என் மலர்tooltip icon

    இந்தியா

    மருத்துவமனைகளில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - மேற்கு வங்கத்தில் கொதித்துப் பேசிய பிரதமர் மோடி
    X

    மருத்துவமனைகளில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - மேற்கு வங்கத்தில் கொதித்துப் பேசிய பிரதமர் மோடி

    • திரிணாமுல் குண்டர்களால் தொழில்முனைவோர் இங்கு வருவதில்லை.
    • வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகள் கூட பெண்களுக்குப் பாதுகாப்பாக இல்லை.

    தமிழ்நாட்டை போல மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது.

    இந்த சூழலில் பிரதமர் மோடி அங்கு பயணம் செய்துள்ளார். துர்காபூரில் அரசு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். இதில் மேற்கு வங்க ஆளுநரும் பங்கேற்றார்.

    இதன்பின் துர்காபூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஆளும் திரிணாமுல் அரசையே அவர் கடுமையாக சாடினார்.

    மோடி பேசியதாவது, "முர்ஷிதாபாத் (கலவரம்) போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, காவல்துறையினர் பாரபட்சம் காட்டுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

    திரிணாமுல் குண்டர்களால் தொழில்முனைவோர் இங்கு வருவதில்லை. திரிணாமுல் அகற்றப்பட வேண்டும். சிண்டிகேட் ஆட்சியைக் கண்டு முதலீட்டாளர்கள் தப்பி ஓடுகிறார்கள். திரிணாமுல் காலத்தில் தொடக்கக் கல்வி, உயர்கல்வி அனைத்தும் படுகுழியில் சென்று கொண்டிருக்கின்றன.

    பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்காளம் நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக மாறும். இது எனது நம்பிக்கை. ஆனால் திரிணாமுல், வங்காளத்தில் தொழில்மயமாக மாற்ற அனுமதிக்கவில்லை. எனவே, திரிணாமுல் வங்காளத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட அவர், "வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அப்போதும் கூட, திரிணாமுல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. அதன் பிறகு, மற்றொரு (சட்ட) கல்லூரியில் ஒரு பெண் சித்திரவதை செய்யப்பட்டார். அதில் திரிணாமுல் (பிரமுகர்கள்) ஈடுபட்டிருப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கூறினார்.

    மேலும்"ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×