என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்திய காட்சி.
    X
    எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்திய காட்சி.

    ஊதிய உயர்வு வழங்க கோரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் போராட்டம்

    புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு சுகாதாரத்துறையின் பாரபட்சமான செயலை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
    புதுச்சேரி:


    புதுவை சுகாதார துறையில் பணியாற்றும் என்.எச்.எம். மற்றும் ஆஷா ஊழியர்களுக்கு  ஊதிய உயர்வு வழங்கியது போல எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க கோரி சுகாதாரத்துறை அலுவலக வாயிலில் போராட்டம் நடத்தினர். 

    இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கவுரவ தலைவர் சேஷாசலம் தலைமை தாங்கினார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு   ஊழியர்கள் நலச்சங்கத் தலைவர் வாணிதாசன், பொருளாளர் தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இந்த  போராட்டத்தில் புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு சுகாதாரத்துறையின்  பாரபட்சமான செயலை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுவை அரசு உடனடியாக தலையிட்டு என்.எச்.எம். மற்றும் ஆஷா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியது போன்று எய்ட்ஸ்  கட்டுப்பாட்டு சங்கத்தில்  பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வினை  வருகிற 1-ந்தேதி முதல் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. முடிவில் ஊழியர்கள் நல சங்க துணை தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
    Next Story
    ×