என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
    • ஆனால் அதற்கான நிதி உதவி இல்லை. இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நிர்வாகிகள் கென்னடி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஆனால் அதற்கான நிதி உதவி இல்லை. இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நிர்வாகிகள் கென்னடி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து அறநிலையத்துறை அலுவ லகத்துக்கு சென்ற கென்னடி எம்.எல்.ஏ. அறநிலை யத்துறை ஆணையர் சிவசங்கர், கோவில் மேலாளர் அண்ணாமலை, ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினார்.

    அந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.வின் கோரிக்கை ஏற்று நிதி அளிப்பதற்கான ஆவணங்களை செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து நிதி உதவியினை வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலுக்கு வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.

    இதில் கலியமூர்த்தி,ஊர் பஞ்சாயத்தாரர்கள், தொகுதி செயலாளர் சக்திவேல், கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோக்கி யராஜ், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ரவிக்குமார், இளைஞர் அணி பஸ்கள், கவி, அரவிந்த், ரகுராமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் நாள் விழா காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பல்வேறு போட்டிகள், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
    • உயர்கல்வியில் புதுவையில் கிடைக்காத கல்வியே இல்லை. ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் கூட மருத்துவர்களாக உருவாகியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் நாள் விழா காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பல்வேறு போட்டிகள், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டை வரும்காலத்தில் வல்லரசாக்கப்போவது நீங்கள்தான். இதற் காகத்தான் மத்திய அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்துகிறது. புதிய கல்வி கொள்கையை கொண்டுவந்துள்ளனர்.

    புதுவை அரசும் மாணவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுவையில் பள்ளிகள் இல்லாத பகுதிகளே இல்லை. தனியார் பங்களிப்பும் உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்தியுள்ளோம். ஸ்மார்ட் வகுப்புகளையும் கொண்டு வந்துள்ளோம்.

    உயர்கல்வியில் புதுவையில் கிடைக்காத கல்வியே இல்லை. ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் கூட மருத்துவர்களாக உருவாகி–யுள்ளனர். அவர்கள் வீட்டு திருமணத்துக்கு செல்லும் போதுதான் கொண்டுவந்த திட்டத்தின் பலனை நேரில் காணமுடிகிறது.

    நினைத்த கல்விக்கு வாய்ப்பு கிடைக்காதபோது மாணவர்கள் சோர்வடையக்கூடாது. கிடைத்த கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தி படித்து முன்னேற வேண்டும். வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அரசு பணிக்காக மட்டும் கல்வி இல்லை. அறிவை வளர்த்துக் கொள்ளவும் கல்வி தேவை. நிர்வாக பதவிகளில் தற்போது உள்ள பலர் கலை கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள்தான். கலை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நிர்வாக பதவிக்கு தங்களை தயார்படுத்த வேண்டும்.

    ஒரே சிந்தனையோடு மாணவர்கள் படிக்க வேண்டும். தங்களின் பள்ளி–க்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும். நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் அரசு செயல்படுத்தும்.

    பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க உள்ளோம். 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மடி கணிணி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் இணை இயக்குனர் சிவகாமி வர–வேற்றார். செல்வகணபதி எம்.பி. உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    • புதுவை, தமிழக வணிகவரி துறை அதிகாரிகளுக்கு 2 வார புத்தாக்க பயிற்சி முகாம், ஆராய்ச்சி துறை கருத்தரங்கு கூடத்தில் தொடங்கியது.
    • மக்கள் மனம் கோணாமலும், சுமை தெரியாமலும் வரியை வசூலிக்க வேண்டும்.இன்னும் 3 மாத காலம் உள்ளது. அதற்குள் கூடுதலாக வரியை வசூலிக்க வேண்டும். வரி வசூலிப்பதன் மூலம்தான் மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகளை செய்ய முடியும்.

    புதுச்சேரி:

    புதுவை, தமிழக வணிகவரி துறை அதிகாரிகளுக்கு 2 வார புத்தாக்க பயிற்சி முகாம், ஆராய்ச்சி துறை கருத்தரங்கு கூடத்தில் தொடங்கியது.

