என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் இன்று மேலும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,467 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை  தாண்டி உள்ளது. மொத்தம் 16,38,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 779 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,45,318 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 174 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3,467 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 2,095 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவாது என்று ஜிப்மர் டாக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் நலத்துறையின் துறைத்தலைவர் டாக்டர் ஆதிசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் (1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை) தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தாய்ப்பால் விழிப்புணர்வு வார மையக் கருத்து ‘ஆரோக்கியமான உலகிற்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்’ என்பதாகும்.

    குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் சரியான அளவிலும் விகிதத்திலும் நிறைந்துள்ளது. குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மூளை வளர்ச்சி ஆகியவை நன்றாக இருக்கும். நோய் தொற்றுகள் ஏற்படாது. தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

    கொரோனா காலத்திலும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும். தாய்ப்பால் மூலம் கொரோனா தொற்று பரவுவது கிடையாது. கொரோனா பாதிப்பு தாய்க்கு இருந்தாலும் தாயையும், சேயையும் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    கொரோனா காலத்தில் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் முன் தங்கள் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தாய்மார்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும்.

    பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பால் தானம் கொடுக்காலம். தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தது போக எஞ்சிய தாய்ப்பால் வங்கிக்கு வழங்குவதால் தானம் செய்பவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. மேலும் அவர்களுக்கு பால் சுரப்பது அதிகரிக்கும். தானமாக பெறப்படும் பால் மூலம் குறைமாத குழந்தைகளும், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளும் பயனடைவார்கள்.

    தாய்மார்கள் நன்கு பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்களிடமிருந்து தாய்ப்பால் பெறப்படும். தாய்ப்பால் நன்கு கொதிக்க வைக்கப்பட்டு பதப்படுத்தப்படுவதால் அதில் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை. சுத்திகரித்து பரிசோதிக்கப்பட்ட பின்னரே குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 122 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை  நெருங்கி உள்ளது. மொத்தம் 15,83,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 775 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,20,582 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,28,242 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 122 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 122 பேருக்கு கொரோனா உறுதியானதால், புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,293 ஆக உயர்ந்துள்ளது.

    புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,953 பேர் குணமடைந்துள்ளனர்.  மருத்துவமனைகளில் 1,292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  

    இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 166 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,171 ஆக உயர்ந்து உள்ளது.

    இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் புதுச்சேரியில் 154 பேரும், காரைக்காலில் 12 பேரும் அடங்குவர்.

    மாநிலத்தில் நோய்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,869 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 1,112 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 47 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநில மக்கள் சமூக இடைவேளி கடைபிடிக்குமாறும் மற்றும் முககவசம் அணிந்து செல்லுமாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
    கொரோனா தடுப்பு மருந்தை எப்போது கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை. அதுவரை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பது வருத்தமளிக்கிறது. அவருடைய இறப்பு பாலனின் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் பெரிய இழப்பாகும். மாநிலத்தில் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் சுகாதாரத்துறையின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. எனவே தேவைக்கேற்ப டாக்டர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். வெகுவிரைவில் டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள். தேவையான உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் பரிசோதனை முடிவு வர 2 நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே பரிசோதனை முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளும் வகையில் உபகரணங்கள் ஒரு வாரத்துக்குள் வாங்கப்பட்டு பரிசோதனைகள் தொடங்கப்படும்.

    புதுவை ஜிப்மரில் 1000 பேருக்கும், இந்திராகாந்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 250 பேருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இது உயர்த்தப்படும்.

    தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் சுமார் 200 பேர் அளவுக்கு பரிசோதனை செய்யும் மையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி புதுவையில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் தினமும் 1,500 முதல் 2,500 வரை பரிசோதனை மேற்கொள்ள முடியும். அதற்கு தேவையான படுக்கைகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்தமாக சுமார் 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தனியார் ஓட்டல்களிலும் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பரிசோதனை முடிவுகள் 30 நிமிடத்தில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் வந்துள்ளன. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது மட்டும் போதாது. மக்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளி அவசியம். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதுடன் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்து இருந்தால் தான் கொரோனாவை விரட்ட முடியும். தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிப்பார்கள் என்பது தெரியவில்லை. அதுவரை விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் மேலும் 21 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.பெரியகாலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை, ஜோதி வள்ளலார் சாலை, 2.லாஸ்பேட்டை கென்னடி நகர் முதல் குறுக்குத்தெரு, 3.ஆனந்தா நகர் அன்னை வீதி, 4.குண்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி, 5.சண்முகாபுரம் வி.வி.சிங் நகர் திரு.வி.க. நகர், 6.மூலக்குளம் சாலைவீதி, 7.பிள்ளைச்சாவடி ஆசிரியர் வீதி, 8. எல்லைப்பிள்ளைச்சாவடி ரத்னா நகர் 4-வது குறுக்குத்தெரு, 9. பூமியான்பேட்டை ஜவகர் நகர் எச் பிளாக், 10.ஜவகர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு எம் பிளாக், 11.லாஸ்பேட்டை சாந்தி நகர் விநாயகர் கோவில் வீதி, 12.கிருஷ்ணா நகர் ஜெனோ பிளாசம் அப்பார்ட்மென்ட் பி கிராஸ், 13.நேருவில் நகர் தில்லை நடராஜன் வீதி, 14.திலாசுப்பேட்டை சத்தியமூர்த்தி நகர், 15.சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பு இ பிளாக், 16.தர்மாபுரி கோவில் மணியம் வீதி, 17.சண்முகாபுரம் வி.வி.சிங் நகர் காமராஜர் வீதி, 18.தர்மாபுரி கங்கையம்மன் கோவில் வீதி, 19.தட்டாஞ்சாவடி பிரியதர்ஷினி நகர் 2-வது முதன்மை சாலை முதல் குறுக்குத்தெரு, 20.கதிர்காமம் கல்யாணசுந்தரம் நகர், 21.கதிர்காமம் சுப்ரமணியர் கோவில் வீதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி சட்டசபை மேலும் 2 நாள்களுக்கு மூடப்படுவதாக சட்டசபை செயலர் முனுசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    இந்தியாவிலேயே இல்லாதவகையில் திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.வுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியான நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் எம்.எல்.ஏ. உதவியாளர், சட்டசபை காவலர்கள் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், புதுச்சேரி சட்டசபை மேலும் 2 நாள்களுக்கு மூடப்படுவதாக சட்டசபை செயலர் முனுசாமி அறிவித்துள்ளார்.

