என் மலர்
உள்ளூர் செய்திகள்

பங்குனி உத்திர விழாவில் பக்தர் ஒருவர் மிளகாய் தூள் அபிஷேகம் செய்தார்.
முருங்கப்பாக்கம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர காவடி விழா
முருங்கப்பாக்கம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர காவடி அபிஷேக தீபாராதனை விழா நடந்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கோவிலில் பங்குனி உத்திர காவடி அபிஷேக தீபாராதனை விழா நடந்து வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரித்த காவடி வீதியுலா, சுவாமி வீதியுலா நடந்தது. காலை 6 மணிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், அலகுபோடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாளை இரவு 7 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. நாளை மறுநாள்
(ஞாயிற்றுக்கிழமை) சுவாமிக்கு சந்தன காப்பும், இடும்பனுக்கு பள்ளையமும் நடக்கிறது. 25-ந்தேதி அபிஷேக ஆராதனையுடன் சாந்தி பூஜை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திரவுபதியம்மன் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கணபதி, துணைத்தலைவர் காந்தி, செயலாளர் ஜெயராமன், பொருளாளர் பாலசுந்தரம், உறுப்பினர் நீலன், நிர்வாக அதிகாரி ஆனந்து மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story






