என் மலர்
புதுச்சேரி
புதுவையில் நேற்று 5 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
இதில் புதிதாக 2 ஆயிரத்து 446 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் ஆயிரத்து 870, காரைக்காலில் 470, ஏனாமில் 83, மாகியில் 23 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 79, காரைக்காலில் 37, ஏனாமில் 16, மாகியில் 14 பேர் என 146 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் ஆயிரத்து 388, காரைக்காலில் 77, ஏனாமில் 6, மாகியில் 26 பேர் என ஆயிரத்து 497 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 347 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 11 ஆயிரத்து 910, காரைக்காலில் 2 ஆயிரத்து 474, ஏனாமில் 388, மாகியில் 150 பேர் என 14 ஆயிரத்து 922 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 15 ஆயிரத்து 68 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவை ஜமீன்தார் கார்டனை சேர்ந்த 69 வயது ஆண், மரியாள் நகரை சேர்ந்த 73 வயது முதியவர், காரைக்காலை சேர்ந்த 60 வயது பெண் என 3 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 901 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2&வது தவணை உள்பட 15 லட்சத்து 18 ஆயிரத்து 541 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள் ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு அடுத்தடுத்து 2 நாளில் 3 பேர் பலியானார்கள். அதன் பின்னர் கடந்த 19&ந் தேதி மற்றும் 20&ந் தேதிகளில் தலா ஒருவர் மட்டுமே பலி யானார்கள்.
இப்போது மீண்டும் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளதால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எதிராளிகளை கொல்ல பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் சண்முகாநகர் பாய்தோப்பில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக லாஸ் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்&இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் அந்த கும்பலை சேர்ந்த அனைவரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் 4 வீச்சரிவாள்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் வெடி பொருள், திரி, நூல்கண்டு போன்றவற்றை வைத்திருந்தனர்.
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து பிடிப்பட்ட கும்பலிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடியான பொடிமாஸ் என்ற சரத்(வயது28), செல்லப்பெருமாள் பேட் ஊத்துக்காட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த வினோத்(27) மற்றும் மாறன் என்ற லோகபிரசாந்த்(20), பாலு என்ற பாலசந்தர், லாஸ்பேட்டை நாவலர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்(29), கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்மா என்ற தர்மசிவம்(23) என்பது தெரியவந்தது.
விசாரணையில் இவர்கள் எதிராளிகளை வெடிகுண்டு தயாரித்து கொலை செய்ய வீச்சரிவாள்களுடன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ரவுடி பொடிமாஸ் என்ற சரத் மற்றும் வினோத் ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு மற்றும் வெடிகுண்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுவையில் வீட்டில் காசு வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ-.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை செயிண்ட் தெரேசா வீதியில் ஒரு வீட்டில் கும்பல் காசு வைத்து சூதாடுவதாக பெரியகடை போலீசாருக்கு ரககிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் வீட்டில் சூதாடிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற பழனி(49), ரங்கப்பிள்ளை வீதியை சேர்ந்த ரமேஷ்(42), கோவிந்த சாலை புதுநகரை சேர்ந்த கோபி(38), நயினார்மண்டபம் நாகம்மாள் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன்(45), திருச் சிற்றம்பலம் கூட்டுரோட்டை சேர்ந்த ரவி(51) மற்றும் நயினார்மண்டபம் மூகாம்பிகை நகரை சேர்ந்த ஆறுமுகம்(43) என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் சூதாட்ட பணம் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வில்லியனூர் அருகே அகரம் அய்யனார் கோவில் அருகே 3 பேர் காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர் அவர்களை வில்லியனூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரபா(37), ஏழுமலை(47), முத்தமிழ்(37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் சூதாட்ட பணம் ரூ-730 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் அண்ணன்-தம்பியை கத்தி மற்றும் சாவியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் ஆனந்தாநகர் தாகூர் வீதியை சேர்ந்தவர் ராம மூர்த்தி (வயது60). இவர் திலாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணாசிங் என்பவருக்கு பணம் கடன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கிருஷ்ணாசிங் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வில்லை என தெரிகிறது.
மேலும் கிருஷ்ணாசிங் தான் வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்துக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராம மூர்த்தி தனது தம்பி செல்வகுமாரிடம் கோரிமேடு தட்சணாமூர்த்திநகரில் உள்ள வீட்டுமனையை பார்க்க சென்றார். அப்போது அங்கு செல்லும் வழியில் கிருஷ்ணாசிங் எதிரில் வந்தார்.
