிய அனைத்திற்கும் மோர் சிறந்த தீர்வாக இருக்கும்.

    மோர் சிறந்தது என்பதில் யாருக்கும் எதிர் கருத்து இருக்க முடியாது. ஆனால் மோர் என்ற சொல்லைக் காதால் கேட்டவுடன் தும்மல், மூக்கடைப்பு எதிர் விளைவுகள் (அலர்ஜி) சிலருக்கு ஏற்படலாம். பிரச்சினை மோரில் இல்லை, அதனை ஏற்கும் திறனை உடல் இழந்து விட்டது தான் பிரச்சினை. அவர்களது உடலைப் பக்குவப்படுத்துவதே உடனடி வேலையாக இருக்க வேண்டும். மோரைச் சிறிது சிறிதாக சேர்ப்பதன் மூலம் மோர் மூச்சுப் பிரச்சினைக்கும் சிறந்த தீர்வினைத் தரும் அருமருந்தாக இருக்கும்.

     

    ஐஸ் சேர்த்த மோர், கடைந்த பின்னர் புளிப்பேறிய மோர்தான் சுவாசப் பிரச்சினைக்கு எதிரியே தவிர கடைந்த புதுமோர் இத்தகைய உபாதைகளைத் தராது. புளிப்பேறாத மோரினை சிறிது சிறிதாகக் குடித்து உடலைப் பழக்குவதே நல்லது. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களும் காலைநேரத்தில் சோற்றில் அல்லது சிறுதானியக் கூழில் மோர் கலந்து உண்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினை எளிதில் நீங்கும்.

    நீண்ட மலச்சிக்கல், செரிமானப்பிரச்சினை ஆகியவற்றை அடுத்தே பித்தப்பைக் கல், சிறுநீரகக் கல் ஆகியவை தோன்றும். ஆகவே மேற்படிக் கல் பிரச்சினைகளுக்கு அறுவை, மாற்று மருந்து போன்ற கடினமான, ஆபத்தான முயற்சிகளுக்குப் பதிலாக மோரை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் இலகுவான தீர்வாகும். காரம், உப்பு, எண்ணைப் போன்றவற்றைத் தவிர்த்து புளிப்பு ஏறாத மோர், புளி சேர்க்காத ரசம் சோறு ஆகிய எளிய உணவினை உண்டு வர மிகச் சில நாட்களிலேயே சிறுநீரகம் அல்லது பித்தப்பை கல் தொல்லைகள் நீங்கி விடும்.

    தயிரை நீர் விட்டு ஆற்றினால் அது மோர் என்று நினைக்கிறோம். தயிரில் வெண்ணையை விலக்கா விட்டாலும் பாதகமில்லை. தயிரை உடைப்பது முக்கியம். உடைப்பது என்றால் அதன் இயல்பைச் சிதைப்பது. தயிர் திரிதிரியாகக் கூட இல்லாத அளவிற்கு நீர்க்கச் செய்வது. மோர் ஊற்றிய பாத்திரத்தில் சிறிதும் ஒட்டாத அளவிற்கு நீர்க்கச் செய்தல் வேண்டும்.

    அதிலும் இன்றைய பாக்கெட் தயிரை மோராக்க நினைத்தால் அதில் உடல் நலப்பண்பு கிடைக்காது. பாக்கெட் பாலைக் காய்ச்சி உறை ஊற்றினாலும் நல்ல மோருக்கான தயிரைப் பெற முடியாது. கறந்த பாலை வாங்கி, நிதானமான சூட்டில் காய்ச்சி, உறை ஊற்றி, சுமார் 8 மணிநேரம் புளிக்க விட்டு அதனையே மோராக்க வேண்டும். அதிலும் காய்ச்சிய பாலை மண்பாண்டத்தில் ஊற்றி ஆற வைத்து உறை ஊற்றி வைத்தல் கூடுதல் பலனைத் தரும்.

    தயிர் சேர்ந்து சேர்ந்து மீந்து விட்டால் அதில் நீரை ஊற்றி அடித்து மோர்க் குழம்பு சமைக்கிறார்கள். தயிர் ஒரு அளவுக்கு மேல் புளித்து விட்டால் அதில் நச்சேறி விடும். எனவே அதில் மோர்க்குழம்பு சமைப்பது உடலுக்கு உகந்ததல்ல. அடிக்கடி இத்தகைய குழம்பை எடுத்துக் கொண்டால் தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

     

    போப்பு, 96293 45938

    கறந்த பாலில் உறையூற்றி தயிராக்கி அதனைக் கடைந்து தேறின மோரைச் சோற்றுடன் பிசைந்து உண்டால் இந்தக் கோடை கால வெயிலுக்கு அத்தனை இதம். கடைந்தெடுத்த மோரில் வாசமிக்க கறிவேப்பிலையை கையால் பிச்சிப் போட்டு, கெட்டிப் பெருங்காயத்தை துளியளவு இடித்துப் போட்டு, கடுகு சீரகம், காய்ந்த மிளகாய் தாளிப்பை முறுக விட்டுப் போட்டு அரிந்த மல்லித் தழையை பசுமை குன்றாமல் தூவி வைத்தாலே பார்க்கப் பார்க்க ஆனந்தம்.

    அதனை உதட்டோடு பொருத்தி உறிஞ்சிக் குடித்தாலும் சரி, ஆறின சோற்றுடன் நொறுங்கப் பிசைந்து வைத்துக் கொண்டு ஒரு கைப்பருக்கையும், ஒருவாய் மோருமாகக் குடித்தாலும் சரி அது வார்த்தையில் அடங்காத சுவை. சுவையோடு கூடி உடலில் ஏசியைப் பொருத்தி விட்டது போல அத்தனை குளுமை. ஊட்டி கொடைக்கானலைக் கொண்டு வந்து சமதளத்தில் பரவ விட்டதைப் போல அப்படி ஒரு சுகம்.

    மோரிருக்க கோடைக்குப் பயமேன்.

    காண்போம் கோடையில் குளுமை.

    • பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரிடம் தொடக்கத்தில் தமிழ் கற்றார்.
    • கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் சீதை படும் மனத்துயரை விளக்கி ஒரு பாடல் வருகிறது.

    தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் உரையாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், கட்டுரை ஆசிரியர் எனப் பற்பல பெருமைகள் கொண்ட தமிழறிஞர்.

    அவரது நடை அழகிய பழந்தமிழ்ச் சொற்களோடு தனி எழிலுடன் அமைந்திருக்கும். அவரது எழுத்தைப் படிக்கும்போது கருத்திற்கும் முன்பாக நம்மை வசீகரிப்பது அவரின் தமிழ் நடைதான்.

    புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில், வ. சுப்பிரமணியன் செட்டியார், தெய்வானை ஆச்சி ஆகியோரின் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர் மாணிக்கம். (1917-ம் ஆண்டு எப்ரல் 17-ந் தேதி.) ஏழு வயதிற்குள்ளாகவே தாய் தந்தையை இழந்த மாணிக்கம், தாய்வழிப் பாட்டனாரால் வளர்க்கப்பட்டார்.

    பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரிடம் தொடக்கத்தில் தமிழ் கற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முதுகலைப் பட்டம் பெற்றார். இலக்கண ஆய்வுக்காக எம் ஓ எல் பட்டமும் சங்க இலக்கிய ஆய்வுக்காக முனைவர் பட்டமும் பெற்றார்.

    ஏழு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்றோர் இவரின் மாணவர்கள்.

    பின்னர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது இவர் ஆற்றிய தமிழ் வளர்ச்சிக்கான தொண்டுகள் காலத்தால் நிலைபெற்றவை.

    பற்பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்த இவர் தமிழ் யாப்பிலக்கண வரலாற்றை ஆங்கிலத்தில் நூலாக எழுதியுள்ளார்.

