என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  புதுச்சேரியில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  புதுச்சேரி:

  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன.

  அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

  இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை  நெருங்கி உள்ளது. மொத்தம் 14,83,157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  கடந்த 24 மணி நேரத்தில் 47,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 654 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக உயர்ந்துள்ளது.

  இதுவரை 9,52,744 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 35175 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,96,988 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

  இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 141 பேருக்கு கொரோனா உறுதியானதால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,011-ஆக உயர்ந்துள்ளது.

  புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,782 பேர் குணமடைந்துள்ளனர். 1,182 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 47 பேர் பலியாகி உள்ளனர்.

  Next Story
  ×