என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நல்ல குடிநீர் கிடைக்க நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேசகத்தின் வளர்ச்சி திட்டத்தில் காலநிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி முகாம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.

    இதன் நிறைவு விழாவுக்கு சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மித்தா தலைமை வகித்தார். பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி முதல்- அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:- 

    புதுவை மாநிலத்தை கிளீன் அண்ட் கிரீன் என சொல்கிறோம். ஆனால் அப்படி உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். என்னை பொறுத்த வரை சரியாக இல்லை என்பதுதான் எண்ணம். இன்னும் நிறைய சரி செய்ய வேண்டும். பசுமையான நிலையும் இப்போது குறைந்துள்ளது. பசுமையை நாம் உருவாக்க வேண்டும். 

    முக்கிய சாலைகளில் செல்ல முடியாத வகையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் காற்றில் எவ்வளவு மாசு ஏற்பட்டுள்ளது? என்பதை பார்க்க வேண்டும். ஏரி, குளம் உட்பட நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என சொல்கிறோம். 

    ஆனால் அதை முழுமையாக செய்திருக்கிறோமா? என்றால்  இல்லை. 

    எனவே நல்ல குடிநீர் கிடைக்க நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இன்றைய சூழலில் குடிநீரின் நிலையை பார்த்தால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மோசமாக பாதிக்கப்படும். 

    அதற்கு ஏற்ப இப்போதே நாம் திட்டமிட்டு நல்ல குடிநீர் எப்போதும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத தொழிற் சாலைகள் புதுவைக்கு வரவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறோம். 

    இவ்வாறு அவர் பேசினார். 
    நைனார்மண்டபத்தில் நிதி நிறுவனம் மற்றும் ஓட்டலை சூறையாடி உரிமையாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் கோபி என்ற கோபி கிருஷ்ணன் (வயது 29). இவர் நைனார் மண்டபம் தென்னஞ்சாலை ரோட்டில் அமுதா என்பவர் நடத்தி வரும் ஓட்டல் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். 

    நேற்று கோபி தனது மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனம் முன்பு நிறுத்தி விட்டு பைனான்ஸ் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். 
    அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்து, தமிழரசன், கார்த்திக் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கோபியின் மோட்டார் சைக்கிள் மீது ஏறி அமர்ந்தனர்.  இதனை கோபி தட்டிக்கேட்டு அவர்களை மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்குமாறு கேட்டுக்கொண்டார். 

    இதில் இரு தரப்பினரிடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரம் அடைந்த முத்து உள்பட 4 பேரும் சேர்ந்து கோபியின் மோட்டார் சைக்கிள் மற்றும் நிதி நிறுவன அலுவலக கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். மேலும் கோபியையும் சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க முயன்ற அமுதாவையும் தாக்கிய அவர்கள் ஓட்டலையும் அடித்து உடைத்து சூறையாடினர். அதோடு கோபிமற்றும் அமுதாவை கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்று விட்டனர். 

    இதுகுறித்து கோபி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
    புதுவையில் வணிகர்நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வர்த்தக சபையினர் வலியுறுத்தினர்.
    புதுச்சேரி:


    புதுவை வர்த்தக சபை வளாகத்தில் வணிகர் தின விழா நடந்தது. விழாவிற்கு வர்த்தக சபை தலைவர்  குணசேகரன் தலைமை தாங்கினார்.  பொதுச்செயலாளர் ஆனந்தன், இணை  பொது செ யலாளர் முகமது சிராஜ், பொருளாளர் வி.எம்.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் எல்.பி.ரவி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுவையில்– 3 தலைலமுறை களுக்கு மேலாக வியாபாரம் செய்யும் 12 வணிகர்களுக்கு வர்த்தக சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவித்தார். 
    நிகழ்ச்சியில் வர்த்தக சபை குழு உறுப்பினர்கள் தேவக்குமார், ஞானசம்பந்தம், நமச்சிவாயம், ராமமூர்த்தி உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வர்த்தக சபை தலைவர் குணசேகரன்ம ற்றும் நிர்வாகிகள் முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம்கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ‘புதுவையில்வ ணிகர் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். வர்த்தக மையம் அமைத்திட அரசு உதவிட வேண்டும்.