    அவரின் நூல்களில் மிக முக்கியமான நூல் என்று `கம்பர்` என்ற நூலைத்தான் சொல்ல வேண்டும். தட்டிப் பார்த்து டி.கே.சி. கம்பர் எழுதாதவை என்று விலக்கிய பாடல்களும் கூட கம்பர் எழுதியவைதான் எனத் தம் நுண்மாண் நுழைபுலம் கொண்டு, வ. சுப. மா. விளக்கும் இடம் அவரின் அறிவாற்றலுக்குச் சான்று.

    டி.கே.சி. நீக்கிய பாடல்களை விட்டுவிட்டுப் பார்த்தால் கதைத் தொடர்ச்சி கிட்டவில்லை என்பதை வைத்துக்கொண்டு மேலும் ஆராய்கிறார் வ.சுப. மாணிக்கம். காப்பியத்தில் கதைப் போக்கிற்காக அமைந்த சில செய்யுள்களும் மற்றபடி உன்னதமான கவிதைகளும் இருப்பது இயல்பே என்றும் எந்தக் காப்பியமும் இதற்கு விதிவிலக்கல்ல என்றும் தெரிவிக்கிறார்.

    ராமன் நடந்தான் என்று ஒரு செய்யுளில் சொன்னால்தான், `மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ` என்று அதன் பின்னர் ஒரு கவிதையை எழுதமுடியும் என்கிறார்.

    சாரப்பள்ளத்திலிருந்து சாரம் கட்டி தஞ்சாவூர்க் கோபுரத்திற்கு அந்த ஒற்றைக் கலசத்தைக் கொண்டு வந்தார்கள். கோபுரத்தில் உச்சியிலிருக்கும் கலசத்தைப் பார்க்கும்போது சாரத்தின் உதவியால்தான் அது உச்சிக்கு வந்தது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்பதாக உவமை கூறி வ.சுப. மாணிக்கம் விளக்கும் அழகே அழகு.

    மண்டோதரி புலம்பலாகக் கம்பராமாயணத்தில் வரும் `வெள்ளெருக்கஞ் சடைமுடியான்` என்ற பாடலுக்கு வ.சுப.மா. தரும் விளக்கம் நயமானது.

    `கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை

    மனச்சிறையில் கரந்த காதல்

    உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து

    தடவியதோ ஒருவன் வாளி!`

    என்ற வரிகளில் வரும் `ஒருவன் வாளி` என்ற சொற்றொடரை `ஒப்பற்றவனின் அம்பு` என்பதாகப் பொருள் கொள்வதே மரபு. ஆனால் வ.சுப. மாணிக்கம் அந்தச் சொற்றொடரை `ஒரு வன்வாளி` எனப் பிரித்து ஒரு வலிமையான அம்பு எனப் பொருள் காண்கிறார்.

    `விற்பெருந் தடந்தோள் வீர...` எனத் தொடங்கும் கம்பன் கவிக்கு வ.சுப.மா. தரும் விளக்கம் போற்றத் தக்கது. `நங்கையைக் கண்டேனல்லேன்` என்ற சீர்களைக் `கண்டேன் அல்லேன்` என்று பிரிப்பதே வழக்கம். இவரோ `கண்டேன் நல்லேன்` எனப் பிரித்துப் புதிய விளக்கம் தருகிறார்.

    இப்படி அவர் காணும் நயங்கள் இன்னும் எத்தனையோ. ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்றபடி, இந்த நயமே வ.சுப.மா. வின் அறிவாற்றலைப் புலப்படுத்தும்.

    `சொற்பொழிந்தேன், வானொலிக்கின்றேன், பழமொழிகின்றோம்` போன்ற அவரின் புதிய சொல்லாக்கங்கள் நம் சிந்தனையைத் தூண்டுபவை.

    வ.சுப.மா. ஒரு மரபுக் கவிஞரும் கூட. `புரட்சி மண்டோதரி` என்பது அவரின் கவிதைப் படைப்பு. அதில் ராவணன் அசோகவனத்தில் இருக்கும் சீதையைச் சந்திக்கப் போவதற்கும் முன்பாகத் தான் அங்குபோய்க் காத்திருக்கிறாள் மண்டோதரி. ராவணன் சீதையைக் காண அங்கு வந்ததும் மண்டோதரியைக் கண்டு நடுங்குகிறான்.

    அந்தக் காட்சியைக் கவிதையாக்கும் வ.சுப.மா. ராவணனின் மனநிலையை விளக்கப் பற்பல உவமைகளைக் கையாள்கிறார். ஒரே மன உணர்வுக்குப் பல உவமைகளைக் கூறும் அவரது அபார ஆற்றல் வியப்பில் ஆழ்த்துகிறது.

    `கள்ளமாய் எழுதித் தேர்வில்

    கைப்படு பேதை போல,

    எள்ளலாய்ப் பெண்ணைப் பேசி

    இடிபடும் கயவன் போல,

    துள்ளலாய் வேலி தாண்டித்

    தொடுத்துணும் மாடுபோல,

    உள்ளமாய் நடுக்கம் கொண்டான்

    உம்பரை நடுக்கஞ் செய்தான்!`

    கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் சீதை படும் மனத்துயரை விளக்கி ஒரு பாடல் வருகிறது. அவள் மனநிலையை விளக்க அடுத்தடுத்துப் பல சொற்களை அடுக்குகிறார் கம்பர். கம்பரைக் கவிச்சக்கரவர்த்தி என்று காட்டும் பல பாடல்களில் அதுவும் ஒன்று:

    `விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல்

    வெருவல்

    எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை

    எண்ணித்

    தொழுதல் சோருதல் துளங்குதல் துயருழந்

    துயிர்த்தல்

    அழுதல் அன்றி மற்றயலொன்றும்

    செய்குவதறியாள்!`

    வ.சுப. வின் புரட்சி மண்டோதரியைப் படிக்கும்போது அவர் கூறும் ராவணனின் மனநிலை குறித்த உவமைகள் கம்பரின் இந்தப் பாடலில் வரும் சொல்லடுக்குகளை ஒப்பிட்டுப் பார்த்து நம்மை மகிழத் தூண்டுகின்றன.

    `மாணிக்கக் குறள்` என்ற கவிதை நூலில் வ.சுப.மா. தமிழுக்குக் கையாண்டிருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நயமான அடைமொழிகள் பற்றி என்ன சொல்ல! `குளிர்தமிழ், பழுத்த தமிழ், கனிதமிழ்` என்றெல்லாம் தமிழைக் கொஞ்சுகிறார் அவர். அவற்றைப் படிக்கும்போது, `தமிழுக்கும் அமுதென்று பேர்` என்ற பாரதிதாசன் கவிதையும் கூடவே நம் மனத்தில் எழுந்து நம்மை மகிழ வைக்கின்றது.

    தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கூடாது என்னும் கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்றவர் வ.சுப.மா.. நா.பா. எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப் பட்ட புதிதில் அதைக் கடுமையாக எதிர்த்தார். செருப்புக்காகக் காலை வெட்டலாமா எனக் கேட்டுத் துக்ளக் பத்திரிகையில் கட்டுரை எழுதினார். ஆனால் பின்னர் எழுத்துச் சீர்திருத்தத்தின் இன்றியமையாமையை உணர்ந்து அவரே அதை ஏற்றார்.

    கி.ஆ.பெ. விஸ்வநாதன் கடைசி வரை எழுத்துச் சீர்திருத்தத்தின் கடும் எதிர்ப்பாளராகவே இருந்தார். ஐராவதம் மகாதேவன், வா.செ. குழந்தைசாமி போன்ற சில பிரமுகர்கள் தொடக்கத்தி்ல இருந்தே அதை ஆதரித்தார்கள்.

    கணிப்பொறிக்குச் சீர்திருத்த எழுத்து சுலபமாய்ப் பொருந்தக் கூடியது என்பது இன்று நிரூபணமாகியிருக்கும் ஓர் அறிவியல் உண்மை. இன்று கணிப்பொறித் துறை மிகப் பெரிதாக வளர்ந்து எல்லாத் துறைகளையும் ஆக்கிரமித்துள்ளது.