    இதையடுத்து புதுச்சேரி சட்டசபை வளாகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன.

    அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை  நெருங்கி உள்ளது. மொத்தம் 14,83,157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 47,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 654 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 9,52,744 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 35175 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,96,988 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 141 பேருக்கு கொரோனா உறுதியானதால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,011-ஆக உயர்ந்துள்ளது.

    புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,782 பேர் குணமடைந்துள்ளனர். 1,182 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 47 பேர் பலியாகி உள்ளனர்.

    புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    இந்தியாவிலேயே இல்லாதவகையில் திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.வுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

    சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்கு தொற்று பரவி உள்ளது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்கும், மற்றவர்களுக்கான வேலைகளிலும் விழிப்புடன் இருக்கிறார்கள். தங்களுடைய வேலை, வாழ்க்கை, உணவு, பகிர்வு, கொண்டாட்டங்கள், நிறுவனம் வைத்திருத்தல், ஷாப்பிங், தனிப்பட்ட சுகாதாரம் போன்ற அவர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் கொரோனா தொற்றை தடுக்கக்கூடிய மருந்தினை கண்டுபிடிக்கும் வரை அதை அலட்சியம் செய்யும் எந்த சிறிய செயலிலும் ஈடுபட வேண்டாம். இதனால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.

    இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொள்ளும் அனைவரும் உடனடியாக பாதிக்கப்படுவார்கள். இதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிமுறையை பின்பற்றுவது பற்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தெரியாது. குறிப்பாக முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும், அரசு நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளையும், சிகிச்சையையும் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்.

    புதுச்சேரியில் கொரோனா சவால் மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் இது தமிழ்நாட்டு மக்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படவில்லை. மக்கள் தங்கள் சுய நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் சுய ஒழுங்குடன் இருக்க வேண்டும். விதிகளை மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தில் செய்யக்கூடாது. உங்களுடைய பாதுகாப்புதான் உங்களுக்கு இன்றியமையாதது.

    கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காகவும், மற்றவர்களுடைய பாதுகாப்பிற்காகவும் கண்டிப்பாக அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். தரவுப்படி புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள நோயாளிகளுக்கான சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்போது ஒரு சமூக ஆதரவு அமைப்பாக இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான எந்த உதவிக்கும் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும். அனைவருடைய ஒட்டுமொத்த பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்புடன் செயல்பட்டால் புதுச்சேரியில் கொரோனாவை பரவலை கட்டுப்படுத்த முடியும்.

    இந்த நோயினால் எளிதில் பாதிப்பு ஏற்படக்கூடியவர்கள் குழந்தைகள், வயதானவர்கள் தான். ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் ஆகியோர் இந்த கொரோனாவை எதிர்த்து போராட வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. ஆயுர்வேத துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஷ் மருந்துகளை வீட்டில் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். கொரோனாவை எதிர்த்து போராடுவது இப்போது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அனைவரும் பொறுப்பாக இருந்து தங்களது கடமையை ஒவ்வொருவரும் முழுமையாக ஆற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    வரும் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக உள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் தொற்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் விதிமுறைபடி 10 லட்சம் மக்கள்தொகை இருந்தால் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும். 14 லட்சம் மக்கள்தொகை இருக்கும் நிலையில் புதுவையில் ஏற்கனவே 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது.

    அந்த வகையில் பிற மாநிலங்களைவிட புதுவையில் இரு மடங்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் இங்கு நோயாளிகளை எளிதில் அடையாளம் காண முடிகிறது. இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி, பிம்ஸ், வெங்கடேஸ்வரா, லட்சுமி நாராயணா, விநாயகா மிஷன் ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் உமிழ்நீர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் தலா 150 முதல் 300 பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுவையிலும் வரும் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும். எனவே, சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகள் தேவைப்படுகிறது. அரசு சார்பில் ஜிப்மர், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. சில ஓட்டல்களில் கூட தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா நடவடிக்கைக்கு மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தேவையான உபகரணங்களை வாங்க நிதி வழங்கப்பட்டுள்ளது. மாகி, காரைக்காலில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன் எதிரொலியாக ஏனாம் பிராந்தியத்திலும் பாதிப்பு உயர்ந்துள்ளது.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு கொரோனா வந்ததால் சட்டசபை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் திறந்த வெளியில் சட்டசபையை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முக கவசம் அணியாமல் வந்ததால் தான் சட்டசபையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முக கவசம் அணியாமல் தான் சட்டசபைக்கு வந்தார். முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தினேன். இப்போது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். நாங்களும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம்.

    வெளிமாநிலத்தில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக புதுவைக்கு வருவோரால் கொரோனா பரவுகிறது. கொரோனாவுக்கு மருந்து இல்லை. இப்போது தான் ஆராய்ந்து வருகிறார்கள். எனவே விதிமுறைகளை கடைபிடித்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்தியாவிலேயே இல்லாதவகையில் திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.வுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொரோனா தொற்று உறுதியான பாலன் (67) புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
    ×