என் மலர்
புதுச்சேரி
முருங்கப்பாக்கம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர காவடி அபிஷேக தீபாராதனை விழா நடந்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவிலில் பங்குனி உத்திர காவடி அபிஷேக தீபாராதனை விழா நடந்து வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரித்த காவடி வீதியுலா, சுவாமி வீதியுலா நடந்தது. காலை 6 மணிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், அலகுபோடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாளை இரவு 7 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. நாளை மறுநாள்
(ஞாயிற்றுக்கிழமை) சுவாமிக்கு சந்தன காப்பும், இடும்பனுக்கு பள்ளையமும் நடக்கிறது. 25-ந்தேதி அபிஷேக ஆராதனையுடன் சாந்தி பூஜை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திரவுபதியம்மன் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கணபதி, துணைத்தலைவர் காந்தி, செயலாளர் ஜெயராமன், பொருளாளர் பாலசுந்தரம், உறுப்பினர் நீலன், நிர்வாக அதிகாரி ஆனந்து மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
காரைக்காலில் 3 கடைகளின் ஷட்டரை உடைத்து திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்கால்:
காரைக்கால் திருநள்ளாறு சாலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே, இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான மளிகை மற்றும் கோழிகடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கம் போல், கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது, 3 கடையின் ஷட்டர் உடைக்கபட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதன் பேரில், காரைக்கால் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, கடை முன்பு பொருத்தபட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கடை ஷட்டரை உடைத்து பாம்பு போல நெளிந்து உள்ளே சென்று திருடி விட்டு தப்பிச் செல்வது தெரிய வந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், கடை அருகே வசிக்கும் ரகுமான் (வயது21) என்பவர், மேற்கண்ட கடைகளின் ஷட்டரை உடைத்து, கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து காரைக்கால் நகர் பகுதியில் பதுங்கியிருந்த ரகுமானை, போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் கடை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் திருநள்ளாறு சாலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே, இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான மளிகை மற்றும் கோழிகடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கம் போல், கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது, 3 கடையின் ஷட்டர் உடைக்கபட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதன் பேரில், காரைக்கால் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, கடை முன்பு பொருத்தபட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கடை ஷட்டரை உடைத்து பாம்பு போல நெளிந்து உள்ளே சென்று திருடி விட்டு தப்பிச் செல்வது தெரிய வந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், கடை அருகே வசிக்கும் ரகுமான் (வயது21) என்பவர், மேற்கண்ட கடைகளின் ஷட்டரை உடைத்து, கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து காரைக்கால் நகர் பகுதியில் பதுங்கியிருந்த ரகுமானை, போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் கடை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புதுவை மாநிலத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இது குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவையில் 38 ஆண்டுக்கு பிறகு 2006-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் 2011-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தனர்.
அதன்பிறகு கடந்த 11 ஆண்டாக தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நடந்தது. கடந்த ஆண்டு 2 முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்தக்கோரி அரசியல்கட்சியினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் இடைக்கால தடை விதிக்கப்பட்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
புதுவை அரசு ஓய்வுபெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் இடஒதுக்கீடு வழங்க ஆணையம் அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த அரசியல் கட்சியினர் வழக்கை வாபஸ் பெற்றனர். இதனால் தேர்தல் நடத்துவதற்கான இடைக்கால தடை நீங்கியது.
இதையடுத்து மீண்டும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது. பின்னர் நகராட்சி, கொம்யூன் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியும் நடந்து வருகிறது.
இதனிடையே தி.மு.க. அமைப்பாளர் சிவா, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனு கடந்த சில வாரத்துக்கு முன்பு விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு காலதாமதமின்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்தது.
இந்த வழக்கு இந்த மாதம் இறுதியில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற மே மாதம் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். பள்ளி ஆசிரியர்கள் தான் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுவர்.