    புதுவை வணிகர்களுக்கு பொருட்கள் வாங்கிய வகையில் தர வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். வணிகர்கள் நலனுக்காக 100 அடி ரோட்டில் உள்ள பாலத்திற்கு கீழ் வாகன நிறுத்–தம் அமைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் ம.தி.மு.க. 29-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை ம.தி.மு..க சார்பில் கட்சியின் 29-ம் ஆண்டு தொடக்கவிழா கொம்பாக்ககத்தில் நடந்தது. ம.தி.மு.க. தமிழ்மாநில தொழிற்சங்க செயலாளர் வேதா.வேணுகோபால் தலைமை வகித்தார். 

    ம.தி.மு.க. அமைப்பாளர் கபிரியேல் கட்சி கொடியேற்றி வைத்து
    50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கினார். தொடர்ந்து ஏழை மக்கள் 200 பேருக்கு பால் பாக்கெட்டுகள், பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, பழங்கள், இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் செல்வராசு, இளங்கோ, கவுரி கருணாகரன், ஆதிமூலம், மாசிலாமணி, பிரபாகரன், செந்தில்குமார், கோவலன், ஜீவா, ரவிச்சந்திரன் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். சூசை நன்றி கூறினார். 

    இதே போல் ம.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
    புதுவையில் நடந்த தனித்தனி விபத்தில் பெண் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
    புதுச்சேரி:


    புதுவை திருபுவனைபாளையம் புத்துக்கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது53) இவர் புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் வேலை செய்து வருகிறார். 

    சம்பவத்தன்று வேலைக்கு பஸ்சில் வந்த ராஜேஸ்வரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராஜேஸ்வரி மீது மோதியது. 

    இதில் தடுமாறி விழுந்த ராஜேஸ்வரிக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ராஜேஸ்வரியை மீட்டு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி பின்னர்  இது குறித்து புதுவை போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை கொசப்பாளையம் செல்லப்பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது27) சம்பவத்தன்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் காமராஜர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். ராஜூவ் காந்தி சிக்னல் அருகே வரும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ராஜசேகர் ஓடிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட ராஜசேகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை நைனார் மண்டபம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (வயது58) இவர் பொதுப்பணித்துறையில் மஸ்தூராக பணிபுரிந்து வருகிறார்.
    சம்பவத்தன்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் புதுவை-விழுப்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். வில்லியனூர் கண்ணகி மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் திடீரென முத்துப்பாண்டியன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தடுமாறி விழுந்த முத்துப்பாண்டியனுக்கு கை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் மூலம் முத்துப்பாண்டியனை புதுவை அரசு  ஆஸ்ப த்திரியில்  சிகிச்சைகாக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதகடிப்பட்டு புதுநகர் குறிஞ்சி வீதியை சேர்ந்தவர் உத்திரசேனன் (வயது59) இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் மருந்து வாங்க புதுவை-விழுப்புரம் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக சிறுவந்தாட்டை சேர்ந்த ரஞ்சித் (வயது 25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக உத்திரசேனன் மீது மோதியது. 
    இதில் உத்திர சேனன் மற்றும் விபத்தை ஏற்படுத்திய ரஞ்சித் ஆகியோர் இருவரும் தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் இருவரும் சிகிச்சைகாக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டனர். 