    புதுவை அரசின் வணிகவரித்துறை, மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்னை தேசிய சுங்கம், மறைமுக வரி, போதை பொருள் தடுப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து இந்த பயிற்சியை நடத்துகிறது. இதன் தொடக்க விழாவில் புதுவை வணிகவரித்துறை ஆணையர் ராஜசேகர் வரவேற்றார்.

    சென்னை நிறுவன முதன்மை கூடுதல் இயக்குனர் உதயபாஸ்கர் தொடக்கவுரையாற்றினார். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    மத்திய அரசு கடந்தகாலத்தில் 70:30 என்ற விகிதத்தில் நிதி அளித்தது. தற்போது மத்திய அரசு வழங்கும் நிதி குறைந்துவிட்டது. மாநில அரசின் வருவாயை பெருக்கிக்கொள்ளுங்கள் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல ஆண்டாக புதுவையில் வரிகள் உயர்த்தப்படவில்லை.

    மக்கள் மனம் கோணாமலும், சுமை தெரியாமலும் வரியை வசூலிக்க வேண்டும்.இன்னும் 3 மாத காலம் உள்ளது. அதற்குள் கூடுதலாக வரியை வசூலிக்க வேண்டும். வரி வசூலிப்பதன் மூலம்தான் மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகளை செய்ய முடியும்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

    பயிற்சி நிறுவன இணை இயக்குனர் அருண் பிரசாத் நன்றி கூறினார். விழாவில் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையர் பத்மஸ்ரீ, துணை இயக்குனர் அஜய்பிரசாத், வணிகவரித்துறை அதிகாரிகள், பயிற்சி நிறுவன அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு ஆவதால் வசதி வாய்ப்பு இல்லாத ஏழை எளிய மக்கள் இது போன்ற தேர்வுகளுக்கு எப்படி தங்களை தயார் படுத்திக் கொள்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    குறிப்பாக அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக ஏற்கனவே கீழ்நிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

    கடந்த நவம்பர் 1-ந் தேதி புதுவை விடுதலை தினத்தன்று மேலும் பல்வேறு அரசு பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதற்காக படித்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர். வாய்ப்பு உள்ளவர்கள் இதற்காக பயிற்சி மையங்களை அணுகி பல்வேறு வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.

    இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு ஆவதால் வசதி வாய்ப்பு இல்லாத ஏழை எளிய மக்கள் இது போன்ற தேர்வுகளுக்கு எப்படி தங்களை தயார் படுத்திக் கொள்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர். மேலும் நீண்ட நாட்களாக கனவாக இருந்த அரசு வேலை வாய்ப்பு என்பது கனவாகி போய் விடுமோ என்ற எண்ணமும் இவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

    எனவே முதல்- அமைச்சர் அரசின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் நலன் கருதி அரசின் சார்பில் இலவச பயிற்சி மையங்களை அமைத்து தர வேண்டும். மேலும் அரசு ஊழியர்களும் எழை-எளியோருக்கு பயிற்சி தர தகுதியானவர்கள் ஆவார்கள். அவர்களைக் கொண்டும் பயிற்சி வகுப்பில் எடுக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அரசின் எண்ணம் முழுமையான அளவில் நிறைவேறும்.

    இவ்வாறு ஓம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவை அரசு தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
    • தினமும் 200 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    இதன் தொடக்க விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கினார்.

    அறக்கட்டளை நிர்வாகிகள் ஜாவர், பாரத் ஜாவர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அன்னதானம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்து அறநிலைத்துறை ஆணையர் சிவசங்கரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, திருக்கா மீஸ்வரர் கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தினமும் 200 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • வில்லியனூரில் மதுக்கடையில் உறவினருடன் மது குடித்த கட்டிட தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார். வில்லியனூர் கோபாலன் கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது39). கட்டிட தொழிலாளி.
    • பின்னர் பரமசிவமும், சத்திய மூர்த்தியும் வில்லிய னூர்- கூடப்பாக்கம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மதுக்கடையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் மதுக்கடையில் உறவினருடன் மது குடித்த கட்டிட தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார்.