இதை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளை தவிர்த்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடம், திருமண நிலையங்களில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இன்று மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் 2-வது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், தேர்தலுக்கான முதல்கட்ட மற்றும் ஆயத்த பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது புதுவை அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் தழைத்து வாழ்வில் வசந்தங்கள் சிறக்க எனது இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கம் வண்ணமயமான ஹோலி நல்வாழ்த்துக்கள். பலவகை வண்ணங்கள் இந்தியாவின் பன்முகத் தன்மையின் அடையாளம். இந்த வண்ணங்களின் திருவிழா அனைவரது வாழ்விலும் புதிய உற்சாகத் தையும் ஆற்றலையும் பெருக்கட்டும். அன்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் தழைத்து வாழ்வில் வசந்தங்கள் சிறக்க எனது இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பார்க்கிங் வசதி இல்லாத நிறுவனங்களிடம் வாகன கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை நகர பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சாலைகளில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க தனியாருக்கு டெண்டர் விடும் அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது தவறான ஒன்றாகும்.
நகர பகுதியின் தற்போதைய சாலை உட்கட்ட அமைப்பில் உள்ள குளறுபடிகளால் போக்கு வரத்து நெரிசலில் மக்கள் தினந்தோறும் அல்லல்படுகின்றனர். இதன் மூலம் தினசரி சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். சாலை ஓரங்களில் நடைபாதை சிறு கடைகள் வைத்துள்ளவர்கள் பல் வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவர்.
கேளிக்கை வரி, கேபிள் டி.வி. வரி, நகராட்சிக்கு சொந்தமான வணிக
வளாகத்தில் உள்ள கடைகள், நகர்ப்புற வளர்ச்சி வரி, உள்ளிட்ட பல வரிகள் மூலம் திரட்டப்படுகின்ற வரியை முறைப்படுத்தி வசூலித்தாலே நகராட்சிக்கு அதிகப்படியான வரியின் மூலம் நிதி கிடைக்கும். இதில் நகராட்சி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.
தற்போது தனியார் பள்ளிகளிடம் சொத்து வரி, உள்ளாட்சி நிர்வாகம் வசூலிப்பது இல்லை. தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரியை நகராட்சி நிர்வாகம் அமல்படுத்தினால் ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி அளவில் வருவாய் வரும். பல தனியார், வர்த்தக வியாபார நிறுவனங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருமண மண்டபங்கள், ஒட்டல்கள், போதிய பார்க்கிங் வசதியின்றி நடத்த அனுமதி வழங்குவதால், அங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக சாலைகளிலேயே நிறுத்தப்படுகின்றன.
சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பதை தவிர்த்து, அந்தந்த வர்த்தக, வியாபார நிறுவனகளிடமிருந்து அதற்குரிய கட்டணத்தை வசூலிக்கலாம். காலத்திற்கேற்ப வரி வசூலில் நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். வருவாய்க்காக, மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். எனவே, மக்களை பாதிக்கும் புதுவை நகராட்சியின் வாகன நிறுத்தம் கட்டண வசூல் உத்தரவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
புதுவையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 410 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. புதுவையில் ஒருவர் சிகிச்சையில் குணமடைந்தார். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 766 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 790 பேர் சிகிச்சையில் குணமடைந்து உள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கல்வியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரி மாணவர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணாசாலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். தலைவர் புவியரசன், துணைத்தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேரு எம்.எல்.ஏ., திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், ம.தி.மு.க. கபிரியேல், தந்தைபெரியார் திராவிடர்கழகம் வீரமோகன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா உள்பட பலர் கண்டன உரையாற்றினர். கூட்டுறவு கல்வியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் அமைத்துத்தர வேண்டும். தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்திடம் இருந்து அங்கீகாரத்தையும், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்பையும் திரும்பப் பெற்றுத்தர வேண்டும். கூட்டுறவு கல்வியியல் கல்லூரியை கல்வித்துறையின் கீழ் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அ.தி.மு.க. அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை வழங்கி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜெயலலிதா வழியில் செயல்படும் அ.தி.மு.கவின் சமூக நீதிக்கு கிடைத்த மேலும் ஒரு மணி மகுடம். 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்-அமைச்சராக இருந்த போது அரசு மருத்துவ கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் நீட் தகுதி பெற்ற அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து தனியார் டாக்டர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அ.தி.மு.க. அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை வழங்கி உள்ளது.
இது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது போல, அரசு மருத்துவர்களின் கனவையும் நிறைவேற்றி உள்ளார்.