இதையடுத்து கிருஷ்ணாசிங்கை தடுத்து நிறுத்தி ராமமூத்தியும் அவரது தம்பி செல்வகுமாரும் எங்களிடம் ரூ-.4 லட்சத்தை வாங்கிகொண்டு வீட்டை காலி செய்து விட்டு எங்கு சென்றாய் என கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணாசிங் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் இதுபற்றி தனது மகனுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கிருஷ்ணாசிங் மகன் சிலருடன் அங்கு வந்தார். அவர்கள் இரும்பு பைப்பால் ராமமூர்த்தியையும் அவரது தம்பி செல்வகுமாரையும் சரமாரியாக தாக்கினர்.
மேலும் ராமமூர்த்தியை கத்தியாலும் செல்வகுமாரை மோட்டார் சைக்கிள் சாவியாலும் குத்தினார்கள். இதில் வலி தாங்காமல் இருவரும் அலறி போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றதால் கிருஷ்ணாசிங், அவரது மகன் மற்றும் அவர்களுடன் வந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காய மடைந்த ராமமூர்த்தி மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து ராமமூர்த்தி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன்&தம்பியை கத்தி மற்றும் சாவியால் குத்திய கும்பலை தேடி வருகிறார்கள்.
புதுவை கதிர்காமத்தில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் புனிதவேல். இவர் புதுவையில் உள்ள தனியார் மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் மகேஷ் பூபதி (வயது19). இவர் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 19-ந் தேதி புனிதவேல் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். 21- ந் தேதி அனைவரும் வீடு திரும்பினர். அப்போது தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மகேஷ்பூபதி கூறியதால் அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு புனிதவேல் தனது மனைவி மல்லிகாவிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
அதன்படி மகேஷ்பூபதியை தனியார் ஆஸ்பத்திரிக்கு மல்லிகா அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்னர் மகனை வீட்டில் ஓய்வு எடுக்குமாறு கூறி விட்டு மல்லிகா வேலைக்கு சென்றார். மகேஷ்பூபதியுடன் அவரது தங்கை ராஜேஸ்வரி வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் மாலை 5 மணியளவில் மகேஷ்பூபதி திடீரென வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். இதனை பார்த்த அவரது தங்கை ராஜேஸ்வரி உடனே தனது தந்தை புனிதவேலுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து புனிதவேல் வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகேஷ்பூபதியை தூக்கில் இருந்து மீட்டு கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மகேஷ்பூபதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேதனையடைந்த மகேஷ்பூபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது தந்தை புனிதவேல் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் புதுவை சாரம் தென்றல் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சுமதி (வயது40). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நோய் கொடுமை அதிகமானதால் சுமதி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அப்போது வீட்டில் இருந்த தனது மகன் மோகனை கடைக்கு சென்று காய்கறி வாங்கி தருமாறு அனுப்பிவிட்டு படுக்கை அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
பின்னர் காய்கறி வாங்கிகொண்டு மோகன் வீட்டுக்கு வந்த போது அங்கு தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உறவினர்களை வரவழைத்து தனது தாயை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுமதி 21&ந் தேதி காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் மோகன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் கடற்கரை வெறிச்சோடியது.
புதுச்சேரி:
புதுவையில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிவார்கள். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை முதலே புதுவை நகரம் களைகட்டத் தொடங்கிவிடும். எங்கு பார்த்தாலும் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டமும் இருக்கும்.
புதுவையில் தற்போது கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் இந்த வாரம் சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
புதுவையில் கொரோனா பாதிப்பு தேசிய அளவை விட அதிகமாக இருப்பதால், இங்கு வர வெளிமாநில சுற்றுலா பயணிகள் தயக்கம் காட்டுகின்றனர். வெள்ளிக்கிழமையான நேற்று மாலை வெளிமாநிலத்தவர் ஒரு சிலரின் நடமாட்டம் மட்டுமே நகர பகுதியில் பார்க்க முடிந்தது. வழக்கமாக வார இறுதி நாட்களில் ஓட்டல்களில் அறை கிடைப்பதே அரிதாக இருக்கும். ஆனால் இந்த வாரம் பெரும்பாலான ஓட்டல்களில் அறைகள் காலியாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் புதுவை கடற்கரை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, பாண்டி மெரினா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி இருந்தன.
புதுவையில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிவார்கள். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை முதலே புதுவை நகரம் களைகட்டத் தொடங்கிவிடும். எங்கு பார்த்தாலும் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டமும் இருக்கும்.