    இன்றைய சூழ்நிலையில் வ.சுப.மா. இப்போது இருந்தால் முற்போக்குச் சிந்தனைகள் உடைய அவர், எழுத்துச் சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பாரா என்பது ஒரு கேள்விக் குறியே.

    `நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை,

    நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை,

    நெல்லாகும் கதிர்முழுதும் நிலத்துக்கில்லை,

    நிறைகின்ற நீர்முழுதும் குளத்துக்கில்லை,

    பல்லாரும் கனிமுழுதும் மரத்துக்கில்லை,

    பண்ணரம்பின் இசைமுழுதும்

    யாழுக்கில்லை,

    எல்லாமே பிறர்க்குழைக்கக்

    காணுகின்றேன்,

    என்வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்

    வேண்டும்!`

    என்பது வ.சுப.மா. எழுதிய மரபுக் கவிதைகளில் ஒன்று.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதே இவரது கோட்பாடு. தமிழ் வழியிலேயே குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். `தமிழ் வழிக் கல்வி இயக்கம்` என்ற அமைப்பை நிறுவினார். இந்த இயக்கம் நன்கு பரவ வேண்டும் எனப் பல் ஊர்களுக்குத் தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார்.

    தமிழகப் புலவர் குழுத் தலைவர், பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழக வடிவமைப்புக் குழுத் தலைவர் எனப் பற்பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இவரது உயிலில் இவர் தெரிவித்திருந்தவை:

    `தம் சொத்தில் ஆறில் ஒரு பங்கு அறநிலையங்களுக்கு வழங்கப்பட வேண்டும். தாம் பிறந்த ஊரான மேலைச் சிவபுரியில் மருத்துவம், குழந்தை நலம், கல்வி போன்ற தொண்டுகள் சாதி சமய வேறுபாடின்றி இலவசமாகச் செய்யப்பட வேண்டும். தாம் சேமித்து வைத்த 4500 புத்தகங்கள் காரைக்குடி அழகப்பா பல்கலை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட வேண்டும்.`

    இவையெல்லாம் அவரது குடும்பத்தினரால் பின்னர் நிறைவேற்றப்பட்டன. இவர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

    தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் 1989 ஏப்ரல் 25-ந் தேதி புதுச்சேரியில் காலமானார். இவர் காலமானபோதும் கூட இவர் கையில் இருந்தது திருவாசகப் புத்தகம்தான்.

    வ.சுப. மாணிக்கத்தின் மனைவி பெயர் ஏகம்மை ஆச்சி. மூன்று புதல்வர்கள். தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி. மூன்று புதல்விகள் தென்றல், மாதரி, பொற்கொடி.

    வ.சுப. மாணிக்கத்தின் குழந்தைகள் எல்லோரும் காலஞ்சென்ற தங்கள் தந்தை மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்.

    தமிழ் நாடு அரசு வ.சுப. மாணிக்கம் காலமான பின்னர் அவருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கி அவர் பெயருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • திவ்யாவை துரத்தியபடி மற்ற ஆண்கள் வெறித்தனமாய் ஓடிக்கொண்டு இருந்தனர்.
    • டேவிட் கோவக்காரன் என்பது அவளுக்கு தெரியும்.

    அந்த காட்டின் ஓர் அடர்ந்தபகுதிக்கு வந்தார்கள் திவ்யாவும், கூட வந்த அந்த பெண்ணும்! அங்கிருந்து பார்த்தால், திவ்யாவை கடத்தி வந்த கார், ரோடு ஓரமாய் இன்ஜினை ஆப் செய்யாமல், உருமியபடி நின்றது. திவ்யாவின் தோளை தட்டிய அந்தபெண் "ஏய்... போயிட்டு வா..."- அங்கிருந்த ஒரு புதர் மறைவை காட்டினாள். திவ்யா தயங்கி நின்றாள்.

    இவள் ஏன் தயங்கி நிற்கிறாள் - அந்தப் பெண் யோசிக்க, கட்டப்பட்ட கைகளை, தூக்கி காட்டினாள் திவ்யா."ஒ... புரியது. கட்ட அவிழ்த்துவிடுவேன்... ஒழுங்கா போயிட்டு வரணும்.. தப்பிக்க முயற்சி பண்ண, அப்புறம் நான் மனுஷியா இருக்கமாட்டன்.. – அவள் திவ்யா கைகளில் கட்டி இருந்த கட்டுகளை அவிழ்க்கும் போது, "ஆமா... நீங்க ஏன் இப்படி தப்பான வேலை செய்றீங்க..." திவ்யா கேட்டாள்.

    என்ன அட்வைஸா... இவ பெரிய ராணி! மங்கையர் குலத்துக்கு அட்வைஸ் பண்றா.. ச்சீ... போயிட்டு வா! கட்டுகளை அவிழ்த்து, தோள் பிடித்து தள்ளினாள். அவ்வளவுதான்! திவ்யா சுதாரித்தாள். அவள் அடுத்த நிமிடம், தன் முஷ்டியை பிரயோகித்தாள். ஒரே குத்து. "அம்மா! "என அலறியபடி அந்தப் பெண் கீழே எகிறி விழுந்தாள்.

    சத்தம் கேட்டு காரில் இருந்து, அத்தனை பேரும் இறங்கினர். திவ்யா அந்த காட்டுக்குள், எதிர் திசையில் மின்னலாய் ஓடிக்கொண்டிருந்தாள்.

    "இவளோட இதே இழவா போச்சு... முடிஞ்சா பிடிங்க... இல்லேன்னா முடிச்சுடுங்க..." என கத்தியபடி, அவளை துரத்தியபடி, மற்றவர்கள் ஓடினர். கீழே திவ்யா தாக்குதலில் நிலைகுலைந்து கிடந்த பெண்ணை, இன்னொரு பெண் "அம்மா... அம்மா... " என தொட்டு எழுப்பி கொண்டு இருக்க... திவ்யாவை துரத்தியபடி மற்ற ஆண்கள் வெறித்தனமாய் ஓடிக்கொண்டு இருந்தனர்.

    "டேய்.. அங்க பாரு திவ்யா!"

    அதே ரோட்டில், வந்து கொண்டிருந்த, டேவிட்டின் காரில் இருந்த நெல்சன் கத்தினான். டேவிட் சட்டென்று பிரேக் அடிக்க, திவ்யா ஓடுவதும், அவளை முகமூடி அணிந்தவனும், மற்றவர்களும் துரத்துவது தெரிய, டேவிட் உள்பட அனைவரும் இறங்கி, காட்டுக்குள் ஓடினர். உயிரை கையில் பிடித்தபடி ஓடிவந்து எதிரே நின்ற திவ்யாவை, பிடித்து அணைத்தான் டேவிட். "திவ்யா... பயப்படாத!" திவ்யாவின் மூச்சு இரைப்பது, டேவிட்டின் மார்பில் சூடாக தெரிந்தது.

    "டேவிட்.. டேவிட்., இவன்க யாரு... எதுக்கு... எதுக்கு... இப்படி பன்றான்க..." –திவ்யா மூச்சிரைக்க விம்மியபடி கேட்டாள். திவ்யாவை துரத்திவந்தவர்கள், அவர்கள் எதிரே வந்து நின்றனர்.

    "ஏய்... மரியாதையா அவளை எங்ககிட்ட விட்டுட்டு போயிடுங்க... இல்ல... உயிரு... தங்காது...!"

    சொன்னபடியே, தனது முகமூடியை கழட்டினான் அவன். அவன் முகத்தை பார்த்ததும் டேவிட்டுக்கு பிளாஷ் அடித்தது..