    வில்லியனூர் கோபாலன் கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது39). கட்டிட தொழிலாளி. இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    வேலை இல்லாத நாட்களில் பரமசிவம் மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் பரமசிவம் உறவினர் சத்திய மூர்த்தி என்பவருடன் மது குடிக்க செல்வதாக தனது மனைவி அருள்மொழியிடம் கூறி சென்றார்.

    பின்னர் பரமசிவமும், சத்திய மூர்த்தியும் வில்லிய னூர்- கூடப்பாக்கம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மதுக்கடையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பரமசிவம் மயங்கி சாய்ந்தார். உடனே அவரை உறவினர் சத்தியமூர்த்தி மற்றும் அங்கு மது குடித்து கொண்டிருந்த கலிவரதன், ராமச்சந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் மீட்டு அகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பரமசிவம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி அருள்மொழி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மனைவி அஞ்சுகம், இவர்களது மகன் ராஜி(36). கடந்த சில ஆண்டுகளாக ராஜி மனநலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அஞ்சுகம் தனது மகனை ராஜியுடன் வில்லியனூர் ஆச்சாரியாபுரத்தில் தனது தங்கை வீட்டில் தங்கி இருந்து வந்தார்.

    இந்தநிலையில் ராஜி தனது தாயிடம் தண்ணீர் கேட்டார். இதையடுத்து அஞ்சுகம் தனது மகனுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். தண்ணீர் கொடுத்து விட்டு ராஜி தூங்க செல்வதாக கூறினார். பின்னர் சிறிது நேரம் கழித்து டிபன் காப்பிட ராஜியை எழுப்பிய போது அவர் அசைவற்று கிடப்பதை கண்டு அஞ்சுகம் அதிர்ச்சியடைந்தார். ராஜி தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இறந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அஞ்சுகம் தனது மகன் சாவு குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவையில் 60 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்திற்கான அறிவிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணியிடங்களுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறைதான் பின்பற்ற வேண்டியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர். இலக்கியப் பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கயில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் 60 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்திற்கான அறிவிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது. இது குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பதவி என்பதால் புதுவையில் தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடஒதுக்கீடு பின் பற்றடவில்லை. குறிப்பாக பிற்படுத்தப் படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் இடஒதுக்கீடான 27 சதவீதக் கணக்குப்படி 60 பணியிடங்களில் 19 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதுவையில் மிகவும் பிற்படுத்தப் படுத்தப்பட்டோருக்கு 18 சதவீதம், மீனவர்களுக்கு 2 சதவீதம், முஸ்லிம்களுக்கு 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு 0.5 சதவீதம் என நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறை கடை பிடிக்கப்படவில்லை.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணியிடங்களுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறைதான் பின்பற்ற வேண்டியுள்ளது. இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர்கள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட பழங்குடி சமூக மக்கள் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர்.

    எனவே, புதுவை அரசு உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, குரூப் 'பி' அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் சமூக இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். அதுவரையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணி நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.
    • 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்.

    விவசாயியான பாஸ்கர் வரிச்சிகுடி கிராமத்தில் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாய முறையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ராஜமுடி சின்னார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.

    மேலும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வயலின் நடுவே 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

    அந்த நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    • புதுவை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த வாரம் மழை பெய்தது. இந்தநிலையில் கடந்த வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
    • புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, 8.30 மணிமுதல் 8.30 மணிவரை 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த வாரம் மழை பெய்தது.

    இந்தநிலையில் கடந்த வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் கடலோர மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் பலத்த மழை பெய்தது. புதுவையில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய மழை நேற்று வரை கொட்டி தீர்த்தது.