புதுவையில் தற்போது கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் இந்த வாரம் சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
புதுவையில் கொரோனா பாதிப்பு தேசிய அளவை விட அதிகமாக இருப்பதால், இங்கு வர வெளிமாநில சுற்றுலா பயணிகள் தயக்கம் காட்டுகின்றனர். வெள்ளிக்கிழமையான நேற்று மாலை வெளிமாநிலத்தவர் ஒரு சிலரின் நடமாட்டம் மட்டுமே நகர பகுதியில் பார்க்க முடிந்தது. வழக்கமாக வார இறுதி நாட்களில் ஓட்டல்களில் அறை கிடைப்பதே அரிதாக இருக்கும். ஆனால் இந்த வாரம் பெரும்பாலான ஓட்டல்களில் அறைகள் காலியாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் புதுவை கடற்கரை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, பாண்டி மெரினா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி இருந்தன.
கொரோனாவில் இருந்து மீண்ட சிறை அதிகாரியை மேளதாளத்துடன் பூக்கள் தூவி அவரது குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை ரெயின்போ நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 76). ஓய்வு பெற்ற சிறை அதிகாரியான இவர் வக்கீலாகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை குடும்பத்தினர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ராஜேந்திரன் குணம் அடைந்தார்.
அவரை குடும்பத்தினர் மேளதாளத்துடன் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவரை குடும்பத்தினர் பேனர் வைத்தும் பூக்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதுவை ரெயின்போ நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 76). ஓய்வு பெற்ற சிறை அதிகாரியான இவர் வக்கீலாகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை குடும்பத்தினர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ராஜேந்திரன் குணம் அடைந்தார்.
அவரை குடும்பத்தினர் மேளதாளத்துடன் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவரை குடும்பத்தினர் பேனர் வைத்தும் பூக்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதுவையில் சம்பா பயிர் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் தற்போது சம்பா பயிர் அறுவடை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டில் பெய்த கன மழையிலும் சில ஆயிரம் ஹெக்டேர் சம்பா நெல் பயிர்களை விவசாயிகள் போராடி காப்பாற்றி வைத்துள்ளனர். அவ்வாறு கஷ்டப்பட்டு பயிர் செய்த நெல்லை தற்போது விற் பனை செய்வதற்கான இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.
நெல் கொள்முதல் செய்ய 6 இடங்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை ஒன்றைக்கூட திறக்கவில்லை.
இதனால் புரோக்கர்கள் நோகாமல் சம்பாதிக்க பல்வேறு ஆசை வார்த்தை களை கூறி ஏமாற்ற திட்ட மிட்டு விவசாயிகளை சுற்றிச் சுற்றி வருகின்றனர்.
அதாவது அரசு கிலோவிற்கு ரூ.20.51-க்கு கொள்முதல் செய்யப்படும் என்று கூறியது. ஆனால் புரோக்கர்கள் ரூ.16 மட்டுமே அதிக பட்சமாக தருவதாக கூறுகின்றனர்.
விரைந்து நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காவிட்டால் புரோக்கர் களால் விவசாயிகள் ஏமாற் றத்திற் குள்ளா வார்கள். எனவே அரசு ஓரிரு தினங்களுக்குள்ளாகவே கொள்முதல் நிலையங்களை திறந்து நியாயமான விலையில் நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்.
அரசு அறிவித்தபடி விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அரசாணையை பிறப்பித்து, கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தப்பட்டுள்ள பயிர் கடனை வழங்க வேண்டும். கரும்பு, நெல் விவசாயி களுக்கான நிலுவைத் தொகை, ஊக்க தொகை நிவர் புயல் நிவாரணம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
பாசிக் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவைகளை தடையின்றியும், மானியத்துடனும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார் .
முதலியார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள்-நோயாளிகள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை அசோக்பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குடிநீர் பயன்பாட்டிற்காக முதலியார்பேட்டையை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் எஸ்.பி.குமார் தனது சொந்த செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதனை அசோக்பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலாஜி மற்றும் செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர்.