    "நாங்க 'ரீஜெண்டா' இந்த தெருவுக்கு குடி வந்துருக்கோம்..."

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

     

    தன் வீட்டிற்கு வந்து, அப்பாவிடமும், தன்னிடமும் அறிமுகம் செய்து கொண்டவன். டேவிட் வசிக்கும் தெருவில், அந்த மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த வீட்டில் வசிப்பவன். இவன் நம்ம வீட்டிற்கு வந்தபோது, தன் தங்கை மேரியை பார்க்க திவ்யா கூட அன்று வந்து இருந்தாளே! - யோசித்த டேவிட் திவ்யாவை பார்த்தான்.

    "டேவிட், இவன் உங்க தெருவுல உள்ளவன்... இவன் எதுக்கு என்னைய...

    "யேய்... இந்த காரண, காரியமெல்லாம் விளக்க நேரமில்லை. மரியாதையா அவளை விடு...'' அப்போது ரோட்டோரமாய், போலீஸ் ஜீப் வந்து நிற்க, தபதப வென்று அழகர் உள்பட போலீஸ் டீம் இறங்கி ஓடி வந்தது.

    'அப்பாடா... போலீஸ் வந்துடுச்சு' என டேவிட், திவ்யா நிம்மதி பெருமூச்சு விட்டனர். போலீஸ் வருவதை பார்த்த ராஜேஷ், "வாங்க... அழகர் சார்... சரியான டைமுக்கு, என்ட்ரி தரிங்க..."-அழகர் கையில் ரிவால்வருடன் அவர்கள் அருகில் வந்து நின்றார்.

    "என்ன டேவிட்... நான் ராஜேஷ் ஆளுன்னு எதிர்பார்க்கலை இல்லை... திவ்யா கடத்தப்பட்ட நிமிஷத்துல இருந்தே, நான் தேடுற மாதிரி டிராமாதான் பண்ணேன்... இன்னும் சொல்ல போனா, உங்க மேலே ரவுடிங்க 'அட்டாக்' பண்ணாங்களே... அதான் திவ்யாவ கடத்துறதுக்கு போட்ட ஸ்கெட்சுல முதல் சீன். அப்புறம் என் லிமிட்ல வேண்டாம்னு, பிளானை மாத்தி, ஹைவேஸ்ல கடத்தினோம்."

    திவ்யா, டேவிட் ஷாக்காகி பார்க்க, டேவிட் நண்பர்கள் உறைந்து போய் நின்றனர். அவ்போது யாரும் எதிர்பாராதவிதமாய் காட்டுக்குள், யாரோ சிலபேர் நடந்து வரும் சத்தம் கேட்டு திரும்பினர். தனது ஆட்களுடன் பெருமாள் இவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தான். "யோவ் அழகர்... நீ இப்படி பண்ணுவேன்னு எனக்கு ஆரம்பத்துலே இருந்து சந்தேகம் இருந்துச்சு. நீ எப்படி இந்த ராஜேஷ், மெசேஜ் அனுப்பி இங்க வந்தியோ, அப்படித்தான் மணி மெசேஜ் அனுப்பி நானும் இங்க வந்தேன்..." அழகர் திரும்பி கான்ஸ்டபிள் மணியை முறைக்க, மணி முகத்தை திருப்பி கொண்டான்.

    "அழகர்... நாங்க 12 பேரு இருக்கோம்... இந்த ராஜேஷ் கூட சேர்ந்துகிட்டு ஒண்ணும் பண்ண முடியாது... பேசாம துப்பாக்கிய திருப்பி இடுப்புல சொருகிட்டு, இந்த ராஜேஷ் கோஷ்டிகளை அரெஸ்ட் பண்ணினா நல்லது. எங்களுக்கு இல்ல. உனக்கு உன் வேலை போகாம இருக்கும்..." பெருமாள் சொல்லவும், அவனை நோக்கி, துப்பாக்கியை திருப்பினார் அழகர்.

    "பெருமாள்... உங்கள்ல யார உசுரோட விட்டாலும்... இனி எனக்கு மட்டுமல்ல.. இவங்க எல்லாருக்குமே ஆபத்துதான்..." - ரிவால்வரின் ட்ரிக்கரை அழகர் அழுத்தப்போக, டேவிட் காலால் எகிறி உதைக்க, ரிவால்வர் காற்றில் பறந்து, அந்த காட்டின் ஒரு பகுதியில் விழுந்து, சருகுகளுக்குள் மறைந்தது. இதுதான் சமயம் என டேவிட்டின் நண்பர்கள் பாய, பெருமாளும், அவனது ஆட்களும் உதவிக்கு வர அந்த இடத்தில் ஒரு சிறு கலவரமே மூண்டது. திவ்யா ஒரு மரம் பின்னாடி பதுங்கினாள்.

    நிஜமான ஓர் சண்டையை தன் கண் முன்னாள் அவள் பார்ப்பது இதுவே முதல் முறை.

    டேவிட் கோவக்காரன் என்பது அவளுக்கு தெரியும். ஆனால், இப்படி ஆக்ரோஷமாய் அவன் தன்னை கடத்தின ராஜேஷை அடிப்பான் என எதிர்பார்க்கவில்லை. அப்போது தன் கணவன் தன்மீது வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை உணர்ந்தாள். அப்படி அவள் உணர்ந்த அந்த வினாடியின் முடிவில், அவள் கழுத்தில் ஒரு கத்தி வைக்கப்பட்டது. கூடவே, "நிறுத்துங்க சண்டையை... இல்ல இவ கழுத்த அறுத்துடுவேன்..." என்ற குரல் கேட்டு, அனைவரும் அதிர்ச்சியடைந்து நின்றனர்.

    திவ்யாவின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தது ஸ்டீபன். மற்றொருவனான பாண்டி டேவிட், திவ்யா இருவரின் அப்பா, அம்மாக்களையும், கைகளை கட்டி அவர்களை தன் பிடியில் வைத்திருந்தான்.

    "பாண்டி... அவங்களை இறுக்கமா பிடிச்சுக்கோ...!" ஸ்டீபன் குரல் தர, பாண்டி தலையாட்டினான். பலமாய் கைகளை தட்டிய ராஜேஷ் "வெரிகுட் பசங்களா... போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இவங்களை கூட்டிட்டு குறுக்குத்துறை கோவிலுக்கு வர சொன்னேன். ஆனா சரியான நேரத்துல இங்க வந்திட்டீங்கடா..." அவர்களை பாராட்டினான்.

    "இல்ல தலைவரே... போற வழியில ரோட்டுல உங்க வண்டியும், போலீஸ் ஜீப்பும் நின்னுச்சு.. சந்தேகம் வந்து, இவங்களை இறக்கி, கைகளை கட்டி காட்டுக்குள்ள வந்தா... இங்க இவ்வளவு கலவரம். என்னாச்சு தலைவரே.."

    "இல்லடா... பிளான்ல ஒரு சின்ன 'சிலிப்' ஆயிடுச்சு... அதனால என்ன... எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்..." - என கூறியவன், டக்கென்று பாய்ந்து இன்ஸ்பெக்டர் அழகரின் பிஸ்டலை கையில் எடுத்தான்.

    அனைவரையும், ரிவால்வரால் குறிவைத்தான். டேவிட் அருகில் வந்து, அவனது நெற்றிப்பொட்டில் ரிவால்வரை வைத்தவன், எல்லோருக்கும் கேட்கும்படியா கத்தினான்.

    "உங்களுக்கு எல்லாம் ஒரு குட்டிக்கதை சொல்லட்டா?"

    அதே சமயம் போலீஸ் ஸ்டேசனில் இருந்து ரங்கராஜன், தேவசகாயம், ராஜேஸ்வரி, லிசா இவர்களை கூட்டி வந்த காரின் பின்சீட்டில் இருந்து, மேரி இறங்கினாள்.