    இந்த 2 விபத்துகள் குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காலாப்பட்டு தொகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு அடுத்த கனகசெட்டிகுளம் வடக்கு தெரு மற்றும் புதுநகரில் நீண்ட நாட்களாக சாலைகள் அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரத்திடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சத்து 12 ஆயிரத்து 848 மதிப்பில் வடக்கு தெரு, புதுநகர் முழுவதும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில் கனகசெட்டிகுளம் கிராம பஞ்சாயத்தினர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
    தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி. பாப்ஸ்கோ ஊழியர் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

    பாப்ஸ்கோ சங்க தலைவர் ரமேஷ் , செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயல் தலைவர் அபிஷேகம், ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம், நிர்வாகிகள் துரைசெல்வம், ஜெய்சங்கர், பத்மநாபன், கமிட்டி உறுப்பினர்கள்  ஜீவரத்தினம், மார்க்கெழியன், அமுதா, ஆதி, அம்சவள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

     பாப்ஸ்கோ தீபாவளி பஜார் மானியம் ரூ.62 லட்சத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும். பாப்ஸ்கோ மூலம் நடத்த ப்படும் 47 ரேஷன்கடை வாடகை தொகை ரூ.ஒரு கோடியே 30 லட்சத்தை குடிமைப்பொருள் வழங்கல்துறை உடனடியாக வழங்க வேண்டும். ரேஷன் அரிசி விநியோகத்துக்கு கிலோவுக்கு ரூ.1.20 வழங்க வேண்டும்.

    பொங்கல் பொருட்கள் வழங்கிய கமிஷன் தொகையை பாப்ஸ்கோவுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இயக்குனர் அலுவலகத்தை போராட்டக்குழுவினர் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 8 ஆயிரத்து 530 மாணவர்கள், 8 ஆயிரத்து 272 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 802 பேர் தேர்வு எழுதினர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆண்டுக்கு பிறகு பத்தாம்வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொட ங்கியது.  புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 8 ஆயிரத்து 530 மாணவர்கள், 8 ஆயிரத்து 272 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 802 பேர் தேர்வு  எழுதினர். 

    பள்ளி மாணவர்களுக்கு 48 மையங்கள், தனி தேர்வர்களுக்கு 3 மையங்கள் என மொத்தம் 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  முறைகேடுகளை தடுக்க 9 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சென்று  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    வினா, மற்றும் விடைத்தாள் கொண்டு செல்ல 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 மாணவர்களுக்கு வரும் 10-ந் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது.
    மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை விசைப்படகு உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளத்துறை சார்பில் விசைப்படகில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் வரை லிட்டருக்கு ரூ.15 மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டது. 

    விசைப்படகு உரிமையாளர்கள் கவர்னர், முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்தறை இயக்குனரை சந்தித்து டீசல் மானியத்தை தொடர்ந்து வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால் இதுவரை மானியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து இன்றைய தினம் புதுவை தேங்காய்திட்டில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை விசைப்படகு உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். இயக்குனர் பாலாஜியிடம், தங்கள் டீசல் மானிய புத்தகத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறும்போது, வருகிற திங்கள் கிழமைக்கும் டீசல் மானியம் குறித்து முடிவெடுத்து அறிவிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.
    புனித பிரான்சிஸ் சவேரியார் புதுவையில் தங்கிய 475-ம் ஆண்டு ஜூபிலி விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகரில் புனித பிரான்சிஸ் சவேரியார் தங்கி இயேசுவின் நற்செய்தி பணியாற்றியதின் 475-ம் ஆண்டு ஜூபிலி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மும்பை பேராயர் மற்றும் இந்திய ஆயர் பேரவை தலைவர் ஆஸ்வால்ட் கர்த்தினால் கிரேசியாஸ் தலைமை தாங்கினார்.

    புதுவை-கடலூர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், பாலக்காடு சுல்தான் பேட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி பீட்டர் அபீர், சென்னை - மயிலை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா, சேலம் மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன், புதுவை அமலோற்பவம் பள்ளி தாளாளரும், முது நிலை முதல்வருமான லூர்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, அவரது துணைவியார் அனிபால் ஜெசிந்தா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அவர்களை அருட் தந்தை அருள் புஷ்பம் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.ஜூபிலி திருப்பலி சிறப்பான முறையில் நடைபெற்றது.

