என் மலர்
உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரதம் நடைபெற்ற போது எடுத்த படம்.
கல்வியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் மாணவர் கூட்டமைப்பு உண்ணாவிரதம்
கல்வியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரி மாணவர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணாசாலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். தலைவர் புவியரசன், துணைத்தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேரு எம்.எல்.ஏ., திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், ம.தி.மு.க. கபிரியேல், தந்தைபெரியார் திராவிடர்கழகம் வீரமோகன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா உள்பட பலர் கண்டன உரையாற்றினர். கூட்டுறவு கல்வியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் அமைத்துத்தர வேண்டும். தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்திடம் இருந்து அங்கீகாரத்தையும், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்பையும் திரும்பப் பெற்றுத்தர வேண்டும். கூட்டுறவு கல்வியியல் கல்லூரியை கல்வித்துறையின் கீழ் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
Next Story