தி.மு.க.வும், அதன் தலைவரும் தாங்கள்தான் இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது போல தம்பட்டம் அடித்து கொள்கின்றனர். 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு மேல் முறையீடு செய்தபோது தன்னை வழக்கில் இணைத்து கொள்ளக்கூட மனமில்லாத தி.மு.க. இப்போது மார்தட்டி கொள்வது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களை மேற்கு மாநில அ.தி.மு.க. வணங்கி போற்றுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தவளக்குப்பம் சிவசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழாவில் சாபாநாயகர் ஏம்பலம் செல்வம் தேர் வீதி உலாவை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதிகுட்பட்ட தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய கோவில் 48-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடந்தது. விழாவில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேர் வீதி உலாவை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் திருமுருகன், பழனிசாமி, தட்சணாமூர்த்தி, மணிவண்ணன், நடராஜன், ஜெயமூர்த்தி, தினேஷ் கார்த்திக், ரமேஷ், சீனு, சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு சுகாதாரத்துறையின் பாரபட்சமான செயலை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை சுகாதார துறையில் பணியாற்றும் என்.எச்.எம். மற்றும் ஆஷா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியது போல எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க கோரி சுகாதாரத்துறை அலுவலக வாயிலில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கவுரவ தலைவர் சேஷாசலம் தலைமை தாங்கினார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்கத் தலைவர் வாணிதாசன், பொருளாளர் தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு சுகாதாரத்துறையின் பாரபட்சமான செயலை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுவை அரசு உடனடியாக தலையிட்டு என்.எச்.எம். மற்றும் ஆஷா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியது போன்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வினை வருகிற 1-ந்தேதி முதல் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. முடிவில் ஊழியர்கள் நல சங்க துணை தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
மக்களையும், சுற்றுலா பயணிகளையும் மிகுந்த அவஸ்தைக்கு ஆளாக்கும் இந்த டெண்டர் அறிவிப்பை புதுவை நகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரெஞ்சு- இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராக மாநில மக்களிடம் கருத்து கேட்காமல், புதுவை நகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நகர பகுதிகளில் முக்கிய சந்திப்புகள் அனைத்திலும் நிறுத்தப்படும் இருசக்கர வாகனம் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்க அனுமதித்து, தனியாரிடம் டெண்டர் கோரியுள்ளது.
இச்செயலை புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சர்வாதிகார நாட்டில்கூட விதிக்கப்படாத கட்டணத்தை அரசின் ஒப்புதலோடு, புதுவை நகராட்சி விதிக்க முடிவெடுத்துள்ளது கண்டனத்துக்குரியது. நகராட்சியின் வருமானத்தை பெருக்க ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது கட்டணத்தை திணித்து அவர்களின் பொருளாதாரத்தை சுரண்டுவதை அ.தி.மு.க. ஒருபோதும் ஏற்காது.
தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட பல கோடி நகராட்சி இடங்களுக்கான வரி பாக்கி உள்பட நிலுவை வரியை வசூலிக்க உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஏழை மக்களின் மீது வரியை திணித்து வசூலிக்க நினைப்பது நயவஞ்சக செயல்.
புதுவை சிறிய நகர பகுதி. அடுத்தடுத்த வீதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் ஒவ்வொரு வீதிக்கும் வாகன நிறுத்த கட்டணம் செலுத்த முடியுமா? நேரு வீதியில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஏழை தொழிலாளர்கள் நாள்தோறும் தங்கள் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டால் அவர்களின் சம்பளமாக என்ன மிஞ்சும்? வீதிக்கு வீதி கட்டணம் வசூலித்தால், புதுவைக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வருவார்களா?
மக்களையும், சுற்றுலா பயணிகளையும் மிகுந்த அவஸ்தைக்கு ஆளாக்கும் இந்த டெண்டர் அறிவிப்பை புதுவை நகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுவையில் ரொட்டி- பால் ஊழியர்கள் போராட்டத்துக்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறையில் 19 வருடங்களாக பணியாற்றி வரும் ரொட்டி - பால் ஊழியர்கள் உயர்த்தி வழங்கப்பட்ட சம்பளத்தை இதுநாள் வரை வழங்காத கல்வித்துறையையும், அதற்கு காரணமான அதிகாரிகளையும் கண்டித்து 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரொட்டி- பால் ஊழியர்களுக்கு ஆதரவாக பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பிறகு இயக்குனரை சந்தித்து உடனடியாக இந்த பிரச் சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.






