என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுவையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: தி.மு.க. கோரிக்கை
புதுவையில் சம்பா பயிர் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் தற்போது சம்பா பயிர் அறுவடை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டில் பெய்த கன மழையிலும் சில ஆயிரம் ஹெக்டேர் சம்பா நெல் பயிர்களை விவசாயிகள் போராடி காப்பாற்றி வைத்துள்ளனர். அவ்வாறு கஷ்டப்பட்டு பயிர் செய்த நெல்லை தற்போது விற் பனை செய்வதற்கான இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.
நெல் கொள்முதல் செய்ய 6 இடங்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை ஒன்றைக்கூட திறக்கவில்லை.
இதனால் புரோக்கர்கள் நோகாமல் சம்பாதிக்க பல்வேறு ஆசை வார்த்தை களை கூறி ஏமாற்ற திட்ட மிட்டு விவசாயிகளை சுற்றிச் சுற்றி வருகின்றனர்.
அதாவது அரசு கிலோவிற்கு ரூ.20.51-க்கு கொள்முதல் செய்யப்படும் என்று கூறியது. ஆனால் புரோக்கர்கள் ரூ.16 மட்டுமே அதிக பட்சமாக தருவதாக கூறுகின்றனர்.
விரைந்து நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காவிட்டால் புரோக்கர் களால் விவசாயிகள் ஏமாற் றத்திற் குள்ளா வார்கள். எனவே அரசு ஓரிரு தினங்களுக்குள்ளாகவே கொள்முதல் நிலையங்களை திறந்து நியாயமான விலையில் நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்.
அரசு அறிவித்தபடி விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அரசாணையை பிறப்பித்து, கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தப்பட்டுள்ள பயிர் கடனை வழங்க வேண்டும். கரும்பு, நெல் விவசாயி களுக்கான நிலுவைத் தொகை, ஊக்க தொகை நிவர் புயல் நிவாரணம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
பாசிக் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவைகளை தடையின்றியும், மானியத்துடனும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார் .
Next Story