    சுற்றிலும் பார்த்து சூழ்நிலையை அனுமானித்த அவள் கண்களில் காடும்... காட்டுக்குள் கத்திய ராகேஷ் குரலும் சன்னமாய் கேட்டது. மெதுவாய் சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தாள்.

    காட்டுக்குள் ராஜேஷ் தொடர்ந்தான்.

    "இந்தக்கதையில நான் வில்லன் இல்ல. நிஜமா நான்தான் ஹீரோ!" –அனைவரும் அவனையே பார்த்தனர். நேராக திவ்யா அருகில் வந்தவன் அவளை பார்த்தான். "இந்த அழகு தேவதையை நான்தான் கட்டியிருக்கணும். பாளையங்கோட்டையில் என்னத்தான் இவங்கப்பா... இந்த ரங்கராஜன், திவ்யாவுக்கு மாப்பிள்ளையாக்க எங்கப்பா கிட்ட பேசினார். ஆனால் திவ்யா.. இந்த டேவிட்டை விரும்புறா அப்படின்னு தெரிஞ்சவுடனே, மனசு மாறிட்டார், இந்த ரங்கராஜன்... அம் ஐ கரெக்ட் மிஸ்டர் ரங்கராஜன்?"

    இப்போதுதான் ரங்கராஜனுக்கு இவன் ஏற்கனவே தான் பாளையங்கோட்டையில் திவ்யாவுக்கு பார்த்த மாப்பிள்ளை என்பது புரியுது.

    "அதுக்கா... கல்யாணம் முடிஞ்ச பொண்ணை கடத்திட்டு, போயி அவ கட்டியிருந்த தாலிய கட் பண்ணிட்டு, அவளுக்கு நீ வேறு தாலி கட்ட முடிவு செய்வியா..? அசிங்கமாயில்ல...!" ரங்கராஜன் கத்தினார்.

    "ஹலோ.. ரங்கராஜன்... ஏன் கத்துற...

    பி.பி எகிறிடபோகுது., இந்த காட்டுக்குள்ள டாக்டர் கூட வர லேட்டாகும்... பொட்டுனு போயிடப்போற... ரங்கராஜன் முறைத்தார். ராஜேஷ் தொடர்ந்தான். "அதான் திவ்யா காதலிச்ச அவ லவ் பண்ண டேவிட் இருக்கிற தெருவுக்கு 'ஷிப்ட்' ஆனேன்... அன்னியில இருந்து உங்களை அங்குல அங்குலமா 'வாட்ச்' பண்ணினேன்... என் நேரம் கச்சேரிக்கு கார்ல தனியா போனீங்க... நான் 'ஸ்கெட்ச்' போட்டு என் தேவதையை தூக்கிட்டேன்..."

    "ச்சீ... வாய மூடுடா! திரும்ப திரும்ப என்னை உன் தேவதைன்னு சொன்ன செருப்பு பிஞ்சுடும்...! "திவ்யா கத்தினாள்.

    "உசுரே நீதானே...!" –ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவது போல் உச்சஸ்தாயில் பாடினான் ராஜேஷ். பின் திவ்யாவிடம் திரும்பி, "இந்தப்பாட்ட நான் உன்னை நெனைச்சு நெனைச்சு பாடுவேன்... இப்ப சொல்லு நான் ஹீரோவா. வில்லனா?"

    சடாரென்று மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்த மேரி... ராஜேஷின் கையில் இருந்த பிஸ்டலை தட்டி விட... இதுதான் சமயம் என்று, டேவிட்டின் நண்பர்கள் பாய்ந்து ராஜேஷை பிடித்துக்கொண்டனர். ராஜேஷிடம் இருந்து பறந்து வந்த, பிஸ்டலை சரியாக கேட்ச் பிடித்தான் டேவிட். இப்போது பிஸ்டல் ராஜேஷை குறி வைத்திருந்தது...

    (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அதிகம்.
    • வாழு, வாழவிடு என்ற கொள்கைக்கு ஏற்ப நாமும் வாழ்வோம், சிட்டு குருவிகளையும் வாழ விடுவோம்.

    இன்று சிட்டுக்குருவிகளை பார்ப்பதே தற்போது அரிதாக உள்ளது. முன்பு கிராமப்புறங்களில் பரவலாக காணப்பட்டன. தற்போது அவை படிப்படியாக இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு அழிந்து கொண்டே வருகிறது. அழியும் இனத்தில் உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும். இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த தினத்தில் சிட்டுக்குருவிகள் பற்றி மதுரையை சேர்ந்த பறவைகள் நல ஆர்வலரும், ஆசிரியையுமான சா.வனிதா கூறியதாவது:-

    உலகில் வாழும் உயிரினங்களுள் மிக முக்கியமான உயிரினம் சிட்டுக்குருவிகள். அது ஒரு காட்டுயிரி என்றாலும் அவை பெரும்பாலும் மனித குடியிருப்புகளை ஒட்டியே வாழ்பவை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம்(ஐ.யூ.சி.என்.) கடந்த 2002-ம் ஆண்டு அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சிட்டுக்குருவியை சேர்த்தது. ஆனால் 2018-ம் ஆண்டு அதிக கவனம் தேவைப்படாத உயிர்களின் பட்டியலுக்கு மாற்றியது. செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி காணாமல் போவதாக பரவலாக ஒரு கூற்று உண்டு. ஆனால் உதகையில் செல்போன் கோபுரங்கள் உள்ள பல இடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதை காணலாம்.

    நகரமயமாதல் காரணத்தால் நமது குடியிருப்பு முறை மாறிப்போனதுதான் சிட்டுக்குருவிகள் குறைந்து போக முதன்மையான காரணம். ஓட்டு வீடுகளும், குடிசை வீடுகளும் இருந்தவரை அவைகளுக்கு கூடு கட்ட இடம் கிடைத்தன. ஆனால் நாம் கான்கிரீட் வீடுகளுக்கு மாறிய போது சிட்டுக்குருவிகள் இல்லாமல் போனது.



    சிட்டுக்குருவிகள் தானிய உண்ணிகள் என்றாலும் தனது குஞ்சுகளுக்கு முதலில் ஊட்டுவது சிறு புழுக்களையும், பூச்சிகளையும தான். தாவரங்கள் இருந்தால்தான் பூச்சிகள் இருக்கும். ஆனால் ஒரு செடி கூட வளர இயலாமல் சிமெண்டு மயமாக நமது இருப்பிடங்கள் மாறியதால் பூச்சிகளும், புழுக்களும் இல்லாமல் போயின. கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அதிகம். சிட்டுக்குருவிகளின் ஒலியை கேட்பதால் மக்களின் மன அழுத்தம் குறைவதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே ஆண்டுதோறும் மார்ச் 20-ந்தேதி இன்று(வியாழக்கிழமை) வரை உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. வாழு, வாழவிடு என்ற கொள்கைக்கு ஏற்ப நாமும் வாழ்வோம், சிட்டு குருவிகளையும் வாழ விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாம்பத்திய உறவு என்கிற அடிப்படையே பிரச்சனையாகும் போது குழந்தைபேறு கேள்விக்குறியாகி விடுகிறது.
    • குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டோமோ அப்போது தாம்பத்திய உறவில் எங்களுக்கு பிரச்சனை வந்துவிட்டது என்பார்கள்.

    குழந்தையின்மையில் சில பிரச்சனைகள் கேட்கும்போதே அப்படியா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். பாலியல் உறவுகளால் கூட குழந்தையின்மை ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு அடிப்படையே பாலியல் உறவு தான். ஆனால் பாலியல் உறவு என்பதே குழந்தையின்மைக்கு காரணமானால் எப்படி குழந்தைபேறு பெற முடியும்? இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் உறவுகள் அடிப்படையில் சரியாக இருந்தால்தான் குழந்தை பேறு உருவாகும்.