மேலும் இவ்விழாவில் மாநில பா.ஜனதா துணைத்தலைவர் செல்வம், தொகுதி தலைவர் இன்பசேகர், பா.ஜனதா பிரமுகர்கள் பன்னீர்செல்வம், வெங்கடேசன், அய்யனாரப்பன், விஜயரங்கம், கமலக்கண்ணன், விஜயகுமார், கனகராஜ், வெற்றி செல்வன், பழனிவேலு, பச்சையப்பன், புவனேஸ்வரி, கார்த்திகேயன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது அமைக்கப் பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியால் தினமும் 500&க்கும் மேற்பட்ட பொதுமக்கள்-நோயாளிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
புதுவையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். மேலும் புதிதாக 2,500 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 20-ந் தேதி 6 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 2 ஆயிரத்து 528 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் ஆயிரத்து 985, காரைக்காலில் 411, ஏனாமில் 105, மாகியில் 27 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 77, காரைக் காலில் 38, ஏனாமில் 11, மாகியில்13 பேர் என 139 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் ஆயிரத்து 301, காரைக்காலில் 120, ஏனாமில் 15, மாகியில்22 பேர் என ஆயிரத்து 458 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 870 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 850 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 11 ஆயிரத்து 432, காரைக்காலில் 2 ஆயிரத்து 81, ஏனாமில் 316, மாகியில் 154 பேர் என 13 ஆயிரத்து 983 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது 14 ஆயிரத்து 122 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவை பாக்கு முடையான்பட்டை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2&வது தவணை உட்பட 15 லட்சத்து 15 ஆயிரத்து 818 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுவை அரசு பொறுப்பற்று செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி:
இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டு, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம், தாராள நிதி தருவோம் என வாக்குறுதி அளித்தனர். இதை நம்பி மக்கள் ஓட்டளித்ததால் வெற்றியும் பெற்றனர்.
ஆட்சி அமைந்து 7 மாதமாகியும் எந்த நிதியும் வரவில்லை. வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. பொதுத்துறையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர் களுக்கு சம்பளம் வழங்கப் படவில்லை. ரேசன்கடைகள் இயங்கவில்லை.
பொங்கல் பொருட்கள் பண்டிகை முடிந்தும் தரவில்லை. கடந்த நாராயணசாமி ஆட்சியில் கவர்னர் மூலமாக அரசை முடக்கம் செய்யும் பணியில் பா.ஜனதா ஈடுபட்டது. தற்போதும் அதேநிலைதான் தொடர்கிறது.
கொரோனா 3&வது அலையை தடுக்க தமிழகம் உட்பட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம், விழாக்களுக்கு தடை விதித்தனர்.
ஆனால் புதுவையில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் அனுமதித்தனர். இதன் பயனாக நாள்தோறும் 3 ஆயிரம் பேருக்கு தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களைப்பற்றி கவலைப் படாத, பொறுப்பற்ற அரசாக புதுவை அரசு செயல்படுகிறது. இதனால் மக்கள்தான் அவதிப்படு கின்றனர்.
தேர்தலில் ரங்கசாமி அனைத்து வாக்குறுதி களையும் அளித்தார். தற்போது பொறுப்பில்லாத வகையில் தான் ராஜா இல்லை என கூறுகிறார். அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
கவர்னராக தமிழிசை பொறுப்பேற்று 10 மாதமாகி விட்டது. ஏற்கனவே எதிர்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் கவர்னர்களை பா.ஜனதா ஒற்றர்களாக பயன்படுத் துகிறது. ஜனாதிபதி, கவர்னர், சபாநாயகர் ஆகியோர் அரசியல்பாகுபாடு இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் மத்திய பா.ஜனதா ஆட்சியில் இவை தூக்கியெறியப்பட்டு கவர்னர்கள் பாகுபாடோடு செயல்படுகின்றனர்.
பா.ஜனதா நடத்தும் விழாக்களில் கவர்னர் பங்கேற்கிறார். தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக கவர்னர் செயல்படுகிறார். இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது புதுவை மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன், நிர்வாகிகள் அபிஷேகம், தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுவை டி.என்.பாளையத்தில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நாட்டிய பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையத்தில் அமைந்துள்ள உதவி கரங்கள் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நாட்டியப் பயிற்சி பட்டறை, சமூக நல தொடர் கல்வி இயக்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பரத நாட்டிய கலைஞர் டாக்டர் கிருத்திகா ரவிச்சந்திரன் தலைமை தாங்கி நாட்டியம் குறித்த பல்வேறு தகவல்களை குழந்தைகளுக்கு வழங்கி நாட்டிய பயிற்சியும் அளித் தார்.
நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அறக்கட்டளையின் சார்பாக நாட்டியப் பயிற்சி பெற்று வரும் குழந்தைகளின் நாட்டியமும் நடந்தது.