    இதனால் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. ரெயின்போநகர், பாவாணர் நகர், கிருஷ்ணாநகர், லம்போர்ட் சரவணன் நகர், புஸ்சி வீதி, பட்டேல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    அபிசேகப்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த வீரப்பன் என்பவரது வீட்டின் பின் சுவர் இடிந்து விழுந்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். நள்ளிரவு முதல் வரை விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் பகல் முழுவதும் லேசான வெயிலுடன் மழை இல்லாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் மீண்டும் முதல் மழை விட்டு விட்டு பெய்தது காலை 8 மணி வரை மழை பெய்த பின்னர் சூரியன் சிறிது சிறிதாக தலை காட்ட ஆரம்பித்தது. இதனிடையே தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டினர். அதன்படி ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதேபோல் மழையினால் சேதமடைந்த சாலைகளில் ஜல்லி, மண்கொட்டி சீர்செய்யும் பணியும் நடந்தது. மழை இல்லாததால் புதுவை வந்த சுற்றுலா பயணிகளும் நகரை வலம் வந்தனர். காவல் துறையின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளித்தவர்களை அப்புறப்படுத்தினர். மழையால் முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

    புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, 8.30 மணிமுதல் 8.30 மணிவரை 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக நகர பகுதியில் 17.8 செ.மீ. பதிவாகி இருந்தது. தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் மற்றும் திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மழை சேதங்களை பார்வையிட்டார். வில்லியனூர், அரியூர் திருவண்டார் கோயில், மதகடிப்பட்டு, கே.டி குப்பம், குச்சிபாளையம், பி. எஸ். பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் பார்வையிட்ட அவர் மழை சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் விசாரித்தார். 

    • புதுவை அரசு பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
    • உடனடியாக அமைச்சரவையை கூட்டி 2012-ம் அரசாணையை ரத்து செய்து விட்டு மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர்பணியில் எம்.பி.சி.,க்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பல்வேறு பணிகளுக்கு எம்.பி.சி., இட ஒதுக்கீடு தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் அரசு பணியிடங்களில் எம்.பி.சி., இட ஒதுக்கீடு குறித்த பா.ம.க., சார்பில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாநில அமைப்பாளர் கணபதி பேசியதாவது:-

    போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்பில் எம்.பி.சி.,க்கான இட ஒதுக்கீடு வழங்காதது கண்டனத்திற்குரியது கடந்த 2010-ல் இதே பணி நியமனத்தில் எம்.பி.சி., இட ஒதுக்கீடு பின்பற்றிய நிலையில், தற்போது, 2012-ம் ஆண்டு அரசாணையை காரணம் காட்டி, பி-கிரேடு இட ஒதுக்கீடு இல்லை என்பது கண்டிக்கத்தக்கது.

    உடனடியாக அமைச்சரவையை கூட்டி 2012-ம் அரசாணையை ரத்து செய்து விட்டு மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர்பணியில் எம்.பி.சி.,க்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    இதனை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருக்கனூர் போலீசார் மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார்.
    • விசாரணையில் அவர் அருகே உள்ள தமிழக பகுதியான துறவி கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது41) என்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    திருக்கனூர் போலீசார்  மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அருகே உள்ள தமிழக பகுதியான துறவி கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது41) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் நலிவுற்ற தொழில் கலைஞர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 12 பேருக்கு இஸ்திரி பெட்டி, 3 பேருக்கு நாதஸ்வரம், 4 பேருக்கு சிகை அலங்கார சுழல் நாற்காலி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் நலிவுற்ற தொழில் கலைஞர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகூர் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாகூரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 12 பேருக்கு இஸ்திரி பெட்டி, 3 பேருக்கு நாதஸ்வரம், 4 பேருக்கு சிகை அலங்கார சுழல் நாற்காலி வழங்கினார்.

    இதேபோல் மீன்வளத்துறை சார்பில் புதுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 15 பேருக்கு முதியோர் உதவித் தொகையை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மீன்வ ளத்துறை ஆய்வாளர் ஆறுமுகம், தி.மு.க. பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×