    பாலியல் பிரச்சனைகளும் குழந்தையின்மைக்கான ஒரு காரணம்:

    குழந்தையின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், குழந்தைபேறு சிகிச்சை பெற வரும் தம்பதியினர் எதிர்நோக்கும் பாலியல் பிரச்சனைகளும் குழந்தையின்மைக்கான ஒரு காரணமாகும். இதுதான் ரொம்ப பெரிய பிரச்சனையாகும். பல நேரங்களில் குழந்தைப்பேறு என்று வரும்போது பாலியல் உறவு என்பதே தம்பதியினரிடம் ஒரு பெரிய கேள்விக்குறியாக அமைகிறது.

    இன்றைக்கும் உலக அளவில் எடுக்கப்பட்ட பல ஆய்வுகள் சொன்ன ஒரு விஷயம், ரொம்ப வருந்தத்தக்க முக்கியமான தகவலை தருகிறது. குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் பலருடைய பாலியல் உறவுகளை வரையறுத்து இந்த ஆய்வுகள் செய்யப்பட்டன.

    இதில் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 58 முதல் 98 சதவீத பெண்களுக்கு இந்த பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழந்தைபேறு என்று வரும்போது பாலியல் உறவு என்பது ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. குழந்தைக்காக தாம்பத்திய உறவு கொள்வது என்பது, பெரிய அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.

    அதேபோல் ஆண்களை எடுத்துக் கொண்டால் 46 முதல் 58 சதவீத ஆண்களுக்கு குழந்தைபேறு என்று வரும்போது அவர்களின் தாம்பத்திய உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பாலியல் செயலிழப்பு என்கிற ஒரு முக்கியமான பிரச்சனையை அவர்கள் சந்திக்கிறார்கள். அதாவது குழந்தைபேறு என்று வரும்போது தாம்பத்திய உறவு பிரச்சனைகள் ஆண்களை அதிகமாக பாதிக்கிறது.

    குழந்தைபேறுக்கு அடிப்படையான விஷயமே கணவன், மனைவி இடையேயான தாம்பத்திய உறவு தான். இந்த தாம்பத்திய உறவில் பிரச்சனை என்றால் எப்படி குழந்தை பேறு பெறமுடியும்? இது ஒரு முக்கியமான விஷயம். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீத பெண்களுக்கும், 58 சதவீதம் ஆண்களுக்கும் பாலியல் பிரச்சனைகள் இருப்பது மிகப்பெரிய அளவாகும்.

    8 முதல் 10 மாதங்கள் தொடர்ந்து தாம்பத்திய உறவு:

    ஒரு தம்பதியினர் எந்த தடையும் இல்லாமல் 8 முதல் 10 மாதங்கள் தொடர்ந்து தாம்பத்திய உறவு கொள்ளும் போதுதான் குழந்தைபேறு பெற முடியும் என்பது பல ஆய்வுகளில் சொல்லப்பட்ட விஷயமாகும். அப்படி இருக்கும்போது பாலியல் உறவில் ஈடுபடுவதிலேயே பிரச்சனை இருந்தால் குழந்தைபேறு பெறுவது எப்படி சாத்தியமாகும்? இது ஒவ்வொரு தம்பதியினரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.



    இன்றைக்கும் குழந்தைபேறுக்காக, அதாவது ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்து பாலியல் உறவு கொள்ளும் போது தம்பதியினரிடையே பலவிதமான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை என்னிடம் சிகிச்சைக்கு வரும் தம்பதிகள் சொல்வதுண்டு. 'டாக்டர், எங்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. முதல் 2 வருடங்கள் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தோம். அப்போதெல்லாம் நாங்கள் தாம்பத்திய உறவின் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் எப்போது குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டோமோ அப்போது தாம்பத்திய உறவில் எங்களுக்கு பிரச்சனை வந்துவிட்டது' என்பார்கள்.

    'குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற நோக்கத்தில் உறவு கொள்ளும் போது என்னோட கணவருக்கு விறைப்புத்தன்மை குறைவாகி விடுகிறது. எங்களால் நேரத்துக்கு நேரம் தாம்பத்திய உறவு கொள்ள முடியவில்லை. சரியாக டாக்டர் சொல்கிற நேரத்திலோ அல்லது, கூகுளில் சொல்லப்படும் 14-வது நாளிலோ, சினைப்பையில் இருந்து முட்டை வெளிவரும் அண்டவிடுப்பு தினத்திலோ எங்களால் தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை என்று சொல்கின்ற தம்பதியினரின் எண்ணிக்கை அதிகம். இன்றைக்கும் குழந்தையின்மை சிகிச்சை முறைகளில் முக்கியமான ஒன்றாக நான் கருத்துகிற விஷயமே அவர்களுடைய தாம்பத்திய உறவு முறைகளை சீர்படுத்துவது தான். தம்பதிகள் முதலில் சிகிச்சை பெற வரும்போது அவர்களுடைய பாலியல் உறவு பற்றிய வரலாற்றை கேட்டால் அனைத்து நோயாளிகளும் வெளிப்படையாக சொல்கிற விஷயம், 'டாக்டர் நாங்கள் எப்போது குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டோமோ, அதற்காக எப்போது சிகிச்சைக்கு வந்தோமோ, அப்போதில் இருந்தே எங்களின் பாலியல் உறவு செயல்பாடு ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டது' என்பார்கள்.

    பாலியல் உறவுகளில் உள்ள 5 முக்கியமான விஷயங்கள்:

    இன்றைக்கும் குழந்தைபேறு என்று வரும்போது தம்பதிகளின் பாலியல் உறவுகளில் உள்ள செயல்பாடுகளை எடுத்தால் பலருக்கும் அவர்களுடைய விருப்பம், லூப்ரிகேஷன், உறவு கொள்ளுதல் உள்ளிட்ட எல்லாவிதமான விஷயங்களும் பாதிக்கப்படுகிறது. பாலியல் உறவுகளை பொருத்தவரை விருப்பம், தூண்டுதல், உச்சகட்டம், திருப்தி மற்றும் அதனுடைய வலி ஆகிய 5 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. இவை ஆய்வுகளில் சொல்லப்படுகிற விஷயம்.

    நல்ல முறையில் தாம்பத்திய உறவு நடைபெறும் போது கண்டிப்பாக குழந்தைபேறு வரும் என்று நாம் நினைக்கிற நிலையில், தாம்பத்திய உறவு என்கிற அடிப்படையே பிரச்சனையாகும் போது குழந்தைபேறு கேள்விக்குறியாகி விடுகிறது.

    எங்களுடைய மையத்தில் எடுத்த ஒரு ஆய்வில், 'கிட்டத்தட்ட 28 முதல் 35 சதவீத தம்பதியினருக்கு வரும் பிரச்சனை என்னவென்றால், குழந்தைபேறு விஷயத்துக்காக தாம்பத்திய உறவு கொள்ளும் போது, லூப்ரிகேஷன் வருவதில்லை. இதனால் உலர்வு தன்மை ஏற்படுகிறது' என்கிறார்கள்.

    உலர்வு தன்மையுடன் இருந்தால் ஏதாவது லூப்ரி கேஷன் பயன்படுத்துவார்கள். லூப்ரிகேஷன் பயன்படுத்தினால் ஆணின் உயிரணுக்கள் அதனுடைய உயிரோட்டத்தை இழந்துவிடும். ஏனென்றால் லூப்ரிகேஷன் உயிரணுக்களின் வாழ்க்கையை பாதிக்கும். அதனால் உயிரணுக்கள் இறந்து போகும் அல்லது உயிரணுக்களின் செயல்பாடு குறைந்துவிடும்.

    எனவே இந்த பிரச்சனைகள் தான் ஆண்கள், பெண்கள் இருவரும் தம்பதியினராக அதிகம் எதிர்நோக்குகிற விஷயம். அவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. இதனால் லூப்ரிகேஷன் வருவதில்லை. இதனால் அவர்கள் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.