    புதுப்பிக்கப்பட்ட ஆலயம் புனிதம் செய்யப்படுதல், புனித பிரான்சிஸ் சவேரி–யாரின் முதல் நிலை திருப்பண்டம் நிறுவுதல், திருச்சிலுவை, தேவ நற்கருணை திருப்பேழை, 14 திருச்சிலுவை நிலைகள், திருச் சொருபங்கள் புனிதம் செய்யப்படுதல் ஆகியவை நடைபெற்றறது.

    விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
    புதுவை தண்டவாளத்தில் வெடி குண்டு பதுக்கிய 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 9.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது.

    இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதாக கருதிய அப்பகுதி மக்கள் இதுபற்றி உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் மேலும் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா என்று அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர்.

    இதை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாட்டு வெடிகுண்டுகளை சின்ன கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரிஷி என்ற ரிஷி குமார் (வயது 22), மற்றும் அவரது கூட்டாளிகளான பெரியார் நகரை சேர்ந்த கவுதமன் (23), அரவிந்த் (23) மற்றும் கவியரசன் (22) ஆகியோர் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் ரஷி தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இன்று அதிகாலை அவர்களை போலீசார் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் நடத்திய கிடுக்கி பிடி விசாரணையில் வனத்துறை அலுவலகம் அருகே புதரில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கவுதம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து வெடி குண்டு பதுக்கி வைத்தது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட ரிஷிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் அவர் ஆட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை விரும்பியதாக கூறப்படுகிறது.

    அந்த பெண்ணை 2வது திருமணம் செய்து கொள்ள விரும்பிய ரிஷி அந்த பெண்ணின் அண்ணனிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணின் அண்ணன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

    இதனால் அந்த பெண்ணின் அண்ணனை கொலை செய்ய ரிஷி திட்டமிட்டுள்ளார். இத்திட்டத்தை தனது கூட்டாளிகளிடம்  தெரிவித்துள்ளார்.

    அதனை அவர்களும் ஏற்று கொண்டு கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரெயில்வே தண்டவாள பகுதியில் 2 நாட்டு வெடிகுண்டுகளையும், வனத்துறை அலுவலக வளாக புதரில் 2 நாட்டு வெடிகுண்டுகளையும், கவுதம் வீட்டில் ஒரு நாட்டு வெடிகுண்டையும் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெடிகுண்டு தயாரிப்பில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    கைது செய்யப்பட்ட ரிஷி மீது ஏற்கனவே கொலை மற்றும் வெடிகுண்டு வழக்குகளும், மற்ற 3 பேர் மீது அடிதடி, கொலை முயற்சி வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அந்நிய முதலீடு, வர்த்தகத்தை தடுத்து உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாத்தவர் நரேந்திரமோடி என கவர்னர் தமிழிசை பேசினார்.
    புதுச்சேரி:

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் 39-வது வணிகர் தின விழா புதுவை ரோடியர் மில் திடலில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை ஆண்டுவிழா மலரை வெளியிட்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    ஆங்கிலேயர் அடக்குமுறை இருந்த காலத்தில் பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட போராளிகள் புதுவைக்குத்தான் வந்தனர். ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சி நாதன் புதுவையில்தான் பயிற்சி எடுத்தார். 
    நமக்கெல்லாம் ஒரு பிரச்சினை வரும் போது தாய்மடியை தேடிச்செல்வோம். அதுபோல  புதுவை தாய்மடியாக திகழ்கிறது. எளிய மக்களை தாங்கிப் பிடிப்பவர்கள் சிறு வணிகர்கள்தான். 

    அந்நிய முதலீடு, வர்த்தகம் ஆகியவற்றை தடுத்து நிறுத்திய பெருமை பிரதமர் மோடியை சாரும். பிரதமர் மோடி உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாத்தவர். 

    குடும்பத்துக்கு ஒரு டாக்டர் இருப்பதுபோல தெருவுக்கு ஒரு சிறு வணிகர் இருக்க வேண்டும். அவர்கள் நம் குடும்பத்தை பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் ஊரடங்கை அமல்படுத்தாமல் சிறு வணிகர்களை புதுவை அரசு பாதுகாத்தது. இவ்வாறு அவர் பேசினார்.

     விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வெங்கடேசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
    ×