என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,146 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 18.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
     
    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,146 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,537 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,552 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
    பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்க அதிவிரைவு கருவிகளை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனாம் பகுதியில் ஆந்திராவை போன்று ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் பிற்பகலிலேயே கடைகள் மூடப்படுகின்றன. இதன் காரணமாக வியாபாரம் தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே புதுவையில் உள்ளதை போன்று நேரங்களை கடைப்பிடிப்பது குறித்து தலைமை செயலாளரிடம் பேசியுள்ளேன்.

    பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடை வெளியை பின்பற்றுவது தொடர்பாக இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது நிறைய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அதன்படி 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக மாற்ற உள்ளோம். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கானவர்களை மட்டும் அனுமதிக்க கூறி உள்ளேன். அவர்களுக்கு உதவியாக ஒருவரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் இப்போது நிறைய கூட்டம் காணப்படுகிறது. அங்கு வருபவர்கள் அரசின் கட்டுப்பாடுகளை மதித்து சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை. இதனால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

    புதுவையில் தற்போது தொற்று பாதிப்பு என்பது சற்று குறைவாகவே உள்ளது. இதே நிலையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்காவிட்டால் பிற மாநிலங்கள் போல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து விடும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியாங்குப்பம்:

    புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுக முகத்துவாரங்களை தூர்வார மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், குமரி மாவட்டம் குளச்சல் தேங்காய்துறை பட்டினம் துறைமுகத்தில் தொடர் போராட்டத்தின்போது இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்காரவேலர் முன்னேற்ற கழகம் சார்பில் வீராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்பாளர் தேவநாதன் தலைமை தாங்கினார். தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் சத்தியானந்தம் வரவேற்றார். துணைச் செயலாளர் அன்பரசு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இவர்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தி, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் பொருளாளர் வீரசேகர் நன்றி கூறினார்.
    மேட்டுப்பாளையம் மீன் மார்க்கெட், தட்டாஞ்சாவடி தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் நகரப் பகுதியில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த பொதுமக்கள், வியாபாரிகளிடம் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தினார்.

    பின்னர் மரப்பாலம் சந்திப்பு பகுதிக்கு சென்று அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் தற்போது போதிய அளவுக்கு சவாரி கிடைக்கிறதா? என்று நாராயணசாமி கேட்டார். அதற்கு அவர்கள், கொரோனா தொற்று காரணமாக வருவாய் இழந்து பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அரசு சார்பில் நிவாரணம், ஆட்டோக்களுக்கான வரி, தகுதி சான்றிதழ் போன்றவற்றில் சலுகை தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பயணிகளை முகக் கவசம் அணியச் செய்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர்களிடம் நாராயணசாமி அறிவுறுத்தினார். அதன்பின் மேட்டுப்பாளையம் மீன் மார்க்கெட், தட்டாஞ்சாவடி தற்காலிக காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வந்து இருந்த பொதுமக்கள், வியாபாரிகளிடம் கொரோனா குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
    புதிய கல்வி கொள்கை தொடர்பாக மக்கள் கருத்தை கேட்டபிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று கூறியதாவது:-

    புதிய கல்வி கொள்கை தொடர்பாக மக்கள் கருத்தை கேட்டபிறகே நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    கொரோனா சூழலில் மாணவர்கள் கல்வி பயில மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும்.

    புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,806 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 17,50,723 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 37,403 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,806ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 161, காரைக்காலில் 7, ஏனாமில் 32 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 2,309 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து  குணமடைந்துள்ளனர். 1,445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுவையில் மேலும் 28 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.லாஸ்பேட்டை பெத்துச்செட்டிபேட்டை கலைவாணி நகர் முதல் குறுக்குத்தெரு, 2.நெசவாளர் நகர் பாரதிதாசன் வீதி, 3.நெசவாளர் நகர் கலைமகள் வீதி, 4.பெத்துச்செட்டிபேட்டை பொன்னியம்மன் கோவில் வீதி, 5.கருவடிக்குப்பம் வாத்தியார் வீதி, 6.பசும்பொன் நகர் 2-வது குறுக்குத்தெரு, 7.மேரி உழவர்கரை சிவசக்தி நகர் 2-வது குறுக்குத்தெரு, 8. மூலக்குளம் பசும்பொன் நகர் 3-வது குறுக்குத்தெரு, 9. உழவர்கரை 4-வது குறுக்குத்தெரு, 10.தர்மாபுரி கோவில்மணியம் வீதி, 11.அரும்பார்த்தபுரம் வில்லியனூர் முதன்மை சாலை, 12.குண்டுப்பாளையம் சடையப்பர் வீதி முதல் குறுக்குத்தெரு, 13.எல்லைப்பிள்ளைச்சாவடி எஸ்.பி.ஐ. காலனி முதல் குறுக்குத்தெரு, 14.சித்தானந்தா நகர் 3-வது குறுக்குத்தெரு, பிரக்ருதி அபார்ட்மென்ட் 4-வது தளம், 15.ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் மலர் அப்பார்ட்மென்ட், 16.ஜவகர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 17.திலாசுப்பேட்டை கனகன் ஏரி சத்தியமூர்த்தி நகர், 18.சாரம் அவ்வை நகர் 12-வது குறுக்குத்தெரு, 19. கிருஷ்ணா நகர் 14-வது குறுக்குத்தெரு, 20.லாஸ்பேட்டை சங்கரதாஸ்சுவாமிகள் நகர் 2-வது குறுக்குத்தெரு, 21.சாரம் 12-வது குறுக்குத்தெரு கிருஷ்ணா நகர் 7-வது குறுக்குத்தெரு, 22.வினோபா நகர் களத்துமேடு மாரியம்மன் கோவில் வீதி, 23.லாஸ்பேட்டை புதுப்பேட்டை மேட்டுத்தெரு, 24.சாரம் வடக்கு கிருஷ்ணா நகர் விக்டோரியா அப்பார்ட்மென்ட், 25.கதிர்காமம் பாரதி வீதி, 26.தட்டாஞ்சாவடி கஸ்தூரிபாய் நகர், 27.செல்லப்பெருமாள்பேட்டை சீனுவாச கவுண்டர் வீதி, 28.தட்டாஞ்சாவடி ஆர்.கே. நகர் திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மைய வளாகத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மைய வளாகத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அரசு சுகாதாரத்துறை, அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் மேற்பார்வையில் இந்த முகாம் நடந்தது. 

    டாக்டர்கள் அருள்செல்வம், நளினி, மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் வெங்கடேஸ்வரன், ரமேஷ், முத்துவேல் மற்றும் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, தொகுதி நிர்வாகிகள் ஆறுமுகம், பழனிச்சாமி, சுரேஷ், ராஜா, லலித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 300-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
    உப்பளம் தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரிடம் மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி அளித்துள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    உப்பளம் தொகுதியில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. யாருக்கு தொற்று இருக்கிறது? இல்லை என்பது தெரியாமல் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே கொரோனா தொற்று மருத்துவ முகாம் நடத்தி, மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை தவிர்க்க வேண்டும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வீடு வீடாக ஓமியோபதி மாத்திரைகள் வழங்கவேண்டும். மேலும் தொகுதியில் உள்ள மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு குறிப்பாக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இம்மாத இறுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    அரசு நலவழித்துறை, குயவர்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம்- ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி சார்பில்  புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், திட்ட இயக்குனர்கள் டாக்டர் ஸ்ரீராமுலு, டாக்டர் ரமேஷ், கோவிட் பொறுப்பு டாக்டர் ஜான்சன் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நல்வாழ்வு மைய பொறுப்பு மருத்துவ அதிகாரி அஸ்வினி வரவேற்றார். முகாமில் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அங்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பிம்ஸ், மகாத்மாகாந்தி மருத்துவ கல்லூரி, ஜிப்மர் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அனைவரும் பரிசோதனை செய்தால் தான் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க முடியும். இதை கருத்தில் கொண்டு நடமாடும் பரிசோதனை முகாமை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

    கொரோனா நோயாளிகளை 5 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல் பிரிவில் அறிகுறி உள்ளவர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிப்பது, சிறிது பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பவர்கள், நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிட சிரமப்படுபவர்கள், நீரிழிவு, ரத்த கொதிப்பு உள்ளவர்கள் என பிரித்து அவர்களுக்கு ஏற்ப சிகிச்சை அளித்து வருகிறோம்.

    தொற்றால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இது 63 சதவீதம் ஆகும். அதுபோல் 49 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதத்தை குறைக்கவும், குணமடைந்து செல்வோரின் சதவீதத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இம்மாத இறுதியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கேற்ப படுக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். மேலும் தேவைப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரியில் இன்று மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 16,95,988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 764 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 10,94,374 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,65,103 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 139 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,593 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர் நாராயணசாமி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி மாநிலத்தில் இன்றுடன் அன்லாக்-2 தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும், ‘‘மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படும். இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி. புதுச்சேரிக்குள் வருபவர்களுக்கும், வெளியே செல்பவர்களுக்கும் இ-பாஸ் கட்டாயம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
    ×