    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    எனவே பாலியல் பிரச்சனைகள் கண்டிப்பாக குழந்தையின்மையை உருவாக்கலாம். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு சிகிச்சை முறைகள் எடுக்கும் போது கண்டிப்பாக மேற்கண்ட பிரச்சனைகளையும் எதிர்நோக்கலாம். எனவே பாலியல் செயலிழப்பு என்பது, குழந்தையின்மையினால் வரலாம். பாலியல் உறவு பிரச்சனைகளால் குழந்தையின்மை ஏற்படலாம்.

    விருப்பத்தின் பேரிலேயே தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும்:

    இந்த வகையில் தம்பதியினரின் அடிப்படையிலான பாலியல் பிரச்சனைகள் என்ன என்பதை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். பெண், ஆண் இருவரும் சிகிச்சை பெற வரும்போது முறையாக சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனை ஏன் வருகிறது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வழிகளை யோசிக்க வேண்டும்.

    சிகிச்சைக்கு வரும் பெண்ணுக்கு மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்து, இன்றைக்கு அண்டவிடுப்பு ஆகியிருக்கிறது என்று அவர்களிடம் தெரிவித்தால், அடுத்த நாளே அவர்கள் மீண்டும் வந்து மருத்துவர்களிடம் நிற்பார்கள். 'டாக்டர் நாங்கள் நேற்று தாம்பத்திய உறவே வைக்கவில்லை, எங்களுக்கு குழந்தை பாக்கியம் வருமா?' என்பார்கள்.

    எனவே தம்பதியினர் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், தாம்பத்திய உறவு என்பது இயற்கையாக கணவன், மனைவி இருவரின் விருப்பத்தின் பேரில் நடக்க வேண்டிய விஷயம். அப்படித்தான் அதில் ஈடுபட வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் கண்டிப்பாக உறவு கொள்வது என்பது இயலாத காரியம்.

    ஆண்களை பொருத்தவரைக்கும் பாலியல் உறவின் போது மன அழுத்தம் இருக்கக்கூடாது. தாம்பதிய உறவுக்கான சூழ்நிலைகள் சீராக இருக்க வேண்டும். குழந்தைபேறு என்பதை மனதில் இலக்காக வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டாலே பிரச்சனைகள் வரும். இந்த பாலியல் உறவு பிரச்சனைகள் இருக்கிற தம்பதியினரை முறையாக முழுமையாக பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு பாலியல் உறவில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ அதை சீர் செய்ய வேண்டும். பாலியல் உறவு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கான சிகிச்சைகள் என்னென்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

    • சனிப் பகவான் பற்றிய சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.
    • கோட்சாரத்தில் சனிபகவான் தரும் பலன்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.

    2025-ம் ஆண்டு துவங்கியதில் இருந்து அனைவரின் வாழ்க்கையும் சற்று பிரமிப்பாகவே உள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு வருட கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி யாகிறார்கள். அதாவது சனி, குரு, ராகு, கேது என வருட கோள்கள் இடம் பெயறுவதால்

    சற்று பய உணர்வுடன் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். மக்களின் மன நிலை இவ்வாறு இருக்க சனிப்பெயர்ச்சியே இந்த ஆண்டு கிடையாது என்ற புரளியை ஒரு பிரிவினர் உருவாக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். அவரவரின் அனுபவ அறிவுக்கு எட்டியதை சிலர் கூறுகிறார்கள். ஆனால் விண்வெளியில் உலா வரும் கிரகங்களிடம் "சனி பகவானே வாக்கியப் பஞ்சாங்கப்படி தாங்கள் அடுத்த ஆண்டு தான் நகர வேண்டும் " என்று கூற முடியுமா?

    இது ஒரு புறம் இருக்கட்டும். தற்போது சனிப் பகவான் பற்றிய சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.

    நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 15-ம் நாள், சனிக்கிழமை

    29-3-2025 அன்று இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி தனது சொந்த வீடான கும்ப ராசி பூரட்டாதி 3-ம் பாதத்திலிருந்து குருவின் வீடான மீன ராசி பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

    தனது 3-ம் பார்வையால் கால புருஷ 2-ம்மிடமான ரிஷப ராசியையும், 7-ம் பார்வையால் கால புருஷ 6-ம்மிடமான கன்னி ராசியையும்,10-ம் பார்வையால் கால புருஷ 9-ம்மிடமான தனுசு ராசியையும் பார்க்கிறார். வருட கிரகங்களின் பெயர்ச்சி பலன்கள் எல்லோருக்கும் குறைந்தது 3 மாதத்திற்கு முன்பே தெரியத்துவங்கிவிடும். அந்த வகையில் உங்களுக்கு கிரகப் பெயர்ச்சியின் தாக்கத்தை சில வாழ்வியல் நிகழ்வுகள் மூலம் நீங்களே உணர முடியும்.

    சனி பகவானுக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. விதிப்படி, வினைப்படி அவரவர் அனுபவிக்க வேண்டிய சுப, அசுப பலன்களை கோட்சாரத்தில் தனது நியாயத் தீர்ப்புகளை தயங்காமல் வழங்குவார். கோட்சாரத்தில் சனிபகவான் தரும் பலன்களை நான்கு வகையாக பிரிக்கலாம். ஏழரை சனி, கண்டகச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி.

    ஏழரை ஆண்டுகளில் ஒரு மனிதனை பிடிக்கும் போது ஏற்படுத்தும் கஷ்ட நஷ்டங்களை இரண்டரை ஆண்டுகளில் நிகழ்த்துவார் என்பதால் ஏழரைச் சனியினால் ஏற்படும் பாதிப்பை விட அஷ்டமச் சனியினால் ஏற்படும் பாதிப்பு அதிகம். 3 சுற்று அஷ்டமச் சனி, ஏழரைச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார்? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனிவராக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடுபவர்களும் இருக்கிறார்கள்.

    சனிப்பெயர்ச்சியால் நன்மை யாருக்கு

    ஒருவரின் ஜனன கால ஜாதகத்தை வைத்துக் கொண்டுதான் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது கெட்டது செய்யும் என்பதை முடிவு செய்ய வேண்டும். தற்போது சனி பகவான் மீன ராசிக்கு செல்வதால் ஒருவரின் சுய ஜாதகத்தில் மீனத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி கிரகங்கள் இருந்தால் அவருக்கு சனிப் பெயர்ச்சியால் பாதிப்பு உண்டு. அவர்களுக்கு நல்ல யோக தசாவாக இருந்தால் பாதிப்பின் அளவு குறையும். ஒருவரின் சுய ஜாதகத்தில் மீனத்தில் குரு, சுக்கிரன் இருந்தால் இந்த சனிப்பெயர்ச்சி அவர்களை பாதிக்காது. சனி அவர்களுக்கு 200 மடங்கு யோகமான ஏழரை, அஷ்டமத்துச் சனியாக நடக்கும்.

    ஐ.ஆனந்தி

     

    மீனத்திற்கு செல்லக் கூடிய சனிபகவானால் கீழ்கண்ட நல்ல பலன்கள் நடந்தால் அவர்களுக்கு ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி பாதிக்கவில்லை என பொருள்.

    தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

    இவர்களது திறமைகள் வெளி உலகத்திற்கு தெரியும் படியாக புகழ், அந்தஸ்துடன் இருப்பார்கள்.

    ஒன்றுக்கு மேற்பட்ட லாபகரமான தொழில் வாய்ப்புகள் தேடிவரும்.

    தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும்.

    நிலையான, நிரந்தரமான லாபம் நிறைந்திருக்கும்.

    அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு.

    அதிகார கவுரவ பதவிகள் தேடி வரும்.

    அரசியல் ஆதாயம் உண்டு.

    அரசாங்கத்திடம் பாராட்டும் புகழும் பெறுவார்கள்.

    புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள்.

    குல தெய்வமே குழந்தையாக பிறக்கும்.

    பிள்ளைகள் குல கவுரவத்தை காப்பாற்றுவார்கள்.

    பிள்ளைகள் அறிவாளியாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள்.

    புத்திரர்களால் நிம்மதி, சந்தோஷம் அடைவார்கள்.

    குல தெய்வ அருள் உண்டு.

    முன்னோர்களால், குலதெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

    சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள்.

    பூர்வீகச் சொத்தை பல தலைமுறையாக பயன் படுத்துவார்கள்.

    சிலர் அதிர்ஷ்ட வசத்தால் திடீர் பணக்காரர்களாக மாறுவார்கள்.

    அதிர்ஷ்டம், குன்றாத செல்வம், புகழ், கீர்த்தி உண்டு.

    குலப் பெருமை, கவுரவம் உண்டு.

    சொத்துக்கள் குவிந்து கொண்டே இருக்கும்.

    சொத்துக்கள் மூலம் நிரந்தர வருமானம் உண்டு.

    பல அடுக்குமாடி வீடு கட்டுவார்கள்,

    வீடு, வாகன வசதி உண்டு. உற்றார், உறவினர்களால் போற்றப்படுவார்கள்.

    பூர்வீகச் சொத்தில் வசிப்பார்கள்.

    இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத்துடனும், தன் நம்பிக்கையுடனும் இருக்கும்.

    தைரியம், தன்னம்பிக்கை, திடகாத்திரம், ஆரோக்கியம், இன்பம், மகிழ்ச்சி உண்டு.

    தன் சுய முயற்சியால் நல்ல பொருளாதார வளர்ச்சி உண்டு. இன்பம், செல்வம் அறிவு நிரம்ப பெற்றவர். தாய் வழி ஆதரவு உண்டு.

    தன்னை சார்ந்தவர்களும் உயர உதவுபவர்.

    ஜாதகரிடம் பொது நல சிந்தனை மிகுதியாக இருக்கும்.

    இடம் பொருள் ஏவல் பார்த்து வாக்கு பிரயோகம் செய்வார். அதிகாரமான தெளிவான பேச்சால் அனைவரையும் கவருபவர்.

    தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும்.

    எப்பொழுதும் தன் சுய பெருமைகளைப் பற்றி பிறரிடம் பேசிக் கொண்டே இருப்பார்.

    மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.

    இக்காலகட்டத்தில் அவர்கள் பணம் பொருளாதாரம் அதிகரிக்கும். வீடு வாகனம் தொழில் என அபிவிருத்தி அடையும்.

    கீழ்கண்டவற்றில் ஏதேனும் சில விசயங்கள் நடந்தால் உங்களுக்கு சனி பகவானின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். எதை செய்தாலும் தவறாகவே முடியும். கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும்.

    வாழ்வில் உழைத்து உயர்வான நிலைக்கு சென்றவர்கள் கூட பெரும் வீழ்ச்சியை சந்திப்பார்கள்.

    தொழிலில் எட்ட முடியாத பிரமாண்ட வளர்ச்சியை கொடுத்து மீளமுடியாத திடீர் வீழ்ச்சி, இழப்பு ஏற்படலாம்.

    சொந்த ஊரில் பூர்வீக ஊரில் பூர்வீக சொத்தில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

    தொழில், உத்தியோக ரீதியாக விரும்பத்தகாத இடத்தில் சென்று வாழ நேரிடும்.

    வேற்று மொழி பேசுபவர்கள் மத்தியில் வாழும் நிலை. அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு.

    கொடுக்கல் வாங்கலில் தடை, தாமதம் ஏற்படும்.

    செல்வாக்கு, புகழ் அந்தஸ்து கெடும்.

    உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு எதிராளிக்கு கிடைக்கும்.

    உழைப்பது நீங்களாக இருக்கும், உழைத்த கூலியை பெறுவது வேறு நபராக இருப்பர்.

    குல தெய்வ அனுகிரகம் குறைவது. சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்து குறைந்த ஊதியத்தை பெறுதல்.

    சனி அசுப வலிமை பெற்றால் கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வீகத்தில் வாழ முடியாத நிலை உண்டாகும்.

    குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை இன்மை ஏற்படும்.

    பிறரை அண்டி பிழைத்தல் போன்ற நிலை நீடிக்கும்.

    கண் தொடர்பான பிரச்சனை இருக்கும்.

    பூர்வீகத்திற்கும் குல தெய்வ கோவிலுக்கும் சென்று வர முடியாது.

    நிம்மதியை குலைக்கும் குழந்தைகளே பிறக்கும். பிள்ளைகளால் புகழ், அந்தஸ்து கவுரவம் குறையும்.

    தன் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாகனம், சொத்து சுகம் போன்ற வசதிகளை அடைவார்கள். ஆனால் இவை அனைத்தையும் இளைய மனைவிக்கு அதிக செலவு, விரயம் செய்ய நேரும்.

    கடன் தொல்லை உண்டு.

    எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் இருக்கும். தொழிலுக்காக கடன் பட நேரும் அல்லது. தொழில் கடனை அடைக்க முடியாது.

    சிலர் கடனுக்கு பயந்து தலைமறைவாக வாழ நேரும்.

    அதிர்ஷ்டம் . புத்திக்கூர்மை குறைவுபடும்.

    புத்திர தோஷத்தால் சிலருக்கு வம்சம் தலைக்காது. குல தெய்வ அருள் கிடைக்காது.

    வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருப்பார்கள். பிறரை நம்ப மாட்டார்கள். ஞாபகசக்தி குறையும்.

    திறமையை வெளிப்படுத்த முடியாது

    எவ்வளவு பணம் கிடைத்தாலும் தங்காது.

    நினைத்ததை செயல்படுத்த முடியாத வகையில் தடை இருக்கும்.

    சிலர் படித்த படிப்பிற்கு தகுந்த தொழில், வேலை கிடைக்காது.

    பரம்பரையாக அடிமையாக கஷ்டமான வேலையில் சொற்பமான பணம் சம்பாதிப்பார்கள்.

    நன்கு படித்திருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத தகுதிக் குறைவான இடத்தில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும்..

    சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை தொழில் செய்ய நேரும். வம்பு வழக்கு செய்யாத குற்றத்திற்கு தண்டனை. கடனால், நோயால், ஜாமீன் பிரச்சனையால் நிம்மதி இழக்கிறார்கள்

    ஆயுள் தோஷத்தை கூட ஏற்படுத்தும்.

    சிலருக்கு எலும்பு மூட்டு நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படலாம்.

    பய உணர்வால் மன உளைச்சல் ஏற்படும்.

    யாரையும் மதிக்காமல் சுதந்திரமாக செயல்பட கூடியவராக இருப்பார்.

    ஒரு பிரச்சனை தீருவதற்குள் அடுத்த பிரச்சனை காத்துக் கொண்டு இருக்கும்.

    பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல்,

    கணவன், மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சனைகள், சந்தேகங்கள். உறவினர்களுடன் பகை, வெளியே சொல்ல முடியாத கஷ்டம்.

    வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கண்டறிய முடியாத கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். உணவை பார்த்தால் வெறுப்பு.

    சாப்பிட பிடிக்காமல் போவது.

    எல்லோரிடமும் எரிந்து விழுவது.

    கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.

    இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிக முதலீடு செய்து தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. விதிக்கு கட்டுப்பட்டு கிரகங்கள் செயல்படுவதால் இவர்கள் வாழ்வில் எந்த விதத்திலும் சிறப்படைவதில்லை. உரிய பரிகார வழிபாட்டு முறையை கடைபிடிக்க இன்னல்கள் குறையும்.

    பரிகாரம்

    சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

    சனிக்கிழமை அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. உண்ணாவிரதம், மவுன விரதம் இருப்பது மேலும் சிறப்பு.

    செல்: 98652 20406

    